https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 ஜூன், 2017

அடையாளமாதல் - 97*நீர் மீன் *

ஶ்ரீ:






*நீர் மீன்  *
இயக்க பின்புலம் - 24
அரசியல் களம் - 28







அன்று மாலை பாலனை சந்திக்க சென்றதும் அவர் தொகுதி அலுவலகத்திலில்லை  வீட்டில் இருக்கிறார் என்கிற செய்தி கிடைத்ததும் நேராக வீட்டிற்கு சென்று சேரும் போது மாலை 7:00 மணியாகிவிட்டது . பாலன் தேர்தல் தோல்வியை எளிதாக எடுத்துக்கொண்டுவிட்டார் . அவருக்கும் வேறு வழியில்லை . நான் வீட்ற்கு வெளியிலேயே அமர்ந்துவிட்டேன்.

 அன்று மதியம் நன்றாக தூங்கி எழுந்ததால் மனம் ஒருவாறு அமைதிக்கு திரும்பியிருந்தது . மனம் வெகுவாக அலைக்கழிக்கும் போது மத்தியில் சிறிய உறக்கம் என்னை மறுபடியும் நிகர்நிலைக்கு கொண்டுவந்துவிடும் . இப்போது என்னால் , என்நண்பர்களுடன்சகஜமாக பேசமுடிந்தது . எனக்கான மீட்சியாக நான் சிலவற்றை எப்போதும்  செய்துவந்திருக்கிறேன்.அவை இன்னது என்பதை அறியாது . அதை போன்ற  சில வஷயங்களேகூட இந்தப்பதிவுகளை பதிவதற்கு காரணமாக இருக்கலாம்

என்னால் மனதில் ஒன்றை வைத்திக்கொண்டு புறத்தில் பிறிதொன்றாக நடிக்கவியலாது . மனமென்பது என்வரையில் நீர் மீனைப்போலே தனித்து பிறித்தெடுப்பது அதை அவதானிக்கும் பொருட்டு , திரும்பவும்  அவற்றை தண்ணீரிலேயே விட்டு விடுவது சிறந்தது தனியே அவற்றை குவிக்கத்துவங்கினால் நிற்குமிடம் கடலாகி போகலாம் . எனக்கு தெரிந்தது இரண்டு ஒன்று; எதுநடந்தபோதும் வெறுப்பை அடையாதிருத்தல் .அது என்னை வதைப்பது ஆகவே எதிர்நிற்பவரின் இயலாமை அல்லது அவர்களின் தேவை இவற்றை காரணமாக ,அவர்கள் வாழ்வினை இங்ஙனம்  வாழ்வதால் நிகழ்வது  என்பதுடன் அது எனக்குமானது என்பதால் .அவர்கள் எளியவர்கள் என்கிற அறிதலை அடைகிறபோது வெறுப்பு கரைந்துவிடுகிறது . அது அவர்களை மன்னிப்பதைப்போல . என்னை சரியாகவைத்துக்கொள்ள உதவும் ஒரு வழிமுறை

இரண்டு ; சரியான வாதங்களினால் நான் கொண்டிருப்பது விலக்கத்தக்கது என மறுக்க முடியாத சொற்களால் அதை பிறிதொருவர் வெளிப்படுத்துகிற போது ,அதற்கு பணிந்து முரண்களை களைந்து மறுபடியும் விட்டஇடத்திலிருந்து துவங்கிவிடுவேன் . என் வாழ்வினில் இந்த இரண்டும் நிகழ்ந்துள்ளது . இரண்டாவது எப்போதாவது அபூர்வமாக

அவரிகளிடமிருந்து விலகுவதற்கான காரணங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக்காட்டப்பட்டது , என்னால் அவற்றை ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது . எதிர்நிற்பவர் சரியான வார்த்தை அல்லது வாதத்தை முன்வைத்தால் அது தானாக சிதைந்துபோவதை என்னாலும் தடுக்க இயலுவதில்லை. இது எப்போதும் வண்மம் என்னை ஆட்கொள்வதை தவிர்ந்துவிடுகிறது . ஒருவகையான மறதி இது  . 

எதிர்நிற்பவரின் இயலாமையாக அதை தொகுத்துக்கொள்வது ,நம்மை முன் எப்போதும்போலே எவருடனும் எளிதென கலக்க வைக்கும் வழி பிறிதொன்றில்லை .மனம் ,அது ஓயாது கூவத்தொடங்கிவிட்டால் பின் எந்த செயலையும் ஆற்றவிடாது . அதிலிருந்து வலகி மனதை சமாதானத்துடன் வைத்திருக்க நான் என் வாழ்வியலில் கற்ற வழி.

அநேகமாக இந்த மனநிலை மாற்றம் தூக்கத்தில் நிகழ்கிறது என நினைக்கிறேன் . அன்று இருள் கவிந்த மாலை பொழுதில் தாமோதரன் காமக்கண்ணனை பார்த்த போது என்னால் அவரகளுடன் என் இயல்பில் ஒழுக முடிந்தது . வழமையான சிரிப்புடன் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கணேஷ் ஜுஸ் கடைக்கு சென்று அமர்ந்தபடி அன்று நிகழ்ந்தவற்றை தொகுத்துக்கொண்டிருந்தோம் , சண்முகத்தின் தோல்வி பேசப்பட்டது

எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் நிகழ்ந்து விடுகிறபோது அது அனைத்தயும் மீறி ஒரு வருத்தம் ஊறியெழுவதை தடுக்கமுடிவதில்லை . காங்கிரஸ் பதினைந்து இடத்தில வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது . அதிமுக வை சார்ந்திருக்காது மூன்று சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . சபாபதியின் ஆதரவோடு ஆட்சி என்கிற நிலை மிகுந்த வருத்ததை கொடுத்தது . அதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தபோது . எங்களை கடந்து சென்ற  முருகானந்தம் தமோதரனை பார்த்து ஏதோ சைகையில் செய்துவிட்டுச் செல்ல தாமோதரன் ஆவேசமானார் . நான் வயிற்றில் சூடாக உணர்ந்தேன்.”அவனே ஒரு வீணத்தவன் ஏன் வம்பு சும்மாயிருக்கலாமேஎன்றதற்கு . அவன் இதுவரை இரண்டு மூன்று முறை கடந்து சென்றதாகவும் இப்படியே தொடர்ந்து அவன் அன்று மாலையிலிருந்து செய்து கொண்டிருப்பதாக சொன்னார் . எனக்கது நல்லதாக படவில்லை . பாலன் பற்றி கேட்டதும் அவர்கள் சொல்லித்தான் எனக்கு பாலன் வீட்டிலிருப்பது தெரிந்தது . அதன் பிறகே  நான் அவரை பார்க்க சென்றேன். இங்கு நடப்பது அவருக்கு தெரியவேண்டும் என்பதும் நான் அங்கிருந்து கிளம்பியதற்கு பிறிதொரு காரணம்.

பாலன் வீட்டினுல் ஏதோ வேலையாக இருந்ததானால் .

நான் உள்ளே செல்லாது வெளியே அமைந்திருந்த சுப்பாராயனுடன் அமர்ந்துகொண்டேன் . நேற்று நடந்த எவற்றையும் யாருடனும் பேசக்கூடாது . நீ அதை உண்மையிலேயே கடக்க விரும்பினால் அதை ஒருபோதும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதே . ஒருநாள் இல்லை ஒருநாள் யாரவது அதை உன்னிடம் பேசத் தலைப்பட்டால் . நம் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் வந்துவிடுவதுடன் , விலக்கி வைத்தது மறுபடியும் குடைய ஆரம்பித்துவிடும் . நான் சுப்பாராயனிடம் அதைப்பற்றி பேசவில்லை . பொதுவாக நடக்கவிருப்பதை பேசிக்கொண்டிருந்தேன் . அப்போதுதான் யாரோ ஓடிவந்து கட்சி அலுவலகத்திற்கு வெளியே பிரச்சனை என எங்களிடம் சொல்லிவிட்டு பாலனுக்கு தகவல் சொல்ல உள்ளே ஓடினான் . நான் என் பையை உதைக்க சுப்பாராயனும் என்னுடன் வண்டியில் ஏறிக்கொண்டார் நான் மிகுந்த பதட்டமாக வண்டியை விரட்டினேன் . முருகானந்தம் ஒரு வீணத்தவன் பச்சமுத்துவுடைய ஆள் . உள்ளூர் ரவுடி . பல அடாவடி தெருச்சண்டைக்காக அவன்மீது காவலநிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்தன .ஒருகாலத்தில் பாலனுக்கு நெருக்கமானவர்களில் ஒருவனாக இருந்தான் . தேவையற்ற விஷயத்தில் ஈடுபடுவதும் வீண் சண்டைக்கு அஞ்சாமையும் அவன் வழமை . பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன் . உடல் பலமற்றவன் வெறும் வாயால் எதையாவது பேசி பிறரை நோகடிப்பதில் வல்லவன் . நான் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்