https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 7 செப்டம்பர், 2017

வெண்முரசு புதுவை கூடுகை -07



ஸ்ரீ :




பதிவு 256 /  07/09/2017

வெண்முரசு புதுவை கூடுகை -07
31-08-2017



“தீச்சாரல்” 








பௌராணிக முறையில் சொல்லப்பட்ட இந்த இதிகாசக்கதைகள் வெண்முரசின் கோணங்கள் இடைவெளிகளை தனது புனைவால் நிரப்புகிறது . அதன் அற்புதங்களை நவீன நடப்புகளுடன் ஒப்புநோக்கி அது சொல்ல விழைவதை அறிய முயறசிக்காது என்னால் அதனுள் புக இயலுவதல்லை . பலருக்கு அவை அனைத்தும் திடுக்கிடலையும் கசப்பையும் சில சமயம் வெறுப்பையும் தருவதாக இருப்பதும் , ஆழமான நம்பிக்கையை சீண்டுவதும் வலுவான அடித்தளங்களை உடைப்பதுமாக செல்லுகிறது என்கிற குற்றச்சாட்டும் அதைத் தொடர்நது பலர் அதை வழமையான பாதைக்கு திருப்ப மூலத்தில் ஆதாரங்களை காட்ட வலியுறுத்திக் கொண்டிருக்க வெண்முரசு அதை ஒதுக்கி கடந்து தனது பயணத்தை தொடர்கிறது . 

என் வரையில் இதுவரையில் அடிப்படையாக கொண்டதை கலைத்தால் மட்டுமே இவற்றை தனக்குள் தொகுத்துக்கொள்ள முடியும் என்பது அவசியமில்லாது . கலைத்துக்கொள்ளாமலேயே இவற்றை பௌராணிக மரபில் சொல்லப்படாத இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளுதல் மூலமாக நான் என்னை தொகுத்துக்கொள்ள முயலுகிறேன் . ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் ஒரு சிறு பகுதியை இதில் நுழைபதான் வழியாக , தன்னினும் மேலாக சுகனை வியாசர் கருதுகிறார் என்பது சொல்லப்பட்ட கருத்தே . அதை அதன் மற்றொரு பரிமாணமாக விரிவடையும் போதுதான் இந்தக் கூக்குரல் எழுகிறது. வியாசர் வெணமுரசு சொல்லுகிற  அடிப்படையில் தனது மனா சமாதங்களை அவர் அடைகிறார் என்பது இங்கு வலுவான தரப்பாக முன்னிறுத்தப்பட்டு மொத்த கதையின் விதையை இங்கும் கண்டடையலாம்  . 

இது பொருத்தமாகவே புனையப்பட்டுள்ளது . அதைவிட அற்புதம் ராமாயணத்தை இணைக்கும் மற்றொரு சேர்க்கை . வால்மீகியின் முதல் ஸ்லோகம் இறைவாழ்த்தாக இருக்கவேண்டி இருக்க .அது மிதுனமான கிரௌஞ்ச பட்சியை அடித்த வேடுவனை சபிப்பதான கண்ணீருடன் , வியாசரின் கண்ணீரை இணைக்கிறது . இரண்டு இதிகாசங்களில் அவை மானுட துயரை சொல்லவந்ததாகிறது. இரண்டு இதிகாச எழுத்தாளர்களும் ஒரே மாதிரியான திகைப்புடன் அதை தொடங்குகிறார்கள். என சாத்தன் வாயால் அதை வெண்முரசு சொல்லுகிறது.

வெண்முரசு தனது கோணத்தின் விதையை இங்கு விதைக்கிறது. இதில் அறிந்து கொள்ளவியலாது, ஜெ இந்த விதையை தான் விரும்பிய மரமாக வளர்தெடுக்கப்போகிறாரா?  அல்லது தானாக அது கிளைவிட , தனக்கான சித்தாந்த சௌகர்யங்களை அதில் இட்டு நிரப்புகிறாரா என்பது அவருக்கான சவால். அதை அறிந்து கொள்ளும் விழைவே என்னை விடாது , ஜெ வை வெண்முரசு மூலமாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். எப்படியானாலும் இனி வாழ்நாள் முழுவதும் வெண்முரசு ஒரு வழித்துணையாக இருக்கப்போகிது. 

இல்லறம் , அல்லது துறவறம் இது எதற்கு தான் அறுகதையானவன் எனபதை மிதிலையில் ஜனகன் மூலமா அறிவிப்பதற்கான பகுதியை . சிருஷ்டி தர்மத்தை வெளிய்ப்படுவதாக காட்டியிருப்பது உத்தாலகர் நிகழ்வை இணைப்பது மூலமாக வெண்முரசின் பயணம் பிரமிக்க வைப்பது . இந்த காரணங்களுக்காவே பல்நெடுங்காலம் வெண்முரசு நிவைக்கூற தகுந்தது .
மஹாபாரத இதிகாசம் ப்ரம்மவித்யை என்பார்கள் . அதன் இன்றைய நடைமுறையில் வைத்து புரிந்துகொள்ளுதல் ஒருகால் அதை பற்றிய தேடலே என்னை வெண்முரசையும் அதன் வழியாக ஜெயமோகனையும் அறிமுகம் செய்தது . ஆனால்அதன் பிறகு என்னை அவரது பிற எல்லா ஆக்கங்களையும் படிக்க வைத்து அவரது கூறுமுறை . அதன் அத்தனை வழியாகவும் வெண்முரசை அனுகினால் ஒருவேளை அவர் சொல்ல விழைவதை முழுவதுமாக அறிந்து கொள்ளலாம். அதிலிருந்து  ஒருநாள் நான் தேடுவது கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையை எனக்கும் அளித்தபடி இருப்பது . இதில் வேடிக்கையாகவும் விளையாட்டாக பல தகவலை தருகிறார் . 

தனது உணவாக அந்த பசுவை கொல்லும் சித்ரகர்ணி  தான் குஹ்யசிரேயஸ் அவியாக உணரும் தருணமும் எந்த மாறுபாடையும் அடையாது சமபுத்தியுடன் இருக்கிறது . மிருங்கங்களும் ஞானிகளும் காடுகளை தேடுவது இந்த நிகர்நிலை பேணுவதற்குத் தானா என நினைக்கிறேன் . வேத வியாசர் நடந்ததை தொகுத்தது தான் இந்த இதிகாசம் என்கிற பிரமையை உடைக்கிறது வெண்முரசு அதன் கூறுமுறை வழமை போல மற்றொரு கோணம் . சிருஷ்டி நியதி , மாறாத வன ஒழுங்கு , விழைவின் பெருக்காக ஷத்ரிய நியதி , தண்டனை நியதி , என்கிற நான்கு கால்களில் இந்த தீச்சாரலை அணுகுகிறது வெண்முரசு .

சத்தியவதி உடைவதன் கணம் பொறாமையாக இங்கு சொல்லப்படுகிறது .அம்பிகையை பார்த்து நின்றபோது அறியாமல் சத்யவதி நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது. இவ்வளவு துயர் கொள்ளுமளவுக்கு அவனிடம் எதைக்கண்டாள் இவள்? என்று அதுவே அவளை இரு முதியவர்களுக்கு மத்தியில் கந்தர்வனை பற்றிய சிந்தனையாக இங்கு சியாமையும் சத்தியவதியும் பேசிக்கொளகிறார்கள்.

|| பெண்ணின் தாகம் காணாததை நோக்கியே செல்கிறது.” சத்யவதி திகைப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு “ஆம், இவனை நானும் அறிவேன்” என்றாள். “இத அறிந்ததனால்தான் விசித்திரவீரியன் என்று பெயரிட்டேன்.”||

அவள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தவளாக. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்…என்கிற சிக்கலான இழையாக இதில் இணைகப்படுகிறது . இது முற்றிலும் புனைவு மட்டுமேயாக காணமுடியாதபடி இரண்டு சித்ராங்கதர்களின் பெயரும் அவர்களின் முடிவைப்பற்றிய வெற்றிடத்தில்  இந்தளவிற்கு செறிவான விதையாக உணரப்படுகிறது.
யாரும் பாரக்கவியலாத பெண்களின் வாழ்வில் நிறையும் கந்தரவனை இரண்டு முனிவர்கள் கண்டதாக சியாமை கூறுகிறாள் ஒருவர் தந்தை பிறிதொருவர் மகன். அவள் நெஞ்சு அந்தப் பேரச்சத்தை மீண்டும் அடைந்தது , தன் மைந்தன் கண்டுவிட்டானா என சியாமையிடம் வினவுகிறாள் சத்தியவதி .அவள் அஞ்சுவது வியாசனைத்தான் என்கிறாள்

|| “நான் அவனை அஞ்சவேண்டுமா? அவன் என் மகன்…” என்றாள் சத்யவதி. “ஆம், அதனால்தான் அஞ்சுகிறீர்கள்” என்றாள் சியாமை. “சியாமை, இவ்வளவு குரூரமாக இருக்க எப்படி கற்றாய்?” என்று சத்யவதி கேட்டாள். “நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?”|| முக்கிய விதையை சியாமை மூலமாக விழுந்துவிடுகிறது .

|| “யமுனைத்தீவில் அழகற்ற கரியகுழந்தையை மணலில் போட்டு குனிந்து பார்த்தபோது உங்கள் கண்களை அதுவும் பார்த்திருக்கும்” என்றதும் “சீ வாயை மூடு!” என்று கூவியபடி சத்யவதி எழுந்து அமர்ந்தாள்.||

அதன்பின் சத்யவதி “ஆம்! ஆம், உண்மை” என்று விசும்பினாள். “அவன் அறிவான். சியாமை இது அவனது தருணம்…..என் குலத்தில் இனி என்றும் வாழப்போவது அவனுடைய அழகின்மை” அதைத்தான் அஞ்சினேன்…” ||என்கிறாள்.அவள் அஞ்சியதைப்போலவே வியாசர் முகம் புன்னகையில் மேலும் விரிந்தது. “என் அழகின்மை அரண்மனைக்கு உகந்ததா அன்னையே?” என்றார். சத்யவதி அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி “அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது கிருஷ்ணா”என்கிறாள்.

முதலிரு நாட்களும் தனது காமமும் அகங்காரமும் கண்ணை மறைத்திருந்தன. மூன்றாம் நாள் முழுநிலவு. தான் முழுமையை அன்று உணர்ந்த தாகவும் . அன்றிரவு தன் சொற்கள் ஒளிகொண்டிருந்தன. அவை தொட்டவை அனைத்தும் ஒளி கொண்டன…” என்கிறார் .ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது.
பீஷ்மரிடம் தெளிந்த உள்ளத்துடன் இருக்கும் வியாசர் பிறகு பெரும் அகக்குழைவிற்கு உள்ளாவது காவிய குழந்தையின் பிறப்பிற்காக  “ஆணிமாண்டவ்ய முனிவரைப்போல நான் என் அன்னையால் கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறேன் எனகிறார். தீச்சொல்லிடவேண்டுமென்றால் தன்னைத்தான் இலக்காக்க வேண்டும் என்கிறார் . அதற்கான மீட்சியை  சிவை யின் வாக்கிய்த்தில் வைக்கப்படுகிறது “நடக்கும் அனைத்துக்கும் நாமறியாத இலக்குகள் உண்டு என்று தாங்கள் அறியாததா?” என்று . வியாசர் புன்னகைத்து “அதை அறியாத எவரும் மண்ணில் இல்லை. ஆனால் தீயன நிகழும்போது அதனால் அகம் எரியாதவர்களும் இல்லை. ஞானம் துயரத்துக்கு மருந்தல்ல என்று அறிந்தவனே கவிஞனாக முடியும்”என்கிறார்இந்த சமன்பாடு வியாசரின் மனவழுதித்தால் குலைக்கிறது , அதற்கு விடை தேடி தென்னகம் வரும் வியாசர் , சாந்தன் மூலமாக , தான் என்ன நினைவோடு தன் மகனை அணுகவேண்டும் என்கிற குறிப்புடன் அவர் விலகுகிறார்.

தனது மகன் சுகன் அதையே சொல்ல மஹாபாரதத்தை உருவாக்கும் விதைகளை ஊன்றியவர் , பின் அதன் வழியாக நிகழும் சம்பவங்களை தொகுத்து கொடுத்ததே மஹாபாரதம் என்னும் இதிகாசம் . அதை வரமா? சாபமா? என்கிற கேள்வியில் தொடங்குகிறார் .தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!” என்று

பிராமணர் சொன்னார். நெறிநூல்களின்படி எனக்கு ஒரு மைந்தனைப்பெற உரிமை உண்டு. அதற்கு நான் இவளைக் கொண்டுசெல்வதும் சரியே. மகனை ஈன்றளித்தல் பெண்ணுக்கு எவ்வகையிலும் இழிவல்ல, பெருமையே ஆகும். தொல்முறைப்படி ஓர் அரணிக்கட்டையை பதிலுக்குப் பெற்றுக்கொண்டு நீ இவளை விட்டுவிடு.

அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான்.
இந்த இடத்தை அடையும் முன்பு வியாசர் உடலைவிட்டு உயிர் பிரிவதுபோன்ற மெல்லிய துடிப்புடன் “ஆம்…” என்கிறார் . “தாங்கள் அனைத்தையும் அறியும் நுதல்விழிதிறந்தவர் சாத்தரே… குரு அறியாத சீடனின் அகம் என ஏதுமிருக்க இயலாது.” பெருமூச்சுடன் சற்றுநேரம் தன்னில் மூழ்கி இருந்தபின் “முதலிரு நாட்களும் என் காமமும் அகங்காரமும் கண்ணை மறைத்திருந்தன. மூன்றாம் நாள் முழுநிலவு. நானும் முழுமையை அன்று உணர்ந்தேன். அன்றிரவு என் சொற்கள் ஒளிகொண்டிருந்தன. அவை தொட்டவை அனைத்தும் ஒளி கொண்டன…” என்றார்.என்ன செய்யப்போகிறேன்?” என்றார் வியாசர். “அதை நான் அறியேன். ஆனால் பெருநிகழ்வொன்றின் தொடக்கத்தைக் காண்கிறேன். முதற்புலவன் புற்றுறைவோன் முன்பொருநாள் அன்புடன் அமர்ந்திருந்த அன்றில்பறவைகளில் ஒன்றை வேடன் வீழ்த்தக்கண்டு விட்ட கண்ணீருக்கு நிகரானது நீர் இப்போது விட்ட கண்ணீர்த்துளி” சாத்தன் சொன்னார்.அதை வியாசர் சுகனிடம் ,சுகதேவா, நீ நீதி சொன்ன அந்தக்கதையை இன்று தற்செயலாக நினைவுகூர்ந்தேன். நானறியவேண்டியதும் அதைப்போன்ற ஒரு முடிவே. குலநீதி சொல்லும் நியோகமுறைப்படியே நான் செய்தவை அமைந்தன. ஆனால் என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்றார்.கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.

-“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!”வியாசர் திடுக்கிட்டு “நானா?” என்றார். “என்ன சொல்கிறாய்?” சுகன் சிரித்தான். “ஆம், உன் சொல் காலத்தின் சொல்…அது நிகழும்” என்றார் வியாசர். பின் நடுங்கும் கைகளைக் கூப்பியபடி “ஆனால் சுகதேவா, இது வரமா சாபமா?” என்றார். அவர் அதை ஆஸ்தீகரிடம் தொடங்கினார் . 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்