https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 175 * தன்னி(இ)டத்தில் அடங்காமை *

ஶ்ரீ:






பதிவு : 175 /  249    தேதி :- 31 ஆகஸ்ட்  2017


* தன்னி()டத்தில்  அடங்காமை *



தனியாளுமைகள் - 03”
இளைஞர் அமைப்பின் கருதுகோள் -01


கண்ணன் அவரது அரசியலை துவங்கும்போது பெரிய கனவென ஒன்றிருந்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் தன் பாதையில் அதை கண்டடைந்தார் . அதை அடைய அவர் முயற்சித்த போது அதற்கான வழி சூழல் எல்லாம் அமைந்திருந்தது . அதனாலேயே அவரது இலக்கிற்கு வெகு அருகாமை வரை பயணிக்க முடிந்தது . வழியில் அது பிறழ்ந்து போனதால் , அவரது தனியாளுமை  அதன் மெல்லிய விளிம்பை கடந்து வெற்று ஆணவம் என்றானது . அதன் பின் அவரது ஆளுமையால் கூடிய திரள் அவர் சென்ற பாதைகளில் அவருக்கு தற்காலிக வெற்றி எனும் தோல்வியை பரிசளித்து பின் ஒவ்வொன்றாக கழன்றுபோனது . பின்னெப்போதும் எவருடனும் இணைய முடியாத நீர்த்துப்போன  இளிவரல் உதிரிகளின் தலைவராக மாறிப்போனார்.




வாழ்வென்பது ஒன்றே. அதை தனி நிகழ்வுகளாக்குவதும் இன்பதுன்பமெனப் பிரிப்பதும் தன்னில் நின்று நோக்கும் அறியாமையும் தானே என்னும் ஆணவமும்தான். இன்பமென்று இன்றிருப்பது நாளை துன்பமென்றாகலாம். துன்பமென்று இன்று சூழ்வது எண்ணுகையில் இனிப்பதாகலாம். நாம் அதை முடிவுசெய்யலாகாதுஎன்கிறது “ . “ முழுமையை தெய்வங்கள் தங்களிடமே வைத்திருக்கின்றன. மனிதர்களுக்கு அளிப்பதேயில்லை என்கிறது ,வெண்முரசின் நீர்க்கோலம்

மனிதன் பூர்ணனல்லன் . ஆகவே அவன் ஆற்றும் சகலமும் முழுமைபெற்றதாக இருக்க வாய்ப்பில்லை . முழுமையென்பது பின் தொடர்ச்சியற்றது . உலகியலில் அதற்கு வாய்பில்லை . அது சரி,தவறென்ற விதைகளிலிருந்து அடுத்தவருக்கான வாழ்கையில் அது ஒரு பதிவையும் அதன் விளைவுகளையும் ஏற்படுத்திச் செல்கின்றன. நான் என் சுபாவத்திலிருந்து  என்னுடைய அவை விதிகளை உருவாக்கி அவற்றால் என் கைகளை கட்டிக்கொள்கிறேன் . பின் அதை ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை . அதில் பயணபடுவது மட்டுமே எனக்கான வேளையென்றாகிவிடும் .

அரசியலில் வளர்ச்சி வீழ்ச்சி என்பதுக்கெல்லாம் எந்த பொருளுமில்லை . எதோ ஒரு காலத்தில் , ஒரு காரணத்தில் இவை மாறி மாறி  நிகழ்ந்துகொண்டே இருக்கப்போகிறது . இவற்றினூடாக தன்னை அறிதல் நிகழ்ந்தால் அவன் விண்ணக தெய்வங்களால் நல்லூழ் கொண்டவன் . அந்த அடிப்படையில் நான் சண்முகத்தை அப்படிதான் பார்த்தேன் . சண்முகம் லட்சியவாதம் உச்சத்தில் இருந்தபோது பிறந்தவர் , அது தோல்வியடைந்தபோது அதை பார்த்தவர் . ஆனால் மக்கள் போக்கில் ஏற்பட்ட மாறுதலிலிருந்தே அந்த தோல்வி எழுந்துவருகிறது என்கிற உண்மையை அறிந்திருப்பாரா என்றெல்லாம் எனக்கு தெரியாது . ஆனால் இக்காலத்து சிந்தனைப்போக்கை சரியாக புரிந்திருந்தார் , அவர் தனது முதல்வரெனும் லட்சிய இலக்கை அடையும்வரை . ஆனால் அது காலத்தில் நிகழ்த்தப்படாத வருத்திலிருந்து தன்னை விடுவிக்க அதை தாண்டிய ஆளுமையாக தன்னை உருவகப்படுத்தி அதில் ஆழ்நது போனார் . அது அவருக்கு மன சமாதானத்தை கொடுத்தாலும் . தான் முதலவராகும் வாய்பபை அடைந்தபோது , அவர் இங்கிருந்தே கிளம்பி வந்தார் . முதல்வர் பதவி அவருக்கு மிக சிறிய சட்டையாக அவர் நினைத்ததே எல்லா முரணுக்கும் காரணம் . அதுவே அவரின் அரசியல் வீழச்சிக்கு விதையென்றானது. அவர் முதல்வராக வந்தபோது லட்சியவாதங்களின் தோல்வி ஏற்படுத்திய நவீன சந்ததனையை. அவர் தனது கருத்தாக கொண்டிருந்ததை இங்கு வரை எடுத்துவந்திருந்தாரா என்பது தான் கேள்வி . ஆனால் நான் இப்போது சொல்லவருவது 1997 நான் சந்தித்த சண்முகம் . ஆனால் 2008 க்கு பிற்பட்ட சண்முகம் வேறொருவர் . அதை பிறிதொரு பதிவில் பாப்போம்

நான் அவரது வீட்டில் மிக சகஜமான நபராக மாறினேன். தினம் கட்சி அலுவலகங்களுக்கு செல்வது  வழமையானது . அங்கு தலைவரின் தனிச்ச்செயலாளர் சூர்யநாராயணனின் நெருக்கமான நட்பு கிடைத்தது . அன்று காலை தலைவர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தபோது இளைஞர் காங்கிரஸ் பாலனுடன் சென்றதாக பத்திரிக்கை நிருபர் கேட்டதற்கு அவருடன் பத்துபேர் கூட செல்லவில்லை என்கிற ரீதியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் . நான் நேரடியான பெரிய பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்த்தது அங்குதான் . தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகஇல்லை . திமுக . கண்ணன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி அரசாங்கம் ஆட்சியமைத்தது . சண்முகம் ஆட்சியமைக்கும் வாய்ப்பை வேண்டுமென்றே தவறவிட்டதாக கட்சிக்குள் பேச்சு எழுந்தது . சிறிது முயற்ச்சித்தித்திருந்தாலும் ஆட்சி அமைந்திருக்கும் என்றும் . சிலர் திமுக முதல்வர் சண்முகம் இருவரும் ஒரே ஜாதயைச்சேர்நதவரகள். இது ஒரு ஜாதிக்கூட்டு என எப்படியெல்லாமோ பேச்சு இருந்தது

ஆனால் எல்லோரும் நினைப்பதைப்போல அன்றைய சூழலில் , மூப்பனாருடன் பேசமுடியுமா என்பதெல்லாம்  வெறும் யூகம் மட்டுமே . இதில் பல நிலை வேறுபாடுகள் உள்ளது . உண்மையில் அதை எத்தனை பேர் அந்த கோணங்களில் அரசுசூழ்தலை பார்த்திருப்பார்கள் என்பதை அறிய இயலாது . கண்ணன் சபாநாயகராக இருந்தபோதுதான் சந்திரசேகர் மூப்பனாருக்கு பழக்கமானது. அது  ஒரு சிக்கலிலிருந்து விடுபட முயற்சித்தபோது . அவருக்கு சொந்தமான இடம் அதில் சிக்கல் எழுந்தபோது கண்ணனிடம் உதவிக்கு சென்றார் அவர் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. மூப்பனார் மூலமாக சென்றும் அதற்கு மதிப்பில்லை .இது கண்ணன் மீது அவருக்கு பெரும் கசப்பை உண்டுபண்ணியது . பெரியவர் அரசியல் ஒருவிதம் .ஆனால் சின்னவருக்கு எப்போதும் வெட்டு ஒன்று ரகம் . இந்த சிக்கல் கண்ணனின் ஊழ் இதை அவரிடம் கொண்டுசென்றது . இதை நான் ரங்கசாமி மூப்பனாரை சந்தித்த போது தெளிவாக உணர்ந்தேன் . ரங்கசாமி மூப்பனார் இதை ஒரு அலராக உருவகப்படுத்தி அது எல்லா நிலைகளிலும் கொண்டு செல்லப்பட்டு , பின்னாளில் அதுவே மூப்பனாரின் நிலைப்பாடு என்றானது. அதன் பின்னர் அவர்களது உறவு சொல்லிக்கொள்ளும்படியாக பின் ஒருபோதும் இருந்தத்தில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்