https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 6 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 181 * நிழல்களின் நிறுத்தம் *

ஶ்ரீ:




பதிவு : 181 / 255     தேதி :- 06 செப்டம்பர்   2017 


* நிழல்களின் நிறுத்தம் *


தனியாளுமைகள் - 09”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


மெல்ல அந்தந்த பகுதிகளின் மூத்த நிர்வாகிகளுடன் எங்கள் கூடுகை நிகழ துவங்கியது. முதலில் மூத்த நிர்வாகிகள் இதை தடுக்கத்தான் முயற்சித்தனர் . தலைவருடன் எனக்கான நெருக்கம் அவர்களது முயற்சிகளை ஒன்றுமில்லாது செய்துவிட்டது . சரி செய்யமுடியாத இடங்களில் மாற்றுதலைமையை வைத்து நடத்த முயற்சித்தும் அவர்கள்  தானாக வரத்துவங்கினர் . இதில் நான் எதிர்நோக்காத ஒன்று அந்த இரண்டு அமைப்பும்  விரைவில் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியது . நான் மாநில அரசியலில் கவனம் குவிக்க துவங்கிய போது  ஒரு வலுவான அமைப்பாக அது உருமாற்றமடைந்திருந்தது . சரி செய்ய முடியாத மூத்த நிர்வாகிகள் எதிர்ப்புநிலை நிரந்தரமாக மாறினாலும் அவர்களால் உருவாகிவந்த புது அமைப்பை ஒன்றும் செய்ய இயலவில்லை.





பாலன் கட்சியை விட்டு வெளியேறிய பின் அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சிகள் ஏதும் துவங்கப்படாத நிலையில் , முன்னாள் மாணவர் காங்கிரஸ்தலைவர் " நாராயணசாமி" தனது பதவிக்காலத்தில் தில்லியின் அகில இந்திய மாணவ அமைப்பின் தலைவர்களில்   அறிமுகமாகியிருந்தவர்கள் தான் பலர் இப்போது இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பிலிருந்தனர் . அவர்களை கொண்டு தன்னை அடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் மறைமுக வேளையில் ஈடுபட்டிடுந்தார் . அதற்கு மரைக்காயரின் ஆதரவும் இருந்திருக்கலாம் . சில முறை தில்லி சென்று திருப்பியவர் அதை நல்ல தொடர்பில் வைத்திருந்தார்

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டா . சண்முகத்தின் மீது கசப்பிலிருந்தார் . அதற்கு பல  காரணங்கள் . அவர் புதுவைக்கு வந்தபோது அவருக்குரிய முறைமைகளை சண்முகம் செய்திருக்கவில்லை . இளைஞர் காங்கிரஸ் மாநாடு தனுக்கு எதிராக தன்னை அவமதிக்கும் விஷயம் என்றும் தன்னை மூப்பனார் கலந்தாலோசிக்கவில்லை என்கிற கோபத்தில் இருந்தார் . அது நிஜாமும்கூட   பிட்டா மூப்பனாரின் அணுக்கர் என்பதால் அவருக்கும்  முரண்பட்டார்  பிட்டாவை அவர் மதிக்கவேண்டிய அவசியமில்லாது போய்விட்டது  . தேர்தல் நேரத்தில் பாலனுடைய வெளியேற்றம் சண்முகத்தால் நிகழ்ந்ததென்கிற உளப்பதிவில் பிட்டா இருந்தார். பாலனின் அந்த மாநாடு அவரை மனதை வென்றிருந்தது . பாலனின் போதாமையும் , உண்மைநிலையையும் அறிந்து கொள்ளும் இடத்தில் பிட்டா இல்லாததே அதற்கு காரணம். . நிர்வாக கூட்டம் நிகழ்ந்திருந்தால் அன்று உண்மைநிலை பிட்டா அறிந்துகொண்டிருப்பார் , தனது உளபதிவின் அடிப்படையில் சணமுகத்திடம் பெரிய முரண்பாட்டை அடைந்திருந்தார்.

பிட்டாவிற்கு நல்ல தலைமை புதுவைக்கு வரவேண்டுமென விழைவிருந்த நேரத்தில் அவரை தொடர்பு கொண்டிருந்த நாராயணசாமி மிகச் சரியான நபராக தெரிந்தார் . அவர் சண்முகத்திற்கு எதிரானவர் என்பது அவரின் கூடுதல் தகுதியாக பார்க்கப்பட்டிருக்கலாம் . சில நாட்களுக்கு பிறகு நாராயணசாமிக்கு தில்லி வரும்படி அழைப்பு வந்தது . அவர் தலைவராக நியமிக்கப்படும் எல்லா வாய்ப்பும் இருந்தது . ஆனால்   ஊழ் அவர் பிரயாணப்பட்ட ரயிலில் சண்முகத்தின் அணுக்கர்  வல்சராஜும் ஒரு பயணி . ஒருவரையொருவர்  சந்தித்து பேசிக்கொண்ட போது , நாராயணசாமி உற்சாக மிகுதியில் தனிலைமறந்து  தனது தனிப்பட்ட சாதனையாக , தில்லிருந்து வந்திருந்த கடிதம் பற்றி சொல்லிவிட , அதுவே அவரை அறுக்கும் வாலென கிளம்பி சண்முகம் மூலமாக வல்சராஜ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்

சில நாட்கள் கழித்து அதற்கான அறிவிப்பை சண்முகம் தனது வீட்டில் வெளியிட்டார் . அருகிலிருந்த  என்னை அழைத்து . வல்சராஜூடன் இணைத்து கட்சி வேளைகளை செய்யும்படி சொன்னார்நான் சரியென்று சொல்லி வெளியே வந்தேன் அங்கு எனக்காக வல்சராஜ் காத்திருந்தார் . நான் மரியாதையை நிமித்தமாக அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னபோது நாம் இணைந்து செயல்படலாம் என்றும் தன்னை வந்து சந்திக்க சொன்னார் . எனக்கும் அவருடன் இணைந்து செயல் பாடுவதில் உடன்பாடே . புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு அவர் எனக்கான மரியாதையை தரும் வழங்கும் வரையில் இணைந்து பணியாற்றுவது செய்யக்கூடியதே . நான் தலைவரை தினசரி சந்திப்பதை போல வல்சராஜையும் சந்திக்க துவங்கினேன்

புதுவையின் நிலவமைப்பு மிகவும் விசித்திரமானது , இதைப்போல பிறிதொரு மாநில அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா எனத் தெரியவில்லை . இந்தியாவை பல நாட்டிலிருந்து வந்து ஆக்கிரமித்த காலகட்டத்தில் பிரிட்டிஷன் நுழைவு பெரிதாக இருந்தது பிரெஞ்சு மற்றும் போர்திக்கீஸ் நாடுகளால் சிறிய பகுதிகளை ஆக்ரமித்த இருந்தது . இந்தியாவின் பெரும் பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷ் பிற நாட்டின் ஆக்கரமிப்பைகளை அவர்களே கைப்பற்றியிருக்க முடியும் ஆனால் உலகளவில் அது எதிர்வினையல் கொண்டுவிடும் என்பதால் அவர்களுக்குள் சர்ச்சையை வராமல் பார்த்துக்கொண்டனர். பிரெஞ்சு இந்தியாவிற்குள் பலபகுதிகளில் நுழைந்தது புதுச்சேரி,மாஹி ஏனாம் சந்திரநாகூர் போன்றவை . மாஹே கேரளாவிலும் ஏனாம் ஆந்திராவிலும் சந்திரநாகூர் வங்காளத்திலும் இருந்தது . காரைக்கால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கிடைத்தது ஒரு ஏமாற்றுவேலை . தஞ்சை அரசரின் ராஜ்ஜிய மீட்பிற்கு பிரெஞ்சு உதவிக்கு விலை காரைக்கால் ஆனால் பிரெஞ்சு உதவி இல்லாமலேயே தஞ்சை உள்ளோர் படைத்தளபதி மூலமாக நடந்தேறினாலும்  ஒரு கட்டத்தில் பிரெஞ்சு அரசாங்கம் காரைக்காலை மிரட்டி வாங்கிக்கொண்டது.

மாஹே கேரள நிலங்களை சூழ்ந்த பகுதி வல்சராஜ் இந்தப்பகுதியை சேர்ந்தவர் . கேரள பாணி அரசியலில் எழுந்து வந்தவர் , புதுவையில் காங்கிரஸுக்கு பிரதான எதிர் கட்சி என்றால் அது திமுக மற்றும் அதிமுக . ஒன்றுடன் கூட்டணி அமையுமானால் பிறிதொன்று எதிர்நிலைக்கு செல்லும் . ஆனால் மாஹே பகுதி கேரளா அரசியலை ஒட்டி அதன் பிரதான எதிர் கட்சி இடதுசாரிகள் . அவர்களுக்கு புதுவை அரசியல் ஒரு இளிவரலை போல தோன்றுவதால் , இதிலிருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் . வல்சராஜுக்கும் தனது கேரளா தான் நாடு என்கிற மனோபாவம் எப்போதுமிருக்கும்இங்கிருந்து ஒருநாள் பயணம் மாஹே . தேர்தல் களம் மிக சிக்கலானது . அது அவரை பெரும்பாலும் மாஹேவிலேயே இருக்கும் படி நேர்ந்துவிடும் . அப்போது இங்கு இளைஞர் காங்கிரஸ் தலைமை இல்லாதபோது மாற்றுத்தலைமை அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்