ஶ்ரீ:
பதிவு : 147 / 221 தேதி :- 03 ஆகஸ்ட் 2017
*நிழலின் எதிர்மறை *
இயக்க பின்புலம் - 72
அரசியல் களம் - 42
ஏறிக்கு மத்தியில் இருந்த அந்த விடுதியின் தனிமை, குளிர்ந்த சூழல் ,எங்கும் பசுமையின் வர்ண பேதங்கள் ,காட்டிற்கே உரிய இன்னதென்று அறிய இயலாத சுகந்தமான மனம் நாசியை கடந்து உடல்முழுவதும் சுவாசிக்க சுவாசிக்க வந்து நிறைத்த படி இருந்தது ,அது என் மனதை அரித்துக்கொண்டிருந்த அனைத்து கேள்விகளையும் , புழுக்கத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது. " பாலை வறுநிலத்தில் என் ரசனையை கண்டடைய ஒரு புல்லிலிருந்து ஒரு காட்டை உருவாக்கிக்கொள்கிறேன்" என்றார் ஒரு கவிஞர் . எனக்கு சுற்றிலும் இதோ ஒரு காடே திறந்திருக்கிறது .அது முற்றிலுமாக என்னை உள்விழுங்கி உள்ளத்து நெகுழ்தலை கொடுத்து விம்மவைத்துவிட்டது .அது கேரள அரசு சுற்றுலா விடுதி. அன்றைக்கு அறையை முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கு தங்க முடியும் என சொல்லிவிட்டார்கள் . இன்று ஒரு நாள் இரவு "ஆரண்ய நிவாசில்" தங்கி , நாளை காலை இங்கு வருவது ஒரு அருமையான கனவு சூழலிலை உருக்கலாம். ஆனால் மற்றொரு நாளெல்லாம் என்னால் தங்க இயலாது. நான் உடன் ஊர்திரும்பியாக வேண்டும் . திடீரென கிளம்பி வந்ததால் அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு வந்திருக்கிறேன் .
அந்த தீவில் நீண்டநேரம் அமர்ந்திருந்த போது மிக நெகிழ்வாக உணர்ந்தேன் . ஏறி நீரிலிருந்து பனியோ புகையோ எதோ ஒன்று மெள்ள எழந்து எங்களை சூழ்ந்து தாண்டி சென்றது . அதற்கு வாசனை உண்டா என நாசியை கூர்ந்த போது அது குளிர்ந்த பழைய நீரின் மனம் கொண்டதாக இருந்தது ,சுற்றி பரவி பின் விலகியதும் உடல்சூட்டை கணிசமாக குறைத்து உடலில் நடுக்கத்தை கூட்டியது. நான் அணிந்திருந்தது குளிருக்கான கணமான ஆடையில்லாமல் போனாலும் . உடல் சூட்டை ஓரளவு பேணமுடிந்தது. சேகர்தான் நடுங்கிக்கொண்டிருந்தான். மழைமேகம் போல இருள் வழக்கம் போல எங்கும் கரிய போர்வையாக மாறி கவிழ வெகு சீக்கிரமே அங்கு அனைத்தையும் சூழ்ந்து கொண்டது . கரிய வானில் நட்சத்திரங்கள் நடுக்கமின்றி உப்புபறல்கள் போல தெரிய துவங்கியது. அதன் மத்தியில் அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்கிற எண்ணம் என்னுள் எழுந்துவந்தது .
நான் முடிவெடுத்து விட்டேன் . அதுவரை சேகர் மூலமாக எனக்கு கிடைத்த தகவல்கள் , பாலன் எதற்காக இவ்வளவு முயற்ச்சித்தாரோ அதன் அருகில் கூட அவரால் செல்ல இயலவில்லை . அமைப்பின் முன்னனி தலைவர்களுக்குள் மோதல் முற்றிவருவதை நான் அறிவேன். அது ஒன்றும் புதிதல்ல , என்றோ சிதைந்து சிதறியிருக்க வேண்டியது. பலமுறை பிளவுற இருந்ததை பேசி பேசி சீர் செய்து ஒட்டி விடுவதே எனக்கும் சுப்பாராயனுக்கும் வேலையென இருந்தது . இன்று நாங்கள் இருவரும் அங்கு இல்லாதது பலரை அவரவர் சிந்தனை போக்கிலேயே பயணிக்க வைத்திருக்கும். நிர்வாகிகளில் பலர் அந்த சூழலில் இருந்தாலும் . தாமோதரம் அதில் தனித்த ரகம் , அவர் "காத்திருக்கிறார்" , தன் நம்பிக்கையை இழக்காமல் .பெருங்கோபக்காரர். பாலன் எதையும் கருதாது என்னிடம் சொன்னதை அவரிடம் சொல்ல இயலாது .
எனக்கு மாற்றுத்தரப்பாக கமலக்கண்ணை முன்னிறுத்தியது தாமோதரன் .அது நான் உள்நுழைவதற்கு முன்பாக முடிவானது . என்மீது மதிப்பும் நம்பிக்கையும் மரியாதையும் இருப்பினும்,அது கமலக்கண்ணனுக்கு அளித்த வாக்கு .அதை அவரால் மீரா இயலவில்லை, என்பதே அவருக்கு என்னுடனான முரண்பாடாக இருந்தது . நான் அவரை முதலிலிருந்து புரிந்துகொண்டதால், அவர் மீதான மரியாதை உயர்ந்ததே தவிர குறைவுபடவில்லை. அவர் தன் ஸ்வதர்மத்தில் நிற்கிறார் .அது கொண்டாடத்தக்கதே. அனைத்தையும் தாண்டி அவருக்கு என்மீது மிகுந்த மரியாதை இருந்தது. அந்த மாநாட்டிற்கு பிறகு , சூழல் வெகுவாக மாற்றமடைந்தபடி வந்ததை என்னைவிட தாமோதரன் கவலையுடன் கவணித்துக் கொண்டிருந்தார் என பூவ்காவனம் என்னிடம் சொல்லியிருந்தார் . இதில் தான் முரண்பட்டிருக்க கூடாது என்றும் அதனாலேயே இவ்வளவும் நிகழ்ந்து விட்டதாக சொல்லி வருந்தியதாகவும் சொன்னார்.
செயல்படுதலில் என்பாணி தெளிவானது , சூழ்ச்சி எனக்கு ஏற்கத்தக்கதல்ல , எளியவர்களிடம் அதை நிகிழ்த்துவதை காட்டிலும் கீழ்மை பிறிதொன்றில்லை என எண்ணுபவன் நான்.மேலும் அது இருளில் முயங்குவது , வெளிப்படை தன்மையற்றது , நிழலானது ,எவரையும் நம்பாதது , எவரையும் பயன்படுத்தி பின் தூக்கியெறிவது , நட்பென எவரையும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதது , அது எவரையும் தம் நிழலிலிருந்தும் பிரித்து தனியன் என்றே வைத்திருக்கும் . இதை அனைத்தையும் உணர்ந்தவன் அடைவது எதுவாக இருப்பினும், பகிராது உண்ணப்படுவது திருட்டெனக்கொள்ளப்படுவதே . அதை தன் சுகத்திற்காக செய்பவன் ஒரு மனநோயாளி மட்டுமே.
தாமோதரனுக்கு இது புரிந்ததா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் ,பாலனின் வழிமுறை இயக்கத்தை வளர்ச்சியை நோக்கியல்ல. அது மரணப்பாதையில் பயணிக்க வைக்கிறது என தாமோதரன் உணர்ந்திருந்தார். பாலனுக்கு இயக்கத்தை பற்றிய எதிர்கால திட்டமென ஏதாவது இருக்கிறதா , இல்லையா , போன்றவைகளை பற்றிய விவாதத்திற்கு இடமில்லாமல் ,அது இரண்டாம் நிலை தலைமையில் தற்போதுள்ள எவரும் பிழைத்திருக்கும் வாயப்பை முற்றழித்து விடும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர் .
நான் சேகரிடம் சொன்னது ஒன்றே ஒன்று , எனக்கான திட்டம் வெளிப்படையானது , சிக்கலில்லாதது . சில அடிப்படை கோட்பாடுகளை கொண்டது . "என்றைக்கு தாமோதரனுக்கும் பாலனுக்கும் கடும் முரண் வெடிக்கிறதோ அப்போது எனக்கு தகவல் சொல்லவேண்டும் , அவ்வளவே" .சேகர் அடுத்து என்ன என்றதும் மேற்கொண்டு சொல்ல ஏதுமில்லை . அந்த தகவல் முரண் நிகழ்ந்த சில மணிநேரத்திற்குள் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் அவ்வளவே". என்றேன்.
அடுத்தடுத்து நிகழவிருப்பதை நினைத்த போது ஒரு சிறு நலுங்களை உணர்ந்தேன் . எப்படியெல்லாம் இது பேசப்படப்போகிறது , யார் யார் வாழ்வினை இது புரட்டிப்போடப்போகிறது என தெரியவில்லை , அவை நிழல்களைப்போல பிரதிபலிப்பவை ஆனால் அவரவர் விழைவிற்கு தக்கபடி வளைவு கொள்பவை , நிலையாக நிற்காதவை. பலராலும் அதற்கு கணக்கிலடங்கா தலைகளும் வால்களும் இட்டு கட்டப்பட்டு பெருகியபடியே இருக்கப்போகிறது .
அடுத்தடுத்து நிகழவிருப்பதை நினைத்த போது ஒரு சிறு நலுங்களை உணர்ந்தேன் . எப்படியெல்லாம் இது பேசப்படப்போகிறது , யார் யார் வாழ்வினை இது புரட்டிப்போடப்போகிறது என தெரியவில்லை , அவை நிழல்களைப்போல பிரதிபலிப்பவை ஆனால் அவரவர் விழைவிற்கு தக்கபடி வளைவு கொள்பவை , நிலையாக நிற்காதவை. பலராலும் அதற்கு கணக்கிலடங்கா தலைகளும் வால்களும் இட்டு கட்டப்பட்டு பெருகியபடியே இருக்கப்போகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக