https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 184 * உயிரற்றப் பார்வை *

ஶ்ரீ:





பதிவு : 184 / 259:தேதி :- 10 செப்டம்பர்   2017

* உயிரற்றப் பார்வை *

தனியாளுமைகள் - 10”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் அதன் தலைமையை தாண்டி எனக்கான ஆதரவு தளம் எழுந்துவந்தபோதுதான் அதற்கான தேவைவும் பிறரின் விழைவையும் புரிந்துகொள்ள முடிந்தது  , அன்று அவை செயல்பாடுகள் என்கிற கோட்டை தொடும் நிலையில் இல்லை அது அன்று ஒரு சிந்தனைப்பெருக்கு மட்டுமே .அதற்கே பலன் அபரிதமாக இருக்கும்போது .அது நிகழுமானால் பெரிய தலைமுறை மாற்றத்தை கட்சிக்குள் கொண்டுவரும் என்கிற கனவு வலுத்ததனால் அது சீரழிக்கும் எந்த மாற்று முடிவிற்கும் நான்உடன்படவே இல்லை , அதன் விளைவு நான் இளைஞர் அமைப்பைவிட்டே வெளியேற வேண்டிய சூழல் உருவாக்கியது




நான் வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது அவருடன் இணைந்து செய்ய நினைத்தது ஏறக்குறைய இதைப்போல ஒன்றைத்தான். மூப்பனாருடன் நான் என்ன பேசினேன் .சொன்னதும் சொல்லாததும் என்ன என்பதை என்னால் பாலனுடன் கடைசீ வரை பகிர்ந்துகொள்ள இயலவில்லை .அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லைபாலன் என்னுடன் முரண்பட்டது இதைப்போன்ற ஒன்றை செய்யும் முயற்சியில் எனக்கு கிடைத்த வரவேற்பின்   காழ்பினால் . அதை தனது அரசியலுக்கான உரமாக மாற்றிக்கொள்ளும் ஞானமல்லாததால், வளர்பவனை ஒழிக்க நினைத்தார் . ஆனால் அதே விஷயத்தை நான் இங்கு செய்ய முயறசிக்கையில் சண்முகம் என்கிற ஆளுமை நான் தொடவிழையும் புள்ளிக்கு எனக்குமுன்பாக சென்றுவிட்டிருப்பார்

சில விஷயங்களில் எனக்கு பெரிதும் முரண்பட்டு வேண்டாமென்று சொல்லுவார் என்று நான் நினைக்கும்  முயற்சிகளை தொடங்கிவிட்டு பிறகு அவரிடம் சொன்னதுண்டு . கடுமையாக சப்தமிடுவார் ஆனால் நான் சென்ற பிறகு அதை செய்வதனால் எழும் சிக்கல்களுக்கு எனக்குமுன்பாக சரிசெய்யும் முயற்சியில் இருப்பார் . இளைஞர் காங்கிரசில் அன்று செய்யவியலாமல் விட்ட அதை இன்று இங்கிருந்து கொண்டு செய்வேன் என நினைக்கவில்லை.அன்று இளைஞர் அமைப்பிலிருந்து கொண்டு போராடியது அதற்கு தடையாக இருந்த காங்கிரஸ் அமைப்பையும் அதன் தலைவர்  சண்முகத்தை எதிர்த்துத்தான் என்பது இன்றைய முரண்நகை .

பாலன் மாநில காங்கிரஸ் தலைமையை தனது சீட்டுக்காக, பதவிக்காக எதிர்த்த போது  அதற்கு ஏறக்குறைய இதைப்போன்ற நிலைசக்திகளின் ஆதிக்கத்தின் மீது கொண்ட கோபத்தினால்தான். அன்று முதிரா இளமையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளைக்கொண்டு தலைவரின் பலம் என்று சொல்லப்படுகிற இந்த உட்கட்சி பொருளியல் சக்திகளை எதிர்த்து நின்றது , அன்று எங்களின் அரசியல் என்றானது .ஆனால் இன்று இங்கிருந்து அதைப் பார்க்கும்போது , மாநில தலைமையும்  அதே எதிர்நிலை சக்திகளுக்கு எதிராக வெளித்தெரியாத ஒரு  யுத்த நிலைபாட்டில் செயல்படுவது  புரிந்தபோது நான் அதிர்ந்து போனேன்

சண்முகத்தின் தலைமையின் கீழ் இருந்து கொண்டிருந்த பொருளியல் சக்திகளை  நான் மேற்கொண்ட சிறு சிறு விஷயங்கள் அவர்களின் அடிப்படையை அசைத்தபோது, நான் ஒரு பெரிய நிஜத்தை கண்டடைந்தேன் . அந்தப் பகுதிகளுக்கு மட்டுமல்லாது அவர்கள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பிற்குமே எதிரானவர்கள் என்று . நான் முயற்சித்தது எனது நெடுநாள் கனவு , அதை செயல்படுத்த முயன்ற போது எழுந்த கடும் எதிர்ப்பு எனக்கு பழகியதாக இருப்பினும் , அதன் விசையின் அளவைக் கூர்ந்த போது அவை  என்னைக்குறிவைத்து அல்ல என்பதை புரிந்து கொண்டபோது , சாட்டையின் நுனித் தொடுதாலாக நான் அதை முழுதுமாக உணர்ந்தேன்

அவை இந்த பொருளியல் சக்திகளின் இருபக்கமும் நிகர்நிலை பேணும் சாமர்த்தியம் ,அது எப்போதும் இரு சாராரையும் சம அழுத்தத்திலிலும் அதனால் விளையும் பதட்டத்திலேயும் நிரந்தரமாக வைத்திருக்கும் . பலகாலமாக செயல்பட்டுவந்து இந்த முறையை எளிதில் அகற்றிவிட முடியாது . அது பெரிய அரசியல் விடுதலையையும் , சீரமைப்பிருக்கும் அறைகூவுவது

இப்போது என்னமோ நிகழ்ந்து நான் தலைமையின் நேரடி பார்வையில் வந்து சேர்வேன் என அவர்கள் மட்டுமின்றி நானும் நினைத்திருக்கவில்லை . அப்படி ஒன்று நிகழ்ந்த பிறகு , நான் எனது கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கத்துவங்கினேன் . அதன் முதல் நகர்வே இந்த கொடியேற்ற விழவு . இதில் வேடிக்கை நான் யாருடைய மீட்சிக்கு இவற்றை செய்தேனோ அது அவர்களை வெகுகாலம் பிறகே சென்று தொட்டது .ஆனால் என் எதிர்நிலைபாட்டாளருக்கு இந்த விழவு நாள் குறிக்கப்பட்ட அன்றே சென்று சேர்ந்ததுடன் , அதை முதல் நிலையிலேயே கெல்லி எறியும்  முயற்சிகள் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு செயற்படுத்த காத்திருப்பதை அங்கு சென்ற பிறகுதான் அறிய நேர்ந்தது .இது நான் மனதளவில் எதிர்பார்த்ததுதான் , ஆனால் அதற்கு  சிறிது நாளாகும்மென நினைத்திருந்தேன் . எதிர்ப்பின் விசையின் வேகம் நான் சரியான பாதையில் செல்வதாக சொன்னது.

காலை தொடங்கிய நிகழ்வு மதிய உணவிற்கு பிறகு சற்று ஓய்வும் அதன் பிறகு நிகழ்வு தொடங்குபடியாக நான் வடிவமைத்திருந்தேன். அன்று காலை எனக்கு கிடைத்த தகவல் மதிய உணவின்போது சிலர் கலவரம் நிகழ்த்த திட்டமிடபட்டிருபதாக . நான் பதட்டமானேன்என்னுடைய அரசியலென்பது அதிகாரத்தை நம்பாமல் கடசிக்கோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் ஊர்ப்பொது அமைப்பிற்கோ  உள்ளே செயல்படும் கருத்தியலின் ஆற்றலை நம்பிச் செயல்படுவதே . நான் அவர்களிடையே அதை எப்போதும் கொந்தளிப்பாக வருத்தமாக அவர்கள் கொண்டிருப்பதையும் அதை வெளியிருந்து வரும் அதிகாரமிக்க ஒருவரால் செய்யக்கூடியது என்கிற எண்ணத்தைத்தாண்டி அதன் உட்கூறுகளில் அவற்றை செய்யும் ஆற்றல் உறைந்திப்பதை அவர்கள் அறிவதில்லை . தங்களின் அனுமதியோடேயே அவர்கள் அங்கு அமரந்து தங்களை பார்க்கிறார்கள் என நம்புகிறார்கள் . உயிரற்ற அதற்கு அச்சமே கண்ளென்பதை அறிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்