https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 200 * குடிமைச்சமூகத்தின் வல்லமை *


ஶ்ரீ:





பதிவு : 200 / 278 / தேதி :- 29 செப்டம்பர்   2017


* குடிமைச்சமூகத்தின் வல்லமை  *



தனியாளுமைகள் - 26 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-07


வல்சராஜ் அப்படி பட்ட ஒரு ஆளுமையாக எனக்கு தோன்றியது .எதிலும் அவசரமின்றி நிகழ்வுகள் தங்களுக்கு முற்றிலுமாக எதிரென திரும்பும் அந்த கணம் வரை காத்திருப்பர் . அதை மன வொருக்கத்தினாலோ ,பரந்துபட்ட பலருடைய தொடர்பினாலோ அந்த தன்னம்பிக்கையை அடைந்துவிட்டிருப்பவர்கள் . அந்த தருணம் வாய்க்கையில் எவரும் எதிர்பார்க்காத விளைவுகளை செய்யும் இடத்திற்கு சகலத்தையும் கடந்து செல்வார்கள். தங்களுக்கு தேவையானதை மிகத் துல்லியமாக வண்டு தேனெடுப்பதைப்போல , பிறரிடம் தன் தேவைகளை கொய்து எடுத்துக்கொள்வார்கள் . அவர்களின் வளர்ச்சிக்கு எவையும் தடையாக இருப்பதில்லை. ஏன்? , சில நேரங்களில் இயற்கை நெறிகளும் , ...........................…..சில காலத்திற்குமட்டுமாகிலும்..................................................





“அண்டோனியோ கிராம்ஷியை வாசித்து இந்த அறிதலுக்கான கோட்பாட்டு அடிப்படைகளை கற்றுக்கொண்டேன். அதிகாரம் என்பது அதைக் கையாளும் சிலரிடம் இல்லை. அதற்கு அடியில் தீர்மானிக்கும் வல்லமையாக உள்ளது குடிமைச்சமூகம். அவர்களின் அகத்தில் உறையும் கருத்தியலே அதிகாரமாக ஆகிறது. அந்தக் கருத்தியல் நோக்கியே எல்லாவகையான அறிவுச்செயல்பாடுகளும் செய்யப்படுகின்றன” என்கிறார் திரு.ஜெயமோகன் அவரது “சாட்சிமொழி” கட்டுரைத் தொகுப்பில். 

அரசியல் களத்தில் ஒரு நிகழ்வினால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது எவரும் சொல்வது அதன் எதார்த்த பின்விளைவுகளை பற்றி தங்களின் அச்சத்தின் வெளிப்பாடுகளை. அது தங்களுக்கு நேரவிருக்கும் சிக்கலை தவிர்க்கும் புத்திகோச்சரமான யுக்தி மட்டுமே . அத்தகையவர்களிடம் தன்னம்பிக்கை இருப்பதில்லை . எந்த சிக்கலுக்கும் அரசியலில் ரீதியில் தீர்வுகள் உண்டு . அவற்ற நெறி, நேரம், காத்திருப்பது ஆகியவை சாதிக்கும் வல்லமை கொண்டவை என் உறுதியாக எண்ணுகிறேன் . ஒரு புள்ளியிலிருந்து மற்றோரு புள்ளிக்கு நகர்வது மனபதிவுகளின் வழிகாட்டலால் மட்டுமே. அப்போது நம்மையும் நம்மை நம்பி சுற்றி உள்ளவர்களையும் நிகர்நிலையில் வைத்திருப்பது போன்றவையே இதில் சவாலானவை. 

திரு.ஜெயமோகன் சொன்னது போல அரசியலில் தீர்மானிக்கும் வல்லமை குடிமைச்சமுதாயத்திடம் உள்ளது, என்பதற்கு சிறந்த உதாரணம்  சமீபத்திய ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் . அது தன்னெழுச்சி . தன் மீட்சி .அது அனைத்து அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்தது . ஆளுமைகளாக தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்த பலரை ஒன்றுமில்லாததாக ஆக்கியது . இது பிறிதொரு முறை நிகழலாகாது என்கிற உறுதி சர்வகட்சிகளின் எண்ணமாக கொடுங்கனவாக இருக்கிறது . அந்த போராட்ட விஷயங்களில் சிந்தனையாளரகளுக்கு பல மாற்று காருத்து இருக்கிறது . சில பொது வெளிக்கு வந்ததவை . பல வெளிபடவேயில்லை. அரசியல் ஆளுமைகள் அந்த இடத்திற்கு குடிமைச்சமூகத்தை வரவிடாது செய்வதே அல்லது அறிந்து கொள்ளும் இடத்தை அடையாமல் தடுப்பதை தங்களின் அரசியலாக பார்கத்துவங்கியதே ,அது அரசியல் வரலாற்றை எதிர்பாராத திசைகளிலெல்லாம் திருப்பியபடி இருக்கிறது.

தில்லியில் உள்ள புதுவை அரசினர் விடுதியில் எங்களுக்கு அறை ஒருங்கி இருந்தது . நிகழ்ந்து கொண்டிருந்த நட்பின் காரணமாக , நான் தனியாக தங்கவேண்டுமென்கிற எண்ணமெழாததால் , நான் அவருடன் தங்கினேன் . மறுநாள் காலை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று ,தலைமைக்கு முறைமை செய்ய வந்திருப்பதை சொன்னதும் ,சிறிது நேர காத்திருப்பிற்குப்பின் நாங்கள் அழைக்கப்பட்டோம் . அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலமையுடன் , எனக்கு இது நீண்ட நாட்களுக்கு பின்னர் நிகழும் சந்திப்பு. ஆகவே , பிட்டா என்னை நினைவுகூர இயலவில்லை.

நான் இதை எதிர்பார்த்திருந்தேன் . என்னை அவருக்கு நினைவு கூர பல இனிய நிகழ்வுகள் இருந்தாலும் . அவற்றை கூறி  அவருக்கு நினைவுத்துவதி என்னை நிருவிக்கொள்ள அது அசந்தர்ப்பமாக தோன்றியதால் அதை தவிர்த்துவிட்டேன் . வல்சராஜுக்கு அங்கு வரவேற்ப்பில்லை என்பதால் நான் என்னை முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பது தேவையற்ற மனக்கசப்பை விளைக்கலாம் . இதுவரையில் வல்சராஜுடனான பல வருட பழக்கம்,  நட்பு ,செறிவான இடம்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது . இங்கு வலசராஜைத் தாண்டி ஒரு தொடர்பை  வளர்த்துக்கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை . மேலும் அங்கு நான் செய்வதற்கு ஒன்றில்லை. 

சில நிமிடங்களில் தனக்கு உரிய மரியாதையில்லை என்பதை புரிந்து கொண்ட வல்சராஜ் அதை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு ,தான் அவரை தலைவர் என்கிற முறையில் சந்திக்க வந்ததாக சொல்லி எழுந்துகொண்டார் . நானும் அவருடன் வெளியேறினேன் . அவர் மனதில் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதை நான் அறியவில்லை . ஆனால் அதன் பாதிப்புகள் அவரிடம் இல்லை என்பதை நான் கவனித்தபடி இருந்தேன் . எங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மாநாட்டு கடவு சீட்டுக்களை பொது செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ள அறியுறுத்தினார்கள் . 

வழமையாக அதை தலைமைதான் கொடுக்க வேண்டும் . நாங்கள் செயலர் அறைக்கு வந்தபோது தலைமையிடம் காணப்பட்ட அதே வரவேற்பின்மையுடன் சிறிது குரோதத்தையும் செய்லர் பாண்டேவிடமும் நான் பார்க்கநேர்ந்தது . என்னை மிகச் சரியாக அடையாளம் கண்டுகொண்டார் பாண்டே. புதுவையில்  நிகழ்ந்த மாநாட்டு ஒருங்கிணைப்பிற்கு நாங்களிருவரும் பொறுப்பென்பதால் , நாங்கள் இணைந்தே அனைத்தையும் செய்திருந்தோம் . அவர் என்னை வல்சராஜுடன் இணைந்து எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது திகைப்பிலிருந்து தெரிந்து கொண்டேன் . ஒரு சிறிய புண்ணகையுடன் எங்கள் நட்பை பேணிக்கொண்டோம் . 

எங்களுக்கு கொடுக்கவேண்டிய கடவு சீட்டுக்கள் முழுவதும் கிருஷ்ணமூர்த்தி கோஷ்டிவாசம் ஒப்படைக்கப்பட்டகாக பாண்டே வல்சராஜிடம் சொன்னவுடன் . நான் தலைமை நியமிக்கப்பட்டபோது அனாமதேயங்களுக்கு எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்றேன் , நாங்கள்  அவற்றை மத்திய தலைமையிடம் முறையிட்டு பெற்றுக்கொள்கிறோம் என எழுந்துகொண்டவுடன் மறுபேச்சில்லாது எங்களுக்கான மாற்று கடவு சீட்டுகள் கொடுக்கப்பட்டன . அந்த இரண்டுநாள் மாநாடு முழுவது இந்தியில் பேசினார்கள் . ஒன்றும் புரியாது இருந்தது . ஒருவழியாக முடித்து அங்கிருந்து புறப்பட்டோம் . மேலும் ஒருநாள் அங்கு தங்கி . நிர்வாகிகள் நியமனம்பற்றி பேசி பின் புதுவைக்கு புறப்பட்டோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்