ஶ்ரீ:
பதிவு : 149 / 223 தேதி :- 05 ஆகஸ்ட் 2017
* கோபாக்னி *
இயக்க பின்புலம் - 73
அரசியல் களம் - 43
// அன்று பின்காலை 11:30 மணிக்கு மேலிருக்கும் , சேகர் மிக பதட்டமாக என் அலுவலகம் நுழைந்தான் . செய்தி மிக சுருக்கமாக இருந்தது . இன்று மதியம் பாலனுக்கும் தாமோதரனுக்கும் பெரிய முரண் . எங்கே நிகழ்ந்தது என்றதற்கு முதல்வரின் தனிச்செயளர் அறைக்கு வெளியே . என்றான் . //
சேகர் சொன்ன விஷயம் இதுதான் .மாநாட்டின் போது பொருளியல் உதவி செய்த தாமோதரனின் நண்பர் ஒருவருக்கு அரசாங்க ரீதியான சிக்கல் . அமைச்சர் ரங்கசாமியிடம், சொல்லி காரியம் ஆற்றவேண்டும் . முதல்வருக்கும் ரங்கசாமிக்கும் ஏதோ நிழல் யுத்தம் , இங்கும் அங்குமாக சென்றுவரக்கூடிய சிலர் அவரவர் முகாமிலேயே இருந்து கொண்டனர் போக்குவரத்து சில காலத்தில் அறவே நின்று போனது .
இந்த சிக்கலின் உச்சத்தில் தான் தாமோதரன் பாலனின் உதவியை நாடியது . தாமோதரனே அதை செய்யக்கூடியவர்தான் , ஏதோ காரணம் இதில் பாலனின் உதவியை நாடினார். பாலனுக்கும் தாமோதரனுக்கும் என்ன நடந்தது, பாலனின் என்ன சொன்னார் என்கிற தகவல் தெரியவில்லை . ஆனால் தாமோதரன் , "இந்த உதவிக்கு உன்னை நாடிவந்தது என் தப்பு, அதற்காக என்னை நானே கழற்றி அடித்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று சொல்லிவிட்டு வேகமாக முதல்வரின் தனிச் செயலரின் அறையை விட்டு வெளியேறினார் என்றான் சேகர் .
காரியமாகிறதோ இல்லையோ சட்டமன்றத்தையே தினம் சுற்றிவரும் சில வேடிக்கை மனிதர்களை எனக்கு தெரியும் , அவர்களின் தகவல்கள் மிகத்துல்லியமாக இருக்கும். அப்படி ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார் . சேகரிடம் சொல்லிவைத்ததை அவரிடமும் சொல்லியிருந்தேன் . நடந்தவை முதல்வரின் தனிச் செயலரின் அறையில் என்பதால் அவராலும் அதை முழுவதுமாக சொல்ல முடியவில்லை . தாமோதரன் கேட்ட உதவி என்ன என அவருக்கும் தெரியவில்லை . ஆனால் அவரும் பாலனுடன் தாமோதரனுக்கு நிகழ்ந்த மோதல் சம்பவத்தை பகுதியாகத்தான் சொன்னார் .இருவரின் குரலும் உச்சஸ்தாயியை அடைந்த பிறகே, பிறிதெவரையும் போல அவரும் உள்ளே சென்றார் . பாலன் தாமோதரன் கோபத்திற்கு எந்த சமாதானமும் சொல்லாமல், தாமோதரன் தன் அனுமதியின்றி தன்னை கடந்து சட்டமன்றத்திற்கு வந்து போவது தன் அவமானத்திற்கிணையான குறையாக சொன்னபிறகே இந்த சிக்கலே தொடங்கியது . அதன் பின்னரே தாமோதரன் தான் எதற்கு அங்கு வந்தேன் என்றும் ,அதை இப்போதும் பாலன் செய்து கொடுத்து பின் சொல்லட்டும் , தன்னை அங்கு வரவேண்டாமென என்றதற்கு , "நம்பிக்கை" பற்றி பாலன் ஏதோ குதர்க்கமாக பேசிய பின்னரே தாமோதரன் நிலைபிறழ்ந்து அந்த சொல்லை ப்ரோயோகப்படுத்திவிட்டு வெளியேறினார் என்றார் .
தாமோதரனை பற்றி நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் பிழையானதல்ல . அவர் மிக எளிய மனிதர் . எளியவர்களுக்கே இயல்பாக இருக்கும் போதாமையால் இன்றைய நடைமுறைமை அரசியலை தன் ஒருவனாலேயே சமாளிக்க முடியும் என நினைத்தது யானையை தன் வீட்டு தொழுவத்தில் கட்ட விழையும் வெகுளித்தனம் . கமலக்கண்ணன் முதலில் தலைமை பொறுப்பிற்கான ஆளுமையே அல்ல , அதை அவரும் அறிவார் . அவர் விழைவதை என்னுடன் பகிர்ந்துக்கொண்டிருக்கலாம் . ஆனால் இந்த சூழலில் நான் அதற்கு ஆதரவளித்திருக்க முடியாது என்பது வேறுவிஷயம் . ஆனால் ஆட்சிக்குவந்த பிறகு நடைபெற்றுவரும் உட்கட்சி அரசியல் நிலைகளை பற்றி அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை . வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரது பார்வையை என்னால் மாற்றியிருக்கமுடியும் . ஊழ் அவர் என்னை அணுகவேயில்லை . என்னாலும் அதை கடந்து அவரிடம் செல்லமுடியவில்லை.
நாம் விழையும் எதுவும் நமக்கு சரியானதாக இருக்கவேண்டும் என்பது எந்த நியதிக்கு உட்பட்டதல்ல . கமலக்கண்ணனை விதிவசத்தால் தலைமைக்கு கொண்டுவருவது நிகழ்ந்தால் . அது கேட்கும் முதல் களப்பலி தாமோதரனாகவே இருந்தால் அது ஆச்சரியமல்ல. அவருக்கு தெரியவில்லை இன்று நிகழும் மாநில அரசியல் இதுவரை நடவாதது . இன்னும் புதிய சமன்பாடுகள் எழுந்துவரவில்லை அதனாலேயே அது தேக்கமடைந்துள்ளது . அந்த தேக்கத்தினால் முதல்நிலை தலைவர்களே அமைதி இழந்திருக்கிறார்கள். மற்ற சிக்கல் அவர்களின் காதில் ஏறப்போவதில்லை.
நாம் விழையும் எதுவும் நமக்கு சரியானதாக இருக்கவேண்டும் என்பது எந்த நியதிக்கு உட்பட்டதல்ல . கமலக்கண்ணனை விதிவசத்தால் தலைமைக்கு கொண்டுவருவது நிகழ்ந்தால் . அது கேட்கும் முதல் களப்பலி தாமோதரனாகவே இருந்தால் அது ஆச்சரியமல்ல. அவருக்கு தெரியவில்லை இன்று நிகழும் மாநில அரசியல் இதுவரை நடவாதது . இன்னும் புதிய சமன்பாடுகள் எழுந்துவரவில்லை அதனாலேயே அது தேக்கமடைந்துள்ளது . அந்த தேக்கத்தினால் முதல்நிலை தலைவர்களே அமைதி இழந்திருக்கிறார்கள். மற்ற சிக்கல் அவர்களின் காதில் ஏறப்போவதில்லை.
மூப்பனாரிடம் நான் சொன்ன இன்றைய புதுவை அரசியலின் புதிய நிலைப்பாடுகள் மற்றும் ஏற்படப்போகும் சமன்வாய்ப்பை பற்றிய என் அவதானிப்பே அவரை என்னை திரும்பிநோக்க வைத்தது . ஆனால் அவரிடம் நான் என்ன சொல்லிவிட்டு வந்தேனோ, அது இனி நிகழப்போவதில்லை . அதை யாருடனும் பேசப்போவதில்லை , அந்த பாதையை இனி எவரும் பயன்படுத்த முடியாது என்பதுதான் சோகம் . இபோதும் அங்கு என்ன நிகழ்ந்தது என இவர்களுக்கு புரியவைக்க முடியுமானால் . மூப்பனாரை நான் மறுபடியும் சந்தித்தால் எனக்கான புதிய பாதைகள் திறக்கலாம் .ஆனால் அதன் வாய்ப்புகளின் வாழ்வு மின்னலினும் மெலியவை
இதில் தாமோதரனின் அரசியல் நிலைப்பாட்டில் வேறொரு கூரையும் கவனிக்கிறேன் . கமலக்கண்ணனை மையப்படுத்தி அவரின் அரசுசூழ்தல், நான் விலகிய பின் நிலைமாறுபாடு சிக்கல் எழுந்தபோதே காலாவதியாகிவிட்டது . அதை மீண்டும் வேறு வடிவத்தில் புனையாது அப்படியே வைத்திருக்க அவர் முட்டாளில்லை . அதை ஒரு பேரத்திற்கான வெட்டுக்காயாக கூட அவர் வைத்திருக்கலாம் . பேரம்பேசுகிற இடத்தில் அவர் எப்போதும் இல்லை என்பதை உணரவேயில்லை .இப்பொது எனக்கு முன்பே உள்ளது தெளிவான பாதை இதில் எந்தவித பேரத்திற்கும் இடமில்லை . தற்போதைய சூழலில் பேரமென்பது அனைவரின் கைகளிலிருந்து கழன்று விட்டது . இப்போது அனைவரின் முன்னுள்ள கேள்வி ஒன்றே , நான் நினைத்ததை அவர்கள் ஆற்றுவதா ,விடுவதா என்பதே.
என்னால் சட்டமன்றத்தில் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என அவதானிக்க முடிந்தது . சேகரிடம் , நான் தாமோதரனை மட்டும் தனிமையில் சந்திக்க விரும்புவது உன்னால் எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ சொல் என்றதும் சேகர் உடனே புறப்பட்டு சென்றான். ஆச்சர்யம்தான் முதலில் மாட்டேனென்றவன்,இப்போது ஒரு எதிர் சொல்லின்றி உடனே கிளம்பியது எதையோ யூகித்துவிட்டிருந்தான் என்பதை காட்டியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக