https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 193 * பொறுமையின் வரிசையில் *

ஶ்ரீ:



பதிவு : 193 / 268 /  தேதி :- 19 செப்டம்பர்   2017


* பொறுமையின் வரிசையில் *



தனியாளுமைகள் - 19 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-05





அன்று அவர்கள் மோதல் போக்கை  நிகழ்த்தியது என்னுடைய முயற்சியை தடைப் படுத்துவதற்கு மட்டுமே, என்னை  அந்த கூட்டத்தில்  கண்டிப்பதன் வழியாக எனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதவளிப்பதை நிறுத்திக்கொள்ள அவர்கள் உங்களையும் எச்சரிக்க விழைந்தனர்” என்றேன் .அவர் மெல்லிய புன்னகையுடன் ,  இளைஞர் காங்கிரெஸ் அகில இந்திய மாநாடு இன்னும் ஒருவாரத்தில் தில்லியில் நடக்கவிருப்பதாக செய்தி வந்திருப்பதையும் , அதை சூர்யநாராணன் மற்றும் வல்சராஜுடன் இணைத்து ஒருங்கிணைப்பு செய்ய சொன்னார் . முக்கிய நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டியிருக்கு என்றார். நான் சூர்யநாராயணனை பார்க்க சென்றேன்.தலவரின் முடிவு உறசாகத்தையும் அதே   சமயம் நிதானத்தையும் கொடுத்தது .  அவரது பேச்சின் திறன் தனது எண்ணங்களை சதாரணமாக ஒலிக்கவைக்கும் நுட்பம் பற்றிய திறப்பு எனக்கு   மனதில் நீண்டநாள் இருந்து கொண்டிருந்தது.



நான் தலைவர் வீட்டின் பின்கட்டுக்கு சூர்யநாராயணனை தேடி சென்றேன். அவர் அடுப்படியில் தலைவரின் உதவியாளர் ரவியுடன் பேசிக்கொண்டிருந்தார் . என்னைபார்த்தவுடன் ரவி எனக்கும் டீ கொடுத்தார். தலைவரின் உறவினர் மாறன் அங்கு தங்கிக்கொண்டு கடலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையை நடத்திக்கொண்டிருந்தார் . தலைவரின் அங்கீகாரமும் ஆதரவும் என்னை தலைவரின் உள் குழுவிற்குள் கொண்டு சேர்த்திருந்தது . சூர்யநாராயணன் பிராமணர் விற்பனை வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் , பழைய விற்பனை வரி துறை நிர்வாக பாதிப்பினால் இன்னும் கடுகடுவெனும் பேச்சிலேயே இருந்தார் . தலைவருக்கு எதன் அடிப்படையில் நெருக்கமானார் என தெரியவில்லை , அவர் காரைக்காலை சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . தலைவருக்கு சொந்த ஊர் பாசம் அரசியலையையும் அவர் அனுபவ ஞானத்தையும் ஒன்றுமில்லாதாக்கிவிடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

புதுவை விடுதலை அதன் அரசியலில் மற்றும் ஆட்சியைப்பதில் காமராஜரின் பங்கு பொதுவெளிக்கு வராதது  போனாலும் அது மிகப்பெரியது . அவருடன் அரசியலில் இணைந்தும் முரண்பட்டும் தனது இளமைக்கால அரசியலை வளர்த்தெடுத்ததினாலோ , புதுவை விடுதலைக்கு பங்கெடுத்தினாலோ அவரது அரசியல் பாணி மிக சிக்கலானது, விசித்திரமானது . அவர் நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே கடைசிவரை வாழ்ந்து மண்மறைந்தார் .  காந்தி போன்றவர்களின் ஆளுமையால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையையும் எளிமையும் தனிமையிலும் கழித்தார் . காமராஜரின் வழியாக நேரு மற்றும் இந்திராகாந்தியின் தொடர்பு அவரின் அரசியல் வாழ்வினை உரமூட்டியவை . ஆரம்ப நிலைகளில் காமராஜரை சார்ந்திருந்தாலும் . இந்திராகாந்தியடன் முரண்பட்டு காமராஜ் ஸ்தாபன காங்கிரஸ் கண்டபோது அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இந்திராகாந்தியுடன் தங்கி விட்டார் . காரணம் தமிழக அரசியலிலிருந்து முற்றும் மாறுபட்டது புதுவை என நினைத்தார் . அது இன்றுவரையிலும் சரியென்றே நிரூபிக்கப்பட்டது .அதிலிருந்து அவரின் அரசியல் யதார்தத்துடனான சமரசம் , தனது கொள்கைகளில் உறுதி என்கிற பல முரண்படும் விஷயங்களுடன் முயங்கி தனக்கான பாதையை கண்டடைந்தார் . ஆனால் அதை நடைமுறை படுத்தும் முயற்சியில் அவர் வென்றாரா  எனபது பல விவாதங்களை திறப்பது .

அவரின் வாழ்விடம் தொடங்கி வாழ்க்கைமுறை உணவு என்று அனைத்திலும் எளிமையாக அமைத்துக்கொண்டார்  மதத்திலோ ஜாதியிலோ நம்பிக்கை இல்லாத வாழ்க்கை அவருடையது . எவர் மீதும் சொல்லப்படுகிற ஜாதிய பற்று குற்றச்சாட்டு அவரையும் விடவில்லை . வழிபாடுகளுக்கு எதிர்ப்பில்லாமல் அதே சமயம் ஆதரவில்லாமலும் இருந்தார் . தன்னை எப்போதும் பிறர் பார்க்கும் கோணத்திலேயே தன்னை பார்த்து  தொகுத்துக்கொண்டார் , பின் அதில் எவ்வித சமரசமும் இன்றி அதில்  நிறைந்து வாழ்ந்தார். சமையலுக்கு ஒரு பையன் நாராயணனன் , உதவிக்கு ரவி பழைய அம்பாசிடர் கார் டிரைவர் என தன்னை சுற்றி ஒரு சிறு குழு . காலை அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து காலை உணவு மதியம் என மிக எளிய உணவும் அதை ஒரு தவம் போல தன்னை பொறுத்திக் கொண்டார் .

உயரிய விழுமியங்களை உள்ளவர்களுக்கானதில்லை இன்றைய அரசியல் போக்கு என்கிற கூற்றை உடைத்து அவற்றை பேணியபடியே  அரசியலின்  மையத்தில் இருக்க முடியும் என்பதை எனக்கு காண்பித்தவர் . அரசியலை முற்றிலுமாக வேறொரு கோணத்தில் தான் அணுகியதும் அதில் அவர் அடைந்த வெற்றிகளும் சொல்ல வந்தது இந்தப் பதிவு . இன்று காணப்படும் அரசியலுக்கு மத்தியில் மிக சமீபகாலம் வரை இருந்தவர் . தனக்கு சரி எனப்பட்டதை விட்டுக்கொடுக்காத பிடிவதாகுணம், என்று எதை எல்லாம் அரைசியலுக்கு தடையாக சொல்லி அதை மீறுவதுதான்  முறைமை என்கிற வாதத்தை உடைக்கிறது அவரின் வாழும் முறை . அவருடனான எனது தொடர்பு நீண்ட இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நீடித்தது . அவரின் முக்கிய நகர்வுகளில் அவருக்கு இணையாகவும் , சில சமயங்களில் தனித்தும் எனது அரசியல் பயணங்கள் இருந்திருக்கின்றன .

தலைவரை சுற்றி நிற்கும் குழு மிக எளிமையானது . சூர்யநாராயணன் பழைய பணியின் காரணமாக கறாராக நடந்துகொள்ளுபவர் . அவ்வளவு எளிதில் எவருடனும் பழகாதவர் . என்னினடம் நெறுக்கியக்த்திற்கு தலைவர் மற்றும் எனது தந்தை ஒரு காரணமாக இருக்கலாம் . நான் டீ வாங்கிக் கொண்டு அவரது அருகில் சென்று அமர்ந்தேன் . அவர் உங்களுக்குத்தான் தகவல் சொல்ல நினைத்தேன் . நீங்களே வந்துவிட்டீர்கள் . பேச்சவார்த்தை தள்ளிவைக்கப்பட்டு இடமும் மாற்றப்பட்டுவிட்டது . என்றார் . அரசியல் காத்திருக்கும் பொறுமையுள்ளவர்களுக்கானது அங்கு மனப்  பரபரப்பு ஒருநாளும் இருப்பதில்லை , அப்படி இருந்தாலும் , அந்த தனித்த தனிமையை பேண இயலாதவனுக்கு கசப்பின் நரகம் வெகு சமீபத்தில் உள்ளது  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்