https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 156 * வினோத மனிதர்கள் *

ஶ்ரீ:




பதிவு : 156 / 230     தேதி :- 12 ஆகஸ்ட்  2017

* வினோத மனிதர்கள் *

இயக்க பின்புலம் - 79
அரசியல் களம் - 46



நான் துவங்கிய ஆட்டமும் ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம் . எக்காரணம் கொண்டும் நான் வரப்போவதில்லை என பாலனுக்கு அன்றிரவு புரிந்திருக்கும் . ஒட்டுமொத்த கமிட்டியையும்  கலைத்ததற்கு இரண்டு நோக்கம் இருந்திருக்க வேண்டும் . ஒன்று ;என்னைவிட  தாமோதரனின் குழுவின் மனநிலையை பாலன்தான் மிகச்சரியாக புரிந்துவைத்திருந்தார். அவர் எதிர்பாராது இவர்களை நான் பேரம்பேசும் இடத்திற்கு கொண்டுவருவேன் என்று  அதைத்தான் இப்போது   தகர்த்துவிட்டார்.





கட்சிப்பதவி என்பது ஒன்றுமேயில்லாதது .அது ஒரு அலங்காரம் மட்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் என்னைப்போல  அப்படியேதான் இருக்கும் என நான் நினைத்தது ,என்னுடைய பிழைபுரிதல் .கட்சிப்பதவியை இவர்கள் உயிருக்கிணையாக  நினைத்திருந்தார்கள் என நான் அவதானிக்கவில்லை.அது தான் அவர்களின் ஒரே அடையாளம். அதை பாலன் அழித்ததும் நிலைகுலைந்து போனார்கள் . அதை மறுபடியும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை என்பதுதான் சோகம் . எவ்வித தர்க்க நியாயத்தாலும் அவர்களுக்கு என்னால் அதைப் புரியவைக்கவே முடியவில்லை. “ஆசையை தர்க்கமமென்கிற ஞானத்தால்  அடிக்கவேமுடியாது” , விழைவே வெற்றிபெறும்  என்பதை தாமதமாக புரிந்துகொண்டேன். சரி இதுவும் அரசியல் பாடம்தானே

அனைத்து நிர்வாகிகளையும் நீக்கி பாலனால் மற்றொரு புது அமைப்பையே உருவாக்கிவிட முடியாது . அதற்கு அவரின் அணுகுமுறை ,தொடற்புறுத்தலின் போதாமை முக்கிய காரணம் .அது இருந்திருந்தால்அரிஎன்கிற ஒருவன் அவருக்கு தேவையே பட்டிருக்க மாட்டான் . நான் உருவாக்கி வைத்த அமைப்பிற்கு பாலன்தான் இன்னமும் தலைவர் , அனைவரையும் அழைத்து பேசி அவர்களை மாற்றி அமைத்திருக்கலாமே.

அது நடவாது என அவருக்கே தெரியும் . தன்னுடைய நடவடிக்கைகளாலும் , அரசியல் ரீதியிலான தன் பயணத்திட்டத்தை அமைப்பிடம் உரையாட இயலாமையால், அவர்களின் தொடர்பையும் நம்பிக்கையும் என்றோ இழந்துவிட்டிருந்தார் . என்னை வெளியேற்றுவதன் மூலம் அந்த அமைப்பு அவர்கைகளுக்கு திரும்பும் என கணக்கிட்டார் . என் வெளியேற்றத்தை சரியாக இயக்கி , அதை சாதித்துக்காட்டினார் .நானாக வெளியேறும் பாதையாக என்னை அவமதிப்பதுதான் . அது என் சுயகௌரவத்தை சீண்டும் . அதைக்கொண்டே நான் வெளியேறுவேன் என திட்டமிட்டார் . அவை அப்படியே நிகழ்ந்தது

மூப்பனாரை சந்திக்கும்  சுப்பராயன் திட்டம் அவரது எண்ணத்தைக் கெடுத்தது.அதற்கு முதலிலிருந்தே பாலனின் ஆதரவில்லை .அவருக்கு முதல்வர் மற்றும் அகிலஇந்திய தலைவர் இவர்களின் தொடர்பும் ஆதரவுமே போதுமானது. மூப்பனாரை உள்நுழைத்தது முதல்வரின் திட்டம் . அதில் பாலனுக்கு விருப்பமோ அவசியமோ இல்லாது போனாலும் , தட்டிக்கழிக்க இயலவில்லை. அதே சமயம் அதைப்பற்றி கேள்விகள் எழும்போது அதை "அரி"  முயறசித்துக் கொண்டிருக்கிறான் என சொல்லுவதற்காக என்னை தொடர்ந்து இதில் பயணிக்க விட்டார்   . மாநில அளவில் பெரியத்தலைவரென யாரும் வராத நிலையில் , நான் மூப்பனாரை சென்று பார்க்கும் திட்டம் தானாகவே தோல்வியுறும் . மேலும் அந்த  வருகை நிறைவேறினால் அது மூப்பனாரை இங்குள்ள மாநில தலைவர்களுக்கு எதிர்நிலையில் கொண்டு வைக்கும், அவர் அதை விரும்பமாட்டார் . எல்லோருக்கும் தலைவர் என்கிற நிலையில் இருந்து ஒரு குழுவிற்கு தலைவராக அவர் ஒப்பப்போவதில்லை . அதனால் இது நடக்கப்போவதில்லை . இந்த மாநில மாநாட்டின் பிரமாண்டத்தில் , அமைப்பு தானாக தன் பின்னல் வந்து முறைமையுடன் அணிவகுத்து நிரையாய் நிற்கும் .அரியும் வெளியேறிவிட்டான் அவர்களுக்கும் பாலனை தவிர பிறிதெவருமில்லை , என அவர் நினைத்தது அனைத்து விதத்திலும் மிக சரியாக போய்க்கொண்டிருக்கும்  . நான் மூப்பனாரை சந்திக்காது போயிருந்தால்

பாலன் திட்டப்படி எல்லாமே நடந்து முடிந்திருக்கும் . நான் எனக்கான பாதையை கண்டடைந்தது மூப்பனாரை  சந்தித்த பிறகுதான் . ஊழ் எப்போதும் தற்செயலெனென்றே வெளிப்படும் . அதனாலேயே அது நிகழ்கையில் யார் கவனத்தையும் கவருவதில்லை . அதில் என்னை முன்னிறுத்தி செய்ய ஒன்றுமில்லை .வைத்திலிங்கம் , பாலன் இவர்களுக்குக்குத்தான் அதன் முதல்நிலைப்பலன்  சென்றுசேரும் . நான் அவர்களிடமிருந்துதான் எனக்கான பங்கை பெறமுடியும் . இதில் ஊழென எழுந்தது , ஒன்று ; சுப்பாராயன் என்னை மூப்பனாரை சந்திக்கும் வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. பிறிதொன்று ; பாலன் தான் வென்று தருக்கி நிமிர்ந்து பூங்காவனத்திடம் அவர் பேசியது, இவை இரண்டும்  அனைத்தையும் தலைக்கீழென மாற்றியது. அது ஊழ்…..

அனைவரும் பாலனின் அந்த "ஒட்டுமொத்த களைதல்" என்கிற  தாக்குதலில் நிலைகுலைந்து போனார்கள் . ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது , அடுத்த கட்டத்திற்கு நான்  நகர்த்துவங்கியதும் உடன் வந்தனர் . இதற்கு எதிர்வினை , மாநிலா அளவிலான தலைவர்கள் மூலம் ஆற்றக்கூடியது , தாமோதரனை , நாராயணசாமி mp யை தொடர்புகொள்ளச்சொன்னோம் . அவர் அப்போது தில்லியில் இருந்ததார் . தொலைபேசிமூலமாக தொடர்புகொண்டபோது , தான் இரண்டொரு நாளில் புதுவை வந்துவிடுவதாகவும் , சண்முகத்திடம் பேசி ஒரு நல்ல முடிவெடுப்போம் அதுவரை காத்திருக்க சொன்னார் , என்றார் தாமோதரன் . நான் யாரையும் வீட்டிற்கு செல்லவேண்டாமென சொல்லி அனைவரையும் விடுதியில் தங்க ஏற்பாடுகளை செய்துகொடுத்தேன் . நானும் நாள் முழுவதும் அவர்களுடன்  தங்கியிருப்பதும் , இரவு மட்டும் வீட்டில் வருவதுமாக  இருந்தேன் . இதனிடையில் சண்முகம் தரப்பிலிருந்து பண்ணீர்செல்வம் வந்து சந்தித்தது , பெரிய உற்சாகமாக இருந்தது . அவர் அமைப்பில் துணைத்தலைவராக இருந்தார் . சண்முகம் பொறுமை காக்கச்சொன்னதாகவும் . பத்திரிக்கையாளர்களை சநதிப்பதை தவிர்க்க சொன்னதாகவும் தகவல் வந்தது . நாரணசாமி புதுவை வருவது தள்ளிபோய்க்கொண்டிருக்கும் சமயத்தில் , பாலனின் மற்றோர் அறிக்கை அனைவரின் தூக்கத்தையும் கெடுத்தது . தனது பேட்டியில் நாங்கள் அனைவரும் திவாரி காங்கிரஸுக்கு சென்றதால்தான் , முழு கமிட்டியயும் கழிக்கவேண்டியதாகிவிட்டது என சொல்லியிருந்தார் . இது மற்றுமோர் இடி .


அகில இந்திய அளவில் காங்கிரஸில் பிளவு தோன்ற ஆரம்பித்த நேரமது . அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான NT திவாரி , பிரதமருக்கு எதிராக கட்சிலிருந்து பிரிந்து திவாரி காங்கிரஸை துவங்கியிருந்தார் . அதன் இரண்டாம் நிலையில் வாழப்பாடி ராமமூர்த்தியிருந்தார் . இந்த நகர்விற்கு பின்னல் சோனியாகாந்தி இருப்பதாக பேசப்பட்டது . இதை தொடர்ந்து அவர் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்டது . இந்திய முழுவதும் அதற்கு ஆதரவு அணி உருவான வேகம் அதை உண்மைதான்  என கட்டியம்கூறியது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டா தீவிர நரசிம்மராவின் ஆதரவாளர் என்பதால் , திவாரி காங்கிரஸில் நாங்கள் இணைந்ததாக சொன்ன காரணம் ஒன்றே கமிட்டியை கலைக்க அவருக்கு  போதுமானது . தவிர முதல்வரும் அதற்கு ஆதரவாக சான்றளிக்க , புதுவை கமிட்டி எந்த விசாரணையும் இன்றி ஒரே இரவில் கலைக்கப்பட்டது . இது எங்களின் ஊழ்

நாங்கள் வகையாக இதில் சிக்கிக்கொண்டோம் . எங்களை இதிலிருந்து வெளிக்கொண்டுவர நாங்கள் நம்பியிருந்த நாராயணசாமி mp என்ன காரணத்தினாலோ அதன் பிறகு எங்களின் தொடர்பிற்கு வரவேயில்லை . சண்முகத்தின் தரப்பிலிருந்தும் எந்த தகவலும் இல்லை பாலன் சொன்ன இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் மௌனத்தில் ஆழ்த்திவிட்டது , இரண்டாவது முறையும் மிக நேர்த்தியாயான நகர்தலை நிகழ்த்தினார் . அனைவரும் துவண்டு போயினர். பாலனின் தொடர் தாக்குதல் இவர்களை தன் பின்னல் அணிவகுக்க செய்யும் காரியம் . இருபத்தி மூன்று நிர்வாகிகளில் பத்தொன்பது பேர் எதிர்த்து கையெழுத்திட்டத்தி ஒன்றே சான்று அவரின் கையறுநிலை . பொறுந்திருந்தால் , மிக எளிதாக இதிலிருந்து அனைவரும் வெளிவந்திருக்கலாம் . பிளவு பட்டவர்த்தனமாக வெளியான பின்பு . கட்சியின் பிற அமைப்பு தொடர்புகொள்ளவே விரும்பும் . அது நிகழுமானால் இயக்கம் மீளவும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும் . மூப்பனார் ஆதரவு இருக்கும் இந்த சூழலில் அற்புதமாக ஆடியிருக்கலாம் . இவர்கள் விநோதமனிதர்கள் . எதையும் ஒற்றைப்படையாகவே புரிந்துகொள்வதும் அதற்கு அனைவரும் உடன்படவேண்டும் என்கிற அவசரத்தில் இருப்பவர்கள் . நிதானமில்லாதவர்கள் . அது ஒன்றுபோதும் பாலன் இதில் வெற்றிபெற .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்