https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 18 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 191 * களையும் ஆளுமைகள் *

ஶ்ரீ:




பதிவு : 191 / 266 / தேதி :- 17 செப்டம்பர்   2017

* களையும் ஆளுமைகள்   *



தனியாளுமைகள் - 17 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04


தங்களின் தரப்பை அவர்கள் தெளிவாக நிலை நிறுத்தத்தும் எண்ணமே நான் இதுபோன்ற முயற்சிகளில் இனி நான் ஈடுபடவேண்டுமா?  என்பதை முடிவு செய்கிறேன் ,என்கிற நிலைப்பாட்டை எடுத்தபிறகு மாலை விசாரணை குழுவில் பங்குபெறும் நேரத்தை ஆவலுடன் எதிர்நோக்க துவங்கினேன். என்னை சுற்றிச் சூழும் கைகளுக்கு நான் இரையாகப் போவதில்லை . எதிர்நின்று அதை பதட்டமல்லாது கூர்ந்து நோக்கப்போகிறேன் . நீங்கள் இதுவரையில் சந்தித்தவர்களில் ஒருவனல்ல நான். தலைவர் என்னை என்னவாக கையால்கிறார் என்பதை அறியும் ஆவலே எனக்கு முதலில் எழுந்து வந்தது.




“தன் நெஞ்சறியும் உண்மையைச் சொல்லத் துணியும் ஓர் எழுத்தாளன் அல்லது அரசியலாளன் எப்போதுமே இங்கு எல்லா தரப்பினருக்கும் எதிராக ஆகிறான். அவனால் முழுமையாக எந்தத் தரப்புடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை. ஒவ்வொருவரும் அவனை தங்கள் எதிரிகளின் தரப்பிலேயே சேர்க்க முயல்கிறார்கள். ஒவ்வொருமுறை அவன் கருத்து சொல்லும்போதும் அக்கருத்துகள் திரிக்கப்படுகின்றன. ‘நான் சொல்லவந்தது அதுவல்லஎன்றுதான் அவன் ஒவ்வொரு நாளும் கூக்குரலிடவேண்டியிருக்கிறது." என்று தன் அரசியலாதல் கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.ஜெயமோகன் அவர்கள்

நான் கலகம் செய்பவனோ புரட்சி சிந்தனையாளனோ இல்லை . நான் என்ன காரணத்தினாலோ தனியனில்லை . அனைத்து வித   கூட்டுசெயல்பாடுகளில் மத்தியில் இருப்பது என் விழைவாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றது  .எனது செயல்பாடுகள் திரள்களின் மத்தியில் இருப்பதால் அவர்களின் உணர்வுகளால் ஏற்படும் புரிதல்களிலிருந்து அவர்கள் வேண்டுவதை,விழைவதை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை கடப்பதற்கு என்னாலான உதவிகளை செய்யத் தயங்குவதில்லை . நான் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதன் வழியாக அவர்களில் ஒருவனாக உணரப்படுவதும். பின் அவர்களுடனான களப்பணியில் அதை நிகழ்திக்கொடுப்பதிலிருந்து நான்  என் மனநிறைவை அடைகிறேன்  . அதில் இயற்கையாக எழும் சவால்களில் ஈர்க்கப்பட்டு அதில் பயணப்படுவதில் எனக்கான நிலைகளை நான் கண்டடைவதுண்டு . அது திட்டமிட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுவதும் அதை எதிர்த்து மற்றொரு தரப்பு எழுவதுமாக அது எப்போதும் இருந்திருக்கிறதுபின்னாளில் தனித்திருப்வனாக மாறிப்போனபோதும் கசப்படையாது இருந்ததும் , இதிலிருந்து கிடைத்த நல்ல அனுபவம் ஒரு காரணமாக இருக்கலாம்

இதன் தொடக்கப்புள்ளி என்னால் கூடுகையில் மட்டுமின்றி தனிப்பட்ட உரையாடலில் கூட மிகவும் திக்கி திணறி பேசும் உடற்குறையை சுட்டி அதை எனக்கான நிரந்தர தடையாக சிலர் எள்ளுடன் கூறியதே என்னை அதை கடக்கும் விசையை கொடுத்தது. அதைக் களையும் பொருட்டே நான் சிறு  கூடுகைகளின் வழியாக  என்னை வளர்த்தெடுக்க துவங்கினேன் .அது இன்று என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது .நான் காலை வீடு திரும்பி குளித்து முடிப்பதற்குள் ஊசுடுவிலிருந்து அந்த நிகழ்வினை ஒருங்குவதில் உதவி புரிந்த முக்கியமானவர்களில் சிலர் வந்திருந்தனர் . தலைவரை பார்த்து பேசவிருப்பதாகவும் , மாலை நிகழவிருக்கும் பஞ்சாயத்தை ஒன்றுமில்லாது செய்துவிடுவதில் தீவிரமாக இருப்பதாக என்னிடம் கொந்தளித்தனர் . நான் அவர்களிடம் சற்றுமுன்னர் தலைவரை பார்த்துவிட்டு வந்தத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லைஅவர்களிடம் எனது நிலையையும் அவர்கள் நின்று பேசவேண்டிய தளத்தைப்பற்றியும் கூறினேன் . எக்காரணம் கொண்டும் என்னை குறித்து ஏதும் சொல்லவேண்டாம் . அவர்கள் முதல் தாக்குதல் நானாக இருக்க முடியாது . அது பஞ்சாயத்தின் போக்கை திசைமாற்றி விடும்  என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும் . இது நாள்வரை அமைதியாக இருந்தது  இன்று உள்ளூர் சிக்கலக எழுந்துவந்த்தைப் பற்றியும், அதனால் விளைந்ததை முதலில் நிறுவிவிட்டு. அது என் தவறான அணுகுமுறையால் நிகழ்ந்தது என முடித்துவைப்பார்கள்

இன்றைய மையக்கரு இதைப்போல ஒன்று அல்லது இதுவேக்கூட இருக்கலாம் . நான் அவர்கள் விளையாட்டு முறைமைகளை இதுவரைப் பார்த்ததில்லை . வந்திருந்தவர்களை  தலைவரை சென்று சந்திப்பது இப்போது வேண்டாம் . முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்றதும் அவர்கள் பாதிமனத்துடன் எழுந்து கொண்டார்கள். நான் கட்சி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரின் தனிச்செயலர் சூரியநாராயணன் வந்து விட்டதை விசாரித்தேன் , பின் வந்ததும் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லி தகவல் கொடுத்துவிட்டு, அவரது தொலைபேசிக்காக காத்திருந்தேன்.

காலையிலும் தலவரை பார்த்துவிட்டு வந்த பிறகு அவர்  எப்படியும் சூரியநாரயணனைத்தான் கூப்பிட்டு பேசியிருப்பார் . அவரிடம் பேசினால் தலைவரின் திட்டம் பற்றிய கருத்து கிடைக்கலாம்.சற்று நேரத்திற்கெல்லாம் சூரியநாரயணன் என்னை அழைத்தார் . நான் அவரிடம் விசாரித்தேன், அவர் முன்னாள் முதல்வரை இன்று மாலை அலுவலகம் வரச்சொல்லி தொகுயிலிருந்த சிலர் பேசிய தகவல்  தனக்கு  கிடைத்ததாகவும் , அனேகமாக அவரும் அதில் பங்கெடுத்துக்கொள்ளலாம்   என்றார் . நிலைமை மேலும் சிக்கலாக உருமாறத் துவங்கியது .தலைவர் என்ன சொன்னார் என்றதற்கு தன்னிடம் அதுபற்றி தலவர் ஒன்றும் சொல்லவில்லை என்றார்.நான் அவரிடம் தலவர் வண்டிக்கு என்னவாயிற்று என்றேன் . அவர் திரும்ப என்னிடம் ஏன்? வண்டிக்கென்ன ? நன்றாகத்தானே இருக்கிறது என்றார் . நான் குழப்பத்துடன் தொலுபேசியை வைத்தேன்.

எனக்கு தலைவரின் உள்ளம் தெளிவாக பார்க்க முடிந்தது. நான் தலைவருடன் எனது காரில் அலுவலகம் வருவதை பார்க்கும் எவருக்கும் ஒரு செய்தி சொல்லாமல் சொல்லப்படுகிறது . அது யார் யாரிடம் எப்படி என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிடும் . நான் அன்று மாலை உற்சாகமாக தலைவரை அழைக்க அவர் வீட்டிற்கு சென்றேன் . நான் அங்கு சென்று சேரும்போது நிலைமை இன்னும் வேகமாக மாற்றமடைந்திருந்தது . அலுவலகத்தில் இருக்கவேண்டிய சூரியநாராயணன் , நான் தலைவரின் அறைக்குள் நுழையும்போது வெளியேவந்தார் மரியாதை நிமித்தமாக தலையசைப்போடு கடந்து செல்லும் வழக்கமுள்ளவர் இயல்பாக கைநிட்டினார் நான் புரியாது கைகொடுத்ததும் ஒன்றும் பேசாது என் உள்ளங்கையில் தனது சுட்டுவிரலால் மெல்லியதாக சீண்டியபின்  என்னைக்கடந்தார் . நான் அவரை திருப்பி பார்காது தலைவரை பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்