https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 185 * விளிம்பில் *

ஶ்ரீ:




பதிவு : 185 / 260: தேதி :- 11 செப்டம்பர்   2017

* விளிம்பில் *


தனியாளுமைகள் - 12 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04



நான் பதட்டமானேன் . என்னுடைய அரசியலென்பது அதிகாரத்தை நம்பாமல் கடசிக்கோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் ஊர்ப்பொது அமைப்பிற்கோ  உள்ளே செயல்படும் கருத்தியலின் ஆற்றலை நம்பிச் செயல்படுவதே . நான் அவர்களிடையே அதை எப்போதும் கொந்தளிப்பாக வருத்தமாக அவர்கள் கொண்டிருப்பதையும் அதை வெளியிருந்து வரும் அதிகாரமிக்க ஒருவரால் செய்யக்கூடியது என்கிற எண்ணத்தைத்தாண்டி அதன் உட்கூறுகளில் அவற்றை செய்யும் ஆற்றல் உறைந்திப்பதை அவர்கள் அறிவதில்லை . தங்களின் அனுமதியோடேயே அவர்கள் அங்கு அமரந்து தங்களை பார்க்கிறார்கள் என நம்புகிறார்கள் . உயிரற்ற அதற்கு அச்சமே கண்ளென்பதை அறிவதில்லை.



ஓரு அமைப்பின்  வெளியே எழமுடியாத குரலாக ஒலிக்கும்போதே அந்த அமைப்பின்  ஒட்டுமொத்தமான எண்ணமே அவற்றை ஒருங்கிணைக்கிறது. ஏதேனும் ஒரு பிரிவின் ஒரு தரப்பின் எண்ணம் மட்டுமல்ல அது என்கிற போது, தற்செயலாக உள்ளுணர்வு  தன்னைச் சூழ்ந்திருக்கும் உண்மையின் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனக்கு நிகழ்ந்தது அது போன்ற ஒன்று என நினைக்கிறேன். நீண்ட காலமாக அவர்கள் வேண்டியதை பிறரிடம் கோரிக்கையாக மன்றாட்டாக வைக்க முயன்றதான அவர்களின் தேவையை, மற்றரொரு கவன ஈர்பின் வழியாக நிகழ்திக்கொள்ள முடியும் என்பதை, அவர்களுடன் உரையாடியபிறகே நான் அதன் செயல்வடிவத்தை அடைந்தேன் . அவை என்னால் அவர்களிடம் இருந்தே அது பெறப்பட்டது .

கொடியேற்ற விழவின் மத்தியில் கலவரம் நிகழ்ததும் திட்டம் பற்றிய தகவல் மிகவும் தாமதமாக கசிந்தது.அந்த தாக்குதல் திட்டமும் ,அதன் உட்கூறும் பின்னனியும் நான் ஏற்கனவே அறிந்ததே. ஆனால் அதன் ஒழுங்கு என்னை அஞ்சவைத்தது . பலமுறை அனுபவத்திலிருந்து அவர்கள் அதை பெற்றிருக்க வேண்டும் .இத்தனை விரைவில் அதை சந்திக்கவேண்டி வரும்  என நான் எண்ணியிருக்கவில்லை. அதை எதிர்கொள்ளவோ தடுத்து நிறுத்தவோ எங்களுக்கு சக்தியில்லை

நான் உடல் ழுவதுமாக அந்த உஷ்ணத்தை உணர்ந்தேன் . பிரத்யேகமாக காது மடல்களில் . என்ன செய்வது அடுத்து என்கிற எண்ணம் எழுந்த உடன் ,உடலில் பதட்டமும் சிறு நடுக்கமுமிருப்பதை உணரமுடிந்தது. இதுவரையில் அறிந்திராத சோர்வு எல்லையில்லாத வேகத்துடன் என்னுள்ளே நுழைந்து கொண்டிருந்தது . அது சிந்தனை வேகத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்கிற அச்சமெழுந்ததும் .

முதலில் ஸ்வாசத்தை கட்டுப்படுத்தும் என்னுடை பாணியை தொடங்கி , வாய்வழியாக சிறிது நேரம் மூச்சிவிட்ட போது உள்ளே ஏற்பட்ட உஷ்ணம் குறைவது தெரிந்தது . பழைய நிலைக்கு மீண்டதும், மறுபடியும் என்ன செய்யவேண்டும் என்கிற  திட்டம் தானாக எழுந்தது . எனது நம்பிக்கையான சிலரிடம்  , தாக்குதல் பற்றி ஏதும் சொல்லாது நிகழ்ச்சி, நிரலில் சில மாற்றம் இருப்பதாக விளக்கி அதை உடனே செயல் படுத்த சொல்லி  , நான் அனைத்தையும் ஒருங்கும் பணியில் இருந்ததால் எப்போதும் அவர் அடுத்து செல்லவேண்டிய இடத்தில் நான் அவருக்கு முன்னதாக  இருந்து கொண்டிருந்தேன் . நிலமையை சரிசெய்ய அவரை உடன் சந்திக்க வேண்டும். தலைவரை தேடி கிளம்பினேன்.

வழியில்ஒ ரு தெருவினுடைய சந்திப்பில் அவரை பார்த்துவிட்டேன். தலைவரை சுற்றி கூட்டத்தன் மத்தியல் பிழிபடும் சூழலில் இருந்த அவரிடம் இதுபற்றி ஏதும் சொல்லவியலாது . மெல்ல அவரை அருகணந்து , நான் நிகழ்வில் இல்லாத மற்றொரு இடத்திற்கு ஒரு சந்திப்பாக நிகழ்வினை மாற்றியருப்பதை சொல்லி அவரை அங்கு அனுப்பி  வைத்தேன் .அவரும் அது கொடியேற்றத்துடன் இணைந்தது என நினைத்துக்கொண்டார் . அதனால் திட்டமிடப்பட்ட உணவிற்கான நேரம் தாண்டி அரைமணி தாமதம் ஏற்படும் . நான் விழைந்ததும் அதுவே

அவர் அங்கு சென்று திரும்ப மதியம் 2:30 மணிக்கு மேலாகிவிடும். முன்பு மதிய உணவிற்காக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த இடத்தை மாற்றி அருகில் உள்ள கல்யாணமண்டபத்தில் ஏற்பாடு செய்ய சொன்னேன் . தலைவர் எந்த திட்டத்திலும் அர்த்தமற்ற மாறுதலையும், நேரக்கடத்தலையும் எக்காலமும் ஏற்கமாட்டார் . அது அவரது சுபாவம் . நேரமாகவிட்டதால் இடத்தை மாற்றியதாக சொல்லி சமாளித்து விடலாம். அவர்கள் கலவரம் நடத்த திட்டமிட்டிருந்த  பகுதியும் நிரலில் உள்ள இடம்தான் . இரு பிறிவினரும் சமபலம்கொண்ட இடம் அது . கூடிய கூட்டத்தில் யாருக்கு முன்னுறிமை , அல்லது தலைவருக்கு யார் முதலில் மாலையிடுவது என்கிற அற்ப காரணமே போதும் திரிக்கு தீயிட.

நிரலின்படி தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்விற்கு அடுத்த இடம் அதுதான். அதை  தாண்டித்தித்தான் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்துள்ள இடத்திறகு செல்லும்படி இருந்தது .  அந்த கலவரம் நிழ்ந்தால் , சரிசெய்து முடிப்பது அவ்வளவு எளிதானதல்லை, ஒரு மணிநேர தாமதமே மாலை மற்றும் இரவு நிகழ்வுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் . மேலதிகமாக அங்கு ஒருங்கிணைப்பு செய்யும் நானே முதல் குற்றவாளி என அறிவித்து என்னை கண்டிக்கும் செயலும் நடந்தேறிவிடும் . அது நான் உருவாக்க நினைக்கும் அமைப்பை உளவியல் ரீதியாக சோர்ந்து போகச் செய்துவிடுவதுடன் , பின் எப்போதுமாக நான் அவர்களை தொடவே முடியாத போகலாம்.

அரசியலில் எனக்கென ஒரு நியாயமுண்டு , ஒரு நிகழ்வு அதிர்ச்சியையோ , ஆச்சர்யத்தையோ கொடுக்குமானால் நீ அந்த துறைக்கு லாயக்கில்லை என்பது. எல்லாவற்றையும் எதிர்நோக்கியிருக்கவேண்டும். எனக்கான பாதையை அதன் வசீகரிக்கும் சவால்களை முடிவுசெய்கின்றன. அவை என்னை எப்போதுமே விளிம்பில் கொண்டு நிறுத்துபவையாக இருந்திருக்கின்றன. துளிர்ப்பவையும் அழிபவையும் விளிம்பில் வாழ்பவை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்