https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 152 * கையெழுத்தெனும் கணை *

ஶ்ரீ:




பதிவு : 152 / 226   தேதி :- 08 ஆகஸ்ட்  2017

*  கையெழுத்தெனும் கணை *


இயக்க பின்புலம் - 75
அரசியல் களம் - 44


\\ திட்டம் என்ன என்று இன்று இரவு பேசி முடிவெடுப்போம் . வரும்போது ஒல்லிசேகர்    கமலக்கண்ணனையும் இங்கு நடந்தது அனைத்தையும் சொல்லி அழைத்துவாருங்கள்” என்றேன் . “நான் உங்களை மட்டுமே இதில் நம்புகிறேன் . மற்றேவர்க்கும் நீங்களே பொறுப்பு , இதை ஏற்றால் இன்றிரவே அனைத்தையும் பேசி முடிவெடுக்கலாம் , இரவு எங்கு கூடுவது என சேகரிடம் சொல்லி அனுப்புகிறேன் . நீங்கள் என்னை சந்தித்ததோ , இரவு கூடவிருப்பதோ வெளியில் கசியாது பார்த்துக்கொள்ளுங்கள்” என்றேன் .தாமோதரன் அனைத்தையும் ஏற்று இரவு கூடிப்பேசி முடிவெடுப்போம் என்று சொன்னபிறகு அனைவரும் விடுதியிலிருந்து கிளம்பினோம். //




தாமோதரன் கிளம்பி சென்ற , சிறிது நேரத்திற்கெல்லாம் சேகரும் கிளம்பிச்சென்றான் , இருவரும் சென்ற பிறகு எனக்கு இன்னுமொரு டீ சொல்லிவிட்டு அது வரும்வரை காத்திருக்கும் இடைவெளியில் , தாமோதரனுடனான பேச்சியது  தலையில் ரீங்காரமிட்டபடியே இருந்தது, ஏதோ சரியில்லை என்று மனதிற்குள் ஒன்று சொல்லியபடி இருந்தது. நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் பதிலில்லை . நான் விளையாட விழையும் இதில் எனக்கு தொலைநோக்கு என ஒன்று இருக்கிறதா? என்பதே முதல் கேள்வி . நிச்சயமாக இல்லை ,இவர்களுடன் எனக்கு நீண்ட பயணம் இருக்கப்போவதில்லை. பாலன் நடந்துகொண்ட முறை வலிமிகுந்ததாக இருந்தது ,அரசியலில் இவ்வளவு தூரப்பணத்திறகு பிறகு இந்த மனவுளைச்சலோட என்னால் பழைய இடத்திற்கு சென்று அமையமுடியாது. அதற்கு பிழைநிகர் செய்தேயாகவேண்டும் என்கிற  தீவிரம் மறுபடியும் கிளர்ந்தெழுந்தபடி இருக்கிறது .என்னை பொருத்த அளவில் ,மாற்று தலைமையை நோக்கிய பயணமாக இது இருக்கலாம் . அதேசமயம் அங்கும் இதே குழுவாக இருப்பதா என , அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் . இணைந்து செயல்பட எனக்கு ஏதும் தடையில்லை .

அவர்கள் எப்போதும் வேறு தளத்தில் நின்று சிந்திப்பவர்கள் . உன் தனிப்பட்ட வெஞ்சினத்திற்கு , நீ இவர்களை உபயோகப்படுத்திக்கொள்கிறாயா , என்றால் , ஆம் , அவர்களுக்கும் இதன் சாதக பாதக கணக்குகள் தெரியும் , எப்போதும் கமலக்கண்ணனுக்காக பேசும் தாமோதரன் இப்பொது ஏன் அவரை அழைத்துவரவில்லை , என்கிற கேள்வியை நான் இங்கு வைக்கவில்லை . என்னைப் போலவே அவரும் ஒரு முட்டுசந்திற்கு வந்துவிட்டதை உணர்ந்துகொண்டார் , அதுவே அவரை என்னை சந்திக்கும் அவரது தயக்கத்தை உடைத்தது . அவரிடம் இப்போதைக்கு திட்டமென ஒன்றில்லை . என்னுடனான பயணத்தில் அவர் அவருக்கான பாதையை அல்லது பாலனுடனான சமன்பாட்டை கண்டடையலாம் . என் திட்டத்தினூடாக கைகோர்ப்பது மூலம் பாலனை தன்வழிக்கு கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம் . ஆகவே பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவே .

இப்படியாக பல சிந்தனை என்னுள் மோதியபடி இருக்க  இந்த ஒரு இரவு இவர்களுக்கு ஒரு சவால் இவர்கள் இதே வைராக்கியத்துடன் தொடர்ந்தால் நாளை என்ன என்பதை நாளை முடிவுசெய்யலாம் என்று  இரவு கூட்டத்தை மறுநாள் காலை என்று மாற்றி அமைத்தேன் . பாலனுக்கு தகவல் கசிய இரவு மிக உகந்த நேரம் . அதற்கான வாய்ப்பை கொடுப்போம் பாலன் நிச்சயமாக எதிர்வினை ஆற்றுவார். இவர்களின் நேர்மைக்கு சவாலானதாக இது இருக்கட்டும் என முடிவு செய்தேன் .காலை பேச்சுவாரத்தையை   முறையாக கொண்டுசெல்ல முதலில் அடிப்படை நெறி உருவாக்கி பிறகு பேசுவது எனக்கு சரியென பட்டது

ஒன்று:பாலனுடன் சமாதானம் .அதை யார் சிறப்பாக செய்து பழைய நிலைமைக்கு அனைத்தையும் ஸ்தாபிக்க இயன்றால் அது முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும்
இரண்டு; இயக்கத்திற்குள் தலைமை மாற்றம் என்பது பெரிய விஷயம் , அது இப்போது அவசியமற்றது . நாம் அதற்குள்  வேறு அணி அவ்வளவே

நான்கு;மற்ற கட்சிதலைவரில் யாரை சார்ந்திருப்பது , அதில் ஒருவர் முரண்பட்டாலும் அவர் சம்மதிக்கும் வரை எந்த முடிவும் எட்டப்படக்கூடாது .முரண்படுபவர் சரியான விஷயங்களை முன்வைத்தால் அதற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும்

ஐந்து;இதற்கு தலைமை என யாருமில்லை , இது ஒரு கூட்டு முயற்சி

அதிகாலை முதலே பாலன்  தரப்பு ஆடல்களுக்கு காத்திருந்தேன் , விஷயம் கசியவே வாயப்பு , காலை 10:00 மணிக்கு பிளிஸில் கூடுவதாக முடிவு , நான் 10:30 மணிவரை காத்திருந்துவிட்டு பின்  பிலிஸூக்கு புறப்பட்டேன் . அங்கு சென்றதும் , கமலக்கண்ணன் தாமோதரன் கனகராஜ் மற்றும் ஒல்லி சேகர்கள் அங்கு எனக்காக காத்திருந்தனர்அனைவரும் என்னை வரவேற்றனர் ,  கமலக்கண்ணன் கண்களில்   மட்டும் பழைய க்ரோதத்தை வெளிக்காட்டின . இவன் திருந்த மாட்டான் அவன் வெறும் விழைவுகளாலானவன் எதார்த்தத்துடன் ஒருநாளும் பொறுந்திபோக இயலாதவன்  . அனைவருக்கும் டீ சொன்னேன்  .அதற்கு முன் பேச்சு வாரத்தையின் அடிப்படை முறைமைகளை சொல்லி சம்மதம் பெற்ற பிறகு பேசாத துவங்கினோம் காலை அங்கு கூட்டமிருக்காது மேலும் மத்திய உணவிற்கும் 12:00 மேல்தான் கூட்டம் கூடும் அதற்குள் பேசி முடித்துக் கொள்ளலாம் . நான் எல்லோருக்கும் வடக்கத்திய சாப்பாடு சொல்லிவிட்டு     காத்திருந்தோம்  ஒரு இனம்தெரியாது பதட்டம் தொடர்ந்து இருந்தது 


பாலனுடன் சாமாதானத்திற்கான வாய்ப்பு பற்றி பேசத்துவங்கினேன் . “நாம் முதலில் சமாதானத்திற்கான வாய்ப்பு இருக்கிறதா என முதலில் பார்க்கவேண்டும்என்றேன் , தாமோதரன் முதல் கட்டத்திலேயே அதை கடுமையாக மறுத்துவிட்டார் . சமீபத்திய நிகழ்வு அவரை  பாதித்ததால் அப்படி பேசுகிறார் என்றாகிவிடக்கூடாது எனபதால்  இங்கிருந்து அதை யார் எடுத்துக்கொண்டு போய் பேசமுடியும் என்கிற கேள்வி எழுந்ததும் அது அர்த்தமற்றுப்போய்விட்டது , நானும் சுப்பாராயனும்தான் இவர்கள் மத்தியில் அதை தூக்கி சுமந்தவர்கள் சில சமயங்களில் தாமோதரனும் அதை வேறு சிலருக்காக செய்திருக்கிறார் . மற்றபடி பிறிதெவரும் பாலனுடன் சதா முரண்பட்டபடி இருந்தவர்கள்தான் .


ஒருமணி நேரம் பலவித கோணங்களில் பேசிய பிறகும் , 'பாலனை விட்டு பிரிந்து செல்வது ஒன்றே தீர்வு என்கிற முடிவை நோக்கியே அது சென்று கொண்டிருந்தது . சரி பாலன் வேண்டாம் என்றால் யாரை பின்பற்றுவது , கண்ணன் , மரைக்காயர்,சண்முகம் வைத்திலிங்கம் . இதில் கண்ணன் மற்றும் வைத்திலிங்கம் வேண்டாம்' என முடிவானது . 'மரைக்காயர்'' , என்றதும் நான் மறுத்தேன் . எனக்கு உப்பளத்தில் நடந்த சட்டமன்ற தலைவர் தேர்தலில் நிகழ்ந்தது மரைக்காயருடன் ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது , கமலக்கண்ணன் மரைக்காயர்தான் சரியாக வரும் என்றான் , "நான் அதற்கு தடை அல்ல நீங்கள் சென்று அவரது ஆதரவை கேளுங்கள் நான் வருவதாக இல்லை" , என்றேன் அனைவரில் ஒருவர் முரண்பட்டாலும் அது மறு பரிசீலனைக்குரியது என்கிற முடிவிற்கு முரணானது . நான் ஏன் முரண்படுகிறேன் என்பதை அந்த சம்பவத்தை முன்வைத்து ஏன் மரைக்காயார் வேண்டாமெனபதற்கான காலணததை முன்வைத்தேன் , “ஆனால் நீங்கள் அனைவரும் அதற்கு உடன்படுவீர்கள் என்றால் இக்பாலிடம் பேசுவதாக இருந்தால் எனக்கு சிக்கலில்லை" என்றேன்  , யாரை முன்நிறுத்தி என்றதும்வெறிநாராயணசாமிஎன்றனர்சரி அதை யார் செய்வது என் முடிவெடுக்கலாம்” . அடுத்ததாக சண்முகம் . அவரிடம் நேரடியாக பேசுவது வேலைக்காகாது . இருப்பினும்பைனான்ஸ் பன்னீர்செல்வம்வழியாக அதற்கு முயலலாம்

நான் மாற்று வழி ஒன்று சொன்னேன். நாராயணசாமி mp . அனைவருக்கும் அதுவே சரியாக தோன்றியது  எனக்கும் மிகவும் சரியாக வரும் என அப்போது நினைத்ததும் நாராயணசாமிதான். வளர்ந்துவரும் தலைவர், தில்லி செல்வாக்கு, சண்முகத்துடன் நேரடி தொடர்பு இப்படி அனைவருக்கும் நாராயணசாமி mp ஒரு சரியான தேர்வாக தெரிந்ததால் , யார் அவரை தொடர்புகொள்வது என்றதும், தாமோதரன் தான் அதை செய்வதாக சொன்னார் . ஏறக்குறைய முடிவை எட்டியது , சரி பாலன் மீதுநம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டுவருவது என்கிற இடத்தை நெருங்கும் போது அனைவரும் திணறத்துவங்கினோம் . பெரிய முடிவு ஆனால் எடுத்தேயாக வேண்டியது . நம்மை வெளியில் அடையாளப்படுத்துவது , எனகிற ஒரு புள்ளியில் அனைவரும் நிலைபெற சிறிது நேரம் பிடித்தது . உடன் தீர்மானம் எழுதப்பட்டு அனைவரும் கையெழுத்திட வேண்டும் ,என்றதும் லெட்டர் பேட் தேவை .யாரிடமும் இல்லை.

நான் பலருடன் கட்சி ரீதியான கடிதப்போக்குவரத்தில் இருந்ததால் என் அலுவலகத்திற்கு அழைத்து லெட்டர் பேட் எடுத்துவர சொன்னேன் , வந்ததும் தீர்மானம் எழுத நான் அதை கமலக்கண்ணனிடம் கொடுத்தேன் , அவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் என்பதாலும்  , வெளியில் கொடுத்து டைப் செய்யமுடியாது, ஏனெனில் விஷயம் வெளியே கசிந்துவிடும் . இன்றுமாலைமலரில்வெளிவந்தாகவேண்டும் அடுத்தது என்ன பிறகு பார்க்கலாம் என்று பேசி கமலக்கண்ணனை பார்த்த போது, அவர் மிக ஸ்ரத்தையாக என் லெட்டர் பேடில் இருந்த என் பெயரை அடித்துக்கொண்டிருந்தார் . நான் துணுக்குற்றேன் . இதை போல பேப்பர் அரசியல் செய்யத்தான் இவர் லாயக்கு. என்ன ஒரு சிறுத்த நெஞ்சம்


எனக்கு அது என்னென்ன சிக்கலை கொண்டு வரப்போகிறது என்பதை யூகிக்க முடிந்தது . ஆனால் துவங்கியாகிவிட்டது . இனி யார் நினைத்தாலும் இது நிற்கப்போவதில்லை . பாலனுக்கு இது எதிர்பாராத நகர்வு , சரி செய்ய பலநாள் ஆகும். ஊழ் ...அது அவரைநோக்கி நகரத்ததுவங்கியது. தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டு, பல பிரதி எடுத்து, அனைத்து பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து முடிவை நோக்கி மாலை வரை காத்திருந்தோம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...