https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 161 * உடலே கைகளானவர் *

ஶ்ரீ:




பதிவு : 161 /  235    தேதி :- 17 ஆகஸ்ட்  2017
* உடலே கைகளானவர் *

இயக்க பின்புலம் - 84
அரசியல் களம் - 48

புதுவைக்கு புதுக்கமிட்டியுடன் திரும்பிய பாலன் வீட்டில் கூடியிருந்த குழுவிற்கு மத்தியில்  அந்த  நியமன உத்தரவை விசிறி அடித்துள்ளார் . ஏன் என கேட்டதற்கு . “அவன் இந்த கமிட்டியில் இடம்பெற்றது என் தோல்வியாக பார்க்கிறேன் . எல்லாம் இவரால் வந்தது” .என சுப்பாராயனை திட்டிட்தீர்த்திருக்கிறான் . நான் அதன் பிறகு மூப்பனாரை சந்தித்து ஆசி பெற்ற போது .“நீ முன்னிருந்து நாம் பேசியதை நடத்து, அதனால்தான் நீ இந்த கமிட்டியில் இடம்பெறவேண்டும் என நான் விருப்பப்பட்டேன்” என்றார் . ஆனால் இதில் நான் ஆற்றும் வாய்ப்பு பாலனை தாண்டி  வைத்திலிங்கத்துடன் செயல்   படுவது . அதை நான் விரும்பவில்லை .




துரதிர்ஷ்டவசமாக மூப்பனார்  சொன்னதை செயல்படுத்த என் மனம் ஒப்பவில்லை . அது பாலனைத்தாண்டி நான் வைத்தலிங்கத்துடன் ஒரு நேரடி தொடர்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும்  அதில் சிக்கலில்லை மூப்பனாருடனான என் தொடர்பே அதை செய்யவல்லது , அது என்னை   அரசியலின்  மையத்தில் கொண்டு வைத்துவிடும் . நான் அதற்கு உகந்தவன் என்கிற எண்ணமிருந்ததால்தான் இதில் ஈடுபடவே செய்தென் . வைத்திலிங்கத்திற்கு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் திட்டமென ஒரு இருக்கிறதா என்றே தெரியவில்லை . அவர் எதையும் தொடுவதும் விடுவதுமாக இருக்கிறார் . தனக்கென  ஒரு தெளிவிருந்தால் அதை கொண்டு எதையும் கட்டி எழுப்பலாம் .ஆனால் அது உறுதியில்லாத உலைமண்ணாக இருந்தால் ஏதும் செய்வதற்கில்லை  ' 

இரண்டாவது அதை செய்ய எனக்கு இயக்க பின்புலம் வேண்டும் . அது இருந்தால் தான் என்   கருத்துக்களுக்கு வெகுஜன மதிப்பிருக்கும் . அந்த உரிமையில் இன்னது செய்தாக வேண்டும் எனபதை ஒரு அப்பிராயமாக வேண்டுகோளாக அல்லது அறிவுரையாக வைக்க முடியும் , இல்லாது போனால்   அதை ஒரு மன்றாட்டு மட்டுமே என்றாகும் . அதை முதலவர் ஒவ்வொருமுறை கடக்கும் போது நான்   அவமானபடுத்தப்பட்டதாக கொதிக்க மட்டுமே முடியும் . அது கசப்பை வளர்பபது . அதை தாங்கிக்கொண்டு செய்வதால்    எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு வித்தியாசமில்லாது போய்விடும் .   கிருஷ்ணமூர்த்தி   அதை மிரட்டலாக முன்  வைக்கிறார், மீறப்படுகையில் புகைந்து குமைகிறார் . பிறிதொருவரிடம் சொல்லி அரற்றுகிறார்  அது புலிவாலை பிடிப்பது .   முட்டாள்களின் பாதை அது . அதன்   பிறகு நீண்ட   நாட்கள்  நான் மூப்பனாரை  சந்திக்கவேயில்லை

அன்று இரவு என்னை  யாரோ ஒருவர் கூப்பிட்டிருந்தார் . அழைப்பு எண் புதியதென்பதால்  எடுத்துப்பேச தயங்கினேன். விடாமல்  மூன்று நான்குமுறை கூப்பிட்டபிறகு , யாரென தெரிந்துகொள்ளும் ஆவலில் எடுத்தேன் . அது ரவீந்திர வர்மா எனது இளைஞர் காங்கிரஸ் நண்பர் . கமிட்டியில் துணைத்தலைவர் பொறுப்பு . ஒருவரையொருவர் நன்கு அறிமுகம் என்றாலும் தொலைபேசியில் பேசுமளவிற்கு நெருக்கமில்லை . அவர் சண்முகத்துக்கு அணுக்கர். நான் கமிட்டியில் இணைந்த பிறகு அவர்  எந்த ஒரு நிகழவிலும் பங்கெடுத்துக்கொண்டதில்லை .அதற்கு இரண்டு காரணம் . ஒன்று ; அவர் சணமுகத்தின் ஆதரவாளர் . பதவி முக்கியத்துவமுள்ளது , அதனால் அதை உத்தரவில்லை  . இரண்டு; தங்களுக்கு தலமைதாங்குமளவிற்கு பாலனுக்கு தகுதியில்லை என நினைப்பவர்கள் . அது ஒருவகையில சரியானதும் கூட . காங்கிரசிலிருந்து  விலகி தற்போது திவாரி காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தான் என்னை கூப்பிட்டிருந்தது . ஆச்சர்யமாக இருந்தது. முறைமையான பேச்சி சிறிதுநேரம் பின் மெள்ள விஷயத்திற்கு வந்தார் . தன்னை தாமோதரன் குழு சற்றுமுன்னர் வந்து பார்த்ததாகவும் திவாரி காங்கிரஸில் இணைய விரும்பியதை பற்றி பேசியதாக சொன்னார்

யார்யாருக்கு என்னென்ன பதவிகள் என் பேசிமுடிவெடுத்திருக்கிறார்கள் . கடைசியாக "அரி எங்கே வரவில்லை எனக்கேட்டதற்கு மழுப்பலாக ஏதேதோ சொல்லி முதலில் தங்களுக்கு பதவியை அளித்து நாளை காலை பத்திரிக்கை செய்தி வந்தால் மற்ற எல்லோரையும் அழைத்துவருவதாக உறுதி அளித்துள்ளனர்" என்றார்  . அரசியலின் மையத்திலிருப்பவர்களுக்கு  யார் யாருக்கு என்ன பலம் போன்றவற்றை அறியாது இருக்க முடியாது . நாங்கள் சந்தித்துக்கொள்வதில்லை ஆனால் ஒருவரை பற்றி ஒருவர் நான்கு அறிந்திருந்தோம் . பாலனின் வளர்ச்சி அதன் பின்புலம் யார் , தாமோதரன் அவர்களின் பலம் எல்லாம் தெரித்துவைத்திருந்தார் . அவர்கள் தங்களுக்கு பதவி கிடைத்தால் மற்றவர்களை அழைத்துவர முடியும் என சொன்னதால் அதை உறுதிப்படுத்தித்திக்கொள்ள என்னை தொடர்பு கொண்டதாக கூறினார . எனக்கு முதலில் இந்த சந்திப்பு நிகழ்க்ந்ததே தெரியாது என்பதால் முதல் அதிர்ந்தேன் . மிக மோசமான அரசியல் முடிவு . என்ன செய்கிறார்கள் என தெரிந்துதான் செய்கிறார்களா?.இதை விட மடமை பிறிதொன்றில்லை.

நான் அவரிடம் திட்டவட்டமாக என் முடிவுகளை சொன்னேன் . "அரசியல் எனக்கு நாட்டமுடையதாக இல்லை ,மூப்பனார் சொன்னதை செய்வதற்கே நான் மறுத்த நிலையில் . தற்போது அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை . அப்படியே விரும்பினாலும் காங்கிரஸில் நீடிக்க விரும்புகிறேன் . அதை விட்டு விலகும் எண்ணமில்லை" என்றேன் . அவர் தனக்கு அடுத்த இடத்தை எனக்கு விட்டுத்தருவதை பற்றி பேச விழைந்தார் . நான் தெளிவாக என்மறுப்பை சொன்னேன் . இது ஒரு பெரியமுடிவு . என்னை கலக்காமல் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என நினைக்கவில்லை . இவர்கள் ஒரு நிமிட உணச்சிவேகத்தில் முடிவெடுப்பவர்கள் . இவர்களுடன் இனி அரசியல இணைத்து செயல்படுவது எனபது நிகழாது என்றேன் . அவர் பலமாக சிரித்தார்.

மிகச்சரியாக இவர்களை புரிந்துகொண்டிருக்கிறீர்கள் . அரசியலில் இவர்களை போன்றாகி கோமாளிகளை கண்டதில்லைஎன்றார் . கேட்க வருத்தமாக இருந்தது . தன்பலம் தெரியாது அரசியலின் மையக்களத்திருக்கு வருவது பலிபீடத்தில் தலையை வைப்பது . தலைவர்கள் மத்தியில் பேசுகிறபோது சொல்லெண்ணிப்பேசவேண்டும் என்பது அடிப்படை முறைமை . நான் முதலில் சொன்னதுபோல . இவர்கள் ஏவல் பூதங்கள்போல ஒருவருக்கு பணிவிடை செய்வதிலிருந்து தங்களின் அரசியலை வளர்த்தஎடுத்தவரகள் . அதை கடந்து செல் விழைவது ஒன்றும் இழைக்கூடாத குற்றமில்லை. ஆனால் அதற்கான பெறுபுத்தி இல்லாது செய்ய நினைப்பது கனவுகாண்பது . ஒருநேரம் கலைந்து எழவேண்டி இருக்கும் . அவர்கள் எழுந்து வரட்டும் என காத்திருந்தேன்.

திவாரி காங்கிரஸ் மாநில தலைவர் ரவீந்திர வர்மா பேசி முடித்தும் அவர் என்னிடம் தாமோதரன் குழு தன்னிடம் சொன்ன தகவல்கள் , கோரிக்கைகள் போன்றவற்றை ஒரு இளிவரலைப்போல தொடர் நகைப்பினூடாக சொல்லியபடி இருந்தார் . அவை சில்லிடும் வாலின் கூர்மையயான தொடுக்கைபோல உணரவைத்தது . அவர் சிரிப்பதை போல இதை இளிவரலாக என்னால் நினைக்க முடியவில்லை . எந்தமாதிரியான ஒரு வீழ்ச்சியை அடைந்துள்ளனர் . நிலை தடுமாறும் மனிதர்களுக்கு என்னமாதிரியான வரவேற்பிருக்கும் என்றுகூட அவதானிக்க இயலாதவர்களா இவர்கள்? . ஏன் இப்படி நிலையழிந்து போகிறாரகள் . இவர்களுக்கு அரசியலால் ஆக்கக்கூடியதுதான் என்ன . இலக்கில்லாத பயணம் இவர்களை எங்கு கொண்டுசெல்லும் . இப்படியாக பல கேள்விகள் . அரசியல் தன் குரூர முகத்தை காட்டியபடி இருந்தது . இப்போது அதை பார்த்தாகவேண்டிய நிர்பந்தம் . ஒரு மனிதனின் வீழ்ச்சியை காணும் நண்பன் அதை எப்பாடுபட்டாவது தடுக்க விழைவான் . ஆனால் அரசியலில் அதை கண்டும் காணாததுபோல பலர் விலகி சென்றதை  பார்த்து மனம் வெதும்பி இருக்கிறேன் . நண்பன் என்கிற உரிமையில் அடித்துக்கூட இழுத்து வரும் உரிமையுள்ளவன் . விலகிநிற்பது போல தவறு பிறிதொன்றில்லை என்கிற நினைப்பிலிருந்த எனக்கு இது மிக மோசமான பாடம் . உதவி செய்யவருகிறவனை நாம்பாது போனால் , அல்லது அவனையே எதிரியாக உருவகித்துவிட்டால் . அவன் செய்யக்கூடியது ஒன்றில்லை . கடைசீ முயற்சியாக அவர்களை சந்தித்து பொறுத்திருக்க சொல்லவேண்டும்  நினைத்தேன்  .

மறுநாள் தாமோதரன் ஆவேசமாக என் அலுவலகத்திற்குள் நுழைந்தார் . தான் வஞ்சிக்கப்பட்டதாகவும் அதற்கு நாங்கள் எல்லோரும் காரணமென சொன்னார் . நானும் கமலக்கண்ணனும் கொடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பதவியை உடனே ராஜினாமா செய்யவேண்டும் என் பேசிக்கொண்டே சென்றார் . இப்போது என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை . ஏதோ இடுகாட்டு இழித்தெய்வம் சன்னதம் கொண்டதுபோல அனைவரையும் மரியாதை குறைய பேசினார் . இப்போது அவருக்கு நல்வார்த்தை சொல்பவன் மூடன்

நான் அவரிடம் எந்த அடிப்படையில் நீங்கள் ரவீந்திரவர்மாவை சென்று சந்தித்தீர்கள் என்றதும் அடிபட்டதுப்போல கால் தளர்ந்து அமர்ந்துகொண்டார் . எனக்கு அவர்மீது வன்மத்தைவிட இரக்கமே மிகுந்திருந்தது . இதை கமலக்கண்ணன் செய்திருந்தால் நான் நிச்சயமாக அமைதியாக இருந்திருக்க மாட்டேன் . முதலில் இந்த செய்தி தெரிந்ததும் , அனைவரையும் கிழித்து தொங்கிகிவிடவேண்டும் என்கிற எண்ணம்தான் முதலில் எழுந்தது . ஆனால் நான் மேற்கொண்டு அரசியலில் ஈடுபடுவதை பற்றிய எண்ணத்தில் இல்லை . இது அவர்கள் அரசியல் நிர்பந்தம் . அவர்கள் என்னமாவது செய்துவிட்டு போகட்டும் . அதில் எனக்கு எந்த தடையுமில்லை . பின் இப்போது இவர்களிடத்தில் எதை சொல்லி என்ன புரியவைக்க போகிறேன்? , அதனால் விளையும் பயன் என்ன ?. இவர்களுடன் அரசியலில் பயணப்பட போவதில்லை என்றான பிறகு , அறிவுரையோ குற்றச்சாட்டோ அவசியமற்றது

இவர்கள்  இறைஞ்சும்  கைகளே உடலெனக் கொண்டவர்கள் . உரிமைக்கும் சலுகைக்கும் வித்தியாசத்தை அறியாது எதையும் யாசகமாக, மன்றாட்டாக மட்டுமே இவர்களால் பார்க்க ,கேட்க இயலும் . எங்கோ எதிலோ தவறி அரசியலுக்குள் வந்துவிட்டார்கள் . இவர்களைப்போன்றவர்களுக்கு தலைமை வேறுவிதமானாது . அது நிச்சயம் பாலனில்லை . காரணம் பாலன் இவர்களை விட சிந்திக்க தெரிந்தவராக இருப்பினும் ,அவரும் தன்னைப்போன்ற ஒருவரின் பின்னல் நின்று, இவர்களைப்போன்ற குணமும் குரோதமும்  கொண்டிருக்கிறார் . இல்லையெனில் புதுவை அரசியலில் , ஒரு நிலைசக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை தவறவிட்டிருப்பாரா? . 

இது நடந்த பிறகு நான் இவர்கள் யாரையும் பிறகு வெகுகாலத்திற்கு சந்திக்கவில்லை . தேர்தல் நாள் குறிக்கப்பட்டது செய்தி எங்கும் பரபரபாயிற்று . தேர்தல் துவங்கியது . நான் எந்த உணர்வுமில்லாது அதை பார்த்து கடந்து போய்க்கொண்டே இருந்தேன்.என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டமாக இதை உணர்கிறேன் . நிறைய மாற்றங்களை அடைந்தது இந்த காலகட்டத்தில்தான் . என்னை கண்டடையும் முயற்சி என்னை அறியாது துவங்கியது . எனது இரண்டாவது அரசியல் பயணம் இந்த முறை என் விருப்பமற்று ஊழின் வசத்தால் உள்ளே இழுக்கப்பட்டேன் . அங்கு அரசியல் ரீதியில் மூன்று பெரும் ஆளுமைகளுடன் பயணித்தேன். சண்முகம், மூப்பனார், வாழப்பாடி என . அனுபவமே இறையெனப்படுவது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...