https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 153 * கலைந்த கூடாரம் *

ஶ்ரீ:




பதிவு : 153 / 227      தேதி :- 09 ஆகஸ்ட்  2017

* கலைந்த கூடாரம்  *

இயக்க பின்புலம் - 76
அரசியல் களம் - 45


\\ எனக்கு அது என்னென்ன சிக்கலை கொண்டு வரப்போகிறது என்பதை யூகிக்க முடிந்தது . ஆனால்   துவங்கியாகிவிட்டது . இனி யார் நினைத்தாலும் இது நிற்கப்போவதில்லை .  பாலனுக்கு இது   எதிர்பாராத   நகர்வு ,    சரி செய்ய பலநாள் ஆகும்ஊழ் ...அது அவரைநோக்கி நகரத்ததுவங்கியது.  தீர்மானத்தில்   அனைவரும் கையெழுத்திட்டு,   பல பிரதி எடுத்துஅனைத்து பத்திரிகை  அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து முடிவை   நோக்கி மாலை   வரை காத்திருந்தோம்..........//






பேசி முடிவெடுத்தபடி பின்மதியம் 3:00 மணிக்கெல்லாம் திரும்பவும் “பிளிஸ்சில்” கூடிவிட்டோம் , ஒரே பரப்புதீர்மானத்தை நானும் கமலக்கண்ணனும் எழுதி முடித்தோம்இது எங்களின் நீண்டகால வழமை , பாலனின் அறிக்கை என எது வெளிவந்தாலும் ,அது நானும் கமலக்கண்ணனும் அமர்ந்து எழுதி முடித்ததாக இருக்கும் . சில சமயம் மையக்கரு பாலனுடையது . அவை பெரும்பாலும் அன்று காலை பத்திரிக்கைகளில் வந்த செய்திகளுக்கோஅல்லது எதிர்கட்சிகளின் அறிக்கைகளுக்கோ ,ஏதிர்வினையாக இருக்கும் . கிண்டலும் கேலியுமாகவே அவை எழுதப்பட்டாலும் , செறிவாக வரவேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக இருப்போம் . அவை எப்போதும் அப்படித்தான் வெளிவந்தனஅதே சமயம் பழைய செய்திகளிலிருக்கும் ஆதாரத்தை சேகரித்து  அவை தயாரிக்கப்படுவதால் எங்கள் அறிக்கைகளிக்கு  யாரும் பதில் எழுதமாட்டார்கள் . இதில் எனது பங்குஅடிப்படை அறிக்கையை கமலக்கண்ணன் தயாரித்து எடுத்துவந்தால் இருவரும் அமர்ந்து சொல்நயம் ,பகடி , கூறுமுறை ஆகியவைகளிடன் அவற்றை வடிவமைப்போம்.அவை மிக சிறப்பாக வரும் . சில கண்ணிகளை பொதிந்து வைப்போம்மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது அவை தெரியாது . எதிர்கட்சியினரோ அல்லது நாங்கள் குறிவைத்த நபரோ தெரியாது அதை தொட்டால் , பிறகு அந்த வாரம் முழுவதும் அவர்களை வறுத்தெடுப்போம்அறிக்கைகளின் பின்னால் நாங்கள் இருப்பது எல்லா அரசியல் எதிர்கட்சி மேல்நிலை தலைவர்களுக்கு தெரியுமென்பதால் , பொது இடத்தில் கூடும்போது இந்த அறிக்கையை பற்றி ஒருவரை ஒருவர் பகடி செய்து வெடிச்சிறுப்புடன் அன்றைய பொழுது போகும் . அவை மிக ரசமான நாட்கள் .

இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் பாலனை அவ்வாறு வறுத்தெடுத்திருந்தது . அதை சொல்லி “பிலிஸ் விடுதி” அதிரும்படி சிரித்துக்கொண்டிடுந்தோம் . 

3:30 மணி இருக்கும் ஒல்லி சேகர்தான் மாலைமலரை தூக்கிக்கொண்டு ஓடிவந்தார் , அவர் முகத்தில் கலவையான உணர்வுகள்அவசர அவசரமாக மேஜையில் பரப்பியபோதுதான் தெரிந்தது ,அது அன்றைய தலைப்பு செய்தியாக வந்திருந்தது  . யாரும் அது அப்படி வரும் என யூகிக்கவில்லை .எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம்மாலைமலர் நிருபர் நண்பர் மகாலிங்கம் அதை நன்றாக செய்திருந்தார் . இத்தனைக்கும் அவரிடம் இதை பற்றி ஒன்றும் சொன்னதில்லை . அவருக்கு இயக்க நிலைமை முவதுமாக அத்துப்படி .அதனால் விசேஷித்து சில உபதலைப்புக்கள்கேள்விகள்யூகங்கள் , என பல பத்திகளில் அசத்தியிருந்தார் .கொண்டாட்டமும் விடுதலை உணர்வுமாக மிக நெகிழ்வாகவும் இருந்தது .பதினைந்து வருட இயக்கம் இரண்டாக பிளவுற்றது . மாநில நிர்வாகிகளில் இருபத்தி மூன்றில் பத்தொன்பது பேர்  அந்த “நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தில் கையெழுத்திட்டிடுந்தனர்”.

அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கையெழுத்து வாங்கிவர என்னை அழைத்தபோது நான் மறுத்துவிட்டேன் . வேறு காரணம் சொல்லி அந்த வேலையை அவர்களோடும் கொடுத்துவிட்டு மீண்டும் அதே விடுதியில் பின் மதியம் 3:00 மணிக்கெல்லாம் கூடிவிடுவது என முடிவுசெய்து கலைந்தோம் , நான் வீட்டிற்கு புறப்பட்டேன் .அவர்கள் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கையெழுத்து வேட்டைக்கு கிளம்பினர் . 

மதியம் 12:30 மணிக்கு வீடு திரும்பியதும்காலை விடுதியில் நடந்ததை தொகுத்துக்கொண்டேன் . அனைத்தும் சரியாக துவங்கினாலும் , இதன் பாதை எப்படி இருக்கப்போகிறது என்பதைப்பற்றி எனக்கு சந்தேகங்கள் எழுந்தபடி இருந்தது . கமலக்கண்ணின் எண்ணம் எந்த மாறுபாடும் அடையாதுஅதே பழைய க்ரோதத்துடன் இருப்பதைநான் சொல்லும் பல விஷயங்களுக்கு விபரீதமான மறுப்புகளை சொல்லியபடியே இருந்தார்ஒவ்வொரு முறையும் தாமோதரன் என் தரப்பிலிருந்து அதற்கு பதில் சொல்லி சொல்லி , அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்ஒல்லி சேகரிடம்  எனக்கு ஆரம்பம்முதலே சந்தேகம் அவர் பாலனுடைய பால்ய சிநேகிதர் . பாலனை பற்றிய ஒரு மென்முனை அவருக்கு எப்போதுமுண்டு . வந்திருந்தவர்களை வெளியில் விடாது செய்தி அன்றைய “மாலைமலரில்” வந்தாகவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன் . செய்தி பத்திரிக்கையில் வந்த பிறகு சமாதான பேச்சுவார்த்தைதான் துவங்கும் . நாளை பத்திரிக்கை செய்தியாக இது வெளிவருகிற சந்தர்ப்பத்தில் , பாலன் ஏதாவது செய்து கெடுத்து இதை நடக்காது பார்த்துக்கொள்வர் . கூடியவர் எவரும் மாலைமலர் வெளிவரும்வரை பிறியக்கூடாது , அது மட்டுமே செய்தி கசிவதை தடுக்க வல்லதுஇது எவ்வளவு நாட்கள் நீடிக்குமோ அதுவரையில் செல்லட்டும் என இருந்தேன்.

நான் அவர்களுடன் இணைந்து இந்த கையெழுத்து வேட்டைக்கு சென்றிருக்க முடியும் . ஆனால் இது அதற்கான சந்தர்ப்பமில்லை , கமலக்கண்ணன் இதில் தான் தலைமையேற்று நடத்துவதாக ஒரு யூகம் தொனிக்கும் கருத்துக்களை ஆரம்பம் முதலே முன்வைத்தபடி இருந்தார் . உண்மையில் இது நான் தலைமை தாங்க வேண்டிய ஒரு நகர்வு , இரண்டு காரணத்திற்காக , நான் அதை நிராகரித்தேன் .ஒன்றுநான் தலைமை என்கிற ஒரே காரணத்திற்காக எந்தெந்த வழியில் இதை கெடுக்க முடியுமோ அவ்வளவையும் செய்ய கமலக்கண்ணன் தயங்கப்போவதில்லை . தாமோதரனின் அணுகுமுறை தவறானதுஅவர் எப்போதும் எது சரி எது தவறு என சுட்டிக்காட்டாது . பிறகு பார்க்துக்கொள்ளலாம் என்பதாகவே அவரது சமாதானங்கள் அமைந்தன.இது கமலக்கண்ணை தனக்கான வாய்பிற்காக காத்திருக்க சொல்லும்பொய்யான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபடி இருந்தது .இது தான் முதன்மையான முரண்கமலகண்ணனின் மனவோட்டத்தை அறியாது தாமோதரன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தபடி இருப்பதில் தீவிரமாக காட்டினார்  .இது ஒருநாளிலில்லை ஒருநாள் பெரும்சிக்களை கொண்டுவரும் . இவர்கள் பாலனின் இன்றைய அரசியல் கூர்மையை கணக்கிட தவறுகிறார்கள்அரசியலின் முதல் தவறே எதிரியை குறைத்து மதிப்பிடுவதுதான் . இந்த தீர்மானத்தின் வழியாகபாலனின் பலத்திற்கேற்ற தளமாக இப்போது இது உருவெடுத்துவிட்டதுஇது அவரது ஆடுகளம்இதில் அவருக்கு  “எட்டுகண்ணும் விடெறியும்” இனி நான் உள்பட எவரும் அவருக்கு நிகர் நிற்க இயலாது . 
ஒவ்வொரு நகர்தலையும் கூடி பேசி முடிவெடுப்பது போல ஓர் மடமை பிறிதொன்றில்லை.  தலைமை ஏற்பவர் இலக்கை நிர்ணயித்து அதை ஈட்டித்தருவதே ஆற்றவேண்டியதுகூடி பேசுவதால் செய்திகள்  கசியும் . எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இது பிழைத்திருத்தலுக்கு சவால்விடும் யுத்தகளம் . அதன் தலைமை “ஒரு இலக்கை சுட்டி தாக்கு” என்றதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட பிறகேநிதானமாக ஏன் என்கிற சர்ச்சைக்குள் நுழையமுடியும் , யுத்தகளத்தில் கேள்வி கேட்பவனை பக்கத்தில் வைத்திருப்பது தன் மரணத்திற்கு  அறைகூவுவது.

இரண்டாவது;என்னால் இவர்களின் நம்பிக்கையை ஒருநாளும் பெறமுடியாது . அரசியல்   இலக்குகளை விட தன்னை முன்னிறுத்தும் ஆவல் சதா சர்வகாலமும் இவர்களை படுத்தியெடுக்கிறது . நுண்மைக்கோரும் அரசியலுக்கு பொருந்தி இருக்க முடியாது சிந்தனையால் இருபது வருடத்திற்கு   பின்னல் இருக்கிறார்கள் . நிகழ்கால அரசியலுக்கு இவர்கள் வரப்போவதில்லை .இப்படிப்பட்ட சூழலில் கையெழுத்துவேட்டைக்கு நான் உடன்சென்றால் இனி இவர்களால் நிகழும் அனைத்து அநர்த்தத்திற்கும் நான் பதில்சொல்லவேண்டி வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...