https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 176 * மாற்றமடையா உட்கூறுகள் *

ஶ்ரீ:





பதிவு : 176 / 250     தேதி :- 01 செப்டம்பர்   2017

* மாற்றமடையா உட்கூறுகள்  *


தனியாளுமைகள் - 04”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-02

 மூப்பனார் மூலமாக சென்றும் அதற்கு மதிப்பில்லை .இது கண்ணன் மீது அவருக்கு பெரும் கசப்பை உண்டுபண்ணியது . பெரியவர் அரசியல் ஒருவிதம் .ஆனால் சின்னவருக்கு எப்போதும் வெட்டு ஒன்று ரகம் . இந்த சிக்கல் கண்ணனின் ஊழ் இதை அவரிடம் கொண்டுசென்றது . இதை நான் ரங்கசாமி மூப்பனாரை சந்தித்த போது தெளிவாக உணர்ந்தேன் . ரங்கசாமி மூப்பனார் இதை ஒரு அலராக உருவகப்படுத்தி அது எல்லா நிலைகளிலும் கொண்டு செல்லப்பட்டு , பின்னாளில் அதுவே மூப்பனாரின் நிலைப்பாடு என்றானது. அதன் பின்னர் அவர்களது உறவு சொல்லிக்கொள்ளும்படியாக பின் ஒருபோதும் இருந்தத்தில்லை.



தில்லியில் மூப்பனார் நரசிம்ம ராவுடன் பேசி அதிமுக கூட்டணி வேண்டாம் என்கிற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிற போதே ,புதுவையில் மூப்பனார் தலைமையில் தனி கட்சி துவக்கிவிட்டிருந்தார் கண்ணன் . மூப்பனாருக்கு கண்ணன் எந்தளவிற்கும் கட்டுப்படாதவர் என்பதை ,அவரது கடந்தகால அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுதான் புரிந்து கொள்ள வேண்டும் .அதை சற்று பின்னோக்கி பார்த்தால் கண்ணன் மூப்பனார் இருவருக்குமான ஆழமான இடைவெளி தெரியவரும் . கண்ணன் சபாநாயகராக அமர்ந்த நாள் முதல் சட்டசபையை காழப்புடனே அணுகினார் . எந்தெந்த வழிகளில் அரசை குலைக்க முடியுமோ அத்தனையும் செய்ய முயன்று கொண்டிருந்தார் . வைத்தியலிங்கம் அதை மூப்பனாரிடம் கொண்டு சென்ற பிறகு அவர் தலையிட்டும் அவரது எதிர்மறை அனுகையில் எந்த மாற்றமும் நிகழவில்லை .

சட்டசபையில் ஒரு எதிர் கட்சியைப்போல தான் அதை அவர் கையாண்டார் . நான்கு வருடம் அனைத்துவகையில் வைத்திலிங்கத்திற்கு அது சவால் . எல்லாவித அரசியல் சிக்கலுக்கும் . கட்சி அரசியலில் நிலைப்பாடுகளின் வழியாக மட்டுமே அதற்கு தீர்வுகள் உண்டு .வைத்தியலிங்கம் அரசியல் நிலைப்பாடுகளின் மூலமாக அதை கையாளும் வழியை அறியாததால் , மூப்பனார் தொடர்பும் அரசாங்க அரசியல் பலம் இருந்தும்  அதை தகர்க்க இயலாது போனது . அதற்கான பார்வையே அவருக்கு இல்லாதது சிக்கலை பலமடங்கு பெரிதாகியது . பாலன் தனக்கு எந்த வகையில் உதவிட முடியும் என வைத்தியலிங்கத்திற்கு தெரியாததை புரிந்து கொள்ளலாம் .ஆனால்  பாலனுக்கும் அது புரிபடாததால் அவர்  ஆற்றிடக்கூடியது ஒன்றில்லாது போனது . ஒரு புள்ளியில் இது தாங்காது என்கிற நிலையில், வைத்தியலிங்கம்  பிரதமர் நரசிம்மராவை அணுக வேண்டிய நிர்பந்தம் . பிரதமரும் தனது தனி செயலாளர் கண்டேகர் மூலமாக , கண்ணனுக்கு எச்சரிக்கை விடப்பட்டது . “இம்பீச்மெண்ட்பாயும் என்கிற எச்சரிக்கைக்கு பிறகு கண்ணன் சட்டமன்றத்திற்கு வருவதை முற்றாக  நிறுத்திக்கொண்டார் . அவருக்கு பதிலாக துணை சபாநாயகர்  av.சுப்பிரமணியம் அந்த சட்டமன்ற ஆயுள்காலம் வரை அதை நடத்தி முடிந்தார் . சபாநாயகருக்கு சட்டமன்ற முடிவு நாளில் அனைத்து கட்சி வழியனுப்புதல் என்கிற மரியாதையையும் முறைமைகளையும் இழந்தார்.அந்த கட்டத்தில் காங்கிரஸில் அவரது அனைத்து அரசியல் வழிகளும் அடைப்பட்டு போயின . அந்த நிலையில் கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை . ஆனால் அதற்கேற்ப அவரும் முன்முடிவுசெய்து அதற்கான வேலைகளை துவங்கிவிட்டிருந்தார்

அரசியல் நிலைப்பாடுகளை சூழலை கணித்து எடுப்பது சண்முகத்தின் பாணி . அது காலம் கனிந்து வரும்போது இயங்குவது . இதில் பல நடைமுறை தடைகள் எதிர்ப்படுவதை தாண்டிய பிறகே, வெற்றியை தொடமுடியும். வென்றாலும் அது முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை . அரசியலில் முழு வெற்றியடையாத எந்த தலைமையும் , தனது விழுமியத்தை அடையமுடியாது . அது கடைசீவரை விட்டுக்கொடுப்பதில் தொடங்கி அதிலேயே முடிந்துவிடுகிறது . கண்ணனின் வழிமுறை, அதற்கான சூழலையே உருவாக்குவது . அது எதிர்காற்றில் துடுப்பிடுவது .  ஆற்றலை  வற்றடிக்கும் செயல் .  கிடைத்த வெற்றி சொர்பபமானதாக இருப்பினும் ,முற்றாக கிடைக்கும்.

இதன் நடுவே அவர் நடத்திய பேரணியில் சபாநாயகர் என்கிற தகுதியை தாண்டி சென்று கலந்துகொண்டார் . அதற்கு பலமாதங்கள் கழித்தே 1996 தேர்தல் வேலைகள் துவங்கின . அவரும் காங்கிரஸ் கட்சியில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சீட்டு கேட்டு அணுகி பின் அது நடைபெறாது என்கிற நிலையில் அவர் வெளியேறுவதற்கான நாளை குறித்துவிட்டார்

வக்கீல் முருகேசன் மூப்பனாரை சந்தித்தபோது அவர் சொன்னது தனது அபிப்பிராயமும் கண்ணன் மீதிருந்த கசப்புமே காரணம் .அதன் பொருட்டே புதுவைக்கு பலமுறை வந்த மூப்பனார் கண்ணனுக்காக தேர்தல் பிரச்சாரம் கடைசீ வரை செய்யவே இல்லை . பின்னர் கண்ணன் திமுக கூட்டணி அரசு அமைத்த பிறகு, அரசியல் காரணங்களுக்காக அவரை அங்கீகரித்தார் . ஆனாலும் அவர் கண்ணனுடனனான தனது உறவை தாமரை இலை தண்ணீர்ப்போலே தான் வைத்திருந்தார் . கண்ணன் தனக்கு கட்டுப்பட்டவரல்ல எனபதை கடைசியில் நிரூபித்தார் . ஆகவே எதன் பொருட்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது . பிறிதெவரையும் விட சண்முகம் கண்ணனை மிக அணுக்கமாக தெரிந்திருந்தார் . ஒருவருக்கான புரிதலை அடைந்த பிறகு , எக்காலமும் அவரை அதுவாகவே வைத்திடுப்பது தலைவரின் பாணி . அது ஏற்புடையதில்லை எனினும் . ஒருவருடைய குணநலன் அடிப்படையானது , அது பெரிய மாற்றங்களை அடைவதில்லை என்பது ஒருவழியில் சரி என்றே உணர்ந்திருக்கிறேன . தலைகீழ் மாற்றமென்பது வெகு அரிதாகவே நிகழுகிறது ஆனால் அவை  களத்திற்கு வெளியே என்பதால் அது கவனிக்கப்படுவதில்லை  . நான் இவற்றை மாற்றுவழியில் முயற்சித்தாலும் . அவை நல்ல பலனை தந்ததில்லை . சண்முகத்தின் மாற்றமடையாத மனமே அரசியலுக்கு உகந்தது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்