https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 2 ஜூலை, 2017

அடையாளமாதல் - 107 *சலனங்களில் நிகழ்வுகள் * .

ஶ்ரீ:



*சலனங்களில் நிகழ்வுகள்  *
இயக்க பின்புலம் - 34
அரசியல் களம் - 33





நான் மாநில கட்சி அலுவலகம் தவிர வேறு எங்கும் செல்வதில்லை ஆட்சி அதிகாரமுள்ள எந்த இடத்திற்கு செல்வதை தவிற்துவிடுவது வழமை  , எனக்கு அவை தேவைகளில்லை என்பதைவிட அவசியமில்லை .. ஒருமுறை விஜயன் வேடிக்கையாக சொன்ன ஒரு நிகழ்வினால் நான் துணுக்குற்றேன்

விஜயன் அவனது சிறு சிறு பொருளாதாரத் தேவைகளுக்கு பலரை உபயோகத்திற்கு வைத்திருந்தான் . மலரிலிருந்து வலிக்காது  தேன் எடுப்பது போல ஒருமுறை ஒருவரிடம் உதவி பெற்றுவான் என்றால் , சுமார் ஓரிரு மாதம் அந்த பக்கமே வரமாட்டான் . சிலரிடம் தயங்குவதில்லை . என்னிடமும் வெள்ளாளர்த்தெரு கிருஷ்ணமூர்த்தியிடமும்

கிருஷ்ணமூர்த்தி மரைக்காயரின் நம்பகமானவரில் ஒருவர் . தன் சார்பாக இருக்கும்படி , அல்லது அரசியல் நிகழ்வுகளை அவசியம் ஏற்படும்போதெல்லாம்  தனக்கு தெரிவிக்கும்படியான வேலை அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது , தவிர்க்க முடியாத சக்தியாக அவர் சட்டமன்றத்தில் உலாவினார் . அவரை வைத்துத்தான் விஜயன் தன் காரியம் சாதிப்பது என முயங்கிக்கொண்டிருந்தான் . அன்று பாலன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க வந்தபோது விஜயன் உள்ளே உட்கார்ந்திருக்க , பாலன் உள்நுழைவதை பார்த்து எழுந்து  வெளியே போக முயற்சித்தவனை, உட்காரும்படி கை அமர்த்த அவனும் என்ன ஏது எனப்புரியாது அமர்ந்து விட்டான் 

பாலனுக்கு அவமானமாகிப்போய் அவனை வெளியில் பார்த்து கடுமையாக பேசியதை , விளையாட்டாக எடுத்துக்கொண்டான் எனச் சொன்னான் ஆனால் அது உண்மையல்ல என எங்களிருவருக்குமே தெரியும். உட்காரச்சொன்னவர் மேல்  கோபத்தை விடுத்து இவனிடம் அவர் பேசியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்த்து . இது பாலனுடன் பேசியே ஆகவேண்டிய கட்டம் என புரிந்தது . ஆனால் இது வெகு நுட்பமானது பாலன் பிறிதெதையும் விட தன் அரசியல் மிக முக்கிய கட்டத்தில் இருப்பதாக உணர்கிறார் . கிருஷ்மூர்த்தியை விட்டு வைத்திலிங்கத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கவேண்டிய நேரம் . ஆனால் கிருஷ்ணமூர்த்தி இரட்டை நிலை எடுத்திருப்பதாகவும் மரைக்காயர் அவர்மீது நம்பிக்கை இழந்ததாகக்கூட சில செய்திகள் உண்டு . அது உண்மையென்றால் நிலமை முன்பைவிட இன்னும் மோசம் . திருச்சங்கு சொர்க்கம் போல . இளைஞர் காங்கிரசின் அரசியில் ஏறக்குறைய முட்டு சந்திற்கு வந்துவிட்டது

சண்முகம் குடைச்சல் தாங்க முடியாத நிலை . ஒருகட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் அமைச்சர் சந்திரகாசு அறைக்குள்ளேயே தாக்குதல் தொடுக்கும்படியான நிலை எழுந்துவிட்டது . ஏறக்குறைய கூலிப்படை போல . அது எதுவும் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை தனக்காக, தன் இடத்திற்காக, அரசியல் நோக்கத்திற்காக என்றல் அதற்கு என்ன விலை என்றாலும் புரிந்துக்கொள்ள கூடியது . ஆனால் ஏவுபவர் யார் என தெரியாது இயங்குவது நட்டுவைத்த வாளின் மீது பாய்வதை போல

நான் பாலனிடன் விஜயன் விஷயத்தை பேசுவதை விடுத்து சுப்பாராயனிடம் பேசியதும் . பாலனுடைய அடுத்த திட்டம் தெரியவந்தது . ஏதாவதொரு அரசாங்க பொறுப்பில் அமரவேண்டும் என்பதை தவிர வேறு சிந்தை அற்று அவர் சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது . நான் விஜயன் விஷயத்திலிருக்கும் அரசியல் நமக்கு நேரடியாக அறைகூவுபவை என்கிற என் கோணத்தை முன்வைத்து விளக்க விரும்பினேன். விஜயன் என்னிடம் சொன்னான் , பாலன் ,பலபேர் பார்க்க தன்னை தரக்குறைவான வசவுகளில் ஏசியது தவறு என்றும், தான் தன் வழியைபார்த்து போகப்போவதை பற்றி சொன்னதை அவரிடம் கூறினேன் . அதற்கு அவர் , “இது ஒன்றும் புதிதல்லவேஎன்றார் . ஆம் அது எனக்கும் தெரியும் , அவன் பலமுறை முன்னர் மிரட்டியும் இருக்கிறான்

ஆனால் இப்போது அப்படியல்ல , நமது ஆட்சி வந்திருப்பது, தலைமை மாற்றம் கனிந்திருப்பது , கிருஷ்ணமூர்த்தியை பலர் சென்று பார்பது . அவரது சிபார்சில் உள்புகுந்த முருகேசன், சுரேஷ்நந்தா குழுவினர் நேரடியான தலையீடுகள் போன்ற பல அலுகுகளை கனிசியாது பேசுவது சரியல்ல என்று பின் , நானும் பாலனும் ஒரு நபரிடம்தான் அரசியலுக்கு சென்று வருகிறோம், அவருக்கு பாலன் எப்படியோ அப்படித்தான் தானும் அவருக்கு , நானும் அவரும் ஒன்றுதானே என அவன் சொன்ன விஷயத்தையும் சொன்னேன் , சுப்பாராயன் திகைத்துவிட்டார் . அப்படியா சொன்னான் என்றார் நான் மவுனமாக இருந்தேன் . அவனை சந்திக்க வேண்டும் என்றார் , நான் உடன்படவில்லை . யாரையும் காட்டிக்கொடுப்பதற்காக நான் இதை சொல்லவில்லை , இத்தகைய வார்த்தைகளை கோர்த்து பேசத்தேரியாதவன் விஜயன் . அவனை அப்படி பேசும்படி செய்தது எது அல்லது யார் இதுதான் நமக்குமுன் உள்ள கேள்வி . என்றேன் 


தேர்தலில் தோற்றவருக்கு அரசாங்கத்தின் பொறுப்புகளை கொடுப்பது கட்சி ரீதியா சாத்தியமில்லை . சண்முகம் பாலன் மீது தனிப்பட்ட காரணத்திற்காக பெரும் கோபத்தில் இருந்த சமயமிது . பாலன் தனது தோல்விக்கு பொறுப்பேற்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் . அதுப்போல சண்முகமும் ராஜினாமா செய்ய வேண்டும் என பெரிய கூட்டத்தை சண்முகம் கூட்டி மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தியது சண்முகத்தை பெரிய சங்கடத்தை கொடுத்தது . இதைப்போன்ற அவரின் செயல்களுக்கு அரசியல் காரணமின்றி வேலிடத்தூண்டுதல்கள் காரணமென்கிற பேச்சி எங்கும் இருந்தது . பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்கு பின் யார் என்பது கேள்வியாக எழுந்து வரை பாடாய்படுத்தியது . ஆனால் அது அடுத்த அரசியல் நிலை என்பதால் அமைப்பிற்குள் வேகமான பேசுபொருள்ளானது . முதலில் இதை அவர் இதை விரும்பாது போனாலும் அப்போது நிலவிய அரசியல் மௌனம் அவரை அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது . ஒருவர் இரு பதவியில் இருப்பது அவரின் அடுத்த பதவிக்கு இடைஞ்சல் என்பதால் அவர் ராஜினாமா செய்ததின் காரணம் . எதுவும் தயாராகாத நிலையில் அவர் அவசரப்பட்டுவிட்டதாக எல்லோரும் கருத்துவங்கினர் .மனம் வெறுத்து அவரும் அடுத்த கட்டத்திற்கு தயாரானார் . கமலக்கண்ணனை அழைத்து அவரை நிலைப்படுத்த சில செயல்பாடுகளில் ஈடுபட சொல்லியிருந்தார் . அது இந்திராகாந்தியின் நினைவு பேரணி . அடஹி ஒட்டி மாற்று கட்சிகளிலிருந்து பலர் வந்து இளைஞர் இயக்கத்தில் இணைவதற்கு ஏற்பாடாகியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...