https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 27 ஜூன், 2017

அடையாளமாதல் - 102 *உறுத்தும் அமர்வு *

ஶ்ரீ:
*உறுத்தும் அமர்வு *
இயக்க பின்புலம் - 29
அரசியல் களம் - 31


வுட்லண்ட்ஸ் பாலாஅப்பெயர் அவருக்கு எப்படிவந்தது எனத்தெரியவில்லை  . பாலா ஒரு அதிபுழக்கப்பெயர் என்பதால் இந்த அடைமொழியை அடைந்திருக்கலாம் . அவர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் , பலமுறை என்னை பார்க்கும்போதெல்லாம்உனக்கேன் இந்த அரசியல் கடிந்து கொள்வார்அவர் மரைக்காயருக்கும்  கண்ணனுக்கும் பொதுவானவர் . இருப்பினும் மரைக்காயரை விட கண்ணனை ஒருசொல் தூக்கலில் வைப்பார் .

நாங்கள் அங்குவந்து சேரும்போது கூட்டம் துவங்கிவிட்டிருந்தது  , கண்ணன் எழுந்து மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் மன்றாட்டு போல ஏதோ பேசிக்கொண்டிருந்தார் , அவர்பக்கத்தில் ஆனந்தபாஸ்கர் அமர்ந்திருந்தார் , உடன் சந்திரகாசு , ககாந்திராஜ் அஷ்ரப் காரைக்கால் சுப்பிரமணியம் , நளமஹாராஜன் , எல்லோரும் சண்முகத்தின் ஆதரவாளர்கள் , ராஜேஸ்வரா ராவ் , வல்சராஜ்,ஸ்ரீதரன் மாரிமுத்து என அந்த நிரைநீண்டு கொண்டே சென்றது  . கூடுகை அறையில் ஒலிபெருக்கிகள் இல்லாததால் கண்ணன் பேசுவது குரல் கம்மியபடி எதிரொலி அற்று தட்டையாக் கேட்டது , "நான்  அந்த பதிவியில் இருப்பது நீங்கள்  இருப்பது போலத்தானே "என காதில்விழுந்தது . உடன் புரிந்துபோனது , இம்முறை ஏகமனதாக தேந்தெடுக்கப்போவதில்லை. ராஜாராம் தான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பார் , ஆகவேதான் அவரிடம் கண்ணன் பேசிக்கொண்டிருக்கிறார் . நடப்பதை பார்த்து மேலதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை, யாராவது வெளியில்  வந்தாலொழிய , நடந்ததை அனுமானிக்கவியலாது

அரைமணிக்கு பிறகு அனைவரும் ஏழுந்து வெளியேவந்தனர் , கூட்டம் கால்மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது . எல்லோரும் முன்வாசல் நோக்கி செல்ல அனந்தபாஸ்கரும் வல்சராஜும் பின்பக்கமாக வந்தனர் , வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் துணைத்தலைவர் . அவர் சண்முகத்தின் ஆதரவாளர் என்றாலும்கூட  என்னுடன் நல்ல நட்பில் இருப்பவர் . அனந்தபாஸ்கர் எனக்கு வியாபாரம் மூலமாக தொடர்பில் இருந்ததால் அவர் என்னுடல் எப்போதும் இயல்பாக இருப்பவர் .என்னக்கு வேண்டிய தகவல்களை அவரிடம் பெறமுடியும் . எந்த கேள்வியையும் கேட்காமல் அவர்களுக்குள் பேசிக்கொள்வதை அருகிருந்து புரிந்துகொண்டால் நடந்ததை  ஒட்டி நடக்கவிருப்பதையும் அனுமானிக்க முடியும்

வுட்லண்ட்ஸ் பாலாவுடன் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு வல்சராஜ் என்னருகில் வந்தார் ,உடன் பேசியபடி அனந்தபாஸ்கரும் வந்தார் நான் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றேன் , வல்சராஜ் ஸ்வாதீனமாக என் தோளில் கைபோட்டப்படி உள்ளே நடந்தவற்றை எந்த மறைப்புமற்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள் . பதினைந்து நிமிடம் அவர்கள் பேசியதிலிருந்து என்னால் நடந்ததை ஒருவாறு யூகிக்க முடிந்தது . அங்கு வுட்லன்ட்ஸ் பாலாவும் இருப்பதால் அவர்கள் கண்ணனுக்கு எதிப்பாக எதையும் பேசாது பொதுவில் பேசிக்கொண்டிருந்தார்கள் .

மரைக்கார் அழைப்பதாக ஆள் வந்து சொன்னதும் பாலா உள்ளே சென்றுவிட்டார் . நான் அவர்களுடன்  பேசுவதை மேலும் கொண்டுசெல்ல என்ன நடக்கிறது என்றதும், வல்சராஜ்  வைத்திலிங்கம் வருவதற்கு வாய்ப்பு என்றார் , அதில் மெல்லிய கசப்பிருந்தது . அவர் வைத்திலிங்கத்திற்கு எதிரானவர் . அனந்தபாஸ்கார் ,வல்சராஜ் இருவருமே புதுமுக சட்டமன்ற உறுப்பினர்கள் . வயதில் வல்சராஜ் என்னைவிட சில வருடங்கள் மூத்தவர் . ஆனந்தபாஸ்கர் ஐம்பதுகளின் இறுதியில் இருந்தார் . திரும்ப கூட்டம் ஒருங்குவதற்கான சப்தங்கள் கேட்க துவங்கியதும் இருவரும் என்னை பார்த்து கையாட்டிவிட்டு கூடுகை அரங்கிற்கு உள்நுழைந்தார்கள் . நான் அவர்கள் பேச்சிலிருந்து கிடைத்த தகவல்களை தொகுக்க துவங்கினேன்.

சண்முகத்தின் முதல் நகர்தலை அவர் அணியைத்தவிர வேறுயாரும் அறிந்திருக்கவில்லை . அவரது அணியினரும்கூட  முழுவதும்  அறிந்திருக்கவில்லை என்பது வினோதம்  .மண்ணடிப்பாட்டு ராஜாராம் யாரும் யூகிக்க முடியாத ஒருவர் . அவர்  வெட்டுக்காய் போலல்லாது நிஜமாகக்கூடிய தருணத்தின் அருகில் இருப்பது அனைத்து தரப்பையும் பதட்டத்தில் நிறுத்தியது , சண்முகத்தின் மிக அற்புதமான நகர்தல் இது . வைத்திலிங்கம் எதிர்பார்த்ததுபோல எளிதாக அவர் கைகளில் விழும். தான் வேண்டாம் வேண்டாம் என்று  சொல்ல எந்த கட்டுப்பாடுகளுக்கும் , தன்வாக்குறுதிக்கு அப்பாற்பட்டு அது நிகழும்  என நினைத்திருக்கலாம்  . இது நிச்சயம் அவரை அதிரவைத்தது . கண்ணனின் அரசுசூழ்தல்கள் எல்லாம் வைத்திலிங்கத்தை சுற்றியே இருக்கையில் ,இந்த நகர்வை கண்ணனும் மரைக்காயரும் கூட எதிர்பார்க்கவில்லை என்பதை அந்த கூட்டத்தின் ஒத்திவைப்பிலிருந்து புரிந்துகொள்ள இயன்றது . எல்லோரும் கணக்கை கலைத்து மறுபடி முதலிலிருந்து துவங்கவேண்டும் .

எல்லாருடைய கவனமும் ராஜாராம் பக்கமிருக்க கண்ணனை முன்னிறுத்தவேண்டிய கட்டாயம் மரைக்காயருக்கு வந்துவிட்டது . தில்லி பிரதிநிதிகளுடன் பேசி இதை முறியடிக்கும் இடத்திற்கு வந்தார்கள் . இதில் ஆச்சர்யம். சண்முகம் இந்த ஆட்டத்திற்கு கடைசீ வரை நேரில் வரவேயில்லை . ஒவ்வொரு நகர்தலுக்கும் எதிர்வினையை முன்பே யூகித்திருந்தார் என நினைக்கிறேன் . கண்ணனை கொண்டுவருவதை தவிர மரைக்காயருக்கும் வேறு வழியற்றுவிடவே வேண்டாவெறுப்பாக அதில் ஈடுபட்டிருந்தார்


வைத்திலிங்கம்  வாய்ப்பு கைநழுவியபடி இருந்தது.எவ்வித உறுதிமொழியும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுன்னாது , முதல்வர் பதவி தனக்கு கிடைப்பதானால் அது நல்லது என் அவர் கணக்கிட்டிருக்கலாம் . தனது தந்தை இந்த மாநிலத்தின் முதல்வர் என்பதாலேயே , அதன் வாரிசாக தான் பார்க்கப்படுவதை விரும்பியிருக்கலாம் . இந்த மனோபாவமே  முதலும் முடிவுமான வைத்தியலிங்கத்தின் உளச்சிடுக்கு அடிப்படை காரணமென்றாகி அவர் நடக்கும் தோறும் தடுக்கியபடி இருந்தது  . அது அவரை கடைசீவரை படுத்தியெடுத்தது .தனக்கான எந்த திட்டமுமின்றி அந்த பறவை தானே வந்து தன் தோளில் அமரும் என்கிற கனவு கலைந்தது . கண்ணனும் ஆடித்தான் போனார். ராஜாராம் விலகுவதாக சொன்னாலொழிய தேர்தலை தவிர்க்க வழியில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...