ஶ்ரீ:
பதிவு : 195 / 271 / தேதி :- 22 செப்டம்பர் 2017
* செயலின் பிடிப்பதே தடுப்பதுமாக *
“தனியாளுமைகள் - 21 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-05
நான்அ ரசியலில் லட்சியவாத உந்துதலால் நுழைந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது . முதல் முறை நுழைந்தது முதிரா இளமை அனைத்தையும் தெரிந்து கொள்ள விழையும் ஊக்கம் . எல்லோரையும் ஈர்க்கும் அரசியல் என்னையும் கவர்ந்தது . இரண்டாவது முறை எனக்கு ஏற்பட்ட உலசிக்கலில் நான் சிதைந்து போகாது தொகுத்துக்க கொள்ளும் வழியாக அதில் மீளவும் உள்நுழைந்தேன். பிறகு மிக தாமதமாக புரியத்துவங்கியது என்னால் பிறிதெவருடனும் இயல்பாக பொருந்தி இருக்க முடியாது என்பதை . காரியம் சந்தித்துக்கொள்ளும் அவசரத்தில் எந்த இழிநிலையையும் பொறுத்துக்கொள்ளதலே அரசியலில் வாழும் வழி என எளிய மனுடத்திரள் என்னிடம் சொன்னபோது , அதை அவர்களே ரசிக்கவில்லை என்பதை பூடகமாக இருப்பதை நான் அறிய நேர்ந்தது . தங்களாலேயே சகிக்கமுடியாத அந்த முறைமையை பிரித்தெல்லோரையும் ஈடுபடுத்தி ஒற்றை திறலுக்குள் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள் . இது ஒரு அரசியலின் கீழ்மை . அரசியலில் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தாக வேண்டும் என்பது இயல்பானதாக இருந்தாலும் , அதிகாரத்திற்கு வந்து விட்டவரைகளை அனுசரித்து போகவேண்டும் என்கிற நிலையை ஏறக்குறைய எல்லோரும் எடுத்தனர். அதிகாரத்தில் இருப்பது , அதை எவன் வைத்திருந்தாலும் அவன் பக்கத்திலிருப்பது , என்கிற எளிய கொள்கையை தாங்கி நிற்பவர்கள் . அரசு அதிகாரமென்பது வேறொரு தளத்திலிருப்பது . நான் முற்றிலும் , அதற்கு நேர் எதிரான வேரொரு தளத்தில் இயங்குவதை அப்போது அறிந்து கொள்ள முடிந்தது .
லட்சியவாதத்திற்கும் யதார்த்தவாத அரசியலுக்கும் இடையில் நின்றேன் என் சொல்லலாம் . நான் லட்சியவாதம் நோக்கிய மனசாய்வு உள்ளவனாக என்னை புரிந்து கொண்டேன். அது முழு மூடத்தனம் என நிருபிக்கப்பட்ட அரசசியலில் அதை உச்சரிப்பது கெட்ட வார்த்தையாகிப்போனது. சண்முகம் தனது இளமையில் லட்சியத்தின் உயர் விழுமியத்துடன் உள்நுழைந்திருப்பார் . அங்கு துவங்கி தற்போதைய அரசியல் போக்கை பற்றிய அவரது மனநிலை என்னவாக இருந்திருக்கும் எனபதை அவதானிக்கும் வேலையை அவருடன் இருந்த கடைசீ மணித்துளி வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன் .
நம்மை பொறுத்தவரை அனுபவம் என்பது ஏதோ ஒரு காலத்தில் நமக்கோ அல்லது பிறிதொருவருக்கோ உபாயோகமானது என்பதே ஒரு வெற்று நம்பிக்கை போலும் . பல சமயங்களில் அனுபவங்கள் மனப்பதிவு மட்டுமே . அதைத் தாண்டி அதற்கென யாதொரு உபயோகமில்லையோ என்கிற திகைப்பு எழுவதை என்னால் தவிற்க இயலவில்லை . நவீன பள்ளி பாடத்திட்டத்தில் நான் கற்ற பல விஷயங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுவதேயில்லை , ஆனால் நவீன கல்வி முறை பெறுபுத்தியில் அது ஏதோ ஒரு பதிவை ஏற்படுத்துகிறது . அதைக்கொண்டு நடைமுறை வாழவியலில் அடையும் புரிதலை கொண்டு அவற்றை தொகுத்து ஒரு நிலையை அடைந்துவிடுகிறோம் .
மனித உணர்வுகளுடன் பிணைக்கப்பட்ட அரசியல் அவர்களின் போக்கை கொண்டு தங்களின் நிலைகளை மாற்றிக்கொள்வதும் , தங்களின் போக்கில் அடையும் மாற்றங்களை அவதானித்து அவர்களுக்குள் சிறு பேதம் உடன்பாடு பூசலலிருந்து எழும் முரணிக்கத்தின் விளைவுகளை கணிப்பதைத்தான் தங்களின் அரசியலாக கொண்டிருக்கிறார்கள் என்றார் சூர்யநாராயணன் , இதுதான் இந்தக்கட்சியில் அனைவரும் வந்தடையும் இடம் , இதுவே எவரையும் ஊக்கமில்லாது செய்துவிடுகிறது. அதன் பின் நடப்பவைகள் எல்லாம் தற்செயலகளின் தொகுப்புகள் , மிகக் கொடூரமான எதார்ததம் இது என்றார் . இதற்கு உடன்பட்டு அல்லது அதை மீறி செயல்பாடுள்ளவர்களை அது எல்லா நடவடிக்கைளையும் ஒத்திவைக்க அல்லது முடிவெக்க தயங்கும் நிலைக்கு அழைத்துவந்து விடுகிறது என்று கூறி சிரித்துக்கொண்டார் . அதன் பின் நடப்பதெல்லாம் முரணயக்கம் வழியாக நிகழும் தற்செயல் நிகழ்வுகளை தனக்கான அரசியலை கண்டடைவதும் அது மாற்றி தனக்கு சாதகமாக செதுக்குதல் ஒன்றுதான் அரசியல் வழிமுறை என்றாகிறது. எல்லா காலமும் இதையே செய்து கொண்டிருக்க முடியாது. எதிர்கால பார்வையை உள்ளடக்கி யார் வடிவமைக்கிறார்களோ அன்று இதுவரை இவரை மையப்படுத்தி இயங்கிய அரசியல் அவர்கள் பக்கம் சென்றுவிடும் . பின் அதை திருப்புவது என்பது எதிர்காற்றில் துடுப்பிடுவது.
அவர் சொன்ன இரண்டுமே எவரையும் செயல்படாத இடத்திற்கே நகர்த்தும் . பின் செயல்பாடுகள் என்பது , தற்செயல்களாக எழுந்துவரும் உதிரி அரசியல்களை தன்னை சுற்றி தொகுத்துக்கொள்ளுதல் மட்டுமே . தனக்கு ஆதரவு மற்றும் எதிர்நிலைகளை எங்கும் திரண்டு அடையாளம் காணப்படுவதை தவிர்க்க முயற்சிப்பதும் , தலைமை அனைத்தையும் அனுசரித்து நடந்து கட்சியை உயிர்ப்புடன் நடத்திச்செல்வது யார் அல்லது எதன் பொருட்டு , ஏன் என்கிற கேள்விகளுக்கு சூர்யநாராயனிடம் பதில்லை . தெரிந்தாலும் அவர் சொல்லப்போவதில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக