https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 151 * கடந்த காலத்தின் துளி *

ஶ்ரீ:



பதிவு : 151 /  225    தேதி :- 07 ஆகஸ்ட்  2017

* கடந்த காலத்தின் துளி *


இயக்க பின்புலம் - 75
அரசியல் களம் - 43


|| யார்யார் எதற்காகவெல்லாம் கொடுக்கும் வாக்குறுதிக்களுக்கு  நான் ஜவாப்பல்ல , எதிலும் நேர்மை தேவைஎன்றார் .அது மிகத் தவறான விசை அதை பாலன் தொட்டிருக்க கூடாது . தொட்டது அவரின் ஊழ். காக்கப்பட வேண்டியவனால் கடுமையாக தாக்குண்டவன் தன்னை நொந்து கொள்வதை தவிர பிறிதொரு வழியில்லை, " உன்னிடம் வந்து நிற்பதற்கு இது வேண்டியதுதான் அதற்கு என்னை நானே கழற்றி அடித்துக்கொள்ள வேண்டியதே என சொல்லி சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ||




குமுறளுடன் சட்டமன்றத்தை விட்டு வெளிவந்த தாமோதரன் உடன்வந்திருந்த நண்பருக்கு காலம அவகாசம்சொல்லி அனுப்பிய பிறகு . கதறி அழவேண்டும்போல தோன்றிவிட்டது .பாலன் இதுபோல் தனிமையில் பலமுறை அவரிடம் நடந்து கொண்டதுதான் என்றாலும்,சொந்த ஊரிலிருந்து அழைத்து வந்தவர் எதிரில் இப்படி நிகழ்ந்தது அவரை குண்ணிப்போக வைத்துவிட்டது. எவ்வகையிலும் இதை இனி பொறுக்க முடியாது. இருபதுவருடத்திற்கு மேலாக பாலனைத்தவிர வேறொரு தலைமையை எண்ணிப்பார்த்ததில்லை . எத்தனை அவமானம்? எத்தனை இழப்பு?எவ்வளவு தியாகம்? இப்போது அனைத்தும்  அர்த்தமற்றது . இதுவரை பொறுத்தவன் கோமாளி என்கிற ஆணவம்தானே,தான் நினைத்ததை ஒருநிமிடம் வைத்துக்கருதாது பேசச்சொல்லுகிறது . ஒரு தகப்பன் அவன் பிள்ளையிடம் நினைத்ததை பேச யோசிக்கும் இன்றைய கால சூழலில் , ஜாதி , ஒட்டு உறவு, என ஒரு சம்பந்தமின்றி ,எப்படி மனம்வந்து முகம்நோக்கி இவரால் இப்படி பேச முடிகிறது. இனி பொறுப்பதால் யாதொரு பயனுமில்லை.

என்னவொரு மனவரட்சி இருக்குமென்றால் தன்னை சார்ந்து நிற்பவனை ,எதையும் சொல்லி விலக்கலாம் என எண்ணத்தோன்றும் . கடற்கரை பழைய துறைமுக பகுதிக்குச்  சென்று யாருக்கும் தெரியாது கதறியிருக்கிறார் . எல்லாவற்றையும் விட அடுத்து என்ன என்கிற சிந்தனை பாலையாய் வறண்டுகிடந்தது. அண்ணாசாலை அலுவலகம் செல்லுவதற்கு முன்  என் அலுவலகம் தாண்டித்தான் சென்றிருக்கிறார் , அவரிடம் வண்டிகிடையாது எப்பவும் எங்கும் நடந்தே செல்வது வழமை. அப்போது எந்த அடிப்படையில் என்னை சந்திப்பது, என்கிற தன்னிரக்கம் அவரை என்னைப் பார்த்தும் பார்க்காதது   போல கடந்து செல்ல வைத்தது . எந்த குறிக்கோளுமின்றி கட்சி அலுவலகம் சென்று தன்னை அடைத்துக்கொண்டார் . அடுத்து என்ன என்கிற கேள்வியில் சிக்கிக் கொண்டிருந்த போதுதான் சேகர் அவரிடம் நான் பார்க்க விழையும் செய்தியை சொன்னான், என்றார்

தாமோதரன், “அரி உன்னை வந்து பார்க்க என்னக்கு எந்த தயக்கமுமில்லை , எனக்கான மரியாதையை நீ எப்போதும் மறுத்ததில்லை . பாலன் உன்னிடம் மனசாட்சியின்றி நடந்து கொண்ட அப்போதே, நான் இதில் தலையிட்டு அதை வெட்டி கலந்திருந்தால், இப்பொது நான் இப்படியொரு பரிபவத்தை அடைந்திருக்க மாட்டேன்என்று சொல்லுகிற போது கண்களின் நீர்மை இமையை கடந்து சொட்டியது . நாற்பதுக்கு மேல் வயதும், ஆறடிக்கு உயரமும், பருத்த உடலும், தாடியும், மீசையுமான ஒருவர் நிலைதடுமாறும்போது என்ன செய்வதென்று தெரியவில்லை .இந்தளவு உடையக்கூடிய மனிதரல்ல . எனக்கு சற்று சங்கோஜமாய்ப்போனது. பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதிகள் என்ன, ஏதென திரும்பி பார்க்க. நான் அவரின் கையை மெள்ள தொட்டதும் அவர் நிலைமீண்டார். சற்றுநேரம் குனிந்தபடியிருந்து அனைத்து உணர்வு கொந்தளிப்பை கடந்து நிமிர்ந்து என்னை நேரிட்டுப்பார்த்தாலும் , கலக்கத்தின் மிச்சம் கண்களில் எஞ்சி இருந்தது .எனக்கு அது அசந்தர்ப்பமாகப்பட , மேற்கொண்டு பேச இது தருணமா எனத்தெரியாது யோசித்தபடி இருந்தேன்.

இல்லை, இப்போது ஏதும் பேசாது பிறிதொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்கிற சந்தர்ப்பமில்லை இன்று. மிகவும் நெகிழ்ந்திருக்கிறார் . என்னை சந்திக்க எண்ணி நானிருக்கும் வீதி வழியாக சென்ற பின்னரும் , குற்றவுணர்வினால் என்னை சந்திக்கும் மனமின்றி விலகியிருக்கிறார் . “நான் உங்களின் நிலைப்பாடை குறை சொல்லவில்லை . கமலக்கண்ணனை முன்னிறுத்தி நீங்கள் செய்கிற அரசியல் எனக்கு முன்பே தொடங்கியது. அதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கமலக்கண்ணனை தலைமை பொறுப்பிற்கு கொண்டுவர , எல்லோரையும் விலக்கி நீங்கள் மட்டுமே நின்று செய்ய விழைந்தது எதன் அடிப்படியில்?, என எனக்கு இன்றுவரை விளங்கவில்லை . அது தனி மனிதனால் ஆற்றக்கூடியதா ?. அது ஒரு கூட்டு முயற்சியினால் நிகழ்வது என உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது? . நான் அதற்கு உடன்படமாட்டேன் என என்றாவது சொல்லியிருக்கிறேனா? . உங்களுடன் உள்ள ஒருவரை நீங்கள் அறிந்ததாக நம்பும்  பிம்பம் , அப்படியே பிறிதெவராலும் பார்க்கப்படும் என, நீங்கள் நம்புவது வேடிக்கை . கமலக்கண்ணனிடம் உள்ள  போதாமைகளை  பிறரை வைத்து எப்படி  நிகர் செய்வது என திட்டமில்லாது நீங்கள் அவருக்கு செய்ய நினைக்கும்  நன்மையும் அவருக்கு மட்டுமின்றி உங்களுக்கும் அது  தீங்காகவே முடியும் . உங்களிடமுள்ள அந்த முன் தயாரிப்பின்மைக்காகவே   உங்கள் விழைவை நான் எதிர்க்கிறேன். இதில் என்னை நீங்கள் பிழையெனப் புரிந்துகொண்டதற்கு, நான் எப்படி விளக்கம் அளிக்க முடியும். அப்போதும் ,சரி இப்போதும் சரி ,நான் தலைமைக்கு விழையவில்லை” .

பாலன் என்னை முன்னிறுத்தி பலவித விளையாட்டை ஆடியிருக்கிறார் , ஏன் நாமேக்கூட இணைந்தே அப்படி பலது நிகழ்த்தி இருக்கிறோம் , அதெல்லாம் நான் அனுமதித்துத்தானே .அப்போது உங்களுக்கு தெரியாதா , அதை  நிகழ்த்துவதனூடாக  எனக்கு அது  குழுஅரசியலின் உள்ளே பெரும் செல்வாக்கை பெற்றுத்தரும்மென?  அனைத்து நிர்வாகிகள் என்னை பாலனுக்கு அடுத்ததாக தேர்ந்தெடுத்து தீர்மானம் வாங்கும் குழுவில் நீங்களும் தானே இருந்தீர்கள்அதை அப்போதே வேண்டாமென தடுத்திருக்கலாமே . இரண்டு மூன்று தொகுதிகளில் தீர்மானங்கள் ஒரே திசையை நோக்கி பயணிக்க தொடங்கியதும் மற்றதும் எப்படி இருக்கப்போகிறது என கணிக்க முடியாதவரா நீங்கள் . அதை தொடர்ந்த அரசியல் குளறுபடி நம்மை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிடுக்கிறது”.

இப்பொது அதை நான் சொன்னது ஒரு தொடற்சிக்காக மட்டுமேஎன்றதும், “பாலன் அந்த குழு அமைக்கும்போதே நான் சொன்னேன் இது சரியாக வராது என்று  . எந்தமாதிரியான தீர்மானமாக அது வெளிவரும் ,என அனைவருக்கும் தெரியும் , இதை கமலக்கண்ணனை அழைத்து ஒருவார்த்தை சொல்லிவிட்டு செய்யலாம் என்றதற்கு , பாலன் மறுத்துவிட்டார் , அவனை கேட்கவேண்டிய அவசியமில்லை , தீர்மானம் என்னசொல்லுகிறதோ அதை செய்வோம்என்றார். “நான் செய்த தவறு அன்று அதை கடுமையாக மறுக்காததுதான் . அதற்கு கைமேல் பலன்தான் இன்று காலை நிகழந்தது . இனி எக்காரணம் கொண்டும் நான் பாலனை சந்திக்க விழையவில்லை . இந்த நேரம் அதை என் முடிவாக எடுத்துக்கொள் . உன் எண்ணமென்ன அதை சொல் அதன்படி இனி பயணிப்போம்என்றார் .

இது ஒரு கூட்டு முயற்சி மட்டுமே பலர் என்னிடம் வந்து வருந்தியதை கருத்தில் எடுத்து இதை ஆற்ற நினைக்கிறேன் . இது ஆபத்தானது. முடிவு எதுவாகவும் இருக்கலாம் . சம்மதமென்றால் மேற்கொண்டு பேசலாம் . எனக்கு காமலக்கண்ணனிடம் பேச ஒன்றில்லை, பாலன் நம்மை விலக்கிய தருணமே இயக்கத்துள் நாம் கண்ட கனவுகள் அனைத்துமே முடிவுறுகின்றன. அத்துடன் நமது கணக்குகளும், நிலைப்பாடுகளும்  அர்த்தமற்றதாகி விடுகிறது. அரசியல் வாழ்வு தரைதட்டிப்போய்விட்டது .இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இதற்கு தலைமை என யாருமில்லை” . 

திட்டம் என்ன என்று இன்று இரவு பேசி முடிவெடுப்போம் . வரும்போது ஒல்லிசேகர் கமலக்கண்ணனையும் இங்கு நடந்தது அனைத்தையும் சொல்லி அழைத்துவாருங்கள்என்றேன் . “நான் உங்களை மட்டுமே இதில் நம்புகிறேன் . மற்றேவர்க்கும் நீங்களே பொறுப்பு , இதை ஏற்றால் இன்றிரவே அனைத்தையும் பேசி முடிவெடுக்கலாம் , இரவு எங்கு கூடுவது என சேகரிடம் சொல்லி அனுப்புகிறேன் . நீங்கள் என்னை சந்தித்ததோ , இரவு கூடவிருப்பதோ வெளியில் கசியாது பார்த்துக்கொள்ளுங்கள்என்றேன் .தாமோதரன் அனைத்தையும் ஏற்று இரவு கூடிப்பேசி முடிவெடுப்போம் என்று சொன்னபிறகு அனைவரும் விடுதியிலிருந்து கிளம்பினோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்