https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 18 ஜூன், 2017

நீர்த்தொட்டியில் இலைச்சருகு

ஶ்ரீ:

நீர்த்தொட்டியில் இலைச்சருகு 





பெரும் அரசமரத்தின் ஒரு இலை நான்,
என்னைப்போல பல அங்கு இருந்தன 
ஆனால் நான் அவற்றின்  ஒன்றில்லை,
நான் தனி,
நான்  மரத்தை பச்சையாய் வைத்திருக்கிறேன் .
ஏனென தெரியாது இன்று எனக்கு நீர் தாகம் 
மழையிலேயே என் தாகம் தீர்ந்திருக்கிறது 
இதுவரை
என்னவென்று தெரிவில்லை 
மழையின்னும் பெய்யவில்லை
ஆகாயத்தை சார்த்திருந்த நான்
காற்றில் வேகமாக நடுங்குவதை உணர்ந்தேன்
கீழே காய்ந்த சருகுகளாய் இலைகளை பார்த்தேன்
ஏன் அவை மரத்திலிருந்து விழுந்து நிறம்மாறுகின்றன
மரத்துடன் இனைந்திருந்த என் காம்பில் 
சிறு பழுப்பை இந்த மரம் ஏற்படுத்தியிருக்கிறது
நன்றியல்லாதது
என்னை உதிர்கப்போகிறதா?
இதுவரை அதுதான் என்னைப்பினைத்து வைத்திருந்ததா?
ஒரு சொட்டு நீர் போதும் 
நான் விழாமலிருக்க 
மழைவரும் 
நான் என்னளவு நீர்குடிப்பேன
கண்மூடி மழைக்கு முன் காற்றின் வரும் 
வாசனையில் திளைத்திருந்தேன் 
பெய்தது பெரும்மழை
நான் கண்விழித்தபோது 
என்னை சுற்றி எங்கும் நீர் நிறம்பியுள்ளது
கடலளவு 
ஏன் என்னால் அதைக் குடிக்கமுடிவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்