https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 1 ஜூன், 2017

அடையாளமாதல் - 85 * நிழலிடும் மனிதர்கள் *

ஶ்ரீ:






அடையாளமாதல் - 85
* நிழலிடும் மனிதர்கள்  *
இயக்க பின்புலம் - 12
அரசியல் களம் - 25





க்பால் மரைக்காரின் தம்பி , அவரது அரசியல் முகம் , மிக மென்மையான குரல், கசப்பை ஒருபோதும் வெளிக்காட்டாத நல்ல உடல்மொழியினால் , உற்சாகமாக தன் பொறி விலங்குடன் உறையாடியபடி இருப்பவர் . மரைக்காரின் அரசியல் வெற்றிக்கு இக்பால் மிக முக்கிய ஆளுமையாக எல்லா அணியினராலும் அறியப்படுபவர் . மரைகாரின் அரசியல் நம்பகத்தன்மைக்கு வலுசேர்பவர், அவரது தாட்சனயமற்ற முடிபுகளின்  நுட்பமான அறுவை சிகிழ்ச்சை சிறு கத்தி  , அவை இக்பாலின் உறுதிமொழிகளுக்கு காரணமானவை . அவை மரைகாராலும் சில சமயங்களில் மீற இயலாதபடி செய்வதுண்டு

நான் அன்று மாலை கண்ணனை மிக கூர்ந்தபடி இருந்தேன் . இவர் ஏமாறுவாரா . இவரை ஏமாற்றமுடியுமா , அதன் பின்விளைவுகளை மரைக்கார் அறியாதவரா , எந்த அடிப்படையில் இவ்வளவு நெருக்கத்தில் அவரால் நின்று  விளையாடமுடியும்

உன்னுடைய யூகம் முற்றிலும் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது என்றது என்னகம் . ஆனால் மனதில் ஒன்று எழுந்து எழுந்து மறுபடியும் மறுபடியும் சொன்னது 'தான் சரி' என்று. ஊழின் ஆடல் அது. இப்படித்தான் பெரும்தலைவர்களுக்கு சில உன்மைகளை காலம்  புரிந்து  கொள்ள முடியாதபடி செய்து விடும் . இது எங்கும் காண்பது, அது மாற்றித் திகழ்வது, அதுவே இங்கும் நிகழ்கிறது என்றது .அசைக்க முடியாத தன்னம்பிக்கை உறுதியான தகவல்களையும் இளிவரலாக அணுகும் . அந்த சூழலில் அவருக்கு மாற்று என்பது எடுத்து பேசவும்  லாயக்கற்றது . அதுவே கிடைக்கும் சிறு தகவலையும் உதாசீனப்படுத்தியது . சண்முகத்தின் தோல்வி உறுதி செயப்பட்ட ஒன்று, அதன் பின் தனக்கான ஆடல் பாக்கியுள்ளது என உறுதியாக  நம்புகிறார் .

கண்ணன் தரப்பில் சிலருடன் பேசியதிலிருந்து எனக்கு புரிந்தது , அவர்கள் மரைக்காயரை முழுவதுமாக நம்பவில்லை . அது இயலபானதே . சண்முகம் , மரைக்காரும் இல்லாத களத்தில் தன்னால் நின்று விளையாடமுடியும் என் நம்புகிறார் , அதுவும் சரியானதே . பெரும் பொருளியல் ரீதியான உதவிகள் கிடைக்க தொடங்கியதும் , அதனூடாக அவர் தன்னுடைய வெற்றியை உணராதத்தொடங்கிவிட்டார்

களத்திற்கு வெளியே அரசியல் போக்கை முடிவுசெய்யும் சக்திகள் எப்போதும் உண்டு . அரசியலை மட்டுமல்லாது அரசியல்வாதிகளையும்   வடிவமைப்பது இப்படிப்பட்டவர்களே. களத்தில் கிடைக்கும் தகவலை ஒட்டி, வெட்டி தங்களுக்கான  முடிவுகளைத் தேருவார்கள் . பின் அரசமைக்கும் வாய்ப்புள்ளவர்களின் தொடுகை நிதானமாக  நிகழ துவங்கும்

இவர்களில் மூன்று அடுக்குகள் உண்டு முதல் அடுக்கு ஆகப்மிகப்பெரியது அது கணிப்பை நிலுவையில் வைத்திருக்கும், அவசரப்படாமல் . எந்த நேரமும் அவர்களால் ஆட்சியாளர்களுடன் இணைந்துகொள்ள முடியும். யார் பின்னாலும் ஓட இயலாது , பெரும் தொகை முன்வைக்க வேண்டியிருக்கும் , தோற்பவருக்கு கொடுக்க இயலாது . கொடுக்காமல் போனால் வீண் விரோதம் மிச்சப்படும் , அவர்கள் வெற்றிபெறும் காலத்தில் எனர்கள் புறந்தள்ளப்படலாம் அது ஆபத்தானது , வெற்றி பெற்ற பின்னர் தொடலாம்  அவர்களாலும் இவர்களை ஒதுக்க இயலாது .

இரண்டாவது அடுக்கு , அரசியல் லாபத்தை முன்னிட்டு, தொழில்முதல் நிலைக்கான போட்டியாக, அரசியலில் அனைத்தையும் பிணையாக வைப்பர்  . அரசியலில் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள் . சில இடங்களில் இவர்களோ அல்லது இவர்களால் அடையாளம் காட்டபடுபவர்களோ பல கட்சிகளில் வேட்பாளராக களம் காண்பார்கள் . தங்களின் வியாபார போட்டிகளை சமன் செய்ய அரசியலை எந்த எல்லைக்ம்கும்  பயன்படுத்துவர் . அரசின் கொள்கை முடிவுகள்  செய்யும் அல்லது கூடும் தொழில் இவர்களை சார்ந்து இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள் அல்லது அரசின் திட்டங்களினால் லாபமடைவதற்கு ஏற்ப புதிய  தொழில்களை தொடங்குபவர்காளாக இருப்பவர்கள் .

மூன்றாவது அடுக்கு வளரும் அரசியல்வாதிகள்,  நாளைய அரசியல் வெற்றியாளர்கள் என நினைப்பவர்களுக்கு  பொருளியல் ரீதியான உதவிகள் மூலம் தன்னுடைய எதிர்காலத்தை கணித்துக் காத்திருப்பவர்கள் .அனைத்திற்கும் தன்னை சார்ந்து இருக்குமாறு பார்துக்கொள்வர் . சிறு பொருளியல் உதவிகளே இவர்களால் செய்ய இயலும் . கண்ணனுக்கு அமைத்தவர்கள் இந்த மூன்றம் நிலை தொழில் முனைவோர் . ஆரம்பத்தில் கண்ணனுக்கு அணுக்கமாக இருந்தவர்கள் இவர்கள்தான் . பிற்காலத்தில் , தன்னுடைய தளத்தை இவர்களையும் , இவரைப்போல வேறு பலரையும்  வளர்த்தெடுத்தவர் பிறிதொருவரில்லை . மிக சரியான முடிவு இது . இவர்கள் கண்ணனின் எதிர்காலத்தை நம்புகிறவர்கள் . சிறு தொகை பல பேர் பெரும் பொருளியலாக திரண்டுவிடும் . முதல் நிலையாளரிடம் பொருள் தேவைக்கான காரணத்தை விளக்கவேண்டிவரும் , தகவல் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆனால் மூன்றாம் நிலைக்கு அதற்கான விளக்கம் தேவையில்லை .

பொருளாதார உதவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பின்னே அணிவகுக்க மறைக்காரை மட்டும் நம்பியிராமல் , வளர்ந்து வரும் தன்னுடைய பொருளாதார பலத்தாலும் , தொடர்பாலும் பல வேட்பாளர்களுக்கு உதவி செய்தும் , யார் வெற்றிபெற வேண்டும், வேண்டாம் என்கிற முடிவெடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்

1985 நடந்தது மறுபடி நிகழக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் . காசுக்கடைக்கு தொகுதியில் கடலோரப்பகுதி முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் . அவர்களிலிருந்து எழுந்த வந்தவரை சண்முகத்துக்கு எதிராக நிறுத்தினார்சண்முகம் தரப்பு இதை முறியடிப்பது பற்றி கவலை இல்லாது தினமும் அவருடன் பிரச்சாரத்திற்கு போவதும் வருவதுமாக பொழுதை போக்கினார் . அவரிடமுள்ள பெரிய குறை தொடர்புறுதல் . கண்ணனின் பலம் அது . தேர்தல் நாள் நெருங்கி வர அனல்பறக்க துவங்கியது

கண்ணன் முதல் முறை அமைச்சரானதும் காதி போர்டு அமைப்பை அரசியல் ரீதியாக பயன்படுத்தி நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் . அந்த வேலைக்கு ஆட்களை  பலமுறையில் நன்கு பரிசீலிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் . தன்னுடைய நீண்டகால அரசியலுக்கு தேவையானவர்களை பழக்கும் ஒரு பட்டறை போல அது செயல்பட்டது . அதில் வேலை செய்தவர்கள் நிறையபேர் காசுக்கடை தொகுதியை சேர்த்தவர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...