ஶ்ரீ:
பதிவு : 167 / 241 : தேதி :- 23 ஆகஸ்ட் 2017
* தடுத்தலே தொழிலென *
மீண்டும் இயகத்தில்
1996 தேர்தல் களம் -3
என்னை அபூர்வமாக சந்திக்கும் ஒருவர் இன்று காலை என் அலுவலகத்திற்கு வத்து பாலன் அன்று மதியம் கட்சிமாறப்போகும் செய்தியை முதலில் சொன்னபோது , எனக்கு மிகுந்தது அதிர்ச்சியை விட வருத்தம்தான் . இதைப்போல ஒன்றை அவர் செய்யக்கூடுமென முன்பே யூகித்திருந்தேன் . இங்கு அவருக்கான வழிகள் என்றோ அடைபட்டு போயின . தில்லி சென்று கமிட்டியை மாற்றிக்கொண்டுவந்த பாலனுக்கு அதை செய்தது பெரிய மடமை என விரைவில் புரிந்துபோனது . விதந்தோதும் தொண்டனில்லாத தலைவன். கைகால்களற்ற ஒரு பிண்டம் மட்டுமே, அது இருப்பைத் தவிர பிறிதெதையும் உணராது . பலரின் கைகளால் கண்களாலும் சிந்தனையினாலுமே ஒரு தலைவன் செதுக்கப்படுகிறான் . தன்னால் நியமிக்கப்பட்ட புது நிர்வாகிகளுக்கு தலைவன் பாலன் அல்ல பிறிதொருவரெனில் அவர் அடையும் பரிபவங்கள் சொல்லில் அடங்காதவை . இவன், என்னை ,இப்படி, பார்க்க , ரசிக்க , விரும்ப வேண்டும் என்கிற விழைவே அனல் கொண்டு அவனை உந்தும் விசையென்றாகிறது . அதுவே அவனை வடிவமைத்து அவனென்ற அடையாளத்தையும் கொடுக்கிறது . அவர் அமைத்த கமிட்டி நீர்ததுப்போனதும் . எதையும் செயலவடிவில் மீட்டெடுக்க இயலாமல் கிருஷணமுர்த்தியின் பின்னால் நிற்கவேண்டிய நிலைக்கு அவரது தாழ்வு மனப்பான்மை அல்லது இயலாமை கொண்டு நிறுத்தியது . வைத்தியலிங்கத்தின் சூழியலுக்கேற்றபடி அரசியல் நிர்பந்த்தத்தினால் திட்டமிட்டதை விட்டுக்கொடுப்பதை தயக்கமில்லாது சமரசம் செய்யது கொள்ள துவங்கியதும் , பாலன் அவரை சார்ந்து முன்னிருத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அடிவாங்கி விட்டன . அனைத்து தரப்பும் அவர்மீது நம்பிக்கையிழந்தது .
முதல்வருக்கு பலமாக இருந்தது அவரது மைத்துனர் பாஸ்கர் . அரசாங்க ரீதியில் அவரின் தேவைக்கு சரியாக செயல்பட்டாலும் அரசியலில் ரீதியில் நிறைய சொதப்பினார் . கட்சிக்குள் எழுந்த அதிருப்தியை அவரால் சரிசெய்யவே இயலவில்லை . முறையான மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பில்லாததால் சின்ன சின்ன விஷயங்களும் அவரை நேரடியாக சீண்டியபடி இருந்தது . அதனால் எப்போதும் நிலையழிந்தே காணப்பட்டார் . விளைவு அவசியமான காலத்தில் பாலனால் அவரை தனது கருத்தால் , திட்டத்தால்கூட நெருங்க முடியாது போனது . தனது தேர்தல் சீட்டு விஷயத்தில் கூட கிருஷ்ணமூர்த்தியை நம்பி அசிங்கப்பட்டார் . அதன் தாக்கம் , தன்னை சமாதானம் செய்ய யாராவது வருவார்கள் என எதிர்பார்த்து முருக்கி நின்று யாரையும் பார்க்கமலானார் , யாரவது வந்து தன்னை சமாதானம் செய்யட்டுமென . அப்படி யாரும் வராததால் ஏமாற்றமுற்று வெதும்பி, கசந்து ஒரு கட்டத்தில் கட்சிலிருந்தே வெயேறவேண்டியதானது . எதை தன் ஆயுதமென கொண்டு பலரை காயப்படுத்தி சிதறடித்தாரோ , அதே ஆயுதம் அவரையே பலிகொண்டது .
கண்ணன் பல பாலன்களின் தொகுப்பு . தாமோதரன் இவரிடம் இப்படித்தான் திரும்ப ஓடிவந்தார் . பாலனும் கண்ணனிடம் திரும்பினார் . இது ஒரு வழிப்பாதை . அவருக்கு தெரிந்ததே . ஆனால் இது தனக்கென வரும்போது எவருக்கும் அது உயிரகொண்டெழுவதில்லை .இந்த இணையும் விஷயத்தை கட்சிக்குள் இருக்கும்போதே செய்திருக்கலாமே . அப்போது தடுத்தது இப்போது ஏன் உறங்குகிறது . என்ன என்ன அரசியல் கணக்குகள் . காய்நகர்தல்கள் , எல்லாம் இதற்கா? இப்படி அனாதரவாய் நாடோடிப்போல ஓடுவதற்கா ?.எவ்வளவு பெரிய வாய்ப்பு . அனைத்தையும் கெடுத்து, தானும் அதில் சிக்கி சீரழிந்து . இது வேண்டாமென்றுதானே அன்று அரிஸ்டோ ஹோட்டலில் நான் கதறினேன் .
எனக்கு கிடைத்த நல்லதொரு அரசியல் பாடமிது . தன்னை தற்காத்துக்கொள்ள பிறரை தடுப்பதொன்றே வழிமுறை என கற்றவர்கள் அது காலாவதியானதும் , கற்ற இடத்திற்க்கே திரும்ப நினைக்கிறாரகள் . வளர்ச்சி என்பது தன்னை சுற்றி தன்னிச்சையாக வளரும் தனி ஆளுமைகளின் ஆற்றல்களுக்கு ஈடாக நம்மை வளர்த்தெடுத்துக்கொள்வதே . இதை எனக்கொரு வாய்ப்பு கிடைத்தபோது முற்சித்தேன் . நல்ல வெற்றியை கொடுத்தாளும் , ஒருநாள் வீழ்ச்சியைத்தான் அளித்தது இருப்பினும் அது ஆரோக்கியமானதாக நேர்மறையான எங்களை உருவாக்கியது தாமோதரன் குழு செய்ததற்கும் பாலன் இன்று செய்ததற்கும் என்ன வித்தியாசம்?.விளக்கு வீட்டில்பூச்சிபோல ஒரு சிறகு பொசுங்கிய பிறகும் அது மீளவும் ஏறி நின்று மற்றொன்றையும் பொசுக்கி மாய்ந்து போவதுபோல . அதில் சிக்கி கொண்டவர் பின்னெப்போதும் பிடறியில் கால்பட ஓடிக்கொண்டிருப்பதை தவிர பிறிதொன்றையும் செய்யவில்லை . தாமோதரனுக்கு செய்த துரோகம் அவரை இப்போது , இப்படி பழி தீர்த்தது.புதுக்கமிட்டி அமைத்து அதில் தாமோதரனை சேர்க்காது விரட்டியடித்து அவர் பலநாட்கள் புதுவைக்கு வராமல் பித்தனை போல கமலக்கண்ணனை மட்டும் சிலகாலம் சந்தித்துக்கும் வழக்கமும் , ஏதோ மனப்பிணக்கில் அதுவும் நின்று போனது .
அன்று மதிய உணவிற்கு உட்காரப்போகும் நேரத்தில் , என் தங்கை ஏதோ அவசரம் போன் வந்திருக்கு என சொன்னதும், சாப்பிட்ட கையோடு எழுந்து ரிசீவரை காதில் வைத்ததும் , யார் என கேட்க தேவையில்லாத குரல் . அது பாலன் . “என்ன” என்றதும் பதட்டமாக தாமோதரன் மாரடைப்பால் இறந்த செய்தியை சொல்லி உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்தார் . நான் அப்படியே கைகழுவி மருத்துவமனைக்கு சென்றபோது , பாலன் எனக்காக காத்திருந்து என்னைப் பார்த்ததும் , என்னிடம் “பிணவறையில்” என்றார். நான் சென்று அது அவர்தான் என உறுதிப்படுத்திக்கொண்ட பிறகும் என் திகைப்பு அடங்கவில்லை . பாலனுக்கு ஏதாவது குற்ற உணர்விருப்பதாக என்னால் அறியமுடியவில்லை . ஆனால் யாராவது குற்றம் சொல்லிவிடப் போகிறார்கள் என்கிற மிரட்சியைத்தான் அவரது கண்களில் பார்த்தேன் . என்ன மாதிரியான ஆள் , தலையை உலுக்கி அந்த அருவருப்பை போக்க முயறசித்தேன். அவர் தூக்குக்கு தப்பிய குற்றவாளி . மனம் குமைந்தே ஒருவரை மரணிக்க வைத்த அவரது அரசியலில் அதற்குறிய விலையை ஒருநாள் கொடுத்தேயாக வேண்டும் . என அப்போது நினைத்தேன் . அது தான் இப்போது நிகழ்ந்தேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக