https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 13 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 187. * கடக்கவியலாத த(லை)ளைகள் *

ஶ்ரீ:



பதிவு : 187 / 262 /தேதி :- 13 செப்டம்பர்   2017


* கடக்கவியலாத (லை)ளைகள் *




தனியாளுமைகள் - 14 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


எதிர்ப்பு உருவாகிய அளவும் வேகமும் , எனக்கு ஆதரவு தளம் உருவாகி வருவதில் நிகழவில்லை . அதை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியிலேயே நான் என்னையும் அறியாது ஈடுபட்டு வந்திருக்கிறேன். என்னை தங்களின் அரசியலுக்கு எதிராக நினைத்தவர்களின் செயல்திறனும் , திட்ட துல்லியமும் அதன் பின்புலத்திலுள்ள ஆதரவுதளமும் மிக பிரம்மாண்டமானவை என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை . அவர்களுக்கு தாக்குதல் என்பது தங்களுக்கான இரை என்பதால் நம்மைவிட மிக துல்லியமாக சிந்திக்கவும் செயலாற்றவும் பழகியவர்கள் .







அரசியலில்  மேல்நிலைகளில் உள்ளவர்களின் போக்கு பலவிதமான கணக்குகள், பூசல்கள், பேரங்கள்  வழியாக லாப நோக்குக்கொண்ட  சமரசத்தின் அடிப்படையில்   நிகழ்பவை . அவை உண்மையான களநிலவரங்களை ஒரு நாளும் பிரதிபலிக்காது. ஆனால் மனிதத் திரள்களின் மத்தியில் உள்ள அரசியலை,  திட்டங்களைவிட தற்செயல்களே பெரிதும் நகர்த்தி நிகழ்த்துகின்றன . நாங்கள் அவர்களை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை . நான் செய்ய நினைத்தது ஒரு சிறு காலதாமதம் . மதிய உணவிற்கு முன்பாக தாக்குதல்  நிகழ்ந்தால் எல்லாவற்றையும் அது குலைத்து விடும். தாக்குதல் நிகழ்த்த வருபவர்கள்  உணவிற்கு களையும் திறலுடன் களைந்த பின்னர் திட்டமிட்ட இடத்தில் மறுமுறை கூடுவது சாத்தியமில்லை , என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது .  அது ஒன்றே அவர்களின் திட்டத்தை நீர்த்துப்போக செய்யலாம் . ஆனால் அதன் பின்னர் நடந்தது வெறும் தற்செயல் மட்டுமே.  அவர்கள் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்ட இடம் வேறு. அவர்களுக்கு அங்குள்ள ஆதரவுத்தளம் இங்கில்லாததால், துவங்கிய சில நிமிடங்களில் நீர்த்துப்போனது , ஆகவே தாக்குதலை நடத்தச்சொன்னவர்களே தலையிட்டு அதை தவிற்க வேண்டியதாகியது . பெரும் ரத்தக்களரியாக வேண்டிய நிகழ்வு சில நிமிடங்களில் தவிற்கப்பட்டது . 

எனது தரப்பு ஆட்களுக்கு என்மீது அடங்காத கோபம் கொண்டிருந்தார்கள் . நான் கலவரத்தை அவர்கள் திட்டமிட்டபடி  நடத்த விட்டிருக்க வேண்டுமென்பது அவர்களின் கணக்காக இருந்தது , அதன் மூலம் தலைவரின் எதிரில் அவர்கள் இவ்வளவு காலமாக அணிந்திருந்த முகம் கிழிந்துபோயிருக்கும் என்றும். அதற்கான வாய்ப்பு கிடைத்தும் நான் தவறவிட்டதாக என்னிடம் நேரடியாக கொந்தளித்தனர். சில உண்மையை வெளிக்கொண்டுவருவதில் உள்ள பேராபத்தை அறியாத எளிய மக்கள் அவர்கள் . தலைவர் அங்கு திரண்டுள்ள எதிர்ப்பாளர்களை , நான் புரிந்து கொண்டதை விடவும் இங்குள்ள எவரையும் விடவும் மிக சரியாக தெரிந்து வைத்திருந்ததனால் தான் நான் இதை தவிற்க நினைத்தேன் . அந்த உண்மை ஒருவேளை தலைவர் முன்பாக வெளிபட்டிருந்தால் அவர் அதை மௌனமாக கடந்து சென்றிருப்பார். அது நான் உருவாக்க நினைப்பதை முழுவதுமாக சீர்குலைப்பதுடன்,  மேலும் அது  இத்தகைய விஷயங்களை கையாளும் திறமையற்றவனாக நான் தலைவரால் அடையாளம் இடபட்டுவிடுவேன். பின் எப்போதுமாக எனது பரிட்சாத்தமான முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கபட்டுவிடும். 
மேலும் அது தொகுதிக்குள் என்றும் முடியாத வெறியாக உருவெடுத்து பல தொடர் வன்முறைக்கு  இட்டுசெல்லலாம் . எதிர்நிலையாளர் வேண்டுவதும் அதுவே .நான் ஏன் அதை தவிர்க்க விழைந்தேன் என்பதை அவர்களுக்கு புரியும் மொழியால் என்னால் எப்போதும் பேசமுடியாது. அவர்களுக்கு இன்றுவரை புரியவில்லை

நான் வேறு திட்டத்திலிருந்தேன் . மதிய உணவிற்கு பந்தியில் அமர்ந்தபோது தற்செயலாக தலைவர் எனது பக்கத்தில் அமரும்படி நேர்ந்தது என நான் நினைத்தேன், ஆனால் அவர் என்னுடன் பேச விரும்பி வந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது . வந்து அமர்ந்தவுடன் , அவர் என்மீது கோபப்பட்டார் . இதுமாதிரி நிகழும் என்பதால் தான் அவர் சிலப்பகுதிகளை தவிர்க்க சொன்னார் .நான் சிலதை தவிர்த்து எப்போதும் புகையும் இந்த ஒருப்பகுதியை மட்டும் பின்நிகழ்வாக இணைத்திருந்தேன் . அது அந்த ஊர் பெரியவர்கள் செய்த கடைசீ நிமிட மாற்றம் என்றுதான் அவர் முதலில் நினைத்தார், ஆனால் அங்கு கொடி ,தோரணம் பார்த்தபிறகு அதுவும் நிகழ்வில் இருந்ததை அறிந்து வெளிவந்த பிறகுதான் இந்த மோதல் நிகழ்ந்தது . 
கலவரம் செய்யவந்த குழு தவறுதலாக அங்கு அதை தொடங்கியதும் தற்செயலானது . 

தலைவர் என்னிடம் நாளை மறுநாள் எனக்கு எதிராக பஞ்சாயத்து, கட்சி அலுவலகத்தில் நடக்கவிருப்பதை சொல்லி ,அதற்கு பின்னால் நிகழகியிருப்பதை நான் கணக்கிட தவறிவிட்டேன் என்கிற குற்றச்சாட்டை கூறினார்  .இந்த எதிர் சக்திகளை நமக்குப் பின்னல் ஒருநாளும் நிறுத்தவே முடியாது என்று சொல்லி சாப்பிட்டு எழுந்துகொண்டார் . நான் அவரிடம் ஏதும் பேசாது, நாளை அவருக்கு விளக்கிச்சொல்லலாம் என்று இருந்தேன் . நாளை பஞ்சாயத்து மட்டும் நிகழ்ந்தால் பின் எப்போதுமாக என் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிடும் . நான் ஆழ்ந்த கவலையடைந்தேன் . முதல் முயற்சியிலேயே நான் தவறென ஆகிப்போனால் பின்னெப்போதும் எழுந்து வரவே முடியாது . நான் சாப்பிட்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து எழுந்து கை கழுவும் இடத்திறகு வந்தபோது அந்த குழுவை சேர்ந்த சிலரின் கண்களில் தெரிந்த சிரிப்பு என்னை குன்றிப்போக செய்தது .
எனக்கு எதிராக திரண்ட குறுங்குழு  உள்ளூர் சர்வ கட்சி அரசியலை எப்போதும் தங்களை சார்ந்து சார்ந்திருக்கும் முறையில்  யார் பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் தோழமைகொள்வார்கள் . அவர்களின் கட்சி அடையாளமென்பது  பிற கட்சிகளுடன் சமரசம் பேச உபயோகிக்கும் ஒரு கடவுச்சீட்டு மட்டுமே . யாருக்கும் விசுவாசமாக அவர்கள் இருப்பதில்லை . எதையும் ஒரு மேட்டிமை எள்ளலுடன் அணுகுவதும் , எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை சொல்லுவதும் தங்களின் அடையாளமாக்கொண்டு எதற்குமான தடைக்கல்லாக எப்போதும் பிறரின்  பாதை கிடப்பார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்