https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 9 ஜூன், 2017

அடையாளமாதல் - 89 *காலம் நிகழாவெளி *

ஶ்ரீ:






அடையாளமாதல் - 89
*காலம் நிகழாவெளி *
இயக்க பின்புலம் - 16
அரசியல் களம் - 27





அரசியலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆவல் தோன்றியவுடன் இளைஞர் காங்கிரஸில் இணைய முடிவெடுத்தேன்நண்பர்களில் சிலர் கண்ணனுடன் இணைவதே சரியானது என்றனர் . நம்பிராஜன் என் நண்பர்களில் ஒருவன், கண்ணனுடன் மிக நல்தொடர்பில் இருப்பவன் . கண்ணன் அவனுடைய அண்ணன் இன்பசேகரனின் மிக நெருங்கிய நண்பர்  . அவருடைய உணவு பலநேரம் இன்பசேகரன் வீட்டில்தான் . இன்பசேகரனின் அம்மா நான் சந்தித்த சில மிகசிறந்த தாய்களில் ஒருவர், இங்கிதம் அறிந்தவர் , மிக அழகியபழகும் முறை கொண்டவர் . அவரின் ஐந்து மகனுடன் ஆறாவது மகனாக அவர் வீட்டிலேயே கண்ணன் வளர்ந்தார் என்று சொல்லலாம் ."கல்வே பங்களா" அதுதான் அவர்கள் வசிக்கும் இடத்திற்கான பெயர் . இன்பசேகரின் அப்பா காங்கிரசில் பொறுப்பில் இருந்தவர் . பலவிதத்தில் பொது வாழ்கையில் நிறைந்திருந்தார் அதனால் இன்பசேகரனின் வீடு ஒரு சாத்திரம்போல எப்போதும் ஒரு திரளான மனிதர்களின் தொகுப்பாக இருக்கும் . ஜீவா ருக்மணி சினிமா தியேட்டர் பின்புறம் வீடு . பக்கத்தில் உள்ளது ப்ளூ ஸ்டார் ஹோட்டல் . அது அவர்களுக்கு சொந்தமான இடம் , லீசுக்கு விட்டிருக்கிறார்கள்

என்னுடையது கட்டுக்கோப்பான குடும்பம் , வியாபாரம் ஆச்சாரம் கோவில் திருப்பணி , பொது நிகழ்வுகளில் அதிகம் பங்கெடுக்காத ,எதிலும் ஒதுங்கியிருக்கும் , பொதுவில் பழகுவதென்பது ஒருசில கோட்பாடுகளின் ஊடாக அவர்களுக்கு வாசலைத்தாண்டிவது வேரொரு உலகம் நுழைவது போல . அதற்கு நேர் எதிர் இன்பசேகரன் வீடு . அது ஒரு ஆண்களின் உலகம் போல , என் சிறுவதில் எனக்கு நிறைய ஆச்சர்யத்தை கொடுத்த இடம் . வீட்டில் ஆறு பெண்களுடன் ஆண்களின் சட்டை அணிந்த பெண்ணாக பார்க்கப்பட்ட நான் , முழு ஆணாக நடத்தப்பட்டது அங்கு என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் .

ஒரு ஆணாக பார்க்கப்பட்டதாலேயே எனக்கு அந்த வயதில் அந்த வீடும் இன்பசேகரனின் அம்மாவும் எனக்கு இன்றும் தனித்து தெரிவதற்கு காரணம் என நினைக்கிறேன்பெண்கள் நிறைந்த வீட்டை நிர்வகிக்கும் தாயின் மனோபாவமும் பெரிய வேறுபாடுகளை உடையது . அத்தகைய வீட்டை நிர்வகிக்கும் தாய் தந்தை இருவருக்கும் பொதுவான அம்சமுண்டு , ஒரு சிறுவனின் தவறுகள் அல்லது சிறு எல்லைமீறல்கள் வரைமுறைகளுக்கு உடபட்டவைகள் , நாளைய சவால்களை எதிர்கொள்ள சில விழைவைகளை அறிதலில் கடக்க வேண்டியவர்கள் , அவர்கள் பெண்களுடன்  ஒப்பிடப்பட்டு எல்லாமே  குற்றமாக அறியப்பட்டு, அதன் பின்னணியில் " இது உருப்படாது " என்கிற எண்ணத்திலிருந்து மாறுவதற்கு அவர்களால் இயலாமலாகிவிடுகிறது . அதன் வினைகளும் எதிர்வினைகளும் ஆழ்மனப்பமப்படிமங்களுடன் உரையாடுகையில் ஒரு விசையென உருவெடுத்திருக்கலாம் . அது ஒருவரின் பழக்கவழக்கங்களில் பெரும் ஆளுமைகளை செலுத்தக்கூடியது . இன்றுவரையிலும் கூட அது என்மீது தன் ஆதிக்கத்தை செலுத்தியபடி இருப்பதாக உணருகிறேன் .

அன்று கோரிமேட்டில் நிகழ்வில் என் உள்கூற்றில் மாறுதலடைந்தபடி இருந்தேன்  . நம்பிராஜனின் பழக்கம் எங்கும் எதிலும் தனக்கென பயன்பாட்டிற்கு தேவைப்படலாம் என்று சில தொடர்புகளை தன் தனிப்பயன்பாட்டிற்கென வைத்திருப்பான்  , எளிதில் ஒருவருக்கு அதை பயன்படுத்தி உதவமாட்டான். உதவினால் காலம் முழுவதும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பவன் . அவனுக்கு நான் பாலனுடன் இணைவது பிடிக்கவில்லை என்றாலும் கண்ணனிடம் அழைத்து செல்ல ஒரு தயக்கத்தை அவனிடம் உணர்தேன் . என்னுடைய முடிவுகளில் பிறருடைய உதவிகளை நான் எதிர்பார்ப்பதில்லை , அன்று அவன் ஒன்றும் பேசாது என்னை கண்ணனிடம் அழைத்து சென்றிந்தால் , ஒருக்கால் என்னுடைய பாதை மாறித்தான் போயிருக்கும் . ஆனால் இன்று வந்து சேர்த்திருக்கும் ஒரு இடத்திற்கு நான் வர முடியாமலேயே ஆகியிருக்கலாம்  . 

நம்பிராஜனின் அண்ணன் இன்பசேகரன்தான் சண்முகத்தை பற்றி மிக தெளிவாக என்னிடம் பேசியிருக்கிறார் . அது ஒரு நுண்சொல் போல என் மனதிற்குள் கேட்டபடி வளர்ந்து பெருகிற்று . ஒவ்வொரு அடியையும் மிக ஜாக்கிரதையாக நான் எடுத்து வைக்க காரணமாக இருந்தது . அந்த ஜாக்கிரதை உணர்வு எனக்கு சாதக பாதக பலன்களை கலந்தேரகொடுத்ததாக இபோது உணர்கிறேன் , ஆனால் என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் நடக்கும் என்பது என் சிந்தாந்தமும்கூட .

என்னுடைய நுழைவு கமலக்கண்ணனின் அரசியலில் வாழ்வில் ஒரு தடையாக எழுமென்று நான் எண்ணக்கூடவில்லை . ஆனால் அது அவ்விதம் வளர்ந்ததற்கு அவரே ஒரு முக்கிய காரணம் . யாரையும் தனக்கான போட்டியாக நினைப்பதும் , பின் அவர்களுடன் ஒரு நிழல்யுத்தத்தை தொடங்கிவிடுவார். அவர் திறமையற்றவர். அரசியலில்  பதவி காலமூப்பின் அடைப்படையில் வழங்கப்படுவதில்லை , அது புத்தி சாதுர்யத்தையும் விடாமுயற்சியுடனான கடின உழைப்பை கோருவது

அவரின் இந்த மனோபாவம் ஏதாவது ஒரு தருணத்தில் வெளிப்பட்டு கையும் களவுமாக அகப்பட்டுக்கொள்வார் . இது போல பல விஷயங்களினால் பலருடன் அவருக்கு முரண்பாடிருந்தது . அந்த செய்திகள் ஏதாவதொரு வழியில் பாலனிடம் சென்றடைந்தபடியே இருந்தது . அதனால் பாலனிடம் முழுநம்பிக்கையும் இழந்துவிட்டிருந்தார்

அவரை காப்பாற்றுவதற்கு தாமோதரன் தேவை படுவதால் அவர் எப்போதும் தாமோதரனுடனே காணப்படுவார். அந்தரங்கத்தில் அவரை பற்றியும் நிச்சயம் ஆரோக்கியமான சிந்தனை இருந்ததில்லை என்பது ஒரு முரண்நகை . என்னை ஒரு போட்டியாக கமலக்கண்ணன் உணரத் தொடங்கிய காலம், அவருடைடைய பேச்சில் செய்கைகளில் அதன் கூர்முனை என்னை வந்து அவ்வப்போது வந்துத் தொட்டதுண்டு . அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை . நான் அவருக்கு போட்டி என்கிற சிந்தனையே எனக்கில்லை , என்பது மட்டுமின்றி அவருக்கும் எனக்குமான ஒரு பதவி பொதுவில் இருப்பதாக கூட நான் நினைக்கவில்லை.

தாமோதரன் பாலனுக்கு எல்லா வகையிலும் தேவைப்படுபவர் , அவர் பாலனின் இன்னொரு முகம் , முக்கிய தருணங்களில் அவர் சொல் முக்கியத்துவம் வாய்ந்தது , பாலனால் அவர் சொல்லை ஒருநாளும் புறம்தள்ளமுடியாது . கமலக்கண்ணன் பாலனை அடக்கும் அங்குசமாக தாமோதரனை நம்புவதால் , அவருடனான தன் நிலையை எப்போதும் சரியாக பராமரிப்பார் . ஆகவே இருவரும் இரட்டைப்பிறவி போல எம்போதும் ஒன்றாகவே காணக்கிடைப்பார்கள்


தாமோதரனுக்கு இளைஞர் காங்கிரஸின் அடுத்த தலைவராக தான் வரமுடியாது என்று அவருக்கே தெரிந்திருந்தது , அதை பற்றிய எந்த கனவில் அவர் இல்லை .ஆனால் அடுத்து வருபவர் யார் என முடிவெடுக்கும் இடத்தில் எப்போதும் இருப்பவர் , அதை உணர்ந்துள்ளார் . கமலக்கண்ணனை போன்ற ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பது தன் தனிப்பட்ட அரசியலுக்கு நல்லது என்கிற அபிப்ராயமும் அவருக்கு இருந்திருக்கலாம்  . அவரை பொறுத்தவரையும் எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது . அதாவது நான் உள்நுழையும் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்