https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 18 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 192 * ஆடும் நுட்பம் *

ஶ்ரீ:




பதிவு : 192 / 267 / தேதி :- 18 செப்டம்பர்   2017

* ஆடும் நுட்பம் *



தனியாளுமைகள் - 18 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04



என்னால்  தலைவரின் உள்ளம் தெளிவாக பார்க்க முடிந்தது. நான் தலைவருடன் எனது காரில் அலுவலகம் வருவதை பார்க்கும் எவருக்கும் ஒரு செய்தி சொல்லாமல் சொல்லப்படுகிறது . அது யார் யாரிடம் எப்படி என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிடும் . நான் அன்று மாலை உற்சாகமாக தலைவரை அழைக்க அவர் வீட்டிற்கு சென்றேன் . நான் அங்கு சென்று சேரும்போது நிலைமை இன்னும் வேகமாக மாற்றமடைந்திருந்தது . அலுவலகத்தில் இருக்கவேண்டிய சூரியநாராயணன் , நான் தலைவரின் அறைக்குள் நுழையும்போது வெளியேவந்தார் மரியாதை நிமித்தமாக தலையசைப்போடு கடந்து செல்லும் வழக்கமுள்ளவர் இயல்பாக கைநிட்டினார் நான் புரியாது கைகொடுத்ததும் ஒன்றும் பேசாது என் உள்ளங்கையில் தனது சுட்டுவிரலால் மெல்லியதாக சீண்டியபின்  என்னைக்கடந்தார் . நான் அவரை திருப்பி பார்காது தலைவரை பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்.




“ஓர் அரசு நம் சமூக வாழ்க்கையை, ஏன் பொருளியலையே கூட பெரிதாகப் பாதிப்பதில்லை என்றே இன்று நினைக்கிறேன். ஆட்சிமாற்றம் வழியாக எந்த மாற்றமும் நிகழாது. அதை உணர சில ஏமாற்றங்கள் நிகழவேண்டியிருக்கிறது” என்கிறார் திரு.ஜெயமோகன் தன் கட்டுரையில் . இதுதான் உண்மையான அரசியலுடன் சமூகத்திற்குள்ள  கசப்பான நடைமுறை யதார்த்தம் .புதுவையை போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் ஒட்டு மொத்த கட்சிகளை சேர்ந்த ஓரு ஆயிரம் பேர் ஏதோ ஒரு வகையில் அரசியலோடு பிணைக்பட்டிருப்பவர்கள். நான்கு செயல்பாடுகளை உள்ள ஒரு  கட்சிக்கு இருநூற்று ஐம்பது நபர்கள் என்றால் அவர்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் இருப்பது நபர் அதற்கு போட்டியாக இருப்பது நபர் .மொத்த அரசியலும் இவர்களை சுற்றி செயப்படுபவையாக இருக்கிறது. இதைத்தானடி சமூகத்திற்க எந்த சம்பந்தமுமின்றித்தான் இருக்கிறது  அரசியல் இயங்குமுறை

அரசு கொண்டாட்டங்களில்தான் சமூகத்திடம் நெருங்கி  வருகிறது. அதன் பிண்ணனியில் ஊர்முக்கிஸ்தர்கள் அதை உருவாக்கி எடுப்பதன் வழியாக தங்களின் அரசியலை பேணிக்கொள்கிறார்கள். மீதமுள்ள நபர்கள் அரசியலில் தங்களின் நிலைகளை தக்கவைக்க எதிர்மறை அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும் . அது அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டி நிற்பது அல்லது எதிர்ப்பது என அல்லது அவர்களை உருவாக்கி எடுக்கும்  தொகுதிகளை தங்களின் வசம் வைத்திருப்பார்கள் . அதை தக்க வைக்க எந்த எல்லைக்கும் போகத் துணிந்தவர்கள் . அவர்களுக்கு தலைமையுடன் மோதுவது ஒரு விஷயமே இல்லை .கம்யூனிஸ்ட் கட்சி தவிர மற்ற எந்த கட்சிக்கும் தாவிவிட தயங்காதவர்கள் . அதே போல கூச்சமில்லாது திரும்பி வரவும் யோசிக்கமாட்டார்கள். தலைவர்களும் அந்தக்கால சூழலை அவதானித்து இவர்களை அரவணைக்க தயங்குவதில்லை . ஒரு வருட பத்திரிக்கை செய்திகளை தொகுத்தல் இப்படிஓடி திருப்புபவர்களைஅறிந்துகொள்ளலாம். ஒரு ஐந்து வருட பத்திரிகை செய்திகளை கூர்ந்தால் குறிப்பட்ட சில தனிநபர்கள் அவ்வப்போது இங்குமங்குமாக தாவிக்கொண்டேயிருப்பது தெரியும். இவர்கள் தான் கட்சி வளர்வதாக தேய்வதாக பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பாரகள் 

சூர்யநாராயணனின் அந்த மெல்லிய சீண்டல் உள்ளங்கையில் குறுகுறுப்பாக இருந்தது . தலைவர்  என்னை பார்த்ததும்  நாற்காலியை காட்டி அமரச்சொல்ல  நான் சூர்யநாராயணனை சந்திக்கும் ஆவலை வேறு வழியற்று தள்ளிவைத்து, தலைவருடை பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன் . தலைவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் . நான் இந்த சிந்தனையில் மத்தியில் இருக்க,  சட்டென தலைவர் முகத்தில் தெரிந்த மின்னலைப்போல கண் சிமிட்டல் என்னை முற்றிலுமாக மீட்டது . என் சம்பந்தமாகத்தான் யாருடனோ அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு அப்போது  உறைத்தது . சில நிமிடங்களில் எதிர்முனையில் இருப்பது யாரென புரிந்தது . ஊசுடு தொகுதியின் முக்கிய தலைகளில் ஒன்று . சிக்கலின் மையப்புள்ளி . நான் தலைவரின் உரையாடலின் ஒருபாதியிலிருந்து மறுபாதியில் என்ன பேசப்படுகிறது என்பதை யூகித்துவிட்டேன்.  இந்தப்பேச்சி  எங்கிருந்து துவக்கப்பட்டிருக்கும் என்பதை அவதானிக்க முயன்றுகொண்டிருந்தேன்  . தலைவர் இரண்டு சாராரையும் ஊசுடுவிலேயே கூட்டி வைக்கும்படி சொல்லி கட்சி சார்பாக தனது பிரதிநிதியாக என்னை அனுப்பிவைப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . 

நான் சற்றுநேரம் உறைந்துபோனேன் . பேச்சுவார்தை இரண்டுநாள் தள்ளி வைக்கப்பட்டது . முக்கியஸ்தர்களை எனது தலைமையில் ஊசுடுவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்தையில் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி அனைவருக்கும் சொல்லப்பட்டது . சொல்லப்பாடாதது   எனக்கு தலைவர் அளித்திருந்த அங்கீகாரம் . மறுமுனையில் அதை கோபமாக , வருத்தமாக , அவர் மாறி மாறி பேச ,தலைவர் அதற்கு அதே ஒத்திசைவுடன் அதை பிரதிபலித்தபடி இருந்தார் . அதில் அவரது பலநாள் மனக்குறை தீரும் கணமாக அதை பார்த்தபடி இருந்தேன்.

எதிர்முனையில் வந்த சொற்களின் தொகுப்பிற்கு தலைவர் வளைந்து கொடுக்கு நிலையிலிருந்து நிமிர்ந்து கொண்டே இருந்தார் . ஒருகட்டத்தில் உரையாடலாக நிகழ்ந்து கொண்டிருந்தது சட்டென அறியுரையாக மாறி . “இளைஞர் காங்கிரஸ் சிக்கல் இது . அதை அவர்களே பேச்சிடதீர்த்துக்கொள்ளட்டும் நீங்கள் முன்னின்று இதை தீர்த்துவையுங்கள்” என சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு என்னை நோக்கி எந்த முக பாவனையுமின்றி சிறிதுநேரம் மெளனமாக இருந்து , பின் என்னிடம் பேச்சுவார்த்தை இரண்டுநாள் ஒத்திவைக்கப்பயிற்றுப்பதாகவும் அதை அந்த தொகுதியிலேயே நடத்துவது சரியாக இருக்கும் என்றார் . 

நான் அவரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன் . சிறிது நேர அமைதிக்கு பிறகு . என்னிடம் " நான் என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டேன் , நீ அதை அரசியலாக்காமல் கையாளுவாய் என நினைக்கிறேன் . நிதானமாக நடந்து கொள்” என்றார் . நான் அவரிடம் , “தலைவரே அந்த பேச்சுவார்தை கூட்டத்திற்கு நீங்கள் வரமாடீர்கள் என்றான பிறகு அது நிகழப்போவதில்லை . அன்று அவர்கள் மோதல் போக்கை  நிகழ்த்தியது என்னுடைய முயற்சியை தடைப் படுத்துவதற்கு மட்டுமே, என்னை  அந்த கூட்டத்தில்  கண்டிப்பதன் வழியாக எனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதவளிப்பதை நிறுத்திக்கொள்ள அவர்கள் உங்களையும் எச்சரிக்க விழைந்தனர்” என்றேன் .அவர் மெல்லிய புன்னகையுடன் ,  இளைஞர் காங்கிரெஸ் அகில இந்திய மாநாடு இன்னும் ஒருவாரத்தில் தில்லியில் நடக்கவிருப்பதாக செய்தி வந்திருப்பதையும் , அதை சூர்யநாராணன் மற்றும் வல்சராஜுடன் இணைத்து ஒருங்கிணைப்பு செய்ய சொன்னார் . முக்கிய நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டியிருக்கு என்றார். நான் சூர்யநாராயணனை பார்க்க சென்றேன்.தலவரின் முடிவு உறசாகத்தையும் அதே சமயம் நிதானத்தையும் கொடுத்தது . அவரது பேச்சின் திறன் தனது எண்ணங்களை சதாரணமாக ஒலிக்கவைக்கும் நுட்பம் பற்றிய திறப்பு எனக்கு மனதில் நீண்டநாள் இருந்து கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்