https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 172 * ஏற்ற இறக்க நிகழ்களம்

ஶ்ரீ:




பதிவு : 172 /  246: தேதி :- 28 ஆகஸ்ட்  2017

* ஏற்ற இறக்க நிகழ்களம்  *

ஏறுபவர்களின் கனவுலகம்
( 1996 தேர்தல் களம் - 09 )




இதுதான் உனக்கான இடம் , இங்கு உனக்கு என்ன காத்திருக்கின்றதோ அதை அடைந்து நிறைவு கொள் . இந்த படிகளை தாண்டி உள்நுழைவதற்கு முன்பாக ஒரு விஷயம் , அதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள் . இதுவரை நீ என்னவாக இருந்தாயோ அது கடந்த காலம் . முடிந்தது போனது அனைத்தையும் இதன்படிகளில் காலில் அணைந்ததை கழற்றி விடுவதைப்போல விட்டுவிட முடிந்தால் . உனக்கான பிறிதொரு  இடம் இங்கு கிடைக்கலாம் .   அனைத்தையும் ஏற்றுக்கொண்டு உள்ளேசெல் . இரு கைகளையும் உயர்த்தி சொல் உன்னிடம் ஒன்றுமில்லை எனஆம் என் அனுபவங்களுக்கும் இங்கு ஆவது ஒன்றுமில்லைஅரசியல் நாற்களத்தின் மைய மண்டபமிதுஇங்க கணக்கில்லாத ஆடல்கள் நிகழ்ந்து , வென்றவரும் தோற்றவரும் அதை இங்கிருந்தே பெற்றுச் சென்றியிருக்கிறார்கள் . நான் இங்கு வெல்லவோ தோற்கவோ வரவில்லை . அனுபவம் வேண்டி வந்திருக்கிறேன் . அது ஒன்றினாலேயே நான் நிறைவடைவேன் என் நினைக்கிறேன் .





வெற்றியும் தோல்வியும்  கருதுகோள் மட்டுமே . அதைத் தாண்டி வாழ்க்கையில் அது எவ்வித அர்த்தமும் கொண்டிருப்பதில்லை . அதை கடந்து வாழ்வென்னும் நதிப்பெருக்கு பிறிதொரு காரணத்திற்காக பயணப்பட்டபடி இருக்கிறது. அதனூடாக ஒழுகிச்சென்று செயல் படுவதே ஒருவனுக்கு விதிக்கப்பிட்டிருப்பின் வெற்றி தோல்வி என்பது அதில் நிறைந்த தனி மனிதனின் எண்ணப்பெருக்கு மட்டுமே . தனக்கு நிகழும் அனைத்தையும் காலம் வகுத்துக் கொடுத்தது என அதை தன்னுள் நிகழ்த்திக்கொள்பவன் விழைவாகவும் அது இருக்கலாம்

செல்வந்தர்களின் கைகளிலிலிருந்த காங்கிரஸ் கட்சி , காரைக்கால் நெடுக்காட்டு சண்முகத்தின் கைகளில் வந்தது ஒரு ஆச்சர்யமான வரலாறு . அவர் கம்யூனிஸ்ட் கட்சில் நின்று வெற்றிபெற்று பின் காங்கிரஸ் கட்சிமாறி அதை ஆட்சியமைக்க வைத்தார் என்றும் . சண்முகம்தான் சுதந்திர இந்தியாவின் முதல் கட்சிமாறி என் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தெருமுனையில் கூவுவதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன் . எனது வீட்டிற்கு பக்கத்தில்தான் மக்கள் தலைவர் சுப்பைய்யா வீடு இருக்கிறது . இந்தியவின் மிக சிறந்த வலது கம்யூனிஸ்ட்டுகளில் தலைவர்களில் ஒருவர் .தாத்தாவும் அப்பாவுடனும் சில இரவு நேர கூடுகைகளுக்கு நான் சென்றியிருக்கிறேன் . ஓரளவிற்கு புரிதலை அடைந்த வயது இரண்டு விஷயத்தை அது எனக்கு புகட்டியது . ஒன்று சண்முகத்தை பற்றிய ஓயாத புலம்பல் .அவரை ஒரு எதிர்மறை ஆளுமையாக என்னுள் நிலைநிறுத்தியதுஆனால் இன்றுவரை எனக்கு  புரியாத  பிறிதொன்று  சண்முகத்திடம் எனக்கேறப்பட்ட ஒவ்வாமைவிட கம்யூனிஸ்ட்களிடம் ஏற்பட்டது பலநூறு மடங்கு அதிகம்

காங்கிரஸ் சண்முகத்திற்கு கைமாற்றிய காலம் பற்றி சண்முகம் என்னிடம் மிக  விரிவாக பதிவு செய்திருந்தார் . அது மிக அற்புதமான நிகழ்வுகள் அந்த பதிவிற்கு பலர் முரண்பட்டாலும், அவை புதுவை சுதந்திர போராட்டக்களத்தில் நிகழ்ந்த முரண்களுக்களை கலைந்துகொள்ள சில அடிப்படை கேள்விகளை கேட்டுக்கொண்டால் ,அதற்கு சண்முகத்தின் பதிவில்தான் பதில்களை கண்டடையமுடியும் என்பதனால் அவர் சொன்னது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூற்றாகவே நான் பார்க்கிறேன்

சண்முகம் தான் வழமையாக அமர்ந்திருக்கும் அந்த நாற்காலியில் குளித்து முடித்து எப்போதும் அணியும் ஜிப்பா வெட்டியிலில்லாமல் சட்டை போட்டிருந்தார்நான் தயக்கமாக உள்நுழைய அவர் உற்சாகமாய் எழுந்துகொண்டார் . இரு கைகளை நீட்டி தழுவிக்கொண்டார் எனக்கு மிகவும் சங்கோஜமாய் இருந்தது என்னை யாரும் அவ்வாறு அணைத்ததில்லை . நல்ல காட்டுமஸ்தான உடல் . காலை குளியலில் சோப்பு வாசனை சற்று மிச்சமிருந்தது . பழைய சட்டையின் புது கஞ்சி ஒரு மாறுதலான மனத்தை தந்தது . நான் நினைத்ததைவிட உயரமான மனிதர் .சட்டை கையின் நீண்டு முடமுடாப்பான முனைகளின் மிக மெல்லிய கீறலை என் முழங்கையில் உணர்ந்தேன். நான் இரு கைகளையும் தொங்க விட்டபடி அவர் ஆலிங்கனத்திற்கு உடன்பட்டதால் நான் முழுவதுமாக அவர் உடலில் அடங்கிப்போனேன். இறுக்கமாக அணைத்த கையின் உரம் என் இரு தோள்களிலும் நீண்டநேர தொடுகை உணர்வாக இருந்தது. அவர் மெள்ள என்னை விடுவித்ததும் , அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்தில் காந்திராஜை பார்க்க அவர் மெளனமாக என்னை தனது பக்கத்து இருக்கையை தட்டிக் காட்டி அதில் அமரும்படி சொன்னார்.

அதற்குள் தொலைபேசி அழைப்பு வந்துவிட , அவர் தன் உதவியாளரை அழைத்து டீ கொண்டுவரச்சொன்னார் . தொலைபேசியின் மறுமுனையில் யாரென தெரியவில்லை . சண்முகம் தனது வழமையான கிராமிய பாணியில் அனைவரையும் "வாயா போயா" என விளித்து பேசிக்கொண்டிருந்தார் . சிறிதுநேர பேச்சிற்கு பிறகு எங்களுக்கு டீ வந்துவிட அவரும் பேசிமுடித்து டீ எடுத்துக்கொண்டார் . என்னை நோக்கிரொம்ப சந்தோஷமயா நீ வந்தது . உன்னைப்பற்றி வில்லங்கம் தான் நிறைய சொல்லிக்கொண்டே இருப்பான்” . “காலையில் வந்திருந்தானேஎன சொல்லிவைத்தியநாதாஎன உரக்க குரல்கொடுக்க "வில்லங்கம் என்கிற வைத்தியநாதன்" சண்முகத்துடைய பின்புற அறையிலிருந்து வெளிப்பட்டார் . சண்முகம்  யாருடைய பெயரையும் சுருக்கி அழைத்து நான் கேட்டதில்லை . வில்லங்கம் எனது பக்கத்திலிருந்த நாற்காலியில் ஸ்வாதீனமாக அமர்ந்து கொள்ளவதற்குள் அவருக்கும் டீ வந்தது

வைத்தியநாதன் என் கைகளை பிடித்து வாழ்த்து சொல்லி , “நான் அப்பவே சொன்னேன் ஒருநாள் நீ இங்கு வந்துதானாக வேண்டுமெனஎன்றார் . மரியதாஸ் தொடங்கி இந்த நிமிடம்வரை நடந்த அனைத்தின் பிண்ணியில்வில்லங்கம்இருப்பது புரிந்ததும் , எப்படி இதை யூகியாது போனேன் . அவர் தலைவரை நோக்கி " பாலனுக்கு எல்லா செலவும் அரி தான்என்றார் . சண்முகம் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொள்ள , நான் அவரை தலைவர் என் விளிக்க எந்த தடையும் எனக்குள் எழவில்லை . ஒருநிமிடம் தயக்கமிருந்தது காந்திராஜ் அவரை சிலசமயம் அண்ணனென்றும் பல சமயம் தலைவர் என்றும் விளித்தார் . என் வயதிற்கு நான் அவரை அண்ணன் என்று விளிக்க முடியாது வாங்க போங்கவென விளிப்பதும் சரியாக வராது நான் தலைவரென்றே அவரை விளிக்கத்துவங்கினேன் . நான் யாரையும் அப்படி விளையாட்டுக்கூட விளித்ததில்லை பாலனிக்கூட கடைசீ வரை அண்ணன் என்றுதான் அழைத்தேன் . நான்அவரிடம் அது உண்மையில்லை தலைவர் வெளியில்தான் அப்படி பேசுகிறார்கள்என்றேன்

சண்முகம் ஒரு தொடர் பேச்சாளர் யாரையும் குறுக்கே பேசவிடாது பேசிக்கொண்டே இருப்பார் . அவை அனைத்தும் பழைய நிகழ்வுகளாக இருக்கும் . அது தொடங்கினால் நிற்காது போய்க்கொண்டே இருக்கும் யாரை முன்னிட்டு அதை தொடங்கினாரோ அவர் கிளம்பிச்சென்று பலமணி நேரமாகியும் அது நிற்காது. புதிதாக வந்தவர் அமைந்தவுடம் அதே கதை தொடர்ந்தபடி இதுக்கும் . ஆனால் அவை வாய்தவறி அன்றைய ரகசியத்தை எதையாவது உளறி நான் பார்த்ததேயில்லை . நான் அதுவரை பார்த்தவர்களில் சண்முகம் மிக வித்தியாசமாக தெரிந்தார் . அரசியல் ஆளுமைகள்  பலரின் தொடக்கமும் முடிவும் இங்கிருந்தே நிகழ்ந்திருக்கின்றன . தன் கட்சியில் மட்டுமல்லாது அணைத்து அரசியல் கட்சிகளிலும் அதை தீர்மானிப்பவராக அவர் இருந்தது தான் வினோதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...