https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 180 * உட்கட்சி கலாச்சாரம் *

ஶ்ரீ:




பதிவு : 180 / 254:தேதி :- 04 செப்டம்பர்   2017

* உட்கட்சி கலாச்சாரம் *


தனியாளுமைகள் - 08”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04

நான் கூட்டத்தை துவங்கி சிலரை பேச அழைத்து அவர்கள் பழைய நினைவுகளை அங்கு எடுத்து விரித்துக்கொண்டிருந்தனர் . என் அளவில் அது மிக முக்கியமானதொரு கூடுகை .அதன் உட்கூரை எவரும் அன்று அறிந்திருக்கவில்லை . சுமார் இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு கட்சி அலுவலகம் வந்திருக்கின்றார்கள் . இவர்கள் பாலனையும் கண்ணனையும் நம்பி சென்றவர்கள்  மிகச்சிலர் வெற்றி அடைத்திருக்கிறாரகள் . ஆனால் தோற்றவர்களின் எண்ணிக்கைதான் மிகுதி . அவரவர்கள் அளவில் வெற்றி தோல்வி எனபது அடையும் பதவியையும் அதனால் ஈட்டும் பொருளியலை அடிப்படையாகக்கொண்டது . ஆனால் அரசியலென்பது அதை குறிவைத்து நகர்வதல்ல. ஆளுமையை வளர்ப்பது , அதன் அடைப்படை மன ஒழுங்கினால் வடிவமெப்பது.




கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தின் மத்தியில் சண்முகம் உள்நுழைந்ததை யாரும் எதிர்நோக்காததால், ஒரு திகைப்பு அங்கு குழுமியிருந்த கூட்டத்தில் கல் விழுந்த குளம் போல அலை உருவாக்கி மெல்ல  அது வெளியெல்லையைத் தொட்டு மையத்ததை நோக்கி மீண்டது . சிறிது நேர அமைதிக்கு பிறகு கூட்டம் தொடர்ந்தது . அது ஒரு ஆலோசனை கூடுகை போல ஒருங்கியதால் யாருக்கும் அங்கு நாற்காலிகள் போட்டிருக்கவில்லை, அனைவரும் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காலத்தில் அமைந்திருந்தார்கள் . பழைய அமைப்பிலிருந்து அனைவரும் வந்திருந்தனர் . கமலக்கண்ணன் பச்சமுத்து இரண்டு சேகர் என்று . வேதாளம் போல கமலக்கண்ணனும் பழைய ஆட்டத்தை விடாது ஆடிக்கொண்டிருந்தான் . பேசிய அனைவரும் பாலனையும் கண்ணனையும் திட்டித்தீர்த்தார்கள் . இறுதியாக சண்முகம் பேசினார் . அது ஒரு நல்ல உரையாடல் மிக எதார்த்தமாக யாரையும் குற்றம்சொல்லாது , இனி ஆகவேண்டியத்தைப் பற்றிய உரையாடலாக  அது இருந்தது . கூடுகையில் பேசியவர்கள் கைகளில் மைக் மாறி மாறி பயணித்தபடி இருந்தது . நான் அதில் இறுதிவரை பேசவில்லை . அதற்கு என்னியல்பான தடை . ஆனால் அந்த கூடுகை என்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றது .

சண்முகம் திமுக கூட்டணி அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு நடந்த முதல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில்தேர்தல்  வெற்றி தோல்விகள் கட்சியின் ஆயுளை முடிவு செய்பவைகளல்ல அவை அன்றைய களநிலைகளை கருத்தில்கொண்டு பொதுமக்களின் புரிதல்களால் விளைபவை . அவற்றில் இருந்து கட்சி அவதானிப்பதே அதன் எதிர்காலத்தை நிர்ணயிப்பது . புதிதாக ஆட்சி பொருப்பேற்றிருக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை உடனேயே விமர்சிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது . எனவே அரசாங்கத்தின் அடுத்த ஆறுமாத கால செயல்பாடுகளை அவதானித்த பிறகுகே அதை விமர்சிப்பது சரியாக இருக்க முடியும் என்றார் . இளைஞர் காங்கிரசின் நிலையை பற்றிய கேள்வி எழுந்ததும் . அவை இன்னும் சில காலத்தில் சரிசெய்யப்பட்டுவிடும், என கூறி அந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தை முடிய்த்துவைத்தார்

அதற்கு முதல்நாள்தான் நான் கூட்டிய கூடுகை நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக இனி நான் செய்யக்கூடும் என்பதை பற்றிய சிந்தனை என்னை சூழ்ந்ததிரிந்தது . வழமைபோல அந்தக்கூடுகையில் நான் பேசும் வாய்ப்பை பெறவில்லை . நான் அதை செய்யும் இடத்திலேயும் இல்லை . அரசியல் என்பதில் பேச்சி ஒரு ஆளுமையை நிர்ணயிப்பது . எனக்கான இயற்கையிலேயே பேசுதலில் உள்ள குறைபாடால் , அந்த கூடுகையை என்னை நோக்கி திருப்பி முடியவில்லை . ஆனால் அரசியலில் பேசுவதுமட்டுமே ஸ்தானத்தை முடிவுசெய்யவதில்லை . அதை எனக்கெதிரான வெற்றியாக ,இதை எனக்கான அறைகூவலாக எடுத்துக்கொண்டேன். நான் இதை கடந்தேயாக வேண்டும் . இதை கடப்பது ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது . இது ஒரு தடையாக எழுவதை அனுமதிக்கக்கூடாது என அப்போது முடிவு செய்தேன் . எனக்கு அணுக்கமான சிலருடன் அந்த ஒருவருடத்திற்கும் மேலாக  புதுவையின் பல்வேறு பகுதிகளில் சிறு  சிறு கூடுகைகளை ஏற்படுத்தி அதில் சிறு சிறு உரையாடல்களின் வழியாக எனது மனத்தடைகளை உடைக்க துவங்கினேன் . அந்த இடைப்பட்ட காலத்தில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான கூடுகை மூலமாக எனது உளத்தடையை மீறி எழுந்துவந்தேன் . கோர்வையாக , விஷயங்களை தொடுத்து பேசக் கற்றது இங்குதான் . அது என்னை சிறந்த மேடை பேச்சாளாராகவெல்லாம் மாற்றிவிடவில்லை . ஆனால் அது என்னால் கூட்டங்களில் பேசுகிற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொடுத்தது . மேலதிகமாக பல பகுதிகளில் வாழும் இளைஞர்களின் நேரடி தொடர்பும் . அவர்கள் வாழ்வியல் களநிதர்சனமும் , அதில் அவர்கள் எதிர்கொள்ளும் போதாமையும் துலங்கி வந்தது

எனது இளைஞர் காங்கிரசின் கூடுகைகள அந்தந்த பகுதி செயல்பாட்டாளர் வீட்டிலேயே நடத்துவதை சிறிது மாற்றம் செய்து நான் வெகு விரைவாக அவர்களில் ஒருவனாக மாறிப்போனேன் . இந்த வளர்ச்சிக்கு  என் அரசியல் எதிர் நிலைப்பாட்டாளர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் . அவர்களின் காத்திரமான விமர்சனமும், பகடியும் ,எள்ளலும் என்னை உருவாக்கி எடுத்து . அதன் பின் எனக்கு ஏற்படும் தடைகளை கடப்பதே என் அரசியல் வழிமுறை என்றானது 

பிரதேச கமிட்டியின் மூத்த நிர்வாகிகளை அதில் பங்குபெற வைக்கும் முயற்சியை துவங்கினேன் . முதலில் எங்கள் அமைப்பிலிருந்தே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது . அதை பழைய தொடர்புகளின் பலத்தால்நிகர் செய்ததால் யாரும் அதற்கு எதிர்ப்பாக எழமுடியவில்லை . இந்த எதிர்மறை போக்கை மாற்றாது பலம் பெறமுடியாது என்பதை விளக்கிச்சொல்லியெலாம் அதை செய்துவிட முடியாது . அதற்கான காலம் வரும் போது அவர்களுக்கே அது புரிந்துவிடும்.

மெல்ல அந்தந்த பகுதிகளின் மூத்த நிர்வாகிகளுடன் எங்கள் கூடுகை நிகழ துவங்கியது. முதலில் மூத்த நிர்வாகிகள் இதை தடுக்கத்தான் முயற்சித்தனர் . தலைவருடன் எனக்கான நெருக்கம் அவர்களது முயற்சிகளை ஒன்றுமில்லாது செய்துவிட்டது . சரி செய்யமுடியாத இடங்களில் மாற்றுதலைமையை வைத்து நடத்த முயற்சித்தும் அவர்கள்  தானாக வரத்துவங்கினர் . இதில் நான் எதிர்நோக்காத ஒன்று அந்த இரண்டு அமைப்பும்  விரைவில் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியது . நான் மாநில அரசியலில் கவனம் குவிக்க துவங்கிய போது  ஒரு வலுவான அமைப்பாக அது உருமாற்றமடைந்திருந்தது . சரி செய்ய முடியாத மூத்த நிர்வாகிகள் எதிர்ப்புநிலை நிரந்தரமாக மாறினாலும் அவர்களால் உருவாகிவந்த புது அமைப்பை ஒன்றும் செய்ய இயலவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...