https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 177 * பார்வையாளர்களின் விழிகள் *

ஶ்ரீ:





பதிவு : 177 /251 :தேதி :- 02 செப்டம்பர்   2017

* பார்வையாளர்களின் விழிகள் *


தனியாளுமைகள் - 05”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-03

பிறிதெவரையும் விட சண்முகம் கண்ணனை மிக அணுக்கமாக தெரிந்திருந்தார் . ஒருவருக்கான புரிதலை அடைந்த பிறகு , எக்காலமும் அவரை அதுவாகவே வைத்திடுப்பது தலைவரின் பாணி . அது ஏற்புடையதில்லை எனினும் . ஒருவருடைய குணநலன் அடிப்படையானது , அது பெரிய மாற்றங்களை அடைவதில்லை என்பது ஒருவழியில் சரி என்றே உணர்ந்திருக்கிறேன . தலைகீழ் மாற்றமென்பது வெகு அரிதாகவே நிகழுகிறது ஆனால் அவை  களத்திற்கு வெளியே என்பதால் அது கவனிக்கப்படுவதில்லை  . நான் இவற்றை மாற்றுவழியில் முயற்சித்தாலும் . அவை நல்ல பலனை தந்ததில்லை . சண்முகத்தின் மாற்றமடையாத மனமே அரசியலுக்கு உகந்தது..



அன்று காலை நான் சண்முகம் வீட்டிற்கு சென்றபோது அங்கு பெரும் கூட்டம் ரோடு, வீட்டின் முற்றம், இடைகழி என எங்கும் நிறைந்து வழிந்திருந்தது. ஊசுடு  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் அவை கூடியிருந்தது. அவர்களில் ஊர் முக்கியஸ்தர்கள் தலைவரின் அறையில் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்கள் அழைத்து வந்திருந்தவர்கள் ஆவேசமும் தன்னிரக்ககமும் , அழுகையுமாக கூக்குரலுமாக பேசியது  ஓங்கி ஒலித்தபடி இருந்தது . வாரப்படாத தலையும் அழுக்கடைந்த உடலும் . கசங்கிய சட்டை கைலியில் அனைவரும் சண்முகத்தை சூழ்ந்து நின்றுக் குமுறிக் கொண்டிருந்தனர் . அந்த திறளின் மத்தியில் , கொஞ்சம் கூர்ந்துப்பார்த்தால்சண்முகமும் வந்தவர்களில் ஒருவரைப் போலிருந்தார். நான் கூட்டம் விலகி விலகி வழிவிட,மெல்ல அவரது அறைக்குள் நுழைந்தபோது இன்னதென்று அறிய இயலாத ஒரு வீச்சம் அங்கு மூச்சு திணறுகிற அளவிற்கு அங்கு கவிந்திருந்தது . சண்முகத்தின் வீட்டில் அவரது சந்திப்பிற்கான அறை அலுவலகம் போல் இராது வீட்டின் நடுக்கூடம் போன்ற அமைப்பில் இருக்கும். வந்தவர்களில் பலறை அவருக்கு முன்பே  தெரியும் என்கிற தோரணையில் அனைவரையும் பார்த்து தன் அதே கிராமத்து பாணியில் பேசியபடி இருந்தார்.

முதல் நாள் அரியூர் மற்றும் பங்கூர் பகுதிகளில் ஏழுமலை mla வின் ஆதர்வாளர்கள் தேர்தல் பிரச்சனையை , ஊர் கலவரமாக உருமாற்றி அங்கு கொலை வெறியாட்டத்தை நிகழ்த்தியிருந்தனர் . சண்முகத்திடம் முறையிட வந்த கூட்டமைத்தில் அவர் காந்திராஜுக்காக காத்திருந்தார் . அவர் வந்ததும் அவரது தலைமையில் ஒரு குழு கிளம்பியது . 

ஊசுடு எனக்கு மிக அணுக்கமான ஒரு பகுதி . எனது பலத்தில் ஒன்றாக அது இருந்த ஒரு காலம் . சுமார் இரண்டு வருட இடைவெளியில் இன்றைய சூழல் என்னால் கணிக்க இயலவில்லை . ஊசுடு தொகுதியை பொருத்தவரை இது புதிதல்ல . தற்போது கலவரம் நிகழ்ந்த பகுதி தமிழக நிலத்தினால் சுற்றி வளைக்கப்பட்டவை. புதுவையின் எல்லை பகுதிகள்  இங்கு வழி முழுவதும் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கின்றன . எல்லை பகுதி என்பதால் . சட்டவிரோத செயல்களில் இரு மாநில மக்களும் சாதாரணமாக ஈடுபடுவதுண்டு . அதை ஒட்டி இரு மாநிலங்களின் காவல்துறையில் உள்ள சில தவறான அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்களுக்குள் தொழில் முறையிலான ஓயாத சச்சரவுகள் இருக்கும். அவை தேர்தல் காலத்தில் வேறு வடிவில் பெரிய அளவில் முளைக்கும் . இது வழமையாக இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோது நிறைய சந்தித்திருக்கிறேன் . ஒரு கட்டத்தில் தாக்கப்படுவதை நாங்களும் அதே பாணியில் திருப்பியடிக்க துவங்கியதும் . தாக்கப்படுவது முற்றிலுமாக நின்றுபோனது . 

இன்று இளைஞர் காங்கிரஸ் சிதைந்துபோன நிலையில் அது பெரிய கலவரமாக உருவெடுத்துவிட்டது . நான்  வந்திருந்தவர்களில் சிலரை அறிவேன் . என்னைக் கண்டதும்  அவர்கள் தனியாக பிரிந்து வந்து  பழைய நினைவுகளை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்  . அவர்கள் என்னை அங்கு எதிர்பார்க்கவில்லை . நான் அவர்களிடம் இப்போது ஒன்றும் பேசவேண்டாம் . பிறகு கூடி இதுபற்றி முடிவெடுப்போம் என்றேன் . அவர்களின் ஒருவர் சண்முகத்திடம் என்னை காட்டி இந்த சிக்கலை நான் நன்கு அறிவேன் என்றதும்  சண்முகம் என்னை திரும்பிப்பார்த்தார் . 

 நான் கிளப்பிச்செல்லும் குழுவினரை பார்த்தபடி இருந்தேன் . வெளியே வந்த  என்னை தலைவர்  அழைப்பதாக ஆள் வந்து சொன்னதும் .நான் உள்ளே செல்வதற்குள் அவர் குழுவை வழியனுப்ப வெளியே வந்தார் .அனைவரும் புறப்பட தயாரானதும் .சண்முகம் என்னிடம் திரும்பி “ஏய்யா நீ போகவில்லையா? . நீயும் போ” என்றார் . சிறிது தயக்கத்திற்கு பின் நானும் அந்த குழுவில் இணைந்து கொண்டேன் . வழியில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும் வந்து சேர்ந்து கொண்டார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை அன்றுதான் சந்தித்தேன் . பரஸ்பர வணக்கம் தவிர வேறேதும் பேசிக்கொள்ளவில்லை . 

அரியூர் தமிழக பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரதேசம். புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் சுமார் இருப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது . அதை ஒட்டிய பகுதிகள் பங்கூர் மற்றும் பேட் , ஆனந்தபுரம் மற்றும் பேட் என வண்ணியரும் அட்டவணை இனத்தவரும் வாழும் பகுதி இயல்பாகவே சந்தர்ப்பம் கிடைத்தால்  கோர்த்துக்கொள்ள காத்திருக்கும் கூட்டம். கண்ணனின் அமைப்பிலுள்ளவர்கள் ஏறக்குறைய எதிர்மறை ஆட்கள் அதிகம் . ஏழுமலை அப்படிப்பட்ட ஒரு ஆள் .தேர்தலை காரணம் காட்டி அங்கு பெரிய வெறியாட்டம் நிகழ்ந்து முடிந்திருந்தது . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மிக எளிய ஏழை விவசாய மக்கள் . முப்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு ,நூறு வீடிகளுக்குமேல் அடித்து நொறுக்கப்பட்டு , அந்த பாதிக்கப்பட்டவர்கள் வந்து கதறும் போது தாங்கமுடியாததாக இருந்தது . அனைத்திலும் உச்சம் , இரண்டு பசுமாடுகளை வெட்டி எறிந்திருந்தார்கள். பண்பாடு உடைய ஒரு மனிதன் செய்கிற காரியமில்லை . என்ன காரணம் வேண்டுமானாலும் இதற்கு இருந்துவிட்டு போகட்டும் . மண்மறைந்த அந்த பழங்குடி மனோபாவம் இன்னும் மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது . இது போன்ற காரியங்களை அரக்க மனம் கொண்டவனுக்கானது . பலர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர் . 

அனைத்தையும் தொகுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் காந்திராஜ் பேசிக்கொண்டிருந்தார் என் மனம் இதில் நான் ஆற்றக்கூடிய வாய்ப்புகளையும் நான் இதில் என்ன செய்யமுடியும் என்பதை பற்றிய சிந்தனையில் இருந்தேன். இதைப்போன்ற பார்வையாளர்கள் வந்து போவது , முறையிடுதல் மன்றாட்டு போன்றவை இதை தீர்க்க இயலாது . அங்கு ஊர்சபையில் தீர்மானம் போடப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டாலொழிய இது தீராது , இந்தக்குழு அடைப்படையை புரிந்துகொள்ளாது எதிர் திசையில் பயணித்தது . எனக்கு பழக்கமுள்ள ஊர் அனுபவஸ்தர்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கையிழந்து விட்டனர். பார்வையாளர்கள் செய்யக்கூடியவை இங்கு ஏதுமில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்