ஶ்ரீ:
*இயற்கையை எதிர்கொள்ளல் *
இயக்க பின்புலம் - 32
அரசியல் களம் - 33
உள்ளே கண்ணன் தன் வாய்ப்பை இழந்து கொண்டிருப்பதை பற்றி அறியாமல் நானும் வுட்லண்ஸ் பாலாவும் பேசிக்கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன் . அவரவர்க்கு அவரது தலைவர்கள் ஆதர்சமாகவும் மற்றவர்கள் உதாவாக்கரைகள் என் நினைப்பதை புரிந்துகொள்ளாத காலம் . எனவே எங்களுக்கு கிடைத்த இடைப்பட்ட சிறிது நேரம் அவர் இதுவரை என்னுடனான உரையாடலை தீடீரென வேறுத்தளத்திற்கு நகர்த்தினார் . அவருக்கு உள்ளுணர்வு சொல்லத்துவங்கியிருந்தது கண்ணன் இந்த கூட்டத்திலிருந்து வெற்றியோடு வருவாரென . முதல்வராக வெளிவரும் கண்ணனுக்கு தான் போடுவதற்கு கொண்டுவந்திருந்த பெரிய ரோஜா மாலையை என்னை அழைத்து சென்று காட்டினார் .
எனக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வர்த்ததுபோலிருந்தது. கண்ணனின் வெற்றி எங்களை இருக்குமிடம் தெரியாது அழித்துவிடும் . அவர் பேசட்டும் என காத்திருந்தேன் , அரசியல் முதிர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை , அவர் வயதில் பெரியவர் , உபயோகமான அரசியல் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்ளலாம் . நானும் அனுபவஸ்தர் ஒருவரின் ஆற்றுப்படுத்துதலுக்கு காத்திருந்த காலம் . தேர்தல் கால மத்தியிலேயே மிகவும் சோர்ந்திருந்தேன் .
செயல்பாடுகளின் மூலம் பலம் பெறுவது பற்றிய எனது அனுபவம் இனி உதவப்போவதில்லை என பட்டவர்த்தமாக தெரிந்து போனது . அடுத்த நகர்வென்பது அதிகாரத்தை நோக்கியது . நம்மைவிட சகலத்திலும் பெரியவர்கள் மத்தியில் நம் சொல் எடுபடுதல் . கண்ணன் போன்றவரகள் வெற்றிபெற்று உள்ளே சென்றபிறகு சந்திக்க நேர்ந்தது அவர்களின் எள்ளலை மட்டுமே . அதைக் கடக்க விழைந்தே அவர் தன் அரசியலை தொடங்க இப்பொது இங்குவந்து அமைந்துள்ளார் . தன்நிலையை பலப்படுத்தாது அரச்சூழ்தலின் மூலம் முறச்சித்தார் . களத்தில் நின்றாடுபவர்களுக்கு அரசுசூழ்தல் சரிப்படுவருவதில்லை எனும்போது , எதையும் அடையாத எங்களிடமும் அதையே கேட்டது காலத்தின் குரூரம் ,என கொந்தளிப்பில் இருந்தேன் . பெரும்மழையின் முன்பு சிறு மழைக்குருவி போல அதை எதிர்கொண்டேயாகவேண்டும்
“பாலன் மரைக்காயரால் அங்கீகரிக்கப்பட்டவர் என நீ நினைக்கிறாயா” என்றார் , நான் மெளனமாக என்னதான் சொல்லவருகிறார் பார்போம்மென இருந்தேன் . “அரசியலில் மரைக்காயரை சார்ந்திருப்பது போல மடத்தனம் பிறிதொன்றில்லை . அங்கு வளர்வதற்கான பாதை என ஒன்றில்லை” என்றார் . கண்ணன் முதல்வராக்கப்பட்டால் அனைத்தும் மாறும் புது அரசியல் அதிகாரம் கைமாறி அமையும் . ஆகவே என்னையும் புத்திக்கொண்டு பிழைத்திருக்க” சொன்னார் . மரைக்காயர் கண்ணனை தொடர்புகொள்ளவே தான் அங்கு இருப்பதாகவும் . அது தன்னை அடுத்த இடத்திற்கு நகர்த்தும் என்றார் . நான் அவரை உறுத்துப்பார்த்தேன் .
அவர் அறுபதுகளின் மத்தியில் இருந்தார் . இவருக்கு நேற்று என்னவாக இருந்திருந்தால் இவர் நாளையப்பற்றிய கனவில் இருப்பர் . இங்கு கனவுகாண அனைவருக்கும் அரசியல் உரிமை வழங்கியிருந்தது அவர்களின் வயதிற்கு அப்பாற்பட்டு . இவர்களுக்கு கனவென்பது தூங்குவதால் எல்லோருக்கும் வரும் கனவை பற்றி சொல்கிறார் போலும் இவரிடம் தொண்டர் சுரண்டப்படல் வயறுகாய்ந்தவனின் கனவு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
கட்டுப்படுத்த முடியாத வெறியை என்ன செய்வதென தெரியாமல் மெள்ள அங்கிருந்து வெளியே வந்தேன் . தேர்தல் கூடுகை அறையில் சலசலப்பு முடிவு எடுக்கப்பட்டதை உணர்த்தியது . கதவு திறக்க போகிறது, நான் ஆற்றாமையுடன் வுட்லண்ட்ஸ் பாலாவை பார்த்தேன் அவர் ,அளவுகடந்த உற்சாகத்துடன் தன் வயதை மறந்து தூக்கமுடியாத ரோஜாமாலையை எடுத்துக்கொண்டு வெளிவரும் கூட்டத்தை நோக்கி பாய்வதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் .
மரைக்காயர் கண்ணன் இடையே நடுநாயகமாக வைத்திலிங்கம் வெளிவர நடந்ததை என்னால் ஓரளவிற்கு உணரமுடிந்தது அவர்கள் மூவரும் அறை கதவின் வெளியே வர முண்டியபடி வுட்லண்ஸ் பாலா அவர்களை அருகணைந்துவிட்டிருந்தார் . அவர் மாலையை கண்ணனுக்கு போடா எத்தனிக்க , அட்டகாச சிரிப்புடன் அந்த மாலையை பறித்த மரைக்காயர் அதை வைத்திலிங்கத்திற்கு தன்சார்பாக போட்டு வாழ்த்து சொல்லிவிட்டு அவர்விலகிஎன்றுவிட்டார் .
வுட்லண்ஸ் பாலா திகைத்திருக்க , கண்ணன் விறுவிறுவென வெளியேறுவதைப் பார்த்து , சுயநினைவு திரும்பியவராக அவரை பின்தொடர்ந்து ஓடினார் . என்னால் சிரிப்பை அடக்க முடியாது பீறிட்ட முகத்தது யாரும் பார்க்கும்முன்னர் அறைக்குள் ஓடிவிட்டேன் . அங்கிருந்த ஆனந்தபாஸ்கர் என்னவென்று கேட்க நான் சிரிப்பினூடே நடந்ததை சொல்ல அவர் தன் பாணியில் அந்த அறை அதிர சிரிக்கத்துவங்கினார்.
-அனைத்தும் ம் ஒரு முடிவிற்கு வந்தது , பாலனை நான் அவரிருந்த அறையில் தேடினேன் அவர் எனக்காக நெடுநேரம் காத்திருந்துவிட்டு சற்றுமுன்னர் கிளம்பிச்சென்றார் என்றும் என்னை அவர் வீட்டில் சந்திக்க சொன்னார் என்கிற தகவல் எனக்காக காத்திருந்தது . கட்சி தேர்தல்களம் எல்லாம் இந்த முதல்வர் தேர்தலுடன் ஒரு முதுவை நோக்கி சென்றுவிட்டிருந்தது . கையிலிருந்தவைகளை யாரோ பறித்ததுபோல வெறுங்கையுடன் நிற்பதாக தோன்றியது . நினைவுகளை தாண்டி அந்த மூன்று மாத சிந்தனை சில அனுபவங்களாக தேங்கி நின்றது . அதில் கசப்பைத்தவிர வேறெதையும் எண்ணக்கூடவில்லை . நான் மெதுவாக படிகளில் இறங்கி போர்டிகோ வந்தபோது அந்த இடம் எனக்கு வெறுமையை காட்டி நிற்பதாக தோன்றியது . இன்று பக்கத்தில் நின்று அளவளாவியர்களை நாளை மூடிய கதவிர்க்கும் அதை காவல் நிற்கும் சட்டசபை ஊழியர்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு காலம் நகர்ந்துகொண்டிருந்தது . கீழே வைத்ததும் கிளம்பத்தயாராக இருந்த வுட்லண்ட்ஸ் பாலாவை பார்க்க பரிதாபமாக இருந்தது . சோகமான முகத்ததுடன் காரைவிட்டு இறங்கி என்னுடன் பேசவருபவரை கைகாட்டி காரிலேயே நிறுத்தினேன் . அவருக்கு அருகில் சென்று , வேலை இருக்கிறது பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்றபடி அவரை வழிஅனுப்பிவைத்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக