https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 செப்டம்பர், 2017

எழுதழல் குறிப்பு -1 (1,2,3) [ பதிவு 270 ]


ஸ்ரீ :



பதிவு 269 : தேதி - 20-09-217

எழுதழல் குறிப்பு -1 (1,2,3)
வெண்முரசுநூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 1
ஒன்று : துயிலும் கனல் – 1

அன்றைய காலை முதல் கதிர் எழுவதும் குந்தி , சகுனி, விதுரர் என்கிற மூன்று கதாபாத்திரங்களும் ஒரே சமயத்தில் நிகழ்வதை இணைக்கிறது இந்த 1,2 பகுதிகள். குந்தியும் சகுனியும் எதிரெதிர் மையங்களாக நிலைபெற , துலாவின் முள்ளென விதுரர் மட்டுமே அவர்கள் இருவரின் இருப்பறிகிறார். கணிகர் ஒரு புனைவு மற்றும் சகுனியின் ஆடி பாத்திரமெனபதால் அவர் இந்த நோக்கில் எடுக்கப்படவில்லை.

குந்தி அஸ்தினாபுரத்தில் வரவேறப்பின்மையையும் , காவலர்கள் தலைவனிடம் அவமதிப்பையும் உணர்கிறாள். அம்பை ஆலையத்தில் பூ செய்கையில் அம்பையின் ஆடை முழுவதுமாக பற்றியெறிகிறது. அது குந்திக்கு சகுனமாக்கிறது . அனைத்தையும் இயல்பாக கடக்கிறாள்

ராமாயண மஹாபாரத இணைப்பு ,சூரிய ,சந்திரகுலத்து இணைப்பு  ஹஸ்தியின் திருமணத்தில் இகழ்வது நினைவுகூறப்படுகிறது

அஜபாகன் சிற்றாலயம் . முதல் நிமித்தகன் , அவன் சொன்ன அந்த நான்கு வாக்யகித்தையும் முதல் முறையாக கேட்கிறாள்

  1. தர்மத்தின்மேல் விழைவின் கொடி ஏறிவிட்டது என்பது முதல் வரி
  2. வெற்று விழைவு வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச் செய்கிறது
  3. ஆற்றலிழந்த விதைகளை மண் வதைக்கிறது
  4. வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது ஆகியவை எஞ்சிய வரிகள்

வெண்முரசுநூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2
ஒன்று : துயிலும் கனல் – 2

முதல் கதிர் எழும்முன்னர் உள்ள கருக்கிருட்டிக் சகுனியின் பார்வையில் அஸ்தினாபுரி சொல்லப்படுகிறது . அவர் கடந்து செல்லும் அனைத்து காவல் மாடத்தின் செயல் முறைகள் மிக விரிவாக சொல்லப்படுகிறது . அவர் வருகை கோட்டைக்காவல்மாடங்களிலிருந்து சுடர்ச்சுழற்சி வழியாக அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த காவல்மாடங்கள் வழியாக வானில் கடந்து செல்வதை அவர் கண்டார் தகவல் சொல்லும் தொழில் நுட்பம் அலாதியாக சொல்லப்படுகிறது.



அந்தக் களிறு ஏன் ஓசையிட்டது என்று எண்ணிக்கொண்டார். புண்ணின்மேல் வருடும் மெல்லிய தூவல்போல அந்த ஓசை ஏதோ நினைவை எழுப்பியது. யானையை ஒரு குறியீடாகக்கொண்டு , சகுனி பல திறப்புகளுக்கான நிலையை அடைகிறான்

1.அறுபதாண்டுகளுக்கு பெருமழையில் வெள்ளம்
பற்றி சூதர்பாடலில் அந்த வெள்ளத்தின்மேல் அனல் ஒழுகிவந்தது என ஒரு பாடலில் சொல்லப்பட்டதை எண்ணிக்கொள்கிறார், நரி, காகம் என நிழலெழுவதை கண்டு துனுக்குறுகிறார்

2. அவர் அனுமனின் அந்த மாபெரும் கதாயுதத்தை சிறிய திடுக்கிடலுடன் யானையின் பெயரை நினைவுகூர்ந்தார். உபாலன் என்று

3. முற்றாக மூடி சட்டம் அடிக்கப்பட்ட சாளரம் சிவை. விதுரரின் அன்னை. பின்னரே சம்படையை நினைவுகூர்ந்தார்.இரு மூலைகளிலுமாக இருவர். மெலிந்து எலும்புருக்களாக மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் அங்கே இருபதாண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு விழிமட்டுமாக  அஸ்தினாபுரியை பார்த்தபடி  அமர்ந்திருக்கிறார்கள்.

4. தீர்க்கசியாமரின்ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்என்ற சொல்லை நினைவுகூர்ந்தார்.

5. அவர் அதில் தன் கிழிந்தகன்று கழுகுச்சிறகுபோல் ஆகிவிட்டிருந்த விரல்களால் வாசித்த கலிங்கப்பண். அது நீருக்குள் இருந்து யானை எழுந்து வருவதுபோலத் தோன்றுவதாக திருதராஷ்டிரர் சொன்னார். விழிகளால் அவர் கண்டிராத யானை. அவர் பெருமூச்சுவிட்டார்.

இளம் சூதன்அஸ்வஹ்ருதயன்”  அங்குலிசேதனம்  மூலம் பிறப்பெடுக்கிறான்.அவர் தீர்க்கசியாமரை நினைவுகூர்ந்தார். விழியின்மையின் அச்சமூட்டும் விலக்கம் கொண்ட முகம். எங்கோ எதையோ நோக்கி அவர் எடுக்கும் சொற்கள். “இவ்விளஞ்சூதன் பாடப்போவது எதை?” என்று எவரோ கேட்டதுபோல உணர்ந்து உளம் அதிர்ந்தார்
.
புறக்காட்சிகளைப்போல உள்ளத்தை ஒருங்கிணைப்பது பிறிதொன்றுமில்லை என எண்ணுகிறார். சகுனி ஆஞ்சநேயர் ஆலயமுற்றத்தில்அங்கே என்ன செய்தார்?” என்றார் விதுரர். அவன்ஒன்றும் செய்யவில்லை. வெறுமனே புரவியில் சுற்றிவந்தார்என்றான். விதுரர்எதை?” என்றார். “அனுமனின் கதையைஎன்றான் காவலன். விதுரர் விழிகூர்ந்துஎத்தனை முறை?” என்றார். “இரண்டுமுறை. கைநீட்டி அதை தொட்டார். பின்னர் சென்றுவிட்டார்.”

கோட்டைக்குமேல் முரசு முழங்கியது. ஏறிட்டு நோக்கியபோது குந்தி நகர்நுழைவதை அறிவிக்கும்பொருட்டு மார்த்திகாவதியின் சிம்மக்கொடி மேலெழுவதைக் கண்டார் , சிம்மம் தனது இரைக்காக வருவதாக. சில கணங்கள் எண்ணிநோக்கிவிட்டுசெல்க!” என்றார்.

வெண்முரசுநூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3
-ஒன்று : துயிலும் கனல் – 3

அறத்தானாகிய அரசனின் தண்டத்தை தந்தையின் சினமென்று கொள்வார்கள் குடிகள். அவன் நெறியிலான் என்றால் அது தங்கள் மீதான வன்செயலென்றே அவர்களால் எண்ணப்படும். சொல் பெரும் சாட்சியாக எல்லோர் முன்பும் ஓங்கி நிற்பது அற்புதமான செறிவான விவாதமாக நிகழ்கிறது.

அரசனின் பணி ஆட்சிசெய்வது இரண்டாவது பொறுப்பே. அரசன் முன்செல்லும் பறவை. அவன் ஒவ்வொரு சிறகசைவுக்கும் பின்செல்லும் திரளில் பொருள்விரிவுண்டுஎன வாக்கையே  மறுமுறையும் நிருவுகிறார்.

நிலத்தைப்பற்றி நாம் இங்கே பேசவில்லை. நாம் பேசுவது மானுடர் போட்டுக்கொண்ட அளவுகளையும் அடையாளங்களையும் பற்றி மட்டுமே. அவை கூறியவர்களும் கேட்டவர்களும் கொண்ட புரிதல் வழியாக மட்டுமே நிலைகொள்பவை. ஆகவே நாம் சொல் குறித்துப் பேசுவோம். என சொன்ன சொல் பிரதானமாக பேசப்படுகிறது.

பன்னிரண்டாண்டு காடு. ஓராண்டு மறைவு. மீண்டு வருகையில் அனைத்தும் முன்புபோல. அதுவே சொல். இருவரும் ஏற்றுக்கொண்டதுஎன்றார் விதுரர். “அதை அவர்கள் முடித்துவிட்டிருக்கிறார்கள்.” என்கிறார் . துரியன் தரப்பு முரண்படுகிறது . அதை காந்தியின் வாதம் அற்புதமாக தகர்க்கிறது .

அறியாத இருப்பிலை என்கிறாள்  குந்தி. துரோணர்உண்டு, ஆனால் அது தெய்வங்களுக்கு. நமக்கல்ல. மானுடர் அறிவதெல்லாம் அறிவொன்றையேஎன்றார். “எவருமே அறியாதபோது ஒவ்வொன்றும் எங்குள்ளன?” என்றாள் குந்தி. “அவை பிரம்மமாக உள்ளன. இது என்றும் இங்கு என்றும் இத்தகையது என்றும் பிளவுபடாத முற்றொருமையாக.” குந்திஅவ்வண்ணமென்றால் சொல்லுங்கள், அந்த அம்பு அர்ஜுனனுடையதென்றாவது எப்போது?” என்றாள்.

துரோணர் சில கணங்களுக்குப் பின்அது அர்ஜுனனுடையது என்று எப்போது எவரேனும் ஒருவர் அறிந்துகொண்டாரோ அப்போதுஎன்றார். “அரசர் சொல்லட்டும், எப்போது அது அவ்வாறு அறியப்பட்டது? மறைவுவாழ்க்கையின்போதா, அக்காலக்கெடு முடிந்த பின்னரா?” துரியோதனன்அக்காலக்கெடு முடிந்த பின்னர்தான், அன்னையேஎன்றான். குந்திஇனி என்ன அறிந்துகொள்ளவேண்டும் இந்த அவை? என் மைந்தருக்கான நிலமும் முடியும் அவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். பிறிதொரு சொல்லும் நான் கேட்க விழையவில்லைஎன்றபடி எழுந்துகொண்டாள். அவள் விலகிச்செல்லும் ஆடையோசை அவை முழுக்க கேட்டது. காற்றில் மெல்லிய வெண்பட்டுத் திரை உலைந்தபடியே இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்