https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 ஜூன், 2017

அடையாளமாதல் - 95 *இரை(றை) நம்பிக்கை*

ஶ்ரீ:







*இரை(றை)  நம்பிக்கை  *
இயக்க பின்புலம் - 22
அரசியல் களம் - 28





எங்கள் முறை வந்து நாங்கள் ஓட்டு எண்ணும் அறைக்குள் நுழைந்தோம் , அங்கு நாங்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள்  பற்றி மீண்டுமொருமுறை விளக்கப்பட்டது , மாவட்ட தேர்தல் அதிகாரி டேபிளில் அமைந்திருப்பவரை, தவிர  வேறுயாரும் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரக்கூடாது என்றனர் , நான்  ஒவ்வொரு பூத் பெட்டி வந்து கொட்டும்போது எழுந்து சென்று  சீல் சரிபார்க்கலாம் என்றனர் , ஒட்டு எண்ணிக்கை துவங்கும் முன்பாக பதிவு புத்தகத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. அவரவர் கட்சி பெயருக்கு நேராக கையெழுத்திட்டோம் , சபாபதியின் சார்பாக வீரபுத்திரன் சுயேட்சை என்கிற இடத்தில் தன் பேனாவை சிறிது நேரம் வைத்துவிட்டு பின் கையேழுத்திட்டார் , ஒரு சிறிய வலி அவர் கண்ணில் தெரிவதாக உணர்ந்தேன் . நான் இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற இடத்தில் கையேழுத்திட்டேன் . அந்த பெயர் ஒரு பெருமிதத்தை கொடுத்தது . காந்தி தொடங்கி பல தலைவர்கள் நினைவிற்கு வந்தார்கள் , அந்த கட்சியின் ஒரு அங்கம் நான் என்றது அந்த அரசாங்கப்பதிவேடுவீரபுத்திரனை பார்க்கையில் நினைத்துக்கொண்டேன் "விதியென்பது இதுதான் போலும் " யாரை முன்னிட்டுக் கொண்டு, நான் இந்த கட்சியில் இணைந்தேனோ அவர் சுயேட்சையாக இருக்க நான் காங்கிரஸ் கட்சிக்காக கையெழுத்திட்டேன்  , இயற்கையின் நகைச்சுவை உணர்ச்சிக்கு ஈடு இணை இல்லை போலும் .

அரை மணி நேரத்தில் ஒன்று முதல் ஆறு இலக்கமுடைய பூத் ஓட்டுபெட்டிகள் எண்ணும் டேபிளை வந்தடைந்தது . அங்கு சீல் சரிபார்க்கப்பட , நாங்கள் அமர்ந்திருந்த நடத்துனர் மேஜையில் தபால் ஓட்டுக்களை அடங்கிய பெட்டியை கொண்டுவந்து வைத்து பிரித்தார்கள் . மொத்தமாக இருநூற்றுஅறுபத்தாறு சீட்டுகள் . ஒவ்வொன்றாக பிரித்து அதற்கான பெட்டியில் நிரப்பினர் சற்று நேரத்தில் பிரித்த அனைத்து சீட்டுகளை காட்சிரீதியான பெட்டிகளில் போட்டபடி இருந்தார்கள் மற்ற அனைத்து பெஞ்ச்களிலும் அதே முறைமைகள் செய்யப்பட்டன , எங்கள் பெஞ்சில் வாக்குச்சீட்டின் எண்ணிக்கை மிக சொற்பம் என்பதால், விரைவில் முடிவிற்கு வந்தது . அதன்படி சபாபதி முதல் நிலையில் மஞ்சினி இரண்டாம் நிலை பாலன் மூன்றாம் நிலை என அறிவிக்கப்பட்டது . பக்கத்திலிருந்த சிலர் வீரபுத்திரன் கைபிடித்தது வாழ்த்து சொன்னார்கள் அவரும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார் . ஏன் அதற்குள் வாழ்த்து தெரிவித்துவிட்டார்கள் இவரும் எந்த அடிப்படையில் அதை ஏற்றுக்கொண்டார் என தெரியாது என் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் பாரத்தேன் அனுபவம் வாய்நத அவர் என்னிடம் "தபால் ஓட்டுக்கள் போக்கு மாதிரியே ஏறக்குறைய எல்லா பூத்தாலும் இருக்கும் "என்றார்  . நான் அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதிலும் பாலனுக்கு மூன்றாம் இடம் என்பது சற்று அதிர்ச்சியாக இருந்தது .

என் பதட்டத்தை மறைக்க எழுந்து அணைத்து பூத் எண்ணப்படும் பெஞ்ச்களுக்கு சென்றேன் . எனக்கு மறக்கமுடியாத நிகழ்வுகள் இரண்டு அங்கு நிகழ்ந்தது . ஒன்று; வாக்காளர் யாரோ ஒருவர் வாக்குசீட்டில் கண்ணீர் மல்க எழுதிய கடிதம் இணைக்கப்பட்டிருந்தது . அது மாதிரி இணைப்பது விதிக்கு முரணானது என்று அதை செல்லாத வோட்டாக அறிவிக்கலாமா, என்று கேள்வி ஏழுந்ததும் அதை எடுத்துக்கொண்டு நடத்துனர் பெஞ்சிற்கு சென்றார்கள் .நான் அந்த கடித்தை கேட்டதும் சிறிய தயக்கத்திற்கு பின் தந்தார்கள் அதில் அந்த வாக்காளர் மனமுருகி தான் என்னவெல்லாம் செய்ததாக அதில் கண்ணீருடன் குறிப்பிட்டு அவர் வெற்றிபெற தான் எதைவேண்டுமானாலும் செய்வேன் என் எழுதப்பட்டிருந்தது

தொகுதியில் சபாபதிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு இது ஒன்றே பதம் . பிறிதொன்று; ஓட்டு என்னத்துவங்கிய நிமிடம் முதல் சபாபதி வென்றதாக அறிவிக்கப்படும் அந்த மணித்துளி வரை ஒருவன் கீழே சட்டக்கல்லூரி கழிப்பறை வாசலில் நின்றபடி என்ன நிகழ்கிறது என தெரிந்துகொள்ளும் வெறியில் நாள்முழுவதும் நின்றுகொண்டிருந்தான் . என்னை திகைக்க வைத்த இந்த இரு நிகழ்வுகளும் அரசியல் ஏப்படி எடுத்துச்செல்லவேண்டும் என்பதை எனக்கு சொன்னதாக எடுத்துக்கொண்டேன்

ஒவ்வொரு பொட்டி கொட்டும்போதும் அவரவர் நிலை எந்தமற்றமும் இல்லது நிகர்நிலைகொண்டிருந்தது. ஒரு மற்றம் வரும் எனக்காத்திருந்து காத்திருந்தும், ஒன்றும் மாறாமல் அது சொன்னது நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்று . இதற்கு மத்தியில் பாலன் வந்து என்னை பார்த்தபோது எனக்கு அவரை பார்க்க சங்கடமாக இருந்தது . நான் அவரை வீட்டிற்கு போகச்சொன்னேன் அவர் முகம் கல்லாலானது போல எந்த உணர்வையும் வெளிக்காட்டாது உறைந்திருந்தது .

சில மணிநேரத்தில் அனைத்தும் ஒரு முடிவிற்கு வந்தது , சபாபதி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார் அவருக்கு அடுத்ததாக மஞ்சினி ,மூன்றாவது இடத்திற்கு பாலன் தள்ளப்பட்டார் . எனக்கு அருகில் அமர்ந்திருந்த மஞ்சினி என்னிடம் " என்னப்பா இது காங்கிரஸ் வோட்டை நீங்கள் பிளந்தால் நான் ஜெயிப்பேன் என்று பார்த்தல் நீங்கள் என்வோட்டை பிரித்து அவரை ஜெயிக்க வைத்துவிடீர்கள் என்று கூறி சிரித்தார் .நான் மெளனமாக அதை அங்கீகரித்தேன் . பாலன் அங்கு காணப்படவில்லை அனேகமாக வீட்டிற்கு  சென்றிப்பார்.என்னை சுற்றி சுப்பாராயன் , தாமோதரன் கமலக்கண்ணன் மற்றும் இரண்டு சேகர்களும் சூழ்ந்திருந்தனர் . என்னுடன் பேசியபடி இருந்த அனைவரின் முகமும் திடீரென  இருண்டபடிவந்தது , நான் என்னவென்று திரும்பிப்பார்த்தபோது வெற்றிச் சிரிப்புடன் சபாபதி அனைவரும் கைகளை பற்றி அவர்கள் கூறும் வாழ்த்துக்களை ஏற்றபடி நான் அமர்ந்திருந்த நாற்காலி அருகில் வந்தார் , அவரை பார்த்ததும் நான் மௌனமாக சிரித்தேன் அவரிடம் அது பிரதிபலிக்கவில்லை

இது அவரை போன்ற ஒருவரிடம் எதிர்பார்த்ததுதான். நான் நண்பர்களை பக்கம் திரும்பி இதுபற்றி சொல்லலாம் என்று பார்த்தேன் . அங்கு என்னைத்தவிர என் நண்பர்கள் யாரும் இல்லை புலியை கண்டதுபோல அனைவரும் தெறித்து பதுங்கிவிட்டார்கள் . ஒரு நிமிடம் உடலில் ஒட்டு துணி இல்லாததுபோல் அவமானமாய் உணர்ந்தேன் . சபாபதி பதிவில் கையெழுத்திட்டு தான் வெற்றிபெற்றதற்கான அத்தாட்ச்சி பாத்திரத்தை பெற்றுக்கொண்ட பிறகு நானும் கையொப்பம்மிடவேண்டும் . சபாபதி பதிவு புத்தகத்தை என்னிடம் கொடுக்க நீட்ட நான் பதிவை வாங்க கையை நீட்டியபோது அவர் என் கையை பிடித்தார் நான் வேறு வழியில்லாமல் அவரின் வெற்றிக்கு என் வாழ்த்துதலை சொன்னேன் . அவர் கண்களில் என்ன தெரிகிறது என கவலையற்று அவர்கணகளையோ உற்றுப்பர்த்தபடி இருந்தேன் . உதடுகளை ஒரேமாதிரியான சாய்வில் வைத்தபடி சிரித்தார் . பதிலுக்கு நான் மறுபடியும் வாழ்த்துசொன்னேன் . அவர் அருகிலிருந்த பச்சைமுத்து நட்பாக சிரித்தார்.

சபாபதியின் ஆதரவாளர்கள் சிலர் அங்கேயே அவருக்கு மாலை சால்வை அணிவிக்க முயல அந்த இடமே அலராயிற்று , காதை பிளக்கும் வாழ்த்து கோஷமுடன் அந்த திரள் அவரை தோளில் தூக்கியபடி வெளியேற அந்த இடத்தின் அமைதி திரும்பியது , அதுவரை நான் என் நண்பர்கள் நின்றிருந்த திசை திருப்பவேயில்லை . அடிபட்ட வலியை தெறித்தது . எதைநம்பி இனி இவர்களுடன் பயணப்படப்போகிறேன் . ஒரு சிறிய தோல்வி அதற்கு  கைவிட்டுவிட்டார்கள் . சற்று நிதானமாக யோசித்தால் இதற்கு பாலன்தான்தான் வருத்தமோ அவமானமோ அடையவேண்டும் . பாலன் மேலோ அல்லது தங்கள் மேலோ நம்பிக்கை இழந்த ஒருவர் செய்வதுதான் அஞ்சி ஓடி ஒளிவது . இது பாலன் தலைமையின் தோல்வி . 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்