https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 13 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 186 * அனுபவத் துல்லியம் *

ஶ்ரீ:





பதிவு : 186 / 261; தேதி :- 12 செப்டம்பர்   2017

* அனுபவத் துல்லியம் *


தனியாளுமைகள் - 13 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


அரசியலில் எனக்கென ஒரு நியாயமுண்டு , ஒரு நிகழ்வு அதிர்ச்சியையோ , ஆச்சர்யத்தையோ கொடுக்குமானால் நீ அந்த துறைக்கு லாயக்கில்லை என்பது. எல்லாவற்றையும் எதிர்நோக்கியிருக்கவேண்டும். எனக்கான பாதையை அதன் வசீகரிக்கும் சவால்களை முடிவுசெய்கின்றன. அவை என்னை எப்போதுமே விளிம்பில் கொண்டு நிறுத்துபவையாக இருந்திருக்கின்றன. துளிர்ப்பவையும் அழிபவையும் விளிம்பில் வாழ்பவை .




சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த இருபதைந்து வருடங்களில்தான் காந்தி ஏற்படுத்திக்கொடுத்த அரசியல் பாணி அதன் அடிப்படை விழுமிங்களை காங்கிரஸ் கட்சி அழுத்தமாக வேரூன்றி வளர்க்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸை பெருநிலக்கிழார்கள் கைப்பற்றினார்கள். இதற்கு எதிரான சக்திகளாக சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் தங்களை அதிலிருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொண்டார்கள் . மார்க்சியத்தை ஒரு தரிசனமாக ஆச்சரியத்துடன் உருவகப்படுத்துகிறார் திரு.ஜெயமோகன்திரு.பாவண்ணன் அவர்கள் சொல்லுகிறார்  அதை நமக்கு  கொண்டுவந்து  கொடுக்கும்  மார்க்சீயர்கள் அவற்றை ஒருபோதும் படிப்பதில்லை என்கிறார் வேதனையோடேஆளும் அமைப்பும் அதை கண்காணிக்கும் எதிர் அமைப்பும் திரிபடைந்த நிலையில் . தன்னை நிலைகொள்ள எதையும் செய்வது , ஒருவகைஅரசியல்சரிஎன்கிற நிலைகாளகிப்போனது . அதைத்தான் அவர்கள் அரசியல் என்கிறார்கள் .

அரசியல் நிலைகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள புதிய முயற்சிகளை தோற்கடிப்பதன் வழியாக அதிகாரம் பிறிதெங்கும் வழிந்து சென்றுவிடாது பார்ததுக் கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்குவதில்லை . இந்த கலவர திட்டமும் அப்படிப்பட்ட ஒன்று  . தங்கள் தாக்குதல் திட்டம் நடைபெற்றால்   இருபிறிவினரிடையே உள்ள கசப்பை மற்றொரு முறை உறுதி செய்துவிடும் . அவர்களை தங்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் மட்டுமே நிலைமையை  கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்கிற செய்தியை மாநில தலைமைக்கு மற்றுமொரு ஓங்கிச்சொன்னதாகிவிடும். இனி அடுத்த தேர்தலில் யாருக்கும் சீட்டு என்பதில் தொடங்கி உள்ளூர் கோவில் அறங்காவளர் பதவிவரை அவர்களின் கருத்தே இறுதி என்கிற அதுநாள் வரை இருந்துவந்த எழுதப்படாத மரபிற்கு  மற்றொரு காலநீட்டிப்பு வழங்கி புதுப்பிக்கப்பட்டுவிடும்.

கொடியேற்ற நிகழ்சசி நிரலின் கடைசியில் உள்ள அரியூர்,பங்கூர் மற்றும் ஆனந்தபுரம் பகுதிகள் சில மாதம் முன்பு வன்முறை  நிகழ்ந்த இடங்கள் . இந்த விழவை அங்கு கொண்டு சென்று  முடிப்பதாக திட்டமிட்டிருந்தேன் அங்கு இரவு பொதுக்கூட்டம் நிகழ்வதன் மூலமாக அப்பகுதி மக்களின்  நம்பிக்கை மீட்டு அளிக்கும் திட்டம்தான் இந்த விழவின் மையக்கருவே. அது நிகழாது போனால் அதைச்சார்ந்து  என்னால்  முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிப்போகும் .  தற்போது கலவரம் நிகழ்ந்து அது உட்கட்சியின் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்திவிட்டால் அதன் தார்மீக பலத்தை ஒன்றுமில்லாத்தாக்கிவிடும் .

கலவர நோக்கத்தோடு இருந்தவர்களுக்கு மதிய உணவிற்கான இடமாற்றம் செய்த தகவல் சென்று சேர்ந்ததும் , தங்கள் இடம் நிரலில் இருந்து நீக்கப்பட்டதாக சந்தேகமடைந்தனர். அதை விசாரிக்க கிளம்பிய குழுவின் ஒருங்கிணைப்பில்லாததால்  , தாக்குதல் நிகழ்துமிடம் மாறிப்போனதென தவறாக புரிந்து கொண்டு , உள்நுழைந்த உடன் அதையே காரமணாக சொல்லி பிரச்சனையை துவக்கிவிட்டனர்

கலவரம் நிகழ்த்த அனைவரும்  அந்த இடத்திற்கு சென்று சூழ்வதற்குள் . நான் அனுப்பிய ஆட்கள் விரைந்து தலைவருடன் இருந்த அனைவரையும் கல்யான மண்டபத்திற்குள் நுழைத்துவிட்டார்கள். அவர்கள் தாக்க திட்டமிட்ட நபர்களை நான் தலைவர் அருகில் இருக்குபடி சொல்லியிருந்தேன் . அவர்கள் காரணம் தெரியாது திகைத்த போது தலைவரை தாக்க திட்டமிட்டுள்ளது என்றதும், அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்த  மக்களை பாதுகாப்பான இடங்களில் நிலைகொள்ளச் செய்திருந்தனர்

திட்டமிட்டபடி அவர்கள் தக்குதலை ஏதோ ஒரு காரணத்திற்கு துவங்கும்போது அதைச் செய்யச்சொன்னவரும் அங்கு இருக்கும்படி நேர்ந்தது. அவர்களே அதை தடுக்க ,அது சிறு கைகலப்பாக சிறிது நேரம் நீடித்து பின் அடங்கிப்போனது. முக்கியஸ்தர்களில் சிலர் அதை ஒரு சிக்கலாக்க உடனே அதை காவல்துறையில் புகாராக கொடுக்கப்பட்ட செய்தி அறிந்ததும் காவல்துறை உயரதிகாரிகள் அங்கு கூடிவிட்டனர் . தலைவர் அவர்களிடம் ,இது உட்கட்சி சிக்கல் நான் பேசிக்கொள்கிறேன் என்றதும் . காவல்துறை உயரதிகாரிகள் அங்கிருந்து விலகினார்கள் . அங்கு கூடிய எதிர்நிலைப்பாட்டினர் தலைவரிடம் முறையிட அவர் அதற்கு தான் மறுநாள் அழைத்து விசாரிக்கிறேன் என்றதும், நாளை கட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து என முடிவானதாக ஒரு குழு கத்திக்கொண்டு வெளியேறிச் சென்றது நிலைமையை மேலும் கொதிநிலைக்கு தள்ளியதுமதிய உணவிற்கு நெருங்க அதன் முந்தய நிகழ்வில் இளைஞர்களின் அமைப்பை சேர்ந்த சிலர் தாக்கப்பட்டு அது கலவரமாக உருவெடுக்கும் சமயம் தலைவரின் நேரடி தலையீடால் நின்று போனது.

எனக்கு ஏன் மிக்குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய  எதிர்நிலைப்பாட்டாளர்கள் உருவாகி வந்தார்கள் என முதலில்  புரியவில்லை. நான் பயணிக்கும் பதையை வைத்து என் திட்டங்களை  துல்லியமாக கணக்கிட்டதுடன் அது என்னை எங்கு கொண்டு சேர்கும் என்பதை,என்னைவிட அவர்களே மிக சரியாக யூகிந்திருந்தாரகள். அதை கெல்லி  எறியும்  முயற்சியே இது என்பதை சில காலம் கழித்தே புரிந்து கொண்டேன் . எதிர்ப்பு உருவாகிய அளவும் வேகமும் , எனக்கு ஆதரவு தளம் உருவாகி வருவதில் நிகழவில்லை . அதை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியிலேயே நான் என்னையும் அறியாது ஈடுபட்டு வந்திருக்கிறேன். என்னை தங்களின் அரசியலுக்கு எதிராக நினைத்தவர்களின் செயல்திறனும் , திட்ட துல்லியமும் அதன் பின்புலத்திலுள்ள ஆதரவுதளமும் மிக பிரம்மாண்டமானவை என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை . அவர்களுக்கு தாக்குதல் என்பது தங்களுக்கான இரை என்பதால் நம்மைவிட மிக துல்லியமாக சிந்திக்கவும் செயலாற்றவும் பழகியவர்கள் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக