https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 178 * பொருத்தக் காத்திருத்தல் *

ஶ்ரீ:





பதிவு : 178 / 252/ தேதி :- 03 செப்டம்பர்   2017


* பொருத்தக் காத்திருத்தல்  *



தனியாளுமைகள் - 06”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-03


அனைத்தையும் தொகுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் காந்திராஜ் பேசிக்கொண்டிருந்தார் என் மனம் இதில் நான் ஆற்றக்கூடிய வாய்ப்புகளையும் நான் இதில் என்ன செய்யமுடியும் என்பதை பற்றிய சிந்தனையில் இருந்தேன். இதைப்போன்ற பார்வையாளர்கள் வந்து போவது , முறையிடுதல் மன்றாட்டு போன்றவை இதை தீர்க்க இயலாது . அங்கு ஊர்சபையில் தீர்மானம் போடப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டாலொழிய இது தீராது , இந்தக்குழு அடைப்படையை புரிந்துகொள்ளாது எதிர் திசையில் பயணித்தது . எனக்கு பழக்கமுள்ள ஊர் அனுபவஸ்தர்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கையிழந்து விட்டனர். பார்வையாளர்கள் செய்யக்கூடியவை இங்கு ஏதுமில்லை.





எனக்கான இடமும் நான் ஆற்ற வேண்டிய பாதைகளையும் எனக்கு அடையாளம் காட்டிய இரண்டு நிகழ்வுகளில் இது ஒன்று . பிறிதொன்று இதேப்போல் பாகூரில் கந்தசாமி mla வின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலுவின் கொலை முயற்சி . ஊசுடு சம்பவத்திற்கு நடந்த சில நாட்களுக்குள் நடந்தேறியது . ராஜவேலு உயிர் தப்பியது தற்செயலாக . இந்த இரண்டையும் அரசியல் ரீதியாக கவர்னரை சந்திப்பது சட்டரீதி நடவடிக்கை என போய்க்கொண்டிருந்தது . என்னால் எதையும் வேடிக்கை பார்ப்பதோ அல்லது சம்பிரதாயமாக அதில் நுழைந்து  நடந்துகொள்வதும் எனக்கான வழியாக எப்போதும் இருந்ததில்லை . நான் மெல்ல  என் பாணி அரசியல் வாய்ப்புகளுக்கு காத்திருக்க துவங்கினேன்

இந்த  இரண்டு நிகழ்வுகளும் , மைய அரசியல் காலத்தில் உள்ளவர்கள் செயல்படும் முறைமைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தன . அவை பெரும்பாலும் எண்ணெய் தடவிய உடல்களாக யாருக்கும் பிடிக்கிடைக்காத வழுக்கு விளையாட்டைப்போல நிகழ்ந்து கொண்டிருந்தது . அவற்றிலிருந்து எனக்கான வழிகள் துலங்கி வந்தன . ஆனால் அதை ஆடுவதா என்கிற குழப்பத்தில் சிறிது காலம் உழன்ற பிறகு . மாநில அமைப்பிற்கு காட்சிப்பணி என்பது பிறந்தோர் மண்மறைந்தோருக்கு விழவு எடுப்பதை தவிர பிறிதொரு நிரல் இருப்பதாக தெரியவில்லை

அதன் தனித்த விஷயங்கள் மக்கள் பிரச்சனையில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுவது . காங்கிரஸ் அமைப்பு ஒரு யானையைப் போல  அது அசைவதற்கு  செய்யும் வேலைகளே மிகவும் செலவேறியவை . மேலும் அதை ஒரு உற்சவம் போல நிகழ்த்திவந்திருபவர்கள் . அதற்கான  செய்முறை கெளரவம் என்கிற பல முறைமைகளை சீர்நோக்க வேண்டும் . பெரும் திறலாக தொண்டர்கள்  கூடுவதே அதன் வெற்றியாக பார்க்கப்படும் . அவை நிகழும் காலங்களில் மாநில அரசியலில் அது பெரும் அதிர்வையும் அதை தொடர்ந்து மாற்றங்களுக்கும் அவை அறைகூவும்

நான் போராட்ட முறைமைகளில் சில புதிய மாறுதல்களை பற்றிய சிந்தனையில் இருந்தேன் . அவற்றை கொண்டுவர அதற்கான அதிகாரத்தை பெறவேண்டும் . அரசியலில் அதிகாரங்கள் கோரிப்பெறுபவைகளல்ல . அவை சக்தியினால் அடையப்படுபவை . சக்தியுள்ளவன் யாரிடமும் எதையும் மன்றாடுவதில்லை . நான் எனக்கான வழிமுறைகளை கட்சியின் கோணத்திலிருந்து வேறுபட்டவைகளாக உருமாற்றம் சிந்தனை அதன் இலக்கை தொட்டதாக நான் நினைத்த கணம் ,அவற்றை செய்லபடுத்த துவங்கினேன் . பாலன் வெளியேறிய பிறகு, இயக்கத்திற்கு புதிய தலைமை நியமிக்கபடவில்லை. தலைமை இல்லாத இயக்கத்தை மீளவும் கூடுகைகளுக்கு அழைப்பது  வாய்ப்பில்லை . அதன்  தலைமை மட்டுமே அதை கூட்ட இயலும். நான் அதை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நிகழ்த்த முடிவெடுத்தேன் . யார் கூட்டுகிறார்கள் எனபதை வெளியிட விரும்பவில்லை . அது மறுமுறையும் என்னை பழைய தலைமைக்கு செல்லும் பாதையை திறந்து விடும் வாய்ப்புகள் அதிகம் . சண்முகம் அதை எனக்கு பெற்றுத்தருவார் என் நினைக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல . அவர் கட்சி பதவியை அவ்வளவு எளிதில் யாருக்கும் கொடுத்துவிடுபவரல்லர் . ஆனால் என்னை ஆதரித்த பழைய இளைஞர் அமைப்பை மீளவும் கட்சி அமைப்பிற்குள் திருப்பும் வாய்ப்பிது .அதை தவறவிட எனக்கு விருப்பமில்லை.

பிரதேச காங்கிரஸ் சந்திக்கும் கௌரவ சிக்கல்களும் அதற்கான அவர்கள் படும பிரயத்தனங்களில் இருந்து அதை மாற்றி அமைக்கவேண்டும் .சிறு சிறு திரள்களே போதுமானவை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாணி அதுவே. மிக சரியாக சமூகத்தையும் அதிகாரவர்கத்தையும் நேராக சென்று தொடும் குவிமுனைகள் அவை  . கட்சி அரசியலில் அடிப்படை அதன் தொண்டர் பலத்தை தக்கவைக்க அவர்களின் சிறு கோரிக்கைகளை செய்துகொடுப்பது . அவை பெரும்பாலும் காவல்துறை சிறு அடிதடி வழக்கு  போன்றவை அவற்றை சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக செய்துகொடுக்க முடியும் . ஆனால் அரசியலில் தற்சார்பு மட்டுமே நன்மை கௌரவமாக வைக்கக்கூடியவை . அதற்கான வழிமுறைகள் உருவாக்கவேண்டும் என்கிற தீவிர சிந்தனை மேலெழுந்தபடி இருந்தது . நான் அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன் . பழைய அமைப்பை கூட்டுவதனூடாக எனக்கான அரசியல் பாதை திறந்துகொள்ளலாம் . பழைய பாணியில்தான் செயல்படவேண்டும் , ஆனால் அதை எங்கு பொருத்தி துவங்குவது என காத்திருந்தேன்.

அன்று மாலை என்னை சந்திக்க சிலர் வந்திருப்பதாக என் அலுவலக வரவேற்பறையிலிடுந்து தகவல் வந்தது . நான் அவர்களை உள்ளே அனுப்ப சொன்னேன் . வியாபார நிமித்தமாக யாரவது இருக்கும் என்றுதான் நினைத்தேன் . ஆனால் அவர்கள் ஊசுடு தொகுதியிலிருந்து மூன்று பேர் வந்திருந்தார்கள் . நான் அவர்களை நன்கு அறிவேன் . அவர்கள் அன்றிலிருந்தே சண்முகத்தின் ஆதரவாளர்கள். நான் அவரிடம் சண்முகத்தின் செயல்பாடுகளை தீவிரமாக விமர்சனங்களை வைத்திருக்கின்றேன் . இருப்பினும் என்னிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர் . அவர்களில் ஒருவரை எனக்கு அணுக்கமாகத்தேரியும் . நான் முறைமை சொற்களுடன் அவர்களை வரவேற்று அமரச்சொன்னேன் . அந்த கலவரம் குறித்து ஏதாவது உதவி நாடி வந்திருக்கலாம் என் எண்ணினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்