https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 4 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 179 * மனவொழுங்கு *

ஶ்ரீ:




பதிவு : 179 / 253:தேதி :- 04 செப்டம்பர்   2017

* மனவொழுங்கு  *


தனியாளுமைகள் - 07”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


அன்று மாலை என்னை சந்திக்க சிலர் வந்திருப்பதாக என் அலுவலக வரவேற்பறையிலிடுந்து தகவல் வந்தது . நான் அவர்களை உள்ளே அனுப்ப சொன்னேன் . வியாபார நிமித்தமாக யாரவது இருக்கும் என்றுதான் நினைத்தேன் . ஆனால் அவர்கள் ஊசுடு தொகுதியிலிருந்து மூன்று பேர் வந்திருந்தார்கள் . நான் அவர்களை நன்கு அறிவேன் . அவர்கள் அன்றிலிருந்தே சண்முகத்தின் ஆதரவாளர்கள். நான் அவரிடம் சண்முகத்தின் செயல்பாடுகளை தீவிரமாக விமர்சனங்களை வைத்திருக்கின்றேன் . இருப்பினும் என்னிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர் . அவர்களில் ஒருவரை எனக்கு அணுக்கமாகத்தேரியும் . நான் முறைமை சொற்களுடன் அவர்களை வரவேற்று அமரச்சொன்னேன் . அந்த கலவரம் குறித்து ஏதாவது உதவி நாடி வந்திருக்கலாம் என் எண்ணினேன்.





எங்கு இருள் கலையாமல் தேங்கியிருக்கிறதோ அங்கே. சில மீன்கள் ஒருபோதும் ஒளியை அறியாமல் ஏரிகளின் ஆழத்தில் சேற்றுக்குள் வாழ்கின்றன. “விலகாத இருளென்பது ஒருவன் தன்னுள் இருந்து எடுத்துக்கொள்வதே.” என்கிறது வெண்முரசு நீர்க்கோளம் . தன்னை அறியாததும் விலகாத இருளே. எனக்கான சவாலை எதிர்கொண்டதும் , என்பாதை திறந்து கொண்டது . நான் எனது எதிர்கால அரசியல் அனுகுமுறை கண்டடைந்து இங்குதான் .

அன்று காலை என்னை வீட்டில் சந்தித்த குழுவை பாரத்ததும் , யாருக்கும் சிபாரிசு செய்யும் சூழலில் நான் இல்லை என்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது . இன்றைய சூழலில் நான் ஆற்றக்கூடியது ஒன்றில்லை . நான் தீடீரென தலைவரிடம் இவர்களை அழைத்து செல்லவியலாது . இரண்டு பக்கத்திலிருந்து சிக்கல் எழும்ஒன்று இவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவின் ஆட்கள் . பாலன் காலத்திலேயே எங்களுக்குள் சரியாக வராது . மேலும் இதை காந்திராஜ் பார்த்துக்கொண்டிருக்கிறார் . மேலதிகமாக நான் செய்யக்கூடுவது ஒன்றில்லை . அதை எப்படி அவர்களிடம் சொல்லுவது என் தயங்கிக் கொண்டிருந்தேன். அவர்கள் சொன்னது அன்று காலை வழக்கு விஷயமாக காந்திராஜை சந்தித்தபோது , காந்திராஜ் தலைவர் அவர்களை சந்திக்க விழைவதை சொன்னதும், அவர்கள் சென்று தலைவரை பார்த்திருக்கிறார்கள் . அவர் வழக்கு விஷயங்களை பேசிய பிறகு என்னைப்பற்றி விசாரிக்கத்துவங்கியதும் . அவர்கள் நான் இளைஞர் காங்கிரஸில் செயல்பட்ட முறைகளை அவரிடம் முழுவதுமாக சொல்லியிருக்கிறார்கள் . அந்த தகவலை எனக்கு சொல்ல வந்ததாக சொல்லிச்சென்றார்கள் . நான் சிறிது நேரம் என்னவெல்லாம் யோசித்து விட்டேன் என்கிற குற்றஉணர்வுடன் . அவர்கள் சொன்ன செய்தியும் சேர்ந்து கொண்டது . எதற்காக இருக்கும் என்கிற யோசனையில் அவரை அடுத்தநாள் சந்தித்தேன் .

தனது வழமையான உற்சாகத்துடன் அமரச்சொன்னார் . விரிவாக ஒன்றும் பேசிக்கொள்ள முடியவில்லை . யார் யாரோ வருவது போவதுமாக இருந்ததலால் அவரால் என்னுடன் தனிமையில் உரையாட முடியவில்லையோ என சிலமணிநேர காத்திருப்பிற்கு பிறகு , அவரிடம் சொல்ல ஒன்றில்லையோ என நினைத்து கிளம்ப எழுந்துகொண்டதும் ஒரு சிறு கைவிரல் அசைவு என்னை அங்கிரு என்றது . இரவு 9:00 மணியாகி அனைவரும் கிளம்பிச்சென்ற பிறகு என்னிடம் பொதுவாக பாலனை பற்றி பேசத்துவங்கினார் . நான் அவரது அணுகுமுறையை புரிந்து கொண்டேன் . அவர் சொல்ல விழைவைதை நேரடியாக சொல்லும் வழமை இல்லாதவர் . நாம் அதை புரிந்ததாக தொடர்ந்தால் அவரும் அதை தொடர்ந்து பேசுவார் . அன்று அவரோட பேசியதில் இளைஞர் அமைப்பை மறுபடியும் ஒருங்க சொல்லுவதாக இருந்தது.

என்னுடைய தொடர்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூடுகை மாநில கட்சி அலுவலகத்தில் நிகழ்த்த முடிவு செயதேன் . அனைவரையும் அழைப்பது என் முடிவு . அன்று மாலை 5:00 மணிக்கு கூடுகை துவக்கம் என ஒருங்கியிருந்தது நான் தலைவரை சென்று கூடுகைக்கு வருமாறு அழைத்ததும் அவர் , அதே பழைய அமைப்பின் காழ்ப்பிலிருந்தார் . அவர்கள் மரியாதை தெரியாத கூட்டம் நான் வேண்டாம் நீ நடத்து . என்றார் . இந்த கணக்குத்தான் , எதிலும் படாது பேசினாற்போலும் . நான் அவரை ஓரிருமுறை வற்புறுத்திவிட்டு , அலுவலகம் கிளம்பினேன் . அலுவலகத்தில் நான் எதிபாரதத்தைவிட கூட்டம் அபரிதமாக இருந்தது . நான் நேராக சூர்யநாராயணன் அறைக்கு சென்றேன் . அவர் மிகவும் மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்று கைகுலுக்கி மகிழ்ந்தார் . இது உங்களால் முடியும் என்று நான் நேற்று தலைவரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை . ஒரு நிகழ்வு பெரிய வெற்றியை அடையும் என்பதை கலைமுதலே உணர்ந்து விடுவேன் . அதுவே இன்றும் நிகழ்ந்தது . என்றார் . தலைவர் வந்ததும் துவக்கலாம் என்றார் . நான் தலைவர் வர மறுத்துவிட்டதை அவருக்கு சொன்னேன் , சிறிது திகைத்தாலும் . என்னிடம் நிகழ்வை துவக்கவேண்டாம் தலைவரிடம் நான் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார்

நான் கூட்டத்தை துவங்கி சிலரை பேச அழைத்து அவர்கள் பழைய நினைவுகளை அங்கு எடுத்து விரித்துக்கொண்டிருந்தனர் . என் அளவில் அது மிக முக்கியமானதொரு கூடுகை .அதன் உட்கூரை எவரும் அன்று அறிந்திருக்கவில்லை . சுமார் இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு கட்சி அலுவலகம் வந்திருக்கின்றார்கள் . இவர்கள் பாலனையும் கண்ணனையும் நம்பி சென்றவர்கள்  மிகச்சிலர் வெற்றி அடைத்திருக்கிறாரகள் . ஆனால் தோற்றவர்களின் எண்ணிக்கைதான் மிகுதி . அவரவர்கள் அளவில் வெற்றி தோல்வி எனபது அடையும் பதவியையும் அதனால் ஈட்டும் பொருளியலை அடிப்படையாகக்கொண்டது . ஆனால் அரசியலென்பது அதை குறிவைத்து நகர்வதல்ல. ஆளுமையை வளர்ப்பது , அதன் அடைப்படை மன ஒழுங்கினால் வடிவமெப்பது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்