https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 14 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 188 *நீளும் நட்புக்கரம் *

ஶ்ரீ:




பதிவு : 188 /263/ தேதி :- 14 செப்டம்பர்   2017

*நீளும் நட்புக்கரம் *


தனியாளுமைகள் - 15 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04 

எனக்கு எதிராக திரண்ட குறுங்குழு  உள்ளூர் சர்வ கட்சி அரசியலை எப்போதும் தங்களை சார்ந்து சார்ந்திருக்கும் முறையில்  யார் பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் தோழமைகொள்வார்கள் . அவர்களின் கட்சி அடையாளமென்பது  பிற கட்சிகளுடன் சமரசம் பேச உபயோகிக்கும் ஒரு கடவுச்சீட்டு மட்டுமே . யாருக்கும் விசுவாசமாக அவர்கள் இருப்பதில்லை . எதையும் ஒரு மேட்டிமை எள்ளலுடன் அணுகுவதும் , எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை சொல்லுவதும் தங்களின் அடையாளமாக்கொண்டு எதற்குமான தடைக்கல்லாக எப்போதும் பிறரின்  பாதை கிடப்பார்கள்.






சாப்பிட்டுக் கைகழுவ நின்ற இடத்தில் திடீரென ஒரு துணுக்குறளை உணர்ந்தேன் , கவனியாது சாம்பல் மூடிய கனலை மிதித்த  அதை உதறும் எழும் பதட்டம்போல அது என்னுள் எழுந்தது . அதை அவர்களும் அறிந்திருந்தார்கள் என்பதை   அவர்களின் கண்களில் தெரிந்த மாறுபாட்டை பாரத்த போது புரிந்து கொண்டேன் , அதை சுற்றியிருந்தவர்களடம் சிரிக்காமல் பரிமாறிக்கொண்ட உணர்வுகளும் , எனக்குள் அடக்கமுடியாதபடி உளம் பற்றி எரிந்தது . இவர்கள் இழித்தொழிலை திறம்பட செய்யும் சாமர்த்தியம் உள்ளவர்கள். எக்கணத்திலும் எவருக்கும் உயிராபத்தை விளைவுக்கத் தயங்காத வீணர்கள் .இப்போது ஒன்றும் செய்வதற்கு இயலாமல் அடங்கிப்போகும் நிலை என்னைக்  குன்றிப்போகவைத்தது

மனதை இதில் முயங்க விட்டால் பின்வரும் விழவு நிரல்களை தொகுக்க முடியாது . இப்போது நடந்தேற வேண்டியது திட்டமிடப்பட்ட அரியூர் கடைசீ கூட்டம். அது  வெற்றியாக முடியுமானால் ,தலைவரிடம் எனதரப்பை சொல்ல அது  ஒரு தளமமைத்துக்கொடுக்கும் . எனக்கான வாய்ப்பு இன்னும் அடைபடவில்லை . இப்போது ஒன்றும் நினையாது இதை கடப்பதே எனக்கான ஒரே வழி . காலை முதல் நடந்து வந்தது பெரும் உடல்சோர்வை கொடுத்தது, அத்துடன் இந்த மனசோர்வு  சேர்ந்துகொண்டால்  அது என்னை முடக்கிவிடும் . நான் மறுபடியும் என்னை தொகுத்துக்கொண்டேன் .

மத்திய உணவிற்கு பிறகு தலைவர் ஊர் பெருந்தலைகளில் ஒருவரின் வீட்டில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார் . அனைவருக்கும் சிறிது நேர ஓய்விற்கு பிறகு ,மாலை 4:30 மணிக்கு மேல் நிகழ்வு  துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . நான் மாலை நிகழ்வு நடக்கவிருக்கும் இடங்களுக்கு   ஏற்பாடுகளை பார்க்க புறப்பட்டேன் . வண்டியில் பயணிக்கும்போது பழைய உற்சாகம் தொற்றிக்கொண்டது . இனி நடக்க விருக்கும் இடங்கள் எனக்கு ஆதரவான நிலைகள் . இது முழுக்க முழுக்க நான் உழைத்து கூட்டிய அமைப்பு .

இதுவரை காலையிலிருந்த இருந்து நான் அடைந்த நிலையழிதலை பொறுத்துக்கொண்டிருந்தது, மாலை நிகழ்வுகள் தடையற நடந்தேறவேண்டும் என்பதினாலேயே .இன்று என்னால் இணைக்கப்பட்டுள்ள அந்த தொகுதியின் மொத்த பலமும், அரியூர் பங்கூர்  பகுதியில் சமீபத்தில் நான் ஏற்படுத்தி உள்ள நிர்வாக அமைப்பினாலும், வெற்றிகரமான தொடர்புறுத்தலினாலும்  உருவாகிவந்தவை  . அங்கு சென்று சேர்ந்தபோது விழவின் முன்னேற்பாடுகள் நான் எதிர்பார்த்திருந்ததை  விட மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்தது மொத்தம் ஆறு இடங்கள் கொடியேற்றத்திற்கு, கடைசியாக அரியூர் சக்கர ஆலைக்கு அருகில் போடப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் கட்சியின் அனைத்து தலைவர்களும் பேசி விழவு நிறைவு பெரும்

நான் திரும்பவும் காலை நிகழ்வுகள் முடிவடைந்த இடத்திற்கு விரைந்தேன் நேரம் நெருங்கிவிட்டிருந்தது . நான் அங்கு சென்று சேர்வதற்குள்ளாக தலைவர் தயாராக இருந்தார். கிளம்பலாம் என்றவுடன் நான் சரி என்றேன், உற்சாகமாக கிளம்பினார் . நான் அவருக்கு முன்பாக அடுத்த நிரலுக்கு விரைந்தேன் .மாலை நிகழ்வுகள் மிக செறிவாக துவங்கின இது முழுவதுமாக எனக்கு கட்டுப்பட்ட பகுதி என்பதால் விசேஷமாக எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின . மாலை துவங்கி இரவு கூட்டம் தொடங்க 7:30 மணிக்கு மேலாகியும் கூட்டம் நடக்க இருந்த இடத்தை ஊர்வலம் அடைய முடியவில்லை . நான் எதிர்பார்க்காத இடத்திலெல்லாம் கூட்டம் நின்றுததால் தலைவர்  அதிஉற்சாகமாக காரிலிருந்து இறங்கி ஊர்வலமாக போகத்துவங்கிவிட்டனர்
கட்டுப்படுத்த முடியாத உற்சாகம் கரைபுரண்டோடியது . காலை நிகழ்வுகளில் முரண்பட்டவர்கள் எனோ மாலை நிகழ்வுகளுக்கு வரவில்லை . இங்கு கூடும் கூட்டம் அவர்களை கவலைகொள்ளச்செய்வது . ஒரு மாற்றத்திற்கான விதை  இங்கு விதைக்கப்படுவதை  ஒரு சாட்சியாக நின்று பார்க்க அவர்கள் விரும்பாமலிருக்கலாம் . மேலும் இந்த புறக்கணிப்பின் வழியாக நாளை மறுநாள் நடைபெற இருக்கும் பஞ்சாயத்திற்கு அழுத்தம் கொடுக்க இப்படி நடந்து கொண்டிருக்கலாம் . இரவு பொதுக்கூட்டத்திற்கு பிறகு தலைவர் எனது முயற்சி பெரிய வெற்றியை அடைந்திருப்பதை புரிந்துகொண்டார் . இரவு 12:30 மணிக்கு அவர் புறப்படும் முன்பாக காரில் ஏறும்போது  எனக்கு வாழ்த்து சொல்லி , பின் கிளப்பி சென்றார் அன்று காலைமுதல் இரவுவரை முழு தொகுதியையும் நடந்தே கடந்ததனால் இரண்டு தொடைகளும் இழைந்து என்னால் ஒரு அடிக்கூட எடுத்துவைக்கமுடியாத நிலையில் வீடு திரும்பினேன் .

காரில் வீடு திரும்புகையில் ,காலை முதல் நடந்ததை ஒன்றன்பின் ஒன்றாக முன் பின் என மாற்றி அடுக்குகையில் சில வடிவங்கள் புலப்பட துவங்கியது. அவர்கள் நெடுநாள் கட்சிக்காரர்கள் தெடர்ந்து தங்களின் இடத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் மக்கள் தொடர்புறுத்தலை தொல்லையாக நினைப்பவர்கள். அவரகளின்அரசியல்சரிஎன்கிற பலிபீடம் ஒருங்கப்பட்டதும் அங்கு எதையும் இழுத்து வந்து வெட்டக்கொடுப்பார்கள் . எங்கு யார் வரவேண்டுமென்பதை தங்கள் கருத்தறிந்த பிறகே தெரிவு செய்யப்படவேண்டும் என்கிற நிர்பந்தத்தை, தங்களின் எதிர்மறை வழிமுறைகளினால் எவரையும் பணிய செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்கள் . எப்போதும் நட்புடன் சிரிப்பதாக நம்பச்செய்து நட்புக்கு அடையாளமாக உணர்ச்சியற்ற இரும்பு கரங்களை நீட்டுபவர்கள் . நீட்டப்படும் கரத்தை நோக்கி கொடுக்கவோ மறுக்கவோ இயலாதபடி பிறிதெவரையும் குழப்பத்திலேயே வைத்திருப்பதில் சமர்த்தர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக