ஶ்ரீ:
பதிவு : 174 / 248: தேதி :- 30 ஆகஸ்ட் 2017
* நகைக்க மட்டுமே இயன்றவர்கள் *
“தனியாளுமைகள் - 02”
(1996 தேர்தல் களம் - 11 )
ஒரு கருத்திற்கு யாராவது மாற்று சொல்லும்போது . தனது அனுபவத்தை முன்னிறுத்தி பிறிதெவரையும் பேசவிடாது செய்து தான் அதற்கு பின்னல் மறைந்துகொள்கிறார் என்றார் . இது காந்திராஜ் தனது தொழில் சார்ந்து அவர் கண்டடைந்த உளவியல் புரிதலாக இருக்கலாம் . இவ்வளவு தெளிவான புரிதலுள்ள காந்திராஜிடம் அரசியலில் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள இயலாது போனதற்கு பாலன் கையாண்ட அதே குறுங்குழு அரசியலை முன்னெடுத்தது ஒரே காரணம் . தன்னிச்சையாக வளரும் தனியாளுமைகளின் நிரையே , ஒரு அமைப்பை பலமுள்ளதாக வார்க்கிறது . அதை தடுத்து நிற்கும் தலைவனின் கீழ் உருவாகும் வெற்றிடத்தில் , அத்தகையவர்கள் நிலை கொள்ளமாட்டார்கள். அவரை சூழ்ந்திருக்கும் வெற்றிட மனிதர்களால் ஆகக்கூடியது ஒன்றில்லை. அவர்கள் தங்களின் தன்மதிப்பின் வழியாக பிறிதெவரிடமிருந்தும் பிறித்து தனியாளுமை என வளர்த்தெடுதுக்கொள்கிறார்கள் அது நிகழாத களம் எதையும் உருவாக்குவதில்லை. அது அவர்களது அரசியல் வீழ்ச்சியாக பார்க்கிறேன் .
வளர்ந்து விட்ட எந்த கட்சியின் நிர்வாகிகள் அமைப்பும் தலைமைப் பதவியில் உள்ளவர்களை ஒருபோதும் ஏற்காது . மறைமுகமாக எதிர்த்து செயல்பட ஒரு தருணத்தை நோக்கிக் காத்திருக்கும் . அதை ஒருபோதும் நேரில் வெளிக்காட்டிக் கொள்ளாது . தலமையை எதிர்த்து மாறுபட்ட நிலைப்பாடுகள் வழியாக எழுந்துவரும் புதியத் தலைமையை ஒருபோதும் அது முன்னின்று ஆதரிக்காது . முடியுமானால் அதை தோல்வியுரசெய்யும் அனைத்துவித உத்துழைப்பின்மையை தயங்காது செய்யும். அதே சமயம் பிறிதொருவரையும் அதை செய்யும்படி மறைமுகமாக தூண்டியபடி இருக்கும் . இவற்றை தன் இடத்திற்கான பேரமாக பயணபடுத்திக் லாபம் அடையும் . மாற்றுத் தலைமை வேறுவழியில் தனது தனி ஆளுமையால் தன்னை நிரூபித்து பதவிக்கு வந்தால் ,இதே குழு எவ்வித தயக்கமுமில்லாது அவர் பின்னே நிரைவகுக்கும் . இதற்கு பொருளியல் ஊழல் முதல்நிலைக் காரணமென இருக்காது . பதவியும் தங்கள் இருப்பையும் நிலைகொள்ளச் செய்வதைத்தான் பிரதானமாக கருதும் . இதுவே கட்சி அரசியலின் முதல் படிநிலை .
ஒரு தலைவன் தன்னை சூழ்ந்து நிறைந்த ஆமைப்பின் சகத் தோழர்களிலிருந்து ஒருநாளும் எழுந்து வர இயலாது , வந்தாலும் மிக விரைவாக அவன் வீழ்சசியடைகிறான். மக்கள் திரளிலிருந்து எழுகிற தலைவன் தனது தனியாளுமையால் அந்தத் திரளின் உத்துழைப்பாலே தனது இலக்கை கண்டடைந்து வெல்கிறான் . இதே நிர்வாகிகள் குழு எந்த தடையுமின்றி அவன் பின்னும் நிரைவகுப்பார்கள் . அவர்களை ஆளத்தெரிந்தவனே , எல்லாவற்றிலும் வெற்றி பெருகிறான்.
இது இருபுறமும் உள்ள ஒவ்வாமையை நிகர்நிலை பேணுதல் . அது மானுடர் வெகு சிலருக்கே வாயப்பது இதை விண்ணுரையும் தெய்வங்களே சாத்தியமாக்குகின்றன . ஆனால் புவியின் ஊழ் எதிர்மறை ஆளுமைகளுக்கே வளரும் வாய்ப்பினை கொடுத்து இந்த புவியின் போக்கை நிர்வகிக்கிறது என்கிற எண்ணமே எப்போதும் தோன்றியபடி இருக்கிறது . காரணம் அதை போன்ற ஒன்றையே நான் பல முக்கிய அரசியல் தருணங்களில் அவதானித்துவந்திருகிறேன் . அரசியல் சாமானியர்களின் களமல்ல , அது தன்னை வளர்த்தெடுத்துக்கொள்ள விழையும் தனியர்களால் ஆனது . அவர்கள் ஒருகாலமும் தங்களில் இருந்து ஒருவன் எழுவதற்கு விடுவதில்லை . இவர்கள் எவரையும் இளிவரளாகவே அறிந்து கொள்ளும் வேடிக்கை மனிதர்கள் . இவரகளை வெல்லாத எவரும் தலைவனில் சென்று அமர்ந்ததில்லை . ஆனால் எதிர்மறை ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்தி ஒருவனை இந்த திரள் எப்போதும் தேர்ந்தெடுத்தபடி இருப்பதையும் , அதனால் இந்த நேர்மறை தனியாளுமைகள் சிதைந்து போவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது .
வெகு அபூர்வமாக நேர்மறை ஆளுமைகள் பதவிக்கு வருகிறார்கள் . நான் சொல்லவருகிற நேர்மறை பொதுவான தளத்தில் புழங்கும் அர்த்தத்தில் அல்ல . நேர்மையின் அளவீடு காலத்தையும் துறையையும் பொருத்தது . அது விபரீதமாக அர்த்தத்தை கொடுப்பினும் அதுதான் நடைமுறை . நேர்மை என்பதின் பொருள்கொள்ளுதல் அன்றைய சமூகத்திலிருந்து எழுந்து அடையப்படுவதே . ஒருமுறை நேர்மை பற்றி முன்னாள் அமைச்சர் அனந்தபாஸ்கரன் ஒரு வேடிக்கையான விளக்கமளித்தார் . “பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்துத்தருபவன் நேர்மையாளன் . வேலை முடியாது போனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தான் என்றால் மிகப்பெரிய நேர்மையாளன்” என்றார் . இதை யார் ஏற்றுக்கொள்ளாது போனாலும் அநேகமாக சமூகம் இப்படித்தான் இருக்கிறது .
நான் தலைவரை பெரும்பாலும் அவர் தனிமையில் இருக்கும்போது சந்திப்பதை வழமையாக கொண்டேன் . பெரிய காரணமெல்லாம் ஒன்றில்லை . பொது சபையில் அவர் பேசுவது எனக்கு அர்த்தமாவதில்லை . மேலும் எனக்காக அவர் தனிப்பட்டு என்ன சொல்கிறார் என்பதை அறிவதே எனக்கான இலக்கென்றானது . நான் எப்போது சந்தித்தாலும் இளைஞர் காங்கிரஸ் பற்றிய அவரது கசப்பான அனுபவங்களை பேசுவதும் கண்ணன் பாலன் எப்படி காட்சி அரசியலில் இளைஞர்களை தவறாக வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்தை ஒன்றுமில்லாதாக்கினார்கள் என்பதைபற்றிய நிறைய பதிவுகளை சொல்லியிருக்கிறார் . அவை பெரும் தகவல் களஞ்சியங்கள் . அவர் சொல்லும் நிகழ்வுகளும் நான் அங்கு தலையெடுத்த காலத்தில் நடைபெற்றவை என்பதால் அதன் பிறிதொரு பரிமாணங்களாக அவை இருக்கும் . அவற்றினூடாக நான் அடைந்த புரிதல்கள் அளப்பரியவை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக