https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 ஜூன், 2017

அடையாளமாதல் - 92 *அரசியல் சகுனப்பூனை *

ஶ்ரீ:

இயக்க பின்புலம் - 19
அரசியல் களம் - 27


உணவு விடுதியின் ஊழியர் கொண்டுவந்த உணவை சாப்பிட்டு முடிப்பதற்குள் அனைத்தையும் பேசி முடிந்துவிட்டதாக என் அகம் சொல்லிற்று . பேசுகிற போதே நான் தெளிவடைந்தபடி இருந்தேன் . முன்னர் எனக்கிருந்த பரபரப்பு முழுவதுமாக அடங்கியிருந்தது . தகவல்களை பெறுவதில் பெரும் ஆர்வத்துடன் பலருடன் பேசியபடி இருந்த எனக்கு இதுவும் ஒரு விடுதலை உணர்வையே தந்தது . அனைத்தையும் முழுதூர திட்டமிட்டு நடத்திட இயலாது ,அனைவரும் அவரர் விழைவின் காரணமாக முயங்கிக்கொண்டிருப்பவர்கள், அவர்களை யாரும் எதைக்கொண்டும் ஒரு களத்தில் நாம் விழையும் செயலை அவர்கள் செய்வதற்கு கொண்டு நிறுத்திடவியலாது . எளிய மிருகங்கக்கூட தன் வழிகளை அவைகளே தேறும் . அரசுசூழ்தல்லென்பது முடிவை அவதானித்து அதைக் கொண்டு நிகழவிருப்பதை அறியக்கூடுவது இயலுவதல்ல . எவரின் திட்டமும் துலாத்தட்டின் ஒன்றில் மட்டுமே அவரால் வைத்திட இயலும் மறுபக்கம் இருப்பது காலம் ,அது கடைசீவரை எதை கொண்டு நிகர் செய்யப்போகிறது என்கிற ஆவலே மானுடர்கள் நாளைய பொழுதை அர்த்தமுள்ளதாக்குகிறது . மனம் நிர்மலமான ஆகாசம் போல இருந்தது. இருவரும் எழுந்து சண்முகத்தை சந்திக்க புறப்பட்டோம் மாலை 5:30 நெருங்கி இருந்தது

சண்முகம் வீட்டை அடைந்ததும் பெரியக்கூட்டத்தின் மத்தியில் அவரை எதிர்பார்த்திருந்த எனக்கு சிறிது ஏமாற்றமே . மிக குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் எந்தப்பரபரப்பும்மின்றி அமைதியாய் இருந்தது . சில முக்கியஸ்தர்கள் வரும்போது மட்டிலும் சிறிது பரபரப்பும் எழுந்து அவர்கள் விலகியதும் அவைகறைத்தபடி இருந்தது . வெளி ஹாலில் அமர்ந்து சிறிதுநேரம் நடப்பதை கவனித்தபடி இருந்தோம் . சண்முகம் வீட்டில் அவரின்  உதவியாளர்கள் என யாரும் எப்போதும் இருந்ததில்லை . ஆகவே நம் வருகையை சொல்லி அழைப்பிற்கு காத்திருக்கும் முறைமைகள் என ஏதும் அங்கு இல்லை . ஸ்வாதீனமாக அவரின் அறைக்குள் யாரும் பிரவேசிக்கலாம் . இரண்டு மூன்று பேர்கள் மட்டும் அங்கிருந்ததால் நாங்கள் உள்நுழைந்ததும் சண்முகத்தின் பார்வையில் அகப்பட்டோம் வழக்கமான வேற்றலாக " வாங்கய்யா " என வரவேற்றார் " அவருக்கு தாமோதரனை நன்கு தெரியும் . என்னை அவருக்கு அப்போது பரிசியமில்லை , சந்திப்பார்களுடன் வருபவர்களை கண்களால் எடை போடும் வழக்கத்தில் என்னை உறுத்து பார்த்தார். சண்முகத்தை மிக அருகில் சந்திக்கிறேன்.எங்களை வரவேற்ற அவர் சகஜமாகி அவரின் வலைப்பக்கத்திலிருந்த நாற்காலிகளை காட்டி அமரச்சொல்லிவிட்டு , தன்னிடம் டீ கோப்பையை கொடுத்த அவரது ஊழியரிடம் எங்களுக்கும் கொடுக்கச்சொன்னார்.

அதற்கிடையில் நாங்கள் அவர் காட்டிய நாற்காலிகளில் அமர்த்துவிட்டோம் . தாமோதரன் அவரை மிகநெருங்கி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்த்தும் நான் அவருக்கு அடுத்திருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன் , ஒருவர் ஏதோ கேட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நான் அவரையும் அந்த அறையையும் நோக்கி அவதானிக்க துவங்கினேன்.

சண்முகம் பிரம்மச்சாரி . அறுபதுகளின் இறுதியில் இருந்தார் எண்ணெய் தடவி பாடிய வாரியத்தலை முழுக்கை கதர் ஜிப்பா நாலுமுழ வேட்டி கரிய உருவம் நடுத்தரத்திற்கு சற்று மேல் எழுந்த உயரம், வலது காலை எதிரில் டீபாயில் வைத்து இடதுகாலை மடித்து அமர்த்திருந்தார் ,அது அவரது உடகாரும் பாணியாயிருக்கும் . அமர்ந்திருக்கும் முறை யாரையும் மதியாது ஆணவமாய் இருப்பதை போலன்றி இயல்பாக இருந்தது . அவரின் பேசுமுறை யாரையும் சட்டென நெருக்கம் கொள்ளவைப்பது . ஆதலால் அவர் அமரும்முறை எவரையும் தவறுதலாக எண்ணமிட வைக்காது.பேசும்போது தன்னையறியாமல் இடதுகாலின் பெருவிரல் நகத்தை தடவியபடி இருந்தார் . அது அவரது இயல்பாக இருக்கவேண்டும் , நகம் வலதை விட பளபளப்பாக இருந்தது .அந்த அறை மிக விஸ்தாரமாக இருந்தது . அதிகமும் உயரமிருக்கும் பிரெஞ்சு பாணி கட்டிடம் . பளபளப்பான தேக்குமர வாரைகளுடன் , பெருமையை சொல்லும்படியாக இருந்தது . அது அவரின் வாடகை வீடு. கடற்கரையை பார்த்தபடி இருக்கும் . எதிர் சாரியில் வீடுகள் இல்லாத்தால் கடலை அங்கிழுந்தபடி பார்க்க இயலும். அவரும் கிழக்கு பார்த்தபடிதான் அமர்ந்திருப்பார். அவருக்கு வலப்புறம் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தேக்குமர தடுப்பு மடிப்பு பலகை , அதன் பின்புறம் அந்த அறையின் மீதமுள்ள ஐந்தடி இடத்தில் ஒற்றை கட்டில் . அவருக்கு பின்புறம் ஒரு சிறிய அறை அதற்கு பின்புறம் குளியலறை

தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவரை அனுப்பிய சண்முகம் எங்களுக்காக அழகிய வெள்ளை பீங்கான் கப் & சாசரில் வைத்திருந்த டீ நாங்கள் சாப்பிடாமல் ஆறிக்கொண்டிருப்பதை கண்டதும் சாப்பிடச்சொன்னார் . நானும் அவருக்கு மிக அருகில் அமர்த்திருந்தமையால் தாமோதனுக்கு என்னை இம்முறை அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயம் .அவரும் இயலபாக என் பெயர் , பதவி போன்றவற்றை சொல்லி நிறுத்தி சிறிது இடைவெளி விட்டவர் , அப்போது அறைக்குள் நுழைந்த வக்கீல் முருகேசனை கண்டதும் எழுந்து மரியாதை நிமித்தமாக வணங்கிவிட்டு அமர்ந்தார் 

முருகேசனின் உள்நுழைவு எனக்கு சங்கடத்தை கொடுத்தது . அவர் எனக்கு ஒரு வகையில் தூரத்து உறவு என்னுடைய அப்பாவிற்கு மிக நெருக்கமானவர் . நமக்கு சிலரை ஏன் எதற்கு என்கிற காரிய காரணமில்லாமல் பிடிப்பதில்லை . எனக்கு இன்னதென்ற காரணம் இல்லாமல் அவரை கண்டாலே எனக்கு பிடிப்பதில்லை. அதை அவரும் அறிவார் , இத்தனைக்கும் அவருடன் இதுவரை பேசியதுகூட கிடையாது , விளங்கிக்கொள்ளவொண்ணாத இந்த காழ்ப்பு ஏன் எதற்கு என இன்றுவரையில் புரிபடவில்லை . அவரை  நான் வணக்கியதில் உள்ள சிறு இடரடக்கலை சண்முகம் கவனித்துவிட்டாரென நினைக்கிறேன் . சண்முகத்துக்கு வலது இடதாக இருபுறம் மட்டுமே நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் எதிரே நீண்ட இடைவெளியில் சுவற்றை ஒட்டி சோபா மாதிரி ஒன்று போடப்பட்டிருக்கும் . பொதுவாக சண்முகத்துக்கு சரியாக காது கேட்காது என்கிறமாதிரியான வதந்தி  எல்லாவிடத்திலும் பரவலாக உண்டு . ஆகவே அவரின் எதிரிகள் செவிடன் எனக் கேலி செய்வதுண்டு . ஒருமுரை வாழப்பாடி ராமமூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் திடீரென செவிடார் எப்படி இருக்கிறார் என்றதும் , நான் அவரிடம் சண்முகத்துக்கு உண்மையிலேயே காது கேட்காத என்றதற்கு சிரித்தபடி அவர் சொன்னார் "காது கேட்காதவர் மட்டுமல்ல சொல்வதை கேட்காதவரும் செவிடர்தான் "என்றார் .


சண்முகத்தின் அணியில்  முருகேசன் மிக முக்கியமான நபர் , அவரின் நம்பிக்கைக்குரியவர் . ஆபத்தானவர் . உள்ளேநுழைந்ததும் ஸ்வாதீனமாக கைதூக்கி வணங்கினார். முருகேசன் குள்ளமான பெருத்த உருவமுள்ளவர் எப்போதும் முழுக்கை கதர் சட்டையும் பேண்டும் அணிந்திருப்பார் "குள்ளனையும் குறுங்கழுத்தைனையும் நம்பக்கூடாதென்பார்கள்" இவர் இரண்டுமே .அரசு வக்கீலா வேலை பார்ப்பவர் மூப்பனாரின் விசுவாசி . சண்முகத்தை பார்த்து வணங்கிவிட்டு நாற்காலியில் அமர என்னை நெருங்கியதும் நான் எழுந்து கொண்டேன் அவர் ஸ்வாதீனமாக என் தோளை அழுத்தி உட்காரவைத்துவிட்டு , என்னிடம் அப்பாவை விசாரித்தார் . என்ன வியாபாரத்தை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டாய் போல என்றார் , என்னால் அதை ரசிக்க முடியவில்லை . எனக்குள் ஏதோ உறுதியபடி இருக்க நான் சட்டென எழுந்து நீங்கள் பேசுங்கள் நாங்கள் வெளியில் காத்திருக்கிறோம் எனறதும் மறுபடியும் என்னை அழுத்தி உட்காரவைத்துவிட்டு ஒன்றுமில்லை சும்மாதான் வந்தேன் நீ பேசு என்றார் சண்முகம் கண்கள் மறுபட்டிருந்தன என்பதை கவனித்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக