ஶ்ரீ:
அடையாளமாதல் - 90
*ஆழ்மனத்தின் ஒத்திசைவு *
இயக்க பின்புலம் - 17
அரசியல் களம் - 27
தாமோதரனைப் போன்றவர்களுக்கு கமலக்கண்ணனைப் போல படிப்படியாய் முன்னேறுபவர்களுக்கு மத்தியில் , புயல் போல உள்நுழைந்து முக்கியத்துவம் பெறும் ஆட்கள் அவர்களால் வெறுக்கபடத்தக்கவர்கள். என் அணுகுமுறையால் அவர்களால் என்னை ஒதுக்க முடியாது இருந்திருக்கலாம் . அல்லது நான் அவற்றை கடந்ததனால் கவனிக்காது தவறவிட்டிருக்கலாம் . மேலும் , இருவராலும் என் பாதையில் தடைகளை ஏற்படுத்த இயலாது . காரணம் தாமோதரன் தன் அரசியலில் சுப்பராயனுக்கு முக்கிய இடமிருப்பதாக நினைப்பதால். அவருடனான தன் உறவை சரியாக பராமரித்து வந்திருப்பதனால் . எனக்கும் அவருக்குமான நெருக்கத்தில் எனக்கெதிராக வெளிப்படையான தடை முயற்சிகள் அவர்களிடையேயான உறவை முறித்துவிடும் என்பதை நன்கு புரிந்திருந்தார் என்பதனால் . நானும் ஒரு கட்டத்தில் அதை உணர்ந்தேயிருந்தேன். அதனாலேயே கமலக்கண்ணன் விஷயத்தில் எனக்கென தனிப்பட்ட கணக்குகளில்லை என்பதை அவருக்கு பல முறை பல வழிகளில் உணர்த்தியிருக்கிறேன் . அவரும் புரிந்திருந்தார் . என் நட்பின் வரிசைக் கிரமம் பாலன் , சுப்பராயனைத்தாண்டி தாமோதரனுடன் என்றிருந்தத்தை அவர் தனக்கான இடமாக அறிந்திருந்தார் அதில் கமலக்கண்ணனுக்கு யாதொரு இடமும் இல்லை எனபதும் தெரியும் , ஆகையால் எங்களுக்குள் கமலக்கண்ணனை வைத்து எந்த மோதலும் நிகழ்ந்ததில்லை.
தாமோதரனை பொறுத்தவரை அரி அல்லது கமலக்கண்ணன் என்கிற இறுதிக் ஆகட்டம் வந்தால் நிச்சயமாக கமலக்கண்ணன் தான் அவரின் தெரிவாக இருக்கும் . என்பதும் நான் புரிந்தே இருந்தேன் . அதை பற்றிய கவலை என்னுடையதல்ல . காரணம் நான் எந்த பதவிக்காகவும் உள்நுழையவில்லை.
அன்றும் அப்படியே ,இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள் . எனக்கு , என்னை தொகுத்துக்கொள்ள வேண்டும் பேசினால்தான் என்னால் அதை செய்ய இயலும் , கமலக்கண்ணனை வைத்துக்கொண்டு அவற்றை பேச விருப்பமில்லை , ஆனால் அதைப்போன்ற குறிப்புகளை தகவல்களாகத் தொகுக்க கமலக்கண்ணன்தான் சரியான நபர் . ஆனால் எந்த மனப்பதிவுமற்று வெறுமே ஆசைகளால் உந்தப்படுபவர் , எல்லாவற்றையும் குயுக்தியாக பார்கப்படுகிற ஆபத்திருப்பதால் அவரை தவிற நினைத்தேன் .
தாமோதரனை தனியாக அழைக்கவும் முடியாது.. ....ஆழ்ந்த சிந்தனையுடன் ஒன்றும் பேசாது பாலன் வோட்டு சேகரிக்க வீடுவீடாக சென்றுகொண்டிருக்க நான் மவுனமாக அவர்களை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் .
சிறிது நேரம் கழித்து என்னை பார்த்த பாலன் "பிரச்சாரக்கூட்டத்தின் அழைப்பிதழை வாங்கிவரவில்லையா" என்று கேட்டு உடன் பசண்முகத்தை சென்று சந்திக்கச் சொன்னார் . இன்று பிரச்சாரத்திற்கு செல்லாமல் சண்முகம் வீட்டிலுப்பதாக சொன்னார் . நான் மௌனமாக இருந்ததால் தனியாக செல்ல விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு தாமோதரனை உடன் அழைத்து செல்ல சொன்னார் நான் சரி என்றதும் , நங்கள் இருவரும் கிளம்பினோம்.
கமலக்கண்ணனும் எங்களுடன் கிளம்பினார் , நானும் தாமோதரனும் வேறு தொகுதியை சேர்த்தவர்கள் அனால் கமலக்கண்ணன் முதலியார் பேட்டை தொகுதியை சேர்த்தவர் மேலும் அவருடைய ஹவுசிங் போர்டு ஏரியாவில்தான் அன்று முகாமிட்டிருந்தார்கள் . கமலக்கண்ணன் எங்களுடன் கிளம்பியதும் பாலன் காட்டமானர் . இதுதான் கமலக்கண்ணுடைய பிரச்சனை மற்றும் பலவீனம் . அவரது சிறுபிள்ளைத்தனமான செயல் அல்லது தன்னுடைய ஈடுபாடின்மையை தயங்காது வெளிக்காட்டும் சுபாவம் , இதுவே அவரால் எந்த உயரத்திற்கும் செல்லமுடியாத காரணம் .
தன் வாட்டத்திற்கு தோதான ஒத்திசைவற்ற ஒருவரை அந்த இடத்தில யாராக இருந்தாலும் அவருக்கு மாற்றாக ஒருவரை உள்நுழைக்க தயங்கமாட்டார்கள் . அதை கமலக்கண்ணன் ஒருநாளும் புரிந்துகொண்டதில்லை . இந்த இடரடக்கலே இருவரும் ஒத்திருக்கும் சமயத்தை ஏற்படுத்தவேயில்லை . கமலக்கண்ணனை உதாசீனப்படுத்துவதற்கு நான் உள்நுழைந்ததே காரணம் என பிதற்றியதை நிறைய முறை கேட்டிருக்கிறேன் .
சில விஷயங்களை விளக்கி புரியவைக்கமுடியாது . அதுவும் அவர்களின் பலவீனத்ததை ஒட்டி உருவானதாக இருந்தால், சங்கருத்துக்கொண்டும் நம்பவைக்க முடியாது . நான் அதை விட்டு வெளியேறி நீண்டநாட்களாகிறது . அது அவர் வதை , அவர் நரகம் ,அவர் புண் அவரே சொரிந்துகொள்ளட்டும் என விட்ட விஷயம் .
பாலனுடைய காட்டத்தால் அரைமனதுடன் கமலக்கண்ணன் அவரை பின்தொடர்ந்தார். நானும் தாமோதரனும் சண்முகத்ததை பார்க்க புறப்பட்டோம் , போகும் வழியில் நாங்கள் வழக்கமாக சிற்றுணவு சாப்பிடும் பிலிஸ் உணவு விடுதி செல்லலாமா என்றார் தாமோதரன் , அவருக்கு சாப்பிட்ட பிறகு புகைபிடிக்க வேண்டும் எனக்கும். புதுவையில் உணவு விடுதிக்குள் புகைபிடிக்க அனுமதிக்கும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று . அது அரவிந்தோ ஆஷ்ரம் சேவார்த்தி ஒருவரால் நடத்தப்படுவது , வடநாட்டு பாணி சப்பாத்தி , காரமில்லாத சப்ஜி உணவுவகைகளுக்கு சிறந்தது . ஆஸ்ரமத்திற்கு வரும் சேவார்த்திகளுக்கானது அந்த உணவகம் . பெருபாலும் வெறிச்சோடிக்கணப்படுவதும் நாங்கள் இங்கு வருவதற்கு ஒரு காரணம் . யாருடைய தொந்தரவுமின்றி மணிக்கணக்கில் அமர்ந்து பேச அது மிகசிறந்த இடம் . அதன் உரிமையாளரும் அதன் ஒரே ஊழியரும் எனக்கு மிக நெருக்கமானவர்கள் ,ஆகவே நங்கள் அமரும் அந்த ஒரு மூலை மேஜையில் எங்களன்றி, யாரையும் அமர அனுமதிக்க மாட்டார்.
அது நான் வழக்கமாக என் நண்பர்களிடம் செல்லுமிடம் . அன்று தாமோதரனிடம் நான் பேசிய பல தகவல்களை அவருக்குள் ஏதாவதொரு அர்த்தமாக , செய்தியாக தேங்கியதா எனத்தெரியாது , அது செய்தியாக சிந்திக்கும் போக்கை எனக்குள் நான் தொகுத்துக்கொள்ள இயன்றது .
"அரசியல் ஒரு ஒத்திசைவியல் அதற்கு முழுமையான திட்டமீட்டல் எனப்படும் நாடகீயத்தருணங்களை அது ஒருபோதுமே தேவையிருக்காது . அது முட்டிமோதி முரணியக்கமென புறப்பட்டு ஒத்திசைவாலே ஆழ்மனபடுமங்களின் ஊடாக எவரையும் ஒரு கடத்து பொருள்களாக்கொண்டு அது தன் வழிகளை கண்டடைகிறது . அது நிகழ்வென , மாற்றமென , சரித்திரமென பிற்காலத்தில் ஓங்கிப் பேசப்படுகிறது "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக