https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 162 * அனுபவங்களின் பதிவு *

ஶ்ரீ:





பதிவு : 162 / 236     தேதி :- 18 ஆகஸ்ட்  2017

* அனுபவங்களின் பதிவு *

விலகள்
அடையாளமழித்தல் தொடக்கம்


இது நடந்த பிறகு நான் இவர்கள் யாரையும் பிறகு வெகுகாலத்திற்கு சந்திக்கவில்லை . தேர்தல் நாள்  குறிக்கப்பட்டது செய்தி எங்கும் பரபரபாயிற்று . தேர்தல் துவங்கியது . நான் எந்த உணர்வுமில்லாது அதை பார்த்து கடந்து போய்க்கொண்டே இருந்தேன்.என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டமாக இதை உணர்கிறேன் . நிறைய மாற்றங்களை அடைந்தது இந்த காலகட்டத்தில்தான் . என்னை கண்டடையும் முயற்சி என்னை அறியாது துவங்கியது . எனது இரண்டாவது அரசியல் பயணம் இந்த முறை என் விருப்பமற்று ஊழின் வசத்தால் உள்ளே இழுக்கப்பட்டேன் . அங்கு அரசியல் ரீதியில் மூன்று பெரும் ஆளுமைகளுடன் பயணித்தேன்சண்முகம்மூப்பனார்வாழப்பாடி என . அனுபவமே இறையெனப்படுவது . 










அரசியலென்பது அனுபவங்களை  அஸ்திவாரமாக கொண்டது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு அது உண்மையில்லை . அது சூழலை மையமாகக் கொண்டது, சூழல்களோ கணக்குகளையும் அடிப்படையாக கொண்டு உருவகிக்கப்படுபவை . உருவகிகப்பட்ட கணக்குகளோ காலத்தை அதீனமாகக்கொண்டவை , காலமோ ஊழின் தற்செயல் எனும் உதிரிகளை அலகுகளாக கொண்டது , அலகுகளிலான உதிரிகளோ இணைத்தலின் பிண்ணியில் பெரும்திட்டமிருப்பதை காணவிழைபவருக்கு மட்டும் , மறைக்காமல் காட்டுகிறது.இங்கிருந்து பார்க்கையில் வாழும் மனிதருக்கு என்னதான் பொறுப்பு என எண்ணத்தோன்றியது . இந்தக்கால கட்டத்தில் இரண்டு பெரும் ஆளுமைகள் தனித்தனியாக பிரந்தாலும் , மூலக்கூறு ஒன்றெனவேத் தோண்றுகிறது .

வாழப்பாடி திவாரி காங்கிரஸில் பெரும் தலைவராக உருவெடுத்தார் . அதற்கு பின்னல் சோனியாகாந்தி இருப்பதாக எங்கும் பேசப்பட்டது . சோனியா காந்தியால் நரசிம்மராவை தாண்டி கட்சியை கைப்பற்றுவது நிகழாது என்பதைப்போல ஒரு தோற்றம் அன்று இருந்தது . பிரதமராக நரசிம்மராவ் அரசுசூழ்தலில் நிகரற்று விளங்கினார் . அகில உலக அரசியல் நுட்பங்கள் புரிந்து கொள்ளும் வெளியுறவு துறை இலாகாவை நிர்வகித்த அனுபவமுள்ள ஒருவருக்கு கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர ஆள்வது ஒரு விஷயமேயில்லை. தனக்கான பாதையை உருவாக்கி கொடுக்க கட்சிக்குள் ஒரு பிரிவாக சோனியாகாந்தி உருவாக்கிய அமைப்பாக அது பொதுவெளியில் பேசப்பட்டது . ஆனால் 

அடுத்தடுத்து  ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளின் வழியாக சோனியாகாந்தி நேரடியாக உள்ளே வரவும் வாய்ப்புகள் உருவானதால் திவாரி ஏற்படுத்திய அமைப்பு காணாமலாகியது . வாழப்பாடி சிறிதுகாலம் அதில் உழன்று பின் காங்கிரஸில் இணைந்தார் . இடையில் என்ன நிகழ்ந்தது என எவருக்கும் தெரியவில்லை . ஆனால் அந்த அமைப்பின்மூலமாக அல்லது அதன் பின்புலத்தில் சோனியாகாந்தியின் அரசியல் நுழைவு நடந்திருந்தால் தென்னிந்திய அரசியலில் வாழப்பாடி ஒரு முக்கிய நிலை சக்தியாக இருந்திருக்கும் வாய்ப்புகள் இருந்தன

பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து வந்ததால் கூட்டணி பெரிய சிக்கலாக உருவெடுத்தது . மூப்பனார் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாமென உறுதியாய் இருந்தார் . தான் இதை பார்த்துக்கொள்கிறேன் என நரசிம்மராவ் சொன்னதும் , கொந்தளிப்புடன் மூப்பனார் சென்னை திரும்பினார் . அவர் சென்னை வருவதற்கு முன்பாகவே அதிமுகவுடன் கூட்டணி உறுதியானது என்கிற செய்தி அவரை வந்தடைந்ததும் கொந்தளிப்பில் உச்சிக்கு கொண்டுசென்று தமிழ் மாநில காங்கிரெஸ் என்கிற கட்சியை உருவாக்குமளவிற்கு சென்றார் . அதற்கு முன்னதாகவே , புதுவையில் கண்ணன் காங்கிரசை விட்டு விலகி தனிக்கட்சி துவங்கும் யோசனையில் அண்ணா திடலில் கூட்டத்திற்கு ஏற்பாடு செயயப்பட்டிருந்தது . மூப்பனார் சென்னை விமானநிலையம் வந்திறங்கியதும் . பத்திரிக்கையாளர்கள் அவரை சூழுந்து பல கேள்விகளை கேட்டபடி இருந்தனர் . எனக்கு இன்றும் நினைவிலுள்ள அந்த கேள்வி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பற்றியது . அவரது கோணமாக கேட்கப்பட . மூப்பனார்இது பற்றி நான் ஒர்கிங் கமிட்டியில் ஏதாவது பேசியது உங்களுக்கு தெரியுமாஎன்றார் . அனைவரும் இல்லை என்றனர் . “எனக்கு மாற்றுக்கருந்தென ஒன்றிருந்தால்,அதை அங்கேயே சொல்லியிருப்பேன் . இதுவரைக்கும் கூட கட்சி முடிவே என்முடிவும்என சொல்லி சென்றார் . இணைந்தால் ஒன்று சொல்வதும் பிரியும் போதொன்று சொல்வதும் அரசியல் என இருக்கும் காலத்தில் எனக்கு அவர் பெரிய மனிதராக  தெரிந்தார் 

அது போல வாழப்பாடியும் தமிழக கட்சி தலைவராக இருந்த காலத்தில் . கருணாநிதியை ராஜீவ்காந்தி படுகொலையில் இணைந்து  ஏகத்திற்கு பேசியிருந்தார் . எனக்கும்  அது ஒருவித முரட்டடி அரசியலாக தோன்றியது . வரம்புமீறி செயல்பாடுகளைக்கொண்டவராக தோன்றினார்  . உலகத்தமிழ் மாநாட்டிற்கும் பிரதமர் நரசிம்மராவ் வந்தால் சத்தியமூர்த்தி பவன்  காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றுவதாக கூட ஒரு சமயத்தில் பேசியாருந்தார். அவரை ஒரு லக்காடி அரசியலவாதியாக பாரத்தேன் . பின் அவர் கடச்சித்தலைவர் பதவியிருந்து வெளியேற்றப்பட்டு மாநில தனிக்கட்சி கண்டு, அவருடன் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பிருக்கும்போது , சன் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் ரபிபெர்னாட் அவரிடம் . “இப்போது கருணாநிதியை ராஜீவ்காந்தி படுகொலை விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள்என்றதும் , சிலநிமிட மௌனம் . பின் அவர் சொன்னதுஅவர் ஜெயின் கமிஷன் முன் ஆஜராகி தன்னை நிரூபித்துக்கொள்ளலாமேஎன்றார் . கூட்டணி வாய்ப்பு கைநழுவிப்போனது . இருவரும் சந்தர்ப்பவாத அரசியலிலிருந்து வேறுபட்டதாக நினைத்த காலமது . இந்த நிகழ்வுகள் அவர்கள் இருவரின் மீதும் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருந்தன .

ஒரு அரசியலை  நோக்கராக ஒரு ஆர்வலனாக மட்டுமே நான் வேடிக்கை பார்த்த நாட்களவை . இளைஞர் காங்கிரசில் நடந்த நிகழ்வுகள் எனக்கு அரசியலை   பற்றியும் மனிதர்களை ஊடுருவி , வாழ்க்கையை வேரொரு பரிமாணப் புரிதலுடன் ,ஒன்றை பலவற்றுடன் பொருத்தி அர்த்தங்களின் பல வர்ண பேதங்களை அலையலையாய் பிரித்து அறியும் காலமாய் போய்க்கொண்டிருந்தது . அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்துஶ்ரீமத்பகவத்கீதையைஎடுத்து வாசிக்கத்துவங்கிருந்தேன் . பாரதியாரின் பொழிப்புரையுடன் இருந்தது . அது ஏறக்குறைய ஸம்ஸ்கிருத பதத்திற்கு தமிழ் மொழிபெயர்ப்பை போல இருந்ததால் அது பல கதவுகளையும் ஜன்னல்களையும் கண்ணிகளையும் உடையதாக இருந்தது . அவ்வப்போது இருக்கும் மனநிலையில் அது புது புது அர்த்தங்களை கொடுத்துக்கொண்டே இருந்தது. புரிதல்களும் திறப்புகளுமாக முற்றாக வேறொரு தளத்தில் இருப்பதாக உணர்ந்தேன் . ஒரு  ஸ்லோகம் ஒருமுறை சொன்ன அர்த்தவிஷேத்தை மறுமுறை சொன்னதில்லை . அது கடலலைபோல மீளமீள வந்துக்கொண்டே இருந்தாலும் அதே கடலாக இருந்தாலும் ஒவ்வொரு அலையும் வேறுவேறு என விசித்திரங்களை காட்டியபடி இருந்தது .

திருமணமாகி அவள் கர்ப்பந்தம் தரித்து , குடும்ப  வாழ்வியல் அரசியல் , கீதையின் அர்த்தப்பெருக்கு போன்றவை என்னை தனி உலகில் நிலைநிறுத்தி இருந்தது . சூழல் ஓயாது புது பாடங்களை அர்த்தங்களை வலிந்து சொல்லிக்கொடுத்தடியே இருந்தது என்னால் என்னை தொகுக்கொள்ள முடியாதபடி . எல்லாத்தரப்பிலிருந்தும் ஒருவித அழுத்தத்தை உணர்ந்த காலம் . வழவின் அர்த்தங்களை ஒன்றுமில்லாதபடி யாராவது ஒருவர் எதையாவது ஆற்றியபடி இருந்தனர்.

திருவண்ணாமலை மாமா தனது நவீன அரிசி ஆலையில் புதிய தொழிற்நுட்பத்திலே உலை இன்று நிறுவ இருப்பதை ஒட்டிய பூஜையில் கலந்து கொள்ள  அப்பாவை அழைத்திருந்தார் . அப்பா மரணத்திலிருந்து மீண்டு வந்து சில காலமாகியிருந்தது . அவர்சார்பாக என்னை சென்றுவர சொன்னார் . நான் அதிகாலையில் புறப்பட்டிருந்த சமயம் அம்மா என்னிடம் என் மனைவியின் வயிறு மிகவும் கீழிறங்கி இருப்பதாகவும் பிரசவமாகும் நேரமிது , “எந்நேரமானலும் அங்கு தங்கவேண்டாம் வீட்டிற்கு வந்துவிடுஎன்றார். ஒன்பது மாதம்தானே கடந்திருக்கிறது . எனபுரியாமல் அவரிடம் கேட்டுவிட்டு நான் திருவண்ணாமலை கிளப்பிகிச்சென்றேன் . அங்கு எல்லாம் முடிந்து வீடுவந்து சேர இரவு பத்து மணியாகிவிட்டது . நான் ட்ரைவரை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது அம்மா பதட்டமாக இருந்தார் . ஏதோ சிக்கல் உடன் மருத்துவரை சந்திக்க வேண்டுமென்றார் நான் என் மனைவி  மற்றும் அம்மா மூவரும் மருத்துவமாய் விரைந்தோம் . அங்கு உடனே சேரச்சொல்லிவிட்டார்கள்.

அம்மா தான் இரவு பார்த்துக்கொள்ளுவதாகவும் சில பொருட்களை சொல்லி எடுத்துவரச்சொன்னார் . நான் என்ன நிகழ்கிறது என்கிற புரியாமையால் பதட்டத்துடன் வீடு சென்று அவர் கேட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தேன் . என்னை வீட்டிற்கு சென்று நாளை காலை சீக்கிரமாக வரச்சொன்னார் . மறுநாள் பொழுது இயல்பாக விடியவில்லை . என் வாழ்க்கையை சிந்தனையை இருப்பை முற்றாக மாதிரியாமைக்கும் பொழுததாக அந்த ஏப்ரல் 8 துவகிக்கியது .காலம் அனுபவத்தை மனதில் மட்டுமின்றி உடலிலும் பதித்தே செல்கிறது . ஆனால் அனுபவத்திற்கு அனுபவமில்லாத முகமே ஏன் ரசிக்கும் படி இருக்கிறது . இளமையெனதாலா . பின் ஏன் இளமையில் அதை பெரியதாக கொண்டாடியதாகத் தெரியவில்லையே ………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...