https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 160 * மையத்தைத் தேடி *

ஶ்ரீ:




பதிவு : 158 /  234    தேதி :- 16 ஆகஸ்ட்  2017

* மையத்தைத் தேடி *

இயக்க பின்புலம் - 83
அரசியல் களம் - 48


கும்பகோணத்தில் ரங்கசாமி மூப்பனாருடன் நா ங்கள் பேசிக்கொண்டிருந்த இடைவெளியில் புதுவையிலிருந்து சிலர் வந்திருப்பதாக சொன்னதும் ,  அவர் எங்களை சற்றுநேரம் காத்திருக்க சொல்லிவிட்டு , அவர்களை உள்ளேவர சொன்னார் .மணி அப்பொழுதே   இரவு 9:30 மணி   தாண்டி இருந்தது . எங்களுக்கும் வேறுவழி   இல்லை வெளிவந்தோம் . காத்திருந்தோம் . எனக்கு யார்  புதுவையிலிருந்து என தெரிந்து கொள்ள   ஆர்வமாய்   வெளியே வர அது முன்னாள்   சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி . மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் .  கண்ணனின் ஒருகால   அணுக்கர் . இவர்  ரங்கசாமி மூப்பனாரின் தொடர்பிலிருப்பது அப்போதுதான்   அறியமுடிந்தது .  ஒரு சிறு  அசௌகர்யமா உணர்ந்தேன் . இவர் எவ்வகையில் பார்த்தாலும் எதிர் முகாம் . நம்மைப்பற்றி எப்படியும்  நல்ல முறையில் சொல்லப்போவதில்லை . சரி இது இத்துடன் முடிவுறுகிறது . அதுவும் நல்லதற்கே  என்கிற எண்ணத்தோடு , சிறிது பதட்டமாக வெளியில் அமைந்திருந்தோம் .






முக்கால் மணிநேர காத்திருப்பு பலவித எதிர்மறையான எண்ணங்களை கிளப்பியபடி இருந்தது . 10:30 மணி சுமாருக்கு எங்களையும் உள்ளே வரச்சொல்லி அழைப்புவந்தது . உள்ளே சென்றதும் ரங்கசாமி மூப்பனார் . என்னிடம்நான் இரவு பெரியவரிடம் பேசுகிறேன் . அடுத்தவாரம் முழுவதும் ஐயா சென்னையில்தான் இருப்பார்  , சென்று அவரை சந்தியுங்கள்என்றார் . அனைவருக்கும் அது புதியபாதையை காட்டியதாக தோன்றியது . எங்களிடம்நேரமாகி விட்டது இரவு உணவிற்கு சொல்லியிருக்கிறேன் நமது விடுதியில் சாப்பிட்டு செல்லலாம்என்றார் . நாங்களும் புதுவையில்லிருந்து வந்திருந்த மற்றவர்களுடன் அந்த விடுதிக்கு புறப்பட்டோம் . விடுதியில் எங்களுக்கு இரவு உணவு ஒருங்கியிருந்தது . பாலாஜி என் அருகே அமர்ந்துகொண்டார் . நான் மெள்ளசின்னவர் என்ன கேட்டார்என்றதும் அவர் சகஜமாக பேசத்துவங்கினார் . “நீங்கள் வாழப்பாடி கட்சியில் இணைத்து உண்மையா என்கிற ஒற்றை புள்ளியில் அது நிலைபெற்றதுஎன்றார்  . நான்நீங்கள் என்ன சொன்னீர்கள்என்றதற்கு . அவர்நான் இவர்களை நன்கு அறிவேன் . இந்த பிளவு ஏற்பட இவர்களுக்குள் என்ன சிக்கல் என எனக்கு தெரியாது . ஆனால் வாழப்பாடியுடன் இணைந்ததாக பாலன் சொன்னது உண்மையில்லைஎன்று சொன்னதாக கூறினார் . இது இப்படி நல்லவிதமாக முடியுமென நினைக்கவில்லை . பெரிய நிம்மதியை கொடுத்தது அவருக்கு எங்களின் நன்றியை சொல்லி புதுவைக்கு வந்து சேர்ந்தோம் .

சில  வேலைகள் நிமித்தமாக இரண்டுநாள் கழித்தே சென்னை சென்று மூப்பனாரை சந்தித்தோம் , மிக இயல்பாக உரையாடினார் . அன்று என்ன நிகழந்தது என கேட்டறிந்தார் . நான் பாலனின் உளச்சிக்கலை சொன்னேன். அடுத்து என்ன என்கிற கேள்வி வந்தபோது . மௌனமாய் சிரித்தபடி நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்எனக்கு திருமண ஏற்பாடுகள் வேகமாக நிகழ்ந்த காலம் அது . நிச்சயதார்த்தத்திற்கு , முரண்களுக்கு மத்தியில்  பாலன் வந்திருந்தார் . ஆனால் திருமணத்தின்போது அவர் வரவில்லை . மூப்பனாருக்கு அவரின் படம் முன்அட்டைபடமாக இருக்கும் என் திருமன அழைப்பிதழைக் கொடுத்தேன் . ஏதோ யோசையிலிருந்தவர் . அன்றுதான்  சென்னையில் அவரது செயலாளர் பாலுவின் பெண்ணின்  திருமணம் என்றார் . என்னிடம்  என் திருமணத்தன்று வரயிலாதைச் சொல்லி . பிறிதொருநாள் வீட்டிற்கு வந்து வாழ்த்துவதாக சொன்னார் . சொன்னபடி ஒருநாள் வீட்டிற்கு வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.

மநாட்டில் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் இறுதிசொட்டு பலமும் விரையமாக்கப்பட்ட பிறகு  , அந்த பயிற்சி முகாமின் எதிர்மறை நிகழ்வுகளால் முழுவதுமாக சிதைந்து போனது . மாற்று கமிட்டி நியமிப்பதன் வழியாக அதற்கு புத்துயிர் அளிக்க முடியும் என நினைத்து பாலன் இரண்டொரு முறை தில்லி சென்றுவந்த பிறகும் ஏதோ சிக்கலின் காரணமாக புதுக்கமிட்டி சில மாதங்கள்  வரை அமைக்கப்படவில்லை . என்ன சிக்கல் என யாராலும் அறியமுடியவில்லை . நான் மனதளவில்  முற்றிலுமாக அதிலிருந்து வெளியேவந்துவிட்டேன். பரிபவப்பட்ட தாமோதரன் குழு கட்சி விஷயங்களுக்கு செல்வது முற்றாக நின்றுபோனது . என்னை சந்திக்க வரும் சிலர் சொல்லும் தகவல்கள் தாண்டி, வேறு சில தகவல்களும் வரத்துவங்கின . கிருஷ்ணமூர்த்தியிடம் அமைப்பு முழுவதுமாக சென்று சேர்ந்தது . புது கமிட்டி அமைந்தால் அது அவர்களை பிரதானமாக கொண்டதாக இருக்கும் . இதில் பாலனின் அரசியல் நிலை பெரும் சிக்கலை நோக்கி நகர்ந்தது . அமைப்பின் முழு கட்டுப்பாடும் அவர்கள் வாசன் சென்றதால் . அதன் பிறகு எந்த நடவடிக்கைகளையும் பாலனால் சுதந்திரமாக எடுக்க முடியாமலானது. செயல்பாடிகலில்லாத எதுவும் மக்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்

அரசாங்கத்திடமிருந்து ஏதாவது சலுகைகள் உதவிகள் எதிர்பார்க்கும் சாதாரண தொண்டன் யாரையும் அணுகமுடியாது விரக்தியில் புலம்ப துவங்கிவிட்டனர் . பாலனின் அரசியல் பயணம் அதன் வீழ்ச்சியின் எல்லைநிலம் நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது . கிருஷ்ணமூர்த்திக்கு பெரும்தணக்காரர், அரசியல் முக்கியஸ்தர்கள் இவர்களின் வேலைகளுக்கு அவரின் ஆதாரவாளர்கள் பெரிதும் உபயோகத்தில் இருந்ததால் , அவர்களுக்கு கட்சி அலுவலகம் வரவேண்டிய தேவையும் அவசியமும்மில்லை என்றாகியது . அலுவலகம் யாருமின்றி வெறிச்சோடியதால் பாலன் அலுவலகம் வருவது முற்றாக நின்றது . தாமோதரனை கேட்ட அதே கேள்வியை அவரால்  இன்று எவரிடமும் கேட்கவியலாது . இந்தமுறை புதுக்கமிட்டி நியமிக்கப்படும் என்கிற வதந்தி இங்கு பெரிதாக எழுந்து நின்றபோது, பாலன் முதல்வருடன் தில்லியில் இருந்தார் .

புதுக்கமிட்டி நியமனமாகிவிட்டது என்கிற தகவல் எங்குமிருந்தது . அது உண்மைதான் என மறுநாள் காலை செய்தியில் வந்திருந்தது . காலையிலேயே சிலர் தொலைபேசி தகவல் சொன்னார்கள் நான் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக . பேப்பரை பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது . அதில் நானும் கமலக்கண்ணனும் இடம்பெற்றிருந்தோம் . தாமோதரன் பெயர் விடுப்படிட்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது . இது சிண்டுமுடியும் வேலை . மேலதிகமாக அது ஒரு கேவலமான கமிட்டியாக உருவெடுத்திருந்தது . பத்து துணைத்தலைவர்கள் . பத்து பொது செயலார்கள் . பத்து இணை செயலர்கள் . இருப்பது செயற்குழு உறுப்பினர்கள் . இது என்ன கமிட்டி அவ்வளவு பேர் அமர அலுவலகத்தில் இடமில்லை . இது பலர் கைபட்ட சமையல் . உருப்படவாய்ப்பில்லை . இதில் இனி நீடிப்பதால் எவ்வித அர்த்தமும் இருப்பதாக நினைக்கவில்லை . நான் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தபோதுதான் தொலைபேசியில்  ரங்கசாமி மூப்பனார் வாழ்த்து சொன்னார் . நான் என் வருத்தத்தையும் , ராஜினாமா செய்யவிருக்கும் முடிவையும் அவருக்கு தெரியப்படுத்த , அவர்தில்லியில் என்ன நடந்தது என் தெரியாமல் பேசுகிறீர்கள்” . “புதுக்கமிட்டிக்கு பாலன் இதுவரை மூன்று நான்குமுறை முயற்சித்து நடக்காது போனதற்கு பெரியவர் அங்கு இல்லாத்ததே காரணம்” . “அவர் இங்கு உள்ளூர்  அரசியலில் தீவிரமாக இருந்ததால் தில்லி செல்ல இயலவில்லை”. “நீங்கள் சென்னையில் அவரை சந்தித்த அன்று இரவு நான் அவருடன் பேசி என்ன நிலவரம் என்றதற்கு அவர் தில்லில் பிட்டாவுடன் தான் பேசியதையும் , கமிட்டியை இறுதி செய்யும்போது தன்னையும் வைத்துக்கொண்டு செய்யச்சொல்லியிருப்பதாக சொன்னார். அதனாலேயே  இந்த தாமதம்என்றார்.

பாலன் மூப்பனாரை அங்கு எதிர்பார்க்கவில்லை . அவர் கொடுத்த நிர்வாகிகள் பட்டியலை வாங்கிப் பார்த்த மூப்பனார் என் பெயர் விடுப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி . ஏன் என கேட்டதும் . பாலன்அரியால் பெரிய பிரச்சனை அவனை கமிட்டிக்குள் கொண்டுவந்தால் இயக்க செயல்பாடுகள் பாதிக்கும்என ஏதேதோ சொன்னதும் , மூப்பனார்அந்தளவிற்கு சிக்கல் கொடுப்பவனை வெளியில் வைத்திருக்கக்கூடாது . அவனை கமிட்டிக்குள் கொண்டுவந்து பக்கத்தில் வைத்துக்கொள்ளுவதுதான் உன் அரசியலுக்கு நல்லதுஎன சொல்லிக்கொண்டே என்பெயரை அதில் சேர்த்ததும் பீட்டாவும் அதுதான் சரி என்றார்  . “வேறு வழியற்று உன் பெயரை அதில் இணைத்துக்கொண்டார் . அதைபோய் ராஜினாமா செய்வதாவதுஎன்றதும் நான் மகிழ்வுடன் அவருக்கு நன்றி சொல்லி விரைவில் அவரை சந்தித்து ஆசி பெறுவதாக சொன்னேன்.

புதுவைக்கு புதுக்கமிட்டியுடன் திரும்பிய பாலன் வீட்டில் கூடியிருந்த குழுவிற்கு மத்தியில் அந்த நியமன உத்தரவை விசிறி அடித்துள்ளார் . ஏன் என கேட்டதற்கு . “அவன் இந்த கமிட்டியில் இடம்பெற்றது என் தோல்வியாக பார்க்கிறேன் . எல்லாம் இவரால் வந்தது” .என சுப்பாராயனை திட்டிட்தீர்த்திருக்கிறான் . நான் அதன் பிறகு மூப்பனாரை சந்தித்து ஆசி பெற்ற போது . “நீ முன்னிருந்து நாம் பேசியதை நடத்து, அதனால்தான் நீ இந்த கமிட்டியில் இடம்பெறவேண்டும் என நான் விருப்பப்பட்டேன்என்றார் . ஆனால் இதில் நான் ஆற்றும் வாய்ப்பு பாலனை தாண்டி வைத்திலிங்கத்துடன் செயல் படுவது . அதை நான் விரும்பவில்லை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...