https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 23 செப்டம்பர், 2017

வெண்முரசு புதுவை கூடுகை 08

ஶ்ரீ:


பதிவு : 272 / தேதி 23 செப்டம்பர் 2017
வெண்முரசு புதுவை கூடுகை 08
தலைப்பு தழல் நீலம் 
( அத்தியாயம் 35 - 38 )




சிந்தனையின் செயல்பாடு ஒரு தொடர்ச்சியை கொண்டிருக்கிறது , நாம் அதை நம் முன்தலைமுறையிலிருந்து பெற்று அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு இடைநிலை  , அது ஒருவித ஆழ்மனப்படிமத்தின் செயல்பாடுகள். விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது என்கிறார் ஜெ ஒரு கட்டுரைத்தொகுப்பில் .

முதற்கனல் வெண்முரசின் மற்ற நாவல்களிலிருந்து சொல்முறையில் வேறுபடுகிறது . அதிமானுஷமாக வரும் இடங்களிலெல்லாம் ஜெ பெரிதும் மெனக்கெடுகிறார் , பின்வந்த நாவல்களில் சூதர் பாடல் கனவு போன்ற பலவித முறைகளில் தான் சமாதானமடையாத விஷயங்களில் அவற்றை பிறிதொருவரின் கூற்றாக சொல்லிச்செல்கிறார் . உளவியலும் தத்துவமும் அவரின் நிலைப்பாட்டிற்கு பெரும் உதவிபுரிவதுடன் , மகாபாரதத்தின் ஒழுங்கு தற்கால பார்வைக்கு விரோதிக்காது கொண்டுசெல்கிறார் . எல்லா கதாபாத்திரத்திடமும் ஒரு போதாமையை சொல்வது வாசிப்பில் வழமைபோல திடுக்கிடலை ஏற்படுத்தியபடி செல்கிறது. சிகண்டியின் பரிணாமம் சொல்லப்படுகிறது . அவருக்கேவுரிய பாணியில் . வியாசபாரதத்தில் அம்பிகையின் மறுபிறப்பாக சொல்லப்படும் சிகண்டி இதில் அம்பையின் மகனாக சொல்லப்படுகிறான். அங்கு ஏன் இருபாலணமாக சொல்பட்டது என்கிற கேள்விக்கு விடைபோல ஜெ வேறுமுறையில் கையாள்கிறார்.

|| வெண்பட்டுவிதானம் விரிந்த பந்தலில் அவள் அவனுக்கு மாலையிட்டாள். நிலா எழுந்த சாளரம் கொண்ட அறையில் அவனுடன் இருந்தாள். யானையை அள்ளிஓடும் வல்லமை கொண்ட உள்ளோட்டங்களுடன் அசையாது நிற்கும் பாவனை காட்டும் பெருநதியில் நீந்தித்திளைப்பவளாக அவனை அறிந்தாள். அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள். முலைசுரந்து வழிகையில் மீண்டும் சாளரவிளிம்பில் நின்று அவன் வந்திறங்குவதைக் கண்டாள். மீண்டும் மீண்டும் அவனை அடைந்தாள் || 

பீஷ்மரை கனவில் மனந்து சிகண்டயை மானசபுத்திரனாக அடைவதாக வெண்முரசு சொல்ல வருகிறது . தந்தையின் திறன் நிறைந்த கூர்கொண்ட பகுதி மகனென்றாகிறது என்பது  , சரீரத்தை ஒட்டி மட்டுமல்லாது மானச வியாபாரமூலமும் அதை அருளினாலும  , கடத்திட மற்றும் பெற்றிட முடியும் அதற்குறிய தொன்மம் நம்முள் உறைகிறது என்கிறது வெண்முரசு . சிந்தனை ஒரு தொடர்ச்சியானது அதை நாம் வருங்காலத்திற்கு கடத்தும் ஒரு ஊடகம் மட்டுமே என்பது ஜெ யின் கருத்தாக இருக்கிறது.

ஒரு பித்தியிடமிருந்து மற்றொரு பித்திக்கு இடையில் வராஹ சம்பந்தபடுகிறது குறியீடாக புறத்தில வெறுப்பும் அகத்தில் விருப்பும் எல்லாவிடங்களிலும் ஒருங்கே சிகண்டி வரவேறகப்படுகிறான்.

நனவுலகில் அம்பிகை  கண்விழித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கி எறிகிறாள். முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருக்க .அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைக்கிறாள். அனிச்சை செயலாக .அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைகிறாள். அம்பையின் புறவயத்தொடர்பாகவும் இது விரிந்தபடி இருக்கிறது.

தான் தனது உயிரை விடுவதைப்பற்றிய மிரட்டலை பீஷ்மர் இக பர லோகங்களை அடைய அவள் தன்னுடைய தந்தை ,கணவன் மற்றும் மகனை சார்ந்தே இருக்க முடியும். நீரள்ளி விடும் இம்மூன்றும் அவளை தங்களுக்கானாதா கூறுகிறார் . இந்த மூன்றையும் கடைசியில் கடக்கிறாள் அம்பை. அனைவராலும் கைவிடப்பட்ட பிறகு தார்மீக ரீதியில் காசியிலேயே வசிக்கிறாள் . சிகண்டியையும் அங்குதான் பெறுகிறாள்.

காசிமன்னர் பீமதேவரின் பட்டத்தரசி மறைந்து நீர்க்கடன் நிறைவடைந்துவிட்டதென்றும் அவர் வங்கமன்னனின் இரண்டாவது மகளை மணந்து அவளை அரசியாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசிக்கேட்கிறாள், அதன் விளைவாக அந்த உரிமை இழந்ததாகிறது . பின் தனது முடிவை நோக்கி புறப்படுகிறாள்.தனது வெஞ்சினத்தை மகன் மூலமாகவும் , நீர்கடனை தனது சகோதரனாகிய நிருதனிடமும் கேட்டு பெற்ற பிறகு எரி புகுகிறாள்

வராஹம் ஒரு குறியீடுயாக இந்தப் பகுதி முழுவதுமாக வருகிறது . புறவயத்தில் அருவருக்கத்தக்கதாகவும் அகவயமாக அனேக மங்களமானதாக உணரப்படுவதினாலேயே அது செல்லுமிடமெல்லாம் வரவேற்கப்படுகிறது . அதன் பாடமாக எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின.

பேரன்னசாலையின் பின்பக்கம் அன்னையும் அவளும் உண்ணும்போது முன்பக்கம் அரண்மனைச் சேவகர்கள் வந்து குறுமுரசறைவித்து அன்றிலிருந்து பதினைந்துநாள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என அறிவித்தன. அம்பையின் அன்னை புராவதியின் எண்ணத்தின் வெளிப்பாடு அதை பூர்தி செய்து பின்னர் காலியிலிருந்து வெளியேறுகிறாள்.

காசியிலிருந்து வழக்கம்போல மீண்டும் கங்காத்வாரம் நோக்கிச் செல்லாமல் கீழ்த்திசை நோக்கி செல்லத்தொடங்கினாள் அன்னை

நிருதன் என்னும் அந்தத் தோணிக்காரன் என்றோ ஒருநாள் அவள் திரும்புவாள் என்கிற உள்ளுணரவில் அங்கேயே தங்கிவிடுகிறான்  அவன் அம்பைக்காக காத்திருந்தான்

அஸ்தினாபுரி காட்டுப்பகுதியில் முற்றிலுமாக தன்னை அம்பை அங்கு தொகுத்துக்கொளகிறாள் .அங்கிருந்த சிறிய பாறையில் அமர்ந்தவள். வழக்கம்போல முன்னும் பின்னும் ஆடாமல் தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்

நிருதன் அருகே சென்று வணங்கியதும் அவன் அவள் சொல்வதை புரிந்துகொண்டதுபோல தலையசைத்தபின் காட்டுக்குள் சென்றான். சற்று நேரத்தில் உலர்ந்த மரம் ஒன்றை இழுத்துவந்தான். அதை கற்பாறைகளால் அடித்து ஒடித்து சுள்ளிகளாக ஆக்கி அந்தப் பாறைமேல் நீளமாக குவிக்கத்தொடங்கினான். அதை பொருளறியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிகண்டினி ஏதோ ஒரு தருணத்தில் புரிந்துகொண்டு திகைப்புடன் எழுந்து நிற்கிறாள்

தன்னை உணர்நத்ததும் கண்களுக்குள் வாசல் திறந்தது. சிகண்டியின் தோளைத் தழுவி இடையை அடைந்து நின்றது கரம். “மகனே சிகண்டிஎன்றாள் அன்னை

தெய்வச்சிலை கண்திறந்து பேசியதைக் கண்டவள் போலிருந்த சிகண்டினி அன்னையின் உடலை நெருங்கி நின்றுஅன்னையே நான் பெண்என் பெயர் சிகண்டினிஎன்றாள். இல்லை இல்லை என்பதுபோல தலையசைத்தாள் அன்னை. “சிகண்டிநீ சிகண்டிநீ என் மகன்என்றாள்.

ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதிஇப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள்.

சிகண்டி திரும்பி காட்டுக்குள் சென்றான். கொடிபின்னிச்செறிந்த அடர்காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கோ அக ஆழத்திலிருந்து அவன் செல்லவேண்டிய இலக்கை கால் அறிந்திருந்தது என நடந்தான். ஸ்தூனகர்ணன் ஆலயத்தை அடைகிறான்

அவனது ஒருமுகப்பட்ட மனதினால் ஸ்தூனகர்ணன் பல்வேறு வடிவில் அவனை எச்சரித்து பின் மூதன்னை வடிவில் தோன்றிய ஸ்தூனகர்ணன்நீ என் புதல்வி. உன்னிடம் இறுதியாகச் சொல்கிறேன். உன் வாழ்நாளெல்லாம் ஒரு நற்சொல்லைக்கூட நீ கேட்டறியமாட்டாய்என்றாள். “நான் அதை எதிர்நோக்கவுமில்லைஎன்று சிகண்டி பதில் சொன்னான். துயரம் நிறைந்த புன்னகையுடன் ஸ்தூனகர்ணன் தன்கையை நீட்டினான். அதில் ஒளிவிடும் வைரம் ஒன்றிருந்தது.

அவன் ஆணைப்படி அதை வாங்கி விழுங்கிய சிகண்டி தனக்குள் அதன் கூரியமுனைகள் குத்திக்கிழிப்பதன் வலியை அறிந்தான். அவனிடமிருந்து ஒழுகிய குருதி அந்தத் தடாகத்தில் நிறைந்தது. அவனுக்குள் காலம் பொறித்திருந்த குழந்தைகள் துடிக்கும் சதைத்துண்டுகளாக, மெல்லிய வெள்ளெலும்புகளாக, மென்கரங்களாக, குருத்துக்கால்களாக, பூவிரல்களாக வெளிவந்து குளத்தில் தேங்கின. அவற்றின் பதைபதைத்த கண்கள் மீன்களாக குருதிநீரில் துள்ளின. அவற்றின் அழுகை வண்டுகளின் ஒலியென அவனைச்சூழ்ந்தது. கடைசியாக அவன் கருப்பை தோலுரிந்த சர்ப்பம் போல வெளியே வந்து குருதிச்சுழிப்பில் விழுந்து அமிழ்ந்தது. அதில் தோன்றிய ஸ்தூனகர்ணன் துயரம் நிறைந்த புன்னகையுடன் மறைந்தான். நிகழவிருக்கும் அனைத்து பிறப்புகளும் அழிந்து போவதாக சொல்லப்படும் இப்பகுதி புனைவை உச்சத்திற்கு கொண்டுசெல்வதுடன், மறுபிறப்பு எய்தும் அம்பை ஏன் இருபாலாண அடையாளத்துடன் பிறக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகிறது. அவள் பலநூறு ஆண்டுகள் தவமியற்றுவதாக அனைத்திலும் தொன்மத்தை கொண்டுவரும் இதிகாசப்புரிதல் நேர்செய்யப்படுகிறது. அனைத்து அதிமாநுஷ நிகழ்வுகளை , ஒரு காலகட்டத்திற்கு உட்பட்டதாகிறது.

பன்னிரண்டாவது நாள் மெலிந்துலர்ந்த உடல் வற்றிய கால்கள்மேல் நிற்கமுடியாது ஊசலாட, குகைச்சுவர்களைப் பற்றியபடி நடந்து வெளிவந்தான் சிகண்டி. அருகே நின்ற கிழங்கொன்றைப் பிடுங்கித்தின்றபோதுதான் தன் வயிற்றை, அவ்வயிற்றை ஏந்திய உடலை, அவ்வுடலில் வாழும் தன்னை உணர்ந்தான். நீர் அருந்துவதற்காக அங்கிருந்த ஓடைச்சுனையில் குனிந்தபோது தன் முகத்தைப்பார்த்தான். அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான். கர்ப்பப்பை வெளிவந்தவுடன் அவள் தான் முழு ஆணாகிறாள் . பாலிணமென்பது மனம்சார்ந்ததே .



கிருபாநிது அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...