https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 11 ஜூன், 2017

அடையாளமாதல் - 94 * மௌனத்தில் கிடந்த பாதை *

ஶ்ரீ:






மௌனத்தில் கிடந்த பாதை 
இயக்க பின்புலம் - 21
அரசியல் களம் - 27






துக்ளக் மற்றும் இந்தியா டுடே இரண்டு புத்தகமும் நான்  என் இளமையில் விரும்புப்படிப்பது . துக்ளக் சோவின் எழுத்திற்காக தமிழக மற்றும் அகில இந்திய அரசியலை ஒரு கோணத்தில் புரிந்து கொள்ள , இந்தியா டுடே அரசியல் மற்றும் உலக நடப்புகளை அது கொண்டுவந்ததை விரித்து காட்டியதை  காட்டிலும் பிறிதொன்று செய்யவில்லை 

என் சிறு வயதில் புத்தக வாசிப்பு என்றால் இந்த  இரண்டு புத்தகத்தை குறிப்பிடுவேன் . அதெல்லாம் ஒரு வாசிப்பேயல்ல என இன்று வெண்முரசு ,விஷ்ணுபுரம்  நவீன இலக்கியங்கள் படிக்கையில் இதுவொன்றுமேயில்லை என்பது வேறுவிஷயம்  1977 லிருந்து துக்ளக்வாசித்து வருகிறேன்  . துக்ளக் சோவினுடைய அரசியல் விமர்சனம் . அது கருணாநிதியை போன்ற எதிர்மறை ஆளுமைகளை யாரும் தொடாது போது அவரை செறிவாக விமர்சித்தது எழுதிய கட்டுரைகளுக்காக , அன்றைய சுழலில் அந்தளவிற்கு துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் பிறிதொருவரில்லை . அதில் தமிழக மற்றும் அகில இந்திய அரசியலை பற்றிய விமர்சனம் மற்றும் கட்டுரைகளுக்காக . இரண்டு இந்தியா டுடே வாஸந்தியின் தமிழ் மொழிப்பிரயோகம் அரசியல் மற்றும் பொது கட்டுரைகள் , அதன் தனித்தன்மையாக இருத்தது . அதன் முதல் இதழ் தொடங்கி கடைசீ இதழ் வரை வாசித்திருக்கிறேன்

இந்தியா டுடே தமிழ் பதிப்பைபோல பிறிதொன்று இந்த யுகத்தில் வரக்கூடும் என நான் நம்பவில்லை , அன்றைய  அகில இந்திய அரசியலை புரிந்துகொள்ள , நடக்கவிருப்பதை யூகிக்க அந்த பதிப்புகள் காரணமென்று சொன்னால் அது மிகையன்று .அது நின்றுபோனதில் பெரும் இழப்பாக உணருகிறேன் .ஆனால் அவையும் இறுதி மூன்று நான்கு வருடம் தன முகமிழந்து தவறான கைகளில் சென்று பொலிவிழந்து இறுதியில் அழிந்தே போனது . துக்ளக் பொறுத்தவரை என்னை பிரம்மிப்பூட்டியவை அவரின் காலத்தை வென்ற கணிப்புகள்,  யூகங்கள் சில அற்புதமான பதில்கள் . பின்னர் 1995ல் முதுமையின் காரணமாக தனக்கு இன்னும்  அதே நரம்பின் முடுக்கிருப்பதாக எண்ணி,எழுத,செய்த அத்தனையும் அனர்த்தம் .அது வயோதிகத்தில் எவராலும் தவிர இயலாதது . சில பெருசுகள் கடந்தகால அனுபவங்களை , புதிய வார்பிட முயறசிக்கும் லொல்லு போன்றவை பிறிதில்லை ,அந்த காலகட்டத்தில் அவர் ஏழுத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டேன் 

1980 உலகமே விடுதலைப்புலியை கண்மண்தெரியாமல் ஆதரித்தபோது , அவர்கள் நம்பத்தகாதவர்கள் என்றும், அவர்களின் நரித்தனமும் மாபியா கும்பல் நடவடிக்கைகளையும் தோலுரித்து பல கட்டுரைகளால் சோ எழுதிவைத்ததையும் இன்றும் நினைவுகூர்கிறேன் . அந்த காலகட்டத்தில் அவர் மீது நிரம்ப கோபம் இருந்தது . ஆனால் பிற்காலத்தில் அவர் சொன்னதே நிஜமென நிரூபணமாகியது

இரண்டாவது கணிப்பு VP.சிங் பற்றியது ஏறக்குறைய வைகோ கருணாநிதியை விட்டு வெளியேற்றப்பட்ட சமயம் என்று நினைக்கிறேன் . அவரைப்போல போல இவரும் மிக ஆபத்தான அரசியல்வாதி என்றும், அன்றைய ஜனதா கட்சியினரின் அறிவீனத்தல் இவர் பாரதப்பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் என்றது அந்த கட்டுரை . சரியாய் ஒரு வருட காலத்தில் சோ சொன்னது உண்மையானதும் நான் திகைத்துப்போனேன்

சோ ஒரு கட்டுரையில் ராஜீவகாந்தியின் மறைவிற்கு பிறகு ஒரு கட்டுரையில் அரசியல் தோல்விகளில் பாடம் கற்றுக்கொள்வது மிகுந்த பயனை தரக்கூடியது . ராஜீவ்காந்தி கனிந்திருக்கிறார் எனறு  எழுதியிருந்தார் மேலும் இந்த சமயத்தில் அவர் பொறுப்பிற்கு வருவது நாட்டிற்கு நல்லது என்பது அந்த கட்டுரையின் சாரம் . அது நூறுசவீதம் உண்மை 

நான் தில்லிக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்த காலம். ரமேஷ் செனித்தலாவுடன் ராஜீவ்காந்தியை சந்தித்துள்ளேன் அவரை பற்றிய பல தகவல்களை ரமேஷ் சென்னிதலா கூறியிருக்கிறார் , அவரது மரணம் நாட்டிற்கு ஈடு செய்ய இயலாதா இழப்பு . நாட்டின் வளர்ச்சியை இருப்பது வருடம் பின்னோக்கி தள்ளிய சம்பவம் இது , வெகுகாலம் நினைவுகளில் தேங்கி இருந்தது

நான் வீட்டிற்கு வந்தபோது குடும்பமே தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருந்தது . அப்பா அந்த சமயத்தில் ஒரு பெரிய எரிநட்சத்திரம் விழுந்ததை பார்த்ததாக சொன்னார் . முதலில் இது வதந்தியாக இருக்க வேண்டும் என்றே வேண்டிக்கொண்டேன் அனால் அது உண்மை என்று அரைமணி நேரத்தில் ஊர்ஜுதமாகிவிட்டது .வெடிவிபத்து என்ரே முதலில் சொல்லப்பாடலும் இறுதியில் முதல் மனிதக் வெடிகுண்டு என ஏதோதோ சொல்லப்பட்டது 

மறுநாள் காலையெல்லாம் அது பழைய செய்தியாகிவிட்டது . "யாரோ " சொன்னதுபோல "காலை சூரியன் நேற்றைய துக்கங்களையும் சந்தோஷங்கள் இழப்புகளை பற்றிய கவலையும் இரக்கமுமில்லாது தன வேலையை பார்க்க துவங்கினான் " என்று . அதன் பிறகு அது ஒரு துக்க செய்தி மட்டுமேயானது , விசாரிப்பு மட்டுமாகியது . அதுவே இயற்கை.

கட்சி மற்றும் தொகுதி அலுவலகத்தில் படம் வைத்து அலங்கரிதிருந்தார்கள்  . தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்றனர்.அந்த செய்தியை தாண்டி தேர்தல் நடைபெற்றது . விடிந்தால் வாக்கு எண்ணிக்கை என்கிற அளவில் பரபரப்பு ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது

பாலன் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவார் என்கிற ஆசை நம்பிக்கை போல பரிணமித்து பிரம்மையாகி  அதுவே உண்மை என்றாகியது . முதல் நாள் இரவு யார்யார் எந்ததெந்த பூத் பார்க்க வேண்டும் அது சம்பந்தமான பேப்பர்கள் கொடுக்கப்பட்டு மறுநாளும் தயாராக இருந்தோம் , அடுத்த நாள் பொழுது விடிந்து கட்சி அலுவலகத்தில் கூடினோம் எனக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி டேபிள் வழங்கப்பட்டிருந்தது . அது கமலக்கண்ணன் அமருவதாக இருந்தது கடைசீ நேரம் மாற்றப்பட்டு நான் அமரநேர்ந்தது அதுகூட ஒரு சதியோ என்ன இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .

ஓட்டு எண்ணும் இடமாக சட்டக்கல்லூரி அறிவிக்கப்பட்டிருந்தது , தொகுதியின் எண் வரிசைப்படி மூன்று மூன்று தொகுதியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபடி இருந்தது .எங்களுக்கு அறை எண்  நான்கு கொடுக்கப்பட்டிருந்தது , எங்களுக்கு முன்பாக நெல்லித்தோப்பு தொகுதி எண்ணப்பட்டு திமுக சார்பாக ஜானகிராமனும் அதிமுக சார்பாக சண்முகமும் மாற்றி மாற்றி முன்னணி என்று சொன்னபடி இருந்தார்கள் .இறுதியாக மிக சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் ஜானகிராமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு திமுகவினர்  கோலாகலமாக வெளியே வந்தனர். ஜானகிராமனுடைய மகன் அசோக் எனக்கு நண்பன் அவன் அப்பாவுடன் வெளியே வந்ததும் மரியாதை நிமித்தமாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அசோக்கின் கையை பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தேன்

எங்களுக்கான பெட்டிகள் வருவதற்கும் அறை தயாராவதற்கும் சிறிது நேரமாகும் என அறிவிப்பு வந்தது . என்னிடம் அசோக் ஒரு விஷயம் சொன்னான் , அறை என் நான்கில் இதுவரை மூன்று தொகுதிகள் எண்ணப்பட்டதாகவும் கூட்டணி காட்சிகள் அனைவரும் தொடர்ந்து  தோற்றபடி இருப்பதாக அவர்களுக்கு சொல்லபட்டது என்றார் , அதன் பிறகு அவர்கள் சார்பில் ஓட்டு எண்ணிக்கைக்கு வந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிச் சென்று குளித்து வேறு மாற்று உடை அணித்து வந்ததாகவும், அதனாலேயேதான் தங்களால் சொற்ப வித்தியாசத்தில் வெற்றிபெற முடிந்தது என்றும், எங்களையும் வீட்டிற்கு சென்று குளித்துவர சொன்னான். எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. சகுனம் நானும் பார்ப்பதுண்டு. ஆனால் இது எந்தமாதிரி என புரியவில்லை .ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது , எங்களின் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்று .

எங்கள் முறை வந்து நாங்கள் ஓட்டு எண்ணும் அறைக்குள் நுழைந்தோம் , அங்கு நாங்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறை பற்றி மீண்டுமொருமுறை விளக்கப்பட்டது.மாவட்ட தேர்தல் அதிகாரி டேபிளில் அமைந்திருப்பவரை தவிர  வேறுயாரும் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரக்கூடாது என்றனர் . நான் ஒவ்வொரு பூத் பெட்டி வந்து கொட்டும்போது எழுந்து சென்று சீல் சரிபார்க்கலாம் என்றனர்.ஒட்டு எண்ணிக்கை துவங்கும் முன்பாக பதிவு புத்தகத்தில் கட்சி பிரதிநிதிகளின் கையெழுத்து வாங்கப்பட்டது. அவரவர் கட்சி பெயருக்கு நேராக கையெழுத்திட்டோம். சபாபதியின் சார்பாக வீரபுத்திரன் "சுயேட்சை" என்கிற இடத்தில் தன் பேனாவை சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின் கையேழுத்திட்டார் .ஒரு சிறிய வலி அவர் கண்ணில் தெரிந்து மறைவதாக உணர்ந்தேன்


நான் இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற இடத்தில கையேழுத்திட்டேன் . அந்த பெயர் எனக்கு ஒரு பெருமிதத்தை கொடுத்தது . காந்தி தொடங்கி பல தலைவர்கள் நினைவிற்கு வந்தார்கள் , அந்த கட்சியின் ஒரு அங்கம் நான்  என சொல்லிற்று அந்த பதிவேடு . "விதி "  யாரை முன்னிட்டுக்கொண்டு நான் இந்த கட்சியில் இணைந்தேனோ, அவர் சுயேட்சையாக இருக்க நான் காங்கிரஸ் கட்சிக்காக கையேழுத்திட்டேன் . இயற்கையின் நகைச்சுவை உணர்ச்சிக்கு ஈடு இல்லை போலும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்