https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 23 ஜூன், 2017

அடையாளமாதல் - 101 *நாற்காலி விழைவு * .

ஶ்ரீ:





*நாற்காலி விழைவு *
இயக்க பின்புலம் - 28
அரசியல் களம் - 30








பாலனின் தேர்தல் தோல்வி இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தை சிதைத்துவிட்டது , என்பதன் உண்மை முகத்தில் வந்து தாக்கிய தருணம் , மெல்ல மெல்ல விளையாட்டுப்போல உள்நுழைய இடம்கொடுத்த அது பின் வெளியேறுவது சாத்தியமில்லை என்றாக்கியது . நான் பிறருடன் பெரிதும் முரண்பட்டது இங்கேதான் . பலர் இருக்குமிடத்தில் வாய்ப்பில்லாதபோது வாய்ப்புள்ள இடத்திற்கு நழுவி செல்வது என நினைத்தபோது , வாய்ப்புகளை உருவாக்கி அதன் மையத்தில் இருப்பதை பற்றிய கனவில் நான் இருந்தேன் . மரைக்கார் சொன்ன ஒன்றும் சொல்லாத ஒன்றுமாக என் மனதிற்குள் கட்டுப்படுத்தமுடியாத சிந்தனைகள் ஓடியபடி இருந்தது . மறுபடி எங்கிருந்து துவங்குவது என்பது மட்டுமே அப்போது என் யோசனையாக இருந்தது . காங்கிரஸ் ஆட்சி அமைவதில் நமக்கு யாதொரு பயனும் இல்லை என்பது தெளிவாக கண்களுக்கு புலப்பட்டது . நாங்கள் அனைவரும் பிறர் உட்காரும் நாற்காலிகள் மட்டுமே . பாலன் அதில் அதிகாரத்துடன் உட்கார நினைத்த அனர்த்தம் தன் கூலியை கொடுத்துவிட்டது .

கிருஷ்ணமூர்த்தி இடற்கு பாலன்தான் சரியான ஆள். ஆனால் அது நடவாது . பாலன் மரிக்கார் புதுவையில் இல்லாத நாட்களில் கிருஷ்ணமூர்த்தியை சார்த்திருக்கவேண்டும் . இது நீண்டநாள் ஆடுகிற ஆட்டமில்லை , கிருஷ்ணமூர்த்தியின் கீழ் அரசியலா என்னால் நினைத்துப்பார்க்கமுடியவில்லை

அரசினர் விடுதி வந்துவிடவே . நான் காரை கொண்டுபோய் போர்டிகோவில் நிறுத்த அவரும் பாலனும் இறங்கிக்கொண்டார்கள் , மறுபடி திடீர் தேவையிருக்கலாம் என்பதால் , எனக்குத்தெரிந்த நபர் மூலம் வண்டியை கொடுத்தனுப்பி டிரைவரை அழைத்துவரசொல்லிவிட்டு, எங்களுக்கு ஒருங்கியிருந்த அறைக்குள் நுழைந்தேன். பாலன் அங்கிருந்தார் . என்னைப்பார்த்ததும் எழுந்து பின்புறமிருந்து பலகனிக்கு இட்டுச்சென்று , என்னிடம் மரைக்காயர் சொன்னதை யாருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்றார் . அது எனக்கே புரிந்திருந்தது . இனி எவருக்கும் சொல்லக்கூடாதவைகள் என என் நெஞ்சுக்கு அருகில் வைத்திருந்த தகவல்களுடன் இவையும் சென்று சேர்ந்தன

சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தல் நடக்கவிருப்பதை அங்கு கூடியிருந்த திரளின் பெருக்கமும் நேரத்திற்கு நேரம் கூடிக்கூடி வந்த கார்களின் அணிவகுப்பும் அறிவித்தது  . கண்ணன் தரப்பினர் உற்சாகமாக இருந்தனர் . ரவி மிகப்பபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் . அவர் கண்ணனின் பொருளாதார முகம் . அது சம்பந்தமான தொடர்புறுத்தல்களை அவர்தான் செய்து கொண்டிருந்தார் . ஒரு காரில் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அங்கு காரில் வந்திறங்கியதும் , ரவி அவர்ருகில் சென்று ஏதோபேச அவர் சொல்லும் எதையும் கேட்காது , அவரை பிடித்திழுத்துக்கொண்டு சென்றதையும் அதற்கு அவர் உடன்படாதே எதோ சொல்ல முயற்ச்சிப்பதை பொருட்படுத்தாது வலப்பக்கமுள்ள அறைக்குள் சென்றார். அனேகமாக கண்ணன் அங்கிருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். இருப்பினும் ரவி இதைப்போன்ற அடாவடிக்கு புகழ்பெற்றவர். நடந்தவுகளை பார்க்க சிறிது வருத்தமாக இருந்தது .

இப்படிபட்ட அரசியல் சூழலில் நாங்கள் எங்கோ தொலைதூரத்திலிருப்பதாக மனச்சோர்வு தாக்கத்துவங்கியது.

அந்த அரசினர் விடுதி பழமை கலந்து காட்டப்பட்ட ஒரு கட்டிடம் . கட்டிடம் என்பது ஒரு கலை என இந்த பொதுப்பணித்துறையினருக்கு ஒருநாளும்  உரைக்கப்போவதில்லை . அனைவரின் புத்தியிலும் புற்றுநோய் ஒரு கரணமாக இருக்கலாம் . தேவைக்கு அதிகமான இடங்களை வெற்றாக விட்டிருப்பதும் . முகப்பு பற்றிய ஞானமின்றி , உள்ளே எதை கட்டியிருந்தார்களோ அதன் நீட்சியாக வருவதை கூச்சமின்றி முகப்பாக்கியிருந்தார்கள்.

முழு கட்டடமும் " " வடிவில் அமைந்திருந்தது. நுழைவாயிலை தாண்டினால் பெரிய திறந்த முற்றம். பெரிய வட்டமான மேடை ,கார்கள் வந்து செல்ல சிக்கலில்லாதபடி அமைக்கப்பட்டு அதன் நடுவில் ஒரு நீரூற்று அதை ஒட்டி கார்நிறுத்தத்திற்கான  போர்டிகோ . மூன்று நான்கு படி கொண்ட சிறிய உயரத்தில் இருந்தது அதன் வரவேற்பறை , இடதுபுறத்தில் தனியான ஒரு கட்டிடம் ,நான்கு அறைகளை கொண்டது. விருந்தினர் மாளிகை போல வடிவில் , வரவேற்பறை , சாப்பாட்டு அரை பின் படுக்கை அறைகள் அவை பெரும்பாலானவை தேவைக்கு அதிகமாக பெரிய அளவில் இருந்தன

மூன்றடுக்கு தளம் கீழ் தளம் அரசாங்க பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்குவதற்கு ஏற்றாற்போல மர தடுப்புகளுடன் இரண்டு அறைகளைக்கொண்டது. பிராதான கட்டடத்தில் தான் கூடுகைக்கான பெரிய கூடம் அமைந்திருந்தது , கட்சி மேல்மட்ட கூட்டங்களும் , தலைவர் தேர்தல்களும் வழமையாக அங்குதான் நடைபெறும் .இதுவரை தேர்தல்போலத்தான் ஏதேதோ நிகழ்ந்துள்ளது .முதல் முறையாக  தேர்தல் நடைபெறப்போகிறது , பல திருப்பங்களுடன் ஒரு நாடகீய தருணங்களை எதிர்நோக்கலாம் .

நேரடியாக தேர்தல் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் பிரதான வாயிலின் அருகில் மரைக்கரின் தனக்கான அறை ஒருங்கியிருந்தார் ,அங்கு அமர்ந்தால் கூடுகை அறையில் நடப்பவற்றை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளமுடியும் . பாலனும் நானும் அந்த அறைக்குள் நுழைந்தோம் .கிருஷ்ணமூர்த்தி அங்கு போடப்பட்டிருந்த பெரிய இரட்டைக்கட்டிலில் பிரதானமாக அமர்ந்திருந்தார் , அந்தப் படுக்கையறை , கழிப்பறை மற்றும் சாப்பாட்டு மேஜை உள்ள பெரிய ஹாலை போலிருந்தது , ஆகவே  நெறியற்று அவரவர் கிடைத்த இடத்தில் விரும்பியபடி அமர்ந்திருந்தார்கள்

கட்டில் மேல் சிலர்,ஜன்னல் விளிம்புகளில் சிலர் ,தரையில் சிலர் என எங்கும் மனிதர்கள் . கிருஷ்ணமூர்த்தி அமர்ந்திருந்த கட்டிலில் அவருக்கு எதிரே மரியாதை நிமித்தமாக விடப்பட்டிருந்த இடைவெளியில் பாலன் சென்று அமர்ந்துகொள்ள இடநெருக்கடிக்காரணமாக பாலனுக்கு பின்னால் இருந்தவர் எழுந்துகொண்டார் . கிருஷ்ணமூர்த்தியின் ஆட்கள் பத்து நிமிடடத்திற்கொருதரம் அறைக்குள்ளே வந்து அவர் காதில் பேசிவிட்டு செல்வத்தையும் அதை பாலன் என்னவெனக் கேட்டால் மிக கீழ் குரலில் பாலனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிக்கொண்டிருந்தார்


நான் எங்கும் அமரவிரும்பாததால் பாலனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன் .ஒரு கட்டத்திற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் மெல்ல நழுவி வெளி வராண்டாவிற்கு வந்து நின்றுகொண்டேன் . போலீஸ் கெடுபிடி அதிகமுள்ள அந்தவிடத்தில் நின்றுகொண்டிருப்பது மரியாதையாக தெரியாததால் . என்ன செய்வது எனப்புரியாது திகைத்தபோது வுட்லண்ஸ் பாலா அருகில் வந்ததார், மரியாதைக்கு நான் வணங்கியதும் அவர் என்னிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று அருகிலிருந்த கதவை திறந்து என்னை உள்ள அழைத்துச்சென்றார் அது கூட்டம் நடக்கும் இடத்தின் பின்புற வராண்டா , அங்கொன்று இப்படி இருக்கும் என எண்ணவில்லை . அங்கு வேறுயாரும் வரையலாது என்பதால் கேட்பாரற்று இருந்தது . ஒரு தூணின் சாய்ந்து நின்று கொண்டால் உள்ளே நிகழ்வதை பார்க்க மட்டுமின்றி கேட்கவும் முடிந்தது . நானும் வுட்லண்ஸ் பாலா அவர்களும் அங்கிருந்த சிறிய பெஞ்சில் அமந்துகொண்டோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக