https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 7 ஜூன், 2017

அடையாளமாதல் - 88 *ஊழின் தனிக்கவனம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 88
*ஊழின் தனிக்கவனம் *
இயக்க பின்புலம் - 15
அரசியல் களம் - 27

Add captionஅன்றிரவு நீண்ட யோசனைக்கு பின் முதல்முறையாக இனி கிடைக்கும் தகவல்கள் எல்லாவற்றையும் பாலனிடம் பகிர்ந்து கொள்வதைப் போல பைத்தியக்காரத்தனம் பிறிதொன்றில்லை என பிடரியில் அடித்தாற்போல புரிந்து போனது  . நான் செய்து கொண்டிருப்பது வீண் .  என்ன சொன்னாலும் அவர் செவிக்கூரப்போவதில்லை  . அவர் மரைக்கரின் முழு ஆளுமைக்குள் இருக்கிறார் . அது பாலனை பொருத்து ஒருவகையில் சரியானதும் கூட

மிக உயரிய இடத்திலிருந்து நேரடி தகவல்கள் கிடைக்கின்றன , அதை பகுத்தறியவது எளிதில்  இயல்வதல்ல அவரை சார்ந்திருப்பது என அவரது முடிவிற்குபின்னர் , அவர் மரைக்காருக்கு உண்மையாக இருக்க முயற்சிக்கிறார் . இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே அவருக்கு தெரியாது என்பது வேறு விஷயம்தேர்தல் வெற்றி, தோல்விக்கு பின்னரும் அவருக்கு மரைக்காரின் ஆதரவு தேவை . அவரின் நிலை எனக்கு தெளிவாக புரிந்தது . மேலதிகமாக ஏதாவது சொல்ல சொல்ல என்மேல் எரிச்சல் அதிகரிக்கும் . ஆகவே  வாயை மூடு . எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

மனிதன் பிறக்கையில்விண்ணகத்து தெய்வங்கள் அவனுக்கு தேவையானவற்றை பொதிந்தே அனுப்புகின்றன , அவன் செய்யக்கூடுவது வாழ்நாளில் அதை தன்னுள் கண்டடைவது மட்டுமே . அன்று என்னுள் நான் நிகழ்த்திய சிந்தனைப் பெருக்கை பற்றி இன்று நினைத்து பார்க்கிறேன் , இதைப் போன்ற ஒரு வளைப்பதிவை  துவக்குவதற்கு அந்நாள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் , என இப்போது நினைக்கிறேன் . அலகாலகாக பிரித்து இணைத்து என்னால் எனக்குள் விவாதித்துக்கொள்ள முடிந்திருக்கிறதுஅது இன்னது என தெரியாமல் . நான் எனக்குள் அழ்ந்தது அன்றுதான் முதல்

ஆர்வம் மிகுதியால் கடக்க கூடாத எல்லையை விளையாட்டாக கடந்துவிட்டிருக்கிறேன் , எனப் புரிந்தது .தலைவர் பொறுப்பில் ஒருவர் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்கிற முடிவை இன்னொருவர் எப்படி  எடுப்பது . அவரை எல்லாகோணத்திலும் சிந்திக்க சொல்லி நிர்பந்தத்திக்க நான் யார் . நான் எனக்குக் கிடைக்கும் தகவல்களை தொகுத்து அவருக்கு சொல்ல சொல்ல அது ஒருவேளை அவரது கனவுகளிலிருந்து எழுப்புவதாக இருந்திருக்கலாம். அதன் விளைவினால் எழும் திடுக்கிடுதல்கள்தான்  இவை  போலும்  , என்மேல் கசப்பென பரவுவதை நான் அதுவரை அறிந்திருக்காதது என் குற்றம் . அது ஒருவகையில் என் அபத்தமாக்கூட இருக்கலாம் . இதுவே தன் வாழ்வின் ஒரே வாய்ப்பு என பதட்டத்தில் இருப்பவருக்கு என் போன்ற கத்துகுட்டிகளின் கணிப்புகளை அவர் அலட்சியபடுத்தியதும் ஒருவகையில் சரியானதே

ஆனால் எனக்கான எல்லைகளை உணராது  ஒரு ஆர்வத்தில் கடந்துவிட்டிருக்கிறேன் அதனூடாக நான் முழுநேர அரசியலுக்குள் இழுக்கப்பட்டேன் . இனி செவதற்கொன்றில்லை , திரும்பி செல்வதென்பதும் நடவாது . நான் பல தரப்பிலிருந்து தகவல் வருகிற வழியை திறந்த பிறகு அதை மூடவதென்பது மடமை .. பின் ஒருபோதும் அதை மறுபடி திறக்க இயலாது போகலாம் . நீ அரசியலில் நீடிக்க அல்லது ஏதாவது ஒரு பொறுப்பில் அமர விரும்புகிறாயா . சரி உன் இலக்குதான் என்ன ..........இப்படி போய்க்கொண்டிருந்தது சிந்தனை

நான் முதலிலிருந்து நடந்ததை தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தேன் . அரசியியலில் நீ விருப்பப்பட்டுதான் உள்நுழைந்தாய் , கண்ணனின் வழிமுறை வேண்டாம் என்பதில் தெளிவும்  நீ இயற்றக்கூடியது ஏதோ இங்குள்ளது என அறிந்த பிறகே இதன் உள்நுழைய முடிவெடுத்தாய் , அதன் பிறகே இளைஞர்  காங்கிரஸில் உன்  இணைப்பு நடந்ததேறியது . 

அது உன்னை இங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது . பாலனுக்கு உதவுவது என்பதின் வழியாக உன் இலக்கை நீ அறியாது உன்னுடைய  ஆழ்மனப்படிமம் விரும்பியிருக்கலாம். அதை முழுமையாக செய் , அவற்றுடைய பலாபலனை அது பார்த்துக்கொள்ளட்டும் . அதுபோல அவருக்கு வேண்டுவதை அவர் கூர்ந்து தேரட்டும் அதற்கு அவருக்கு உரிமை உள்ளது . அதனால்  மற்றவருக்கு அது பாதகம் என்றால் அவருடன் பேசு . உனக்கு விரோதமாக சென்றால் , அந்த கணம் வரட்டும் அது என்ன என்று அன்று பார்த்துக்கொள்ளலாம் .அதுவரை எடுத்த காரியத்தில் நேர்மையாக இரு .

என்னிடம் தகவல்களின் சிதறல்கள் இலக்கற்ற ஒன்றுடன் ஒன்று பொருந்தாதது பறந்து படி இருந்தன  . அவற்றை இணைத்தால் ஓரு வடிவம் கிடைக்கலாம்  , சரி யாருக்கு வேண்டும் அந்த வடிவம் , பாலன் வேண்டாமென்கிறார் . பின் யாருக்கு பயன்படப்போகிறது அது .  நீ பிடித்து நிறுத்தும் அந்த வடிவம் . உனக்கானதாக இருக்கலாம் என்று நீ நினைக்கிறாயா  .........இப்படி  சில மணிநேரம் .எனக்கு தலைக்குள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த சில தகவல்கள் , சாத்தியக்கூறுகள் , நிலைகள்  .

எனக்கு தாமோதரனிடம் பேசவேண்டும்  . மறுநாள் காலை முதலியர்ப்பேட்டை தேர்தல் அலுவலகம் முன்காலை சென்றபோது , தாமோதரன் அங்கு இல்லாதது  ஏமாற்றமாக இருந்தது . களத்திற்கு சென்று அழைத்து வரலாம் . ஆனால் அவரைமட்டும் தனித்து கூப்பிட இயலாது . எப்படியும் சாயங்காலம் சந்திக்க முடியாது இரவுதான் சரியாக வரும் . சண்முகத்திடமிருந்து அழைப்பிதழ் வாங்கிவரும்படி சொல்லியிருந்தார் பாலன் , அதற்க்கு தாமோதரனை அழைக்க வந்ததுபோல அங்கு செல்லலாம் , ஆனால் சண்முகமும் பிரச்சாரத்திற்கு சென்றிருப்பார்

 தலைக்குள் ஓடிக்கொண்டிருப்பவைகளை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை பேசியபடி தொகுத்துக்கொள்வது என் வழமை இன்று போல எழுதி தொகுத்துக்கொள்வதெல்லாம் அன்றில்லை. என்னால் காளத்தில் அவரைப் பாரத்தால் டீ சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் அப்போது பேசிப் பார்க்கலாம் . அங்கு தாமோதரனுடன் கமலக்கண்ணன் இருப்பார்  அவர்கள் எப்போதும் இரட்டை பிறவிகளை போல . அதற்கான அரசியல் காரணம் மிக எளிதானது . பாலனுக்கும் கமலக்கண்ணனுக்கும் வெளித்தெரியாத ஒரு இடரடக்கல் எப்போதும் தென்படுவது . அவருக்கு இரண்டு சிக்கல் ஒன்று தன்னுடைய தகுதி தெரியாமல் ஆசைப்படுவது , இரண்டு அதற்கு யாரை போட்டி அல்லது தடை என நினைக்கிறாரோ அவருடன் ஒரு மறைமுக வறட்சியான யுத்தத்தை நடத்தியபடி இருப்பார்


என்னுடைய யூகக்குவிநல்கள் , நிச்சயம் கமலக்கண்ணனை அடைந்துவிட்டிருக்கும் . தாமோதரனை விட இதுபோன்ற விஷயங்களை கமலக்கண்ணனுடன் பேசுவது சரியானது. ஊழின் கருணை எனக்கென கருக்கொண்டு வாசித்தபடி இருந்தது அதன் இசை எனக்கு புரியாது போனாலும் . எனக்கு கொடுக்கப்பட்ட கவனமே அதன்பால் என்னை இழுத்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...