ஶ்ரீ:
-
பதிவு : 148 / 222 தேதி :- 04 ஆகஸ்ட் 2017
* தேக்கும் மடமை *
இயக்க பின்புலம் - 72
அரசியல் களம் - 42
"என்றைக்கு தாமோதரனுக்கும் பாலனுக்கும் கடும் முரண் வெடிக்கிறதோ அப்போது எனக்கு தகவல் சொல்லவேண்டும் , அவ்வளவே" என்றேன் .சேகர் "அடுத்து என்ன" என்றதும் மேற்கொண்டு சொல்ல ஏதுமில்லை .அந்த தகவல்முரண் நிகழ்ந்த சில மணிநேரத்திற்குள் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் அவ்வளவே". என்றேன். அடுத்தடுத்து நிகழவிருப்பதை நினைத்த போது உள்ளுக்குள் ஒரு சிறு நலுங்களை உணர்ந்தேன் .எப்படியெல்லாம் இது பேசப்படப்போகிறது , யார் யார் வாழ்வினை இது புரட்டிப்போடும் என தெரியவில்லை , அவை நிழல்களைப்போல,பிரதிபலிப்பவை ஆனால் அவரவர் விழைவிற்கு தக்கபடி வளைவுகளால் செறிபவை , நிலையாக நிற்காதவை. பலராலும் அதற்கு கணக்கிலடங்கா தலைகளும் வால்களும் இட்டு கட்டப்பட்டு பெருகியபடியே இருக்கப்போகிறது .
பாலனின் தேர்ந்த இந்த விளையாட்டில் , இதில் அவருக்கு எந்தவொரு தற்காப்பு அரசியல் நோக்கமிருப்பதாக நான் நினைக்கவில்லை . அது ஒரு வித மனச்சிதைவு போல , மரைக்காயரை சுற்றி இருக்கும் அரசியலின் தன்மை வேறு வகையிலானது , அதை பார்த்து தனது களத்தை பிழையாக குழப்பிக்கொண்டார். மரைகாயரின் களத்தில் அவரவர் தங்கள் தங்கள் பலத்தைக்கொண்டு தங்களின் அரசியல் நிகர்நிலையை பேணுபவர்கள் . அவர்களுக்கு மத்தியில் தனக்கான அரசியலை மரைக்காயர் வென்றெடுக்க வேண்டும், அவர்கள் ஒத்துழைப்புடன் அல்லது நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பில்லாமல் .
ஒத்துழைப்பில்லாது அவர் தனது வெற்றியை அடையும்போது , அதை இழந்தவர் , தனக்கு நிகழ்ந்ததை எவ்வகையிலாவது பழிநிகர்க்கொள்ள எப்போதும் முயன்றபடி இருப்பர் . அது நடவாது மரைக்காயர் இருபத்திநாலு மணிநேரமும் தன்னை தற்காத்தபடி இருக்கவேண்டும் . இதை படிநிலை அரசியலில் நிற்பவர்களிடம் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசிமில்லை . அவர்கள் மிக எளியவர்கள். தங்களின் எதிர்காலத்திற்காக பாலனை சார்ந்திருப்பவர்கள் . மேல்முறையை அரசியல் சூழ்தல்களை அவர் இயக்கத்திற்குள் பயன்படுத்தும்போது . பாதிக்கப்பட்டவர் மனம்வெதும்பி விலகிவிடுவதால் . இதை அவர்களுக்கு தொடர்ந்து செய்ய இயலாது . புது உறுப்பினர்கள் சேர்வது என்றோ இல்லாமலாகி விட்டது . இந்த சூழலில் இருப்பவரை வெளியேற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது .
பாலனின் மேல்முறைமை அரசியல் விளையாட்டின் சில விஷயங்களை , சில கூறுகளை நான் புரிந்து வைத்திருந்தேன் , அது ஒரு அரசியல் பாட திட்டம் போல. அவை அத்தனையும் அரசியல் சூழ்தல் மற்றும் அவதானிப்பிலிருந்து எழுந்து வருபவை. முடிவுகள் எப்போதும் பல தரப்பிலிருந்தும் பெறப்படுகிற தகவல்களின் குறுக்கு நெடுக்கு ஊடுபாவாக நெய்யப்பட்டு அவற்றை பின்னர் முழுமைபடுத்தப்படும் . இருந்தும் அவை ஏறக்குறைய கற்பனையை ஒட்டியே உருபெறுபவை . கேட்பவரின் கண்களில் தெரியும் வியப்பின் வரிவையும் ,நம்மிடம் அதைத் தொடர்ந்து காட்டும் அரவணைப்பே, நம் கூற்றின் தண்மையை நிர்ணையம் செய்பவை . என்னால் அதை கொண்டு மூப்பனார் போன்ற பழுத்த ஆளுமைகளிடம் எதிர்வார்த்தை வைக்க முயன்று வெற்றியும் பெற முடிந்தது . அதைப்போல ஒரு விளையாட்டை பாலன் அமைப்பிற்குள்ளும் நிகழ்த்த துவங்கியிருந்ததை , காலம் கடந்து அறிந்ததும் . அதிர்ந்து போனேன் . இது முறைமை மீறல் .எளியவர்களுக்கு எதிராக , அதிலும் தன்னை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பிரித்தாள உபாயகப்படுத்துவது.
ஒரு தலைவனாக அதை செய்வதற்கு பாலனுக்கு உரிமை உள்ளது. அனால் அந்த துலாவின் மற்றொரு தட்டில் இயக்க உறுப்பினர்களுக்கு அரசியலில் வளர்ச்சியையும் வாழ்கையும் கொடுக்கும் வல்லமை இல்லாத போது அதை நிகழ்த்துவது மடமை. மனிதத்தன்மையற்றதாகவே அது புரிந்து கொள்ளப்படும். அரசியல் பயணத்திற்கான தனது ஊடகத்தை , தேக்கி நிறுத்தி சீரழிக்கும் மடமையை இவரல்லாது பிறிதெவரும் செய்யார்.
சேகரிடம் என் விழைவைச் சொன்னபோது அவனுக்கு அதில் ஒளிந்திருக்கும் என் திட்டம் தெரிந்திருக்கவில்லை. தேக்கடியிலிருந்து புதுவை திருப்பும் வரை அதை என்னிடமிருந்து உருவியெடுக்க பல கோணங்களில் முயன்றபடியே இருந்தான் . நான் அவனுக்கான பதிலாக ஒற்றைபோக்கு கொண்ட சித்திரத்தையே அளித்தபடி இருந்தேன் , " தற்போது திட்டமென்றே ஒன்றில்லை என்றும் , மேற்கொண்டு என்ன செய்வது என்பதை பற்றிய பேச்சு வார்த்தையை நான் யாரிடம் துவங்குவது நீயே சொல்” என்றதும், வெகுநேரம் ஏதும் சொல்லாமல் இருந்தான் . நான் அதை அவரிடமிருந்தே துவக்கினேன் . “நீ அனைவரையும் ஒருங்கு” என்றதும் ,அது தன்னால் ஆகாதது என அவனே புரிந்திருந்தால், கமலக்கண்ணன் என்றதும் “அவன் தாமோதரனை கலக்காமல் ஏதும் சொல்லமாட்டான்” என்றான் . ஆகவேதான் சொன்னேன் “தாமோதரனை அழைத்துவா” என்று .
தன்னால் அழைத்துவர முடியாதென்றான் . நான் சிரித்தேன் . “தாமோதரனுக்கும் பாலானுக்கும் எப்போது பெரிதாக முரண்படுகிறது அன்று தகவலை மாட்டும் சொல்லு மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன் .தேக்கடிக்கு சென்று வந்து பத்து பதினைந்து நாள் இருக்கும், இருமுறை என்னை சேகர் வந்து சந்தித்தான் . அவையெல்லாம் சாதாரண சந்திப்பே , விஷயம் என ஒன்றில்லை .
அன்று பின்காலை 11:30 மணிக்கு மேலிருக்கும் , சேகர் மிக பதட்டமாக என் அலுவலகம் நுழைந்தான் . செய்தி மிக சுருக்கமாக இருந்தது . இன்று மதியம் பாலனுக்கும தாமொதரனுக்கும் பெரிய முரண் . முதல்வரின் தனிச்செயளர் அறைக்கு வெளியே . என்றான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக