ஶ்ரீ:
பதிவு : 182 / 257 தேதி :- 08 செப்டம்பர் 2017
* தகுதியை எதிர்நோக்கும் வாய்ப்பு *
“தனியாளுமைகள் - 09”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04
வல்சராஜ் அரசியல் காரணங்களுக்காக பெரும்பாலும் மாஹேவிலேயே தங்கிவிடுவதால், இங்கு கட்சி பணி என ஒன்றும் நடைபெறவில்லை . இந்த இடைவெளியில் நான் ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திய வந்த சிறு கூடுகைகளின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதை தாண்டியது . வாரத்திற்கு குறைந்தது மூன்று கூடுகை என இலக்கு வைத்து செயலபட்டேன் . சில சமயங்களில் அவை ஐந்து என்றுகூட தொட்டதுண்டு .அவற்றின் மூலமாக ஏறக்குறைய புதுவையின் அனைத்து பகுதி முழுவதுமாக அது இணைக்கப்பட்டுவிட்டது .
அன்று காலை பத்திரிக்கையில் வந்திருந்த ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இரண்டு செய்திகள் ஒருவித தார்மீக கோபமாக எழுந்தது. . ஒன்று பால் விலை உயர்வை பற்றியது.அதன் விவசாய அமைச்சர் வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் .கேபினெட் மீட்டிங்கில் விலையேற்றத்தை ஏகமனதாக தீர்மானத்தின் அடிப்படையில் அது நிறைவேறி இருந்ததை பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டுருந்தார்கள் . அதன் பிறிதொரு செய்தி வலது கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் இரண்டு நாளில் நடக்கவிருக்கும் பால் விலை உயர்வை கண்டித்து போராட்டத்ததை நடத்தவிருப்பதாகவும் அதன் தலைமை அதே விவசாய அமைச்சர் என்றிருந்தது . இந்த முரணுக்கு பதிலடி காங்கிரஸிலிருந்து கொடுக்கப்படவேண்டும் . அது வழமை போல இன்றோ நாளையோ அறிக்கை வெளியிடும் . ஆனால் என்னை பொறுத்தவரை இது போராட்டவடிவில் இருக்க வேண்டும் என நினைத்தேன் .
அன்று வல்சராஜ் இல்லாததால் . தலைவரிடம் இதை பற்றி பேசலாம் என அவரை சந்தித்தேன் . முதலில் அவர் எண்ணமறிந்த பிறகே நாம் நினைப்பது சொல்வது உசிதம் , என அமைதியாக இருந்தேன். பின் மதியம் அவரை சந்திக்க வந்த அனைவரும் சென்ற பிறகு அவர் மத்திய சாப்பாட்டிற்கு அமர்வார் . அதுதான் எனக்கான நேரம் . அவர் சாப்பிட அமரும் நேரம் அவரை யாரும் சந்திக்கவியலாது என்பதால், முக்கிய விஷயங்களை தடையின்றி பேச நான் அந்த நேரத்தையே தேந்தெடுப்பது வழமை . அவரும் அன்று பேசும் மனலிலையில் இருந்தார். நான் பால் விலையுயர்வை பற்றியும் வலது கம்யூனிஸ்ட் களின் இரட்டை நிலைப்பாட்டை சொன்னபோது , நான் எனது திட்டத்தையும் சேர்த்தே சொன்னேன் . ஆட்சியை இழந்து இருக்கும் இந்த காலகட்டத்தில் பெரியதாக எதையும் செய்யவியலாது எனபதை அவரும் அறிந்திருந்தார் . மிக உற்சாகமாக என்னுடைய சிறு கூட்டம் பற்றிய சிந்தனை அவருக்கு ஏற்புடையதாய் இருந்தது . கண்டனப்போரட்டம் நிகழவிருக்கும் தகவல் சொல்ல , அதை செயல்படுத்த தேவையான ஐந்து நாள் கால அவகாசத்தில் அதை செய்திமுடிக்க முடியும் என்றதும் , சிறிது தயக்கத்துடன் ஒப்புதல் கொடுத்தார் .

நான் முன்பே திரட்டிய அமைப்பை பெருமளவில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவைத்தேன் . இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்லாமால் நிகழ்ந்த கண்டனப்போராட்டமிது . கட்சி அலுவலகத்தில் தலைவர் துவக்கி வைக்க கடற்கரை நேரு சிலை அருகே முடிவுற்றது . சுமாரான கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும் ஆனால் , பலரை திரும்பி பாரக்க வைத்தது அதன் ஒழுங்கு . கம்யூனிஸ்ட்களின் பாணியில் நிகழ்ந்த முதல் போராட்டம் . பதாகை ,கோஷம் , கொடி முனபின் ஒரேவித ஒலி அமைப்பு . வரிசை ஒழுங்குபடுத்தும் நிர்வாகிகள் என எல்லாம் மிகச்சரியாக அமைந்திருந்தது பத்திரிக்கையின் கவனத்தை ஈரத்தது. செய்தி முக்கியத்துவம் பெற்றதால் எங்கும் பேசப்பட்டது. அத்துடன் மாறுபாடு அடைந்த செயல்முறை ஒரு அமைப்பு தனியாக செயல்படத்துவங்கியதை அறிவிக்கும் நிகழ்வாக அது நடந்து முடிந்தது . பத்திரிக்கையின் கவனம் எனது செயல்பாடுகள் மீது குவியத்துவங்கியது . அதனால் நல்லதும் அல்லாததும் நடந்தது.
அதன்பிறகு தொடர்ச்சியான சிறு சிறு அறிக்கைகள் வெளியிட துவங்கினேன் பத்திரிக்கையாளருடன் நல்லா தொடர்பு கிடைத்தது இந்த கட்டத்தில் . அனைவரையும் அரவணைக்கும் போக்கும் பிளவிற்கு வழிவகுக்காத அணுகுமுறையும் தலைவரது பிரதான குணம் . கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் அனைத்திலும் பங்குபெறுவதனூடாக . தங்கள் நேரத்திற்கு காத்திருந்தனர் . இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டது அதிரடியாக நடந்துவிட்டதால் . அதில் வர இருக்கும் நிர்வாகப்பொறுப்பிற்கு காத்திருந்தனர் .
நான் நம்பிக்கை இழந்து சிதறிக்கிடந்த சண்முகம் அணிகளை ஏறக்குறைய தொகுத்துவிட்டேன் . ஆனால் அது எனது நம்பிக்கையான குழுவல்ல . அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன் . முடங்கிப்போன இயக்கத்தை முடுக்கிவிட கொடியேற்றம் நடத்துவது வழமை . நான் அதை தலைவரிடம் சொன்னபோது அதை உடனே தலைவர் அங்கீகரித்து என்னிடம் நடத்த சொன்னபோது நான் உற்சாகமானேன் . அவர் அதை ஒரு சிறு நிகழ்வாக நடத்த முடிவெடுத்திருந்தார். நான் என் அணுகுமுறையை மாற்றி செயல்படுத்த அதை பிரமாண்டமான ஒருநாள் விழாவாக திட்டமிட்டிருந்தேன் . அதற்கு பின்னியில் கிராம அமைப்பில் நான் நினைத்த திருத்தங்களை செய்ய அது சரியான நேரமென கணித்திருந்தேன் . எனது வயது அனுபவம் இவற்றைக்கொண்டு தலைவரிடம் பேசி அவற்றை செயல்படுத்துவது சாத்தியமில்லாதது . களத்தில் நிகழ்பவைதான் அவற்றை செய்யத்தூண்டும் . மேலும் அது முழு நிர்வாக சீர்திருத்தத்திற்கு அறைகூவுவது . இந்தமாதிரியான கணக்கும் தலைவரை தயங்கவே செய்யும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக