https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 30 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 173 * வெற்றிட மனிதர்கள் *

ஶ்ரீ:




பதிவு : 173 / 247 :தேதி :- 29 ஆகஸ்ட்  2017

* வெற்றிட மனிதர்கள் *


தனியாளுமைகள் - 01”
(1996 தேர்தல் களம் - 10 )



சண்முகம் ஒரு தொடர் பேச்சாளர் யாரையும் குறுக்கே பேசவிடாது பேசிக்கொண்டே இருப்பார் . அவை அனைத்தும் பழைய நிகழ்வுகளாக இருக்கும் . அது தொடங்கினால் நிற்காது போய்க்கொண்டே இருக்கும் யாரை முன்னிட்டு அதை தொடங்கினாரோ அவர் கிளம்பிச்சென்று பலமணி நேரமாகியும் அது நிற்காதுபுதிதாக வந்தவர் அமைந்தவுடம் அதே கதை தொடர்ந்தபடி இதுக்கும் . ஆனால் அவை வாய்தவறி அன்றைய ரகசியத்தை எதையாவது உளறி நான் பார்த்ததேயில்லை . நான் அதுவரை பார்த்தவர்களில் சண்முகம் மிக வித்தியாசமாக தெரிந்தார் . அரசியல் ஆளுமைகள்  பலரின் தொடக்கமும் முடிவும் இங்கிருந்தே நிகழ்ந்திருக்கின்றன . தன் கட்சியில் மட்டுமல்லாது அணைத்து அரசியல் கட்சிகளிலும் அதை தீர்மானிப்பவராக அவர் இருந்தது தான் வினோதம்.




அன்று மாலை காந்திராஜ் அழைத்திருந்தார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிகழ இரண்டொரு நாட்களே இருந்த நிலையில் ஓட்டு எண்ணும் மேஜைக்கு அனுப்பவேண்டியவர்களின் பெயர்  பட்டியல் இன்னும் தயாராகவில்லை என்கிற பதட்டத்திலிருந்தார் . அது அனுபவமுள்ளவர்களின் வேலை, மற்றும் பெரும் சலிப்பைத்தருவது  . யார்யாரை எந்தெந்த பூத்திற்கு உட்காரவைக்கலாம் என்கிற சர்ச்சையில் இருந்தனர் . எனக்கு இங்கு ஒன்றும் வேலையிருப்பதாக தெரியவில்லை . பின் என்ன காரணத்திற்க்காக அழைத்திருப்பார் . அவரே சொல்லுமவரை காத்திருக்க வேண்டும் . திரளென சூழ்ந்திருப்பவர்கள் மட்டுமின்றி ஓரிருவர் உண்டென்றாலும்  அவர்கள் மத்தியில் எப்போதும் எதையும் பேசுக்கூடாது என்பது நெறி . அவருடனான பழக்கம் அளவுக்குக்கூட அவரது ஆட்களுடன் எனக்கு பழக்கமில்லை . அனைவருக்கும் ஓட்டு எண்ணமிடம் செல்ல ஆவல் . நான் நீ என்று ஓட்டு எண்ணும்  பூத்திருக்கு செல்ல முண்டியடித்தனர் .

மேஜை மீதிருந்த ஒரு வரைவில் என் பெயரை தேர்தல் நடத்துனர் மேஜைக்கு என போட்டிருந்தீரிந்தது . இது என்ன கஷ்டகாலம் . எங்கு போனாலும் இது விடாது  போல . எனக்கு நான் ராசியில்லை என்கிற எண்ணம் வந்துவிடப்போகிறது என அஞ்சினேன் . சிறிது நேரம் கழித்து காந்திராஜ் அதன் திருத்தபட்ட வரைவை என்னிடம் கொடுத்தார். நான் மெலிதாக மறுத்ப்பாதுப்பார்த்தேன் அவர் விடுவதாக இல்லை . கடந்த சில நாட்களாக எனக்குவரும் தேர்தல் செய்திகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை . பெரும்பாலானோர்  ஆட்சி அமைப்பதே கடினம் என்றனர்  . நான் எதையும்  எப்போதும் மிகை படுத்துபவன் அல்ல என்றாலும் வெற்றி தோல்வி சில சீட்டு கணக்கில்தான் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது

காந்திராஜ் தனது வெற்றி முடிவு எப்படியிருக்கும் என என்னிடம் நேரடியாகவே கேட்க , நான் தர்மசங்கடமாக உணர்ந்தேன் . உண்மைநிலை அவருக்கு வெற்றிவாய்ப்பு மிக குறைவு . உள்ளதை சொல்லவும் தயக்கம் . ஆனால் நாளை காலை வெளியாகவிருக்கும் முடிவை கணிக்க இயலாதவன் என்கிற எண்ணமும் எழக்கூடாது . ஆனால் நான் பொதுவாகசிக்கலாக இருக்கும் என்று நினைக்கிறேன்என்றேன் .அவரும் அப்படித்தான் நினைப்பதாக சொன்னார் . ஆனால் மறுநாள் முடிவு எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது . காந்திராஜ் தோல்வியடைந்தது எதிர்பார்த்ததுதான், என்றாலும் தோல்வியுற்றமுறை களநிலவரத்தை தெளிவாக காட்டியது . காந்திராஜ் மொத்தமாக வாங்கியிருந்த வாக்குஎண்ணிக்கையின் அளவைவிட அதிகமாக வித்தியாசம் காட்டி சிவகுமார் மேலதிகமாக  பெற்று அவரை தோற்கடித்திருந்தார் . இது சிவகுமார் பற்றிய காந்திராஜின் குற்றச்சாட்டு உண்மைஇல்லை என்றது . காந்திராஜால் வாக்காளர் மனதை வெல்லவே முடியவில்லை .அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலிலும் இதுவே நிலைமையென்றானது .  

இரண்டொரு முறை இளைஞர் காங்கிரஸை பற்றி என்னிடம் தலைவர் பேசுகிறபோது நான் எந்த ஆர்வத்தையும் காட்டவிருப்பவில்லை . என்வரையில் அது முடிந்துபோன ஒன்று . எக்காரணம்கொண்டும் அதை பிறிதொருமுறை எண்ணணுவதில்லை என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது . அதற்குப்பிறகு தலைவரை சென்று பார்ப்பதை குறைத்துக்கொண்டேன் . சமயம் கிடைக்கும்போதெல்லாம் காந்திராஜை சந்திப்பது வழமையானது . தலைவரின் குணம் அணுகுமுறை பற்றிய சில விஷயங்களை காந்திராஜுடன் விவாதித்தபோது சில புதிய கருதுகோள்களை கண்டடைய முடிந்தது . அவற்றில் இதுநாள் வரை இரண்டு என்னால் மறக்கவியலாதது . ஒன்று தலைவரை பற்றியது பிறிதொன்று புதிய தலைமுறை தலைவரை பற்றியது

தலைவரை பற்றிய அவரது கருத்தாக சொன்னது ,சண்முகம்   தனது அனுபவத்திலிருந்து அடைந்ததை ,இன்றைய புறவய அரசியலில் பொருத்தி ,சில அவதானிப்புகள் நிகழ்த்துவதன் வழியே தனது அரசியலை நகர்த்துகிறார். அவை பெரும்பாலும் மனப்பதிவு மற்றும் சூழலை பொறுத்ததாக இருப்பது . ஆனால் அவரின் சிக்கல் ,அதை தர்க்கம் அல்லது விவாதம் என்கிற இடத்திற்கு நகர்த்தமாட்டார் . காரணம் அவர் நவீன கல்வி அறியாததே . ஒரு கருத்திற்கு யாராவது மாற்று சொல்லும்போது . தனது அனுபவத்தை முன்னிறுத்தி பிறிதெவரையும் பேசவிடாது செய்து தான்  அதற்கு பின்னல் மறைந்துகொள்கிறார் என்றார் . இது காந்திராஜ் தனது தொழில் சார்ந்து அவர் கண்டடைந்த உளவியல் புரிதலாக இருக்கலாம் . இவ்வளவு தெளிவான புரிதலுள்ள காந்திராஜிடம் அரசியலில் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள இயலாது போனதற்கு பாலன் கையாண்ட அதே குறுங்குழு அரசியலை முன்னெடுத்தது ஒரே காரணம்  . தன்னிச்சையாக வளரும் தனியாளுமைகளின் நிரையே , ஒரு அமைப்பை பலமுள்ளதாக வார்க்கிறது . அதை தடுத்து நிற்கும் தலைவனின் கீழ் உருவாகும் வெற்றிடத்தில் , அத்தகையவர்கள்  நிலை கொள்ளமாட்டார்கள். அவரை சூழ்ந்திருக்கும் வெற்றிட மனிதர்களால் ஆகக்கூடியது ஒன்றில்லை. அவர்கள் தங்களின் தன்மதிப்பின் வழியாக பிறிதெவரிடமிருந்தும் பிறித்து தனியாளுமை என வளர்த்தெடுதுக்கொள்கிறார்கள்  . அது நிகழாத களம் எதையும் உருவாக்குவதில்லை. அது அவர்களது அரசியல் வீழ்ச்சியாக பார்க்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...