https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 189 * எதிர் சூழ்தலின் மத்தியில் *

ஶ்ரீ:
பதிவு : 189 / 264/தேதி :- 15 செப்டம்பர்   2017

* எதிர் சூழ்தலின் மத்தியில்  *


தனியாளுமைகள் - 15 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


அவர்கள் நெடுநாள் கட்சிக்காரர்கள் தெடர்ந்து தங்களின் இடத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் மக்கள் தொடர்புறுத்தலை தொல்லையாக நினைப்பவர்கள். அவரகளின் “அரசியல்சரி” என்கிற பலிபீடம் ஒருங்கப்பட்டதும் அங்கு எதையும் இழுத்து வந்து வெட்டக்கொடுப்பார்கள் . எங்கு யார் வரவேண்டுமென்பதை தங்கள் கருத்தறிந்த பிறகே தெரிவு செய்யப்படவேண்டும் என்கிற நிர்பந்தத்தை, தங்களின் எதிர்மறை வழிமுறைகளினால் எவரையும் பணிய செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்கள் . எப்போதும் நட்புடன் சிரிப்பதாக நம்பச்செய்து நட்புக்கு அடையாளமாக உணர்ச்சியற்ற இரும்பு கரங்களை நீட்டுபவர்கள் . நீட்டப்படும் கரத்தை நோக்கி கொடுக்கவோ மறுக்கவோ இயலாதபடி பிறிதெவரையும் குழப்பத்திலேயே வைத்திருப்பதில் சமர்த்தர்கள்“பி.கே.பாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். இதழாளர், வரலாற்றாசிரியர், நாவலாசிரியர். அவருடன் உரையாடியபோது ஒருநாள் ஒரு திறப்பு போல ஒரு கருத்தை அடைந்தேன். நான் காண்பதெல்லாம் கண்ணுக்குத்தெரியும் அதிகாரத்தரப்புகளை மட்டுமே. கண்ணுக்குத் தெரியாத அதிகாரத் தரப்பு ஒன்று உண்டு. அது சமூகத்தின் கோடானுகோடி மக்கள்தான். அவர்களின் விருப்பங்களும் கனவுகளும் அடங்கியது அது. பேரமேஜைகளில் அதுவும் வந்து உட்கார்ந்திருக்கிறது. எந்த அதிகாரபேரத்திலும் வலுவான ஒரு தரப்பு மக்களின் இச்சை தான். அதை கொஞ்சம் ஒத்திப்போடலாம், கொஞ்சம் திசை திருப்பலாம், கொஞ்சம் ஏமாற்றலாம். ஆனால் அதை தாண்டிச்செல்வது முடியாது என தனது “ அரசியலாதல்” கட்டுரையில் ஜெயமோகன் சொல்லியிருப்பதை நினைத்துப்பார்கிறேன் . அவரின் அற்புதமான திறப்பு  அன்று எனக்கு வெறும் புரிதலாக மட்டுமே இருந்தது இன்று கருத்தாக அந்த திறப்பு என்னால்  உணரப்படுகிறது.

அப்படிபட்ட பல நிகழ்வுகளை  மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு  எனக்கு வாய்த்தது . அவர் சொல்லுகிற நிகழ்வை நேரில் சந்திக்கும் ஒருவருக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு  தன்னை சுற்றிலும் உள்ள உலகின் மீது அவநம்பிக்கையும் , கசப்பும் காழப்புமே பலனாக விளையும் . அது சமூகம் மற்றும் சமுதாயத்தில் அச்சமும் வெறுப்புமாக எழுந்து சிந்தனையை பேதலிக்கச் செய்துவிடும். திரு.ஜெயமோகன் அவர்களின்  பிரமிக்கவைக்கும் பதிவு இது . அரசியல் என்ற ஒன்று இங்கு புரிந்து கொள்ளப்பட்டிருப்பதிலிருந்து  நடந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு  எந்ந சம்பந்தமும் இல்லை என்கிற உண்மை , ஒருநாள் என் முகத்தில் அறைந்த போது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை . அதில் உட்புகும் வசதியும் வாய்ப்பும் ஆதரவும் இருந்ததினால் . அதன் விளிம்பை உடைக்கும் என் முயற்சிகள் முட்டாள்தனமானதாக இருந்திருப்பதை இன்று நினைத்துப்பார்க்கிறேன். ஆனால் தார்மீக உணர்வின் உந்துதல்களால் எழுந்த என் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு, அதிலிருந்து முற்றிலுமாக நான் உதிர்ந்த போதும் , இன்றும்கூட என்னை நிவில்  மகிழ்வென இருப்பது நான் அன்று முயற்சித்து தோற்றதே.

உற்சாகமாக நடந்து முடிந்த விழவின் முடிவில் ஒரு சம்பவம் ,என்னை அந்த விழவின் முழு உற்சாகத்தையும் உள்வாங்க முடியாதனது . அனந்தபுரத்தில் முற்றுப் பெற்ற கொடியேற்ற நிகழ்வின் வெடி போடுவது என்பது அவர்களின் மரபு. சிறிது அஜாக்கிரதையினால் இழைத்த தவறு அதில் ஈடுபட்ட ஒருவர் தன் ஒரு கண்ணை இழக்கும்படி செய்துவிட்டது . அனைவரும் அதிர்ந்தோம் . ஒருவாறு அவரை மீட்டு  அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துவிட்டு நான் திரும்போது பொதுக்கூட்டம் துவங்கி இருந்தது . கூட்டம் முடிந்த பிறகு தலைவரிடம் அதை யாரோ சொல்லியிருக்க வேண்டும் . மறுநாள் காலையிலேயே அவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார் . அழைப்பை எடுத்தவுடன் , என்னை அவர் தன் வீட்டிற்கு வரசொன்னார்

நான் காலையிலேயே அவரை சந்திக்கவிருந்தேன்,அவர் கூப்பிட்டதும் உடன் கிளப்பினேன் . எனக்கு அன்று மாலை நடக்கவிருக்கும் பஞ்சாயத்துதான் நினைவில் ஓடியபடி இருந்தது . அதில் என்தரப்பை நான் எப்படி வைக்கப்போகிறேன் என்பது அதுவரை புரியவில்லை . அதைவிட இப்பொது அவர் எதற்கு இவ்வளவு காலையில் அழைக்கிறார் என்கிற எண்ணத்துடன் அவரின் வீட்டை அடைந்தேன் . நல்லவேளையாக அங்கு யாருமில்லாதது ஆறுதளிப்பதாக இருந்தது. தலைவர் மட்டும் இன்னும் குளிக்காது அரைக்கை பனியனுடன் காலை செய்தி பத்திரிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தார் . நான் மெளனமாக அவரின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன்

நான் நிகழ்த்திய எந்த நிகழ்வைப்பற்றியும் அவரின்  எண்ணத்தை எப்போதும்  கேட்ப்பதில்லை . சில நாள் கழித்து அது தானாக பிறிதெவர் வழியாக என்னை வந்தடைந்துவிடும் . முழு கவனத்துடன் முக்கால் மணிநேரம் படித்து முடித்து மெல்லிய பெருமூச்சுடன் என்னை நிமிர்ந்து பார்த்தார் . நான் முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது அவரை பார்த்தபடி இருந்தேன் . அந்த வெடி விபத்தை பற்றி விசாரித்தார் .என்ன பாதிப்பு யார்யாருக்கு என்னென்ன உதவி செய்யவேண்டுமோ அதை உடனே செய் என்றார். நான் சரியென்று எழுந்து கொண்டேன் . என்னை அமரச்சொல்லிவிட்டு சிறிது நேர அமைதிக்குப்பின் தான் நாளை சென்னை செல்வதாகவும் அந்த சிக்கல் குறித்து தொகுதி தலைவர் காலையில் பேசியிருந்ததை சொல்லி இன்று மாலை அலுவலகத்தில் அதை பேசிக்கொள்ளலாம் என்றார் . நான் கவலையுடன் அவரை பார்த்தபடி  இருந்தேன் . அவர் என்னை குற்றம் சொல்லும் தொனியில்லாது என்னை ஜாக்ரதைபடுத்தும் அறிவுரைகளை சொல்ல துவங்கினார் . அதில் என்ன பேசவேண்டும் என்கிற எந்த திட்டமும்  அதுவரை இல்லாதிருந்த எனக்கு என்ன பேசவேண்டும் என தோன்றிவிட்டது

நான் ஏன் இதை அரசியல் போக்கிலேயே எதிர்கொள்ளவேண்டும் , அந்த  சூழ்தல்முறை எனக்கு பழக்கமில்லாதது . அவர்கள் அதை தங்களின் அனுபவங்களின் வழியாக பலரை பலமுறை வீழ்த்தி கைவரப்பெற்றவர்கள் . என்ன என்ன சொல்லி ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்வார்கள் என்பதை முன்னிட்டே அவர்களின் கேள்விகள் தொடங்கும். அதை எந்த திக்கில் செலுத்தினாலும் கடைசியில் நம்மை மன்றாடும் நிலைக்கோ அல்லது அதை எதிர்த்து நிற்கவேண்டியே உணர்ச்சி பெருக்கிற்கோ  இட்டுசென்றுவிடுவார்கள் . இரண்டில் எது நிகழ்ந்தாலும் நான் தோற்றதாகி விடும்.எந்தவழியாகிலும் அந்த இங்குவந்தே முற்றுப்பெறும்

என்னால் எவரிடமும் எதற்காகவும் மன்றாடமுடியாது . எதிர்த்து நிற்பது எனக்கு இயல்பில் உள்ளது . அது பழைய பாணி . இங்கு எடுபடாது . அதை செய்வது அறிவீனம் . நான் என்ன பேசவேண்டும் என்பதை யோசிக்கும் முன்பாக தலைவரை யாரென எங்கு வைத்து பேசவேண்டும் என் தோன்றியது . அந்தக்கூட்டத்தில் நான் என்ன பேசவேண்டும் நான் முடிவெடுத்துவிட்டேன்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...