https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 25 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 197 * பின்னிருக்கும் நிழலின் பலம் *

ஶ்ரீ:




பதிவு : 197 /  274 / தேதி :- 25 செப்டம்பர்   2017


* பின்னிருக்கும் நிழலின் பலம் *



தனியாளுமைகள் - 23 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-06

நான் வல்சராஜுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது , அவரும் என்னை சந்திக்க விழைவதாக சொன்னார் . தற்போது ஒழிவாக இருந்தால் தன்னை  சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சந்திக்க முடியுமா என்றார் . நான் வருகிறேன் என்றேன். தலைவர் சொன்னது சூர்யநாராயணனையும் வல்சராஜையும் இணைப்பில் வைத்திருக்க சொன்னதால் , தலைவர் அவருடன் ஏதாவது செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கலாம் அது என்ன என்பதை அறியாது அடுத்த கட்டத்திற்க்கு நான் நகர முடியாதற்பென்பதால் . அவரை சந்திக்க புறப்பட்டேன் . சிந்தனை பற்றிய தெளிவை இன்றஉ உணர்கிறேன் அதை வலிந்து தொடர்பில் வைத்திருக்க பலவித நோக்குகளை இணக்க .





“அப்படியானால் திராவிட இயக்கத்தை ஓர் எதிர்மறைச் சக்தியாக, அழிவு சக்தியாகக் கருதுகிறேனா? இல்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முயல்கிறேன்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது சாட்சிமொழி கட்டுரைத் தொகுப்பில்.

இந்த பதிவில் என்னை ஈர்த்தது இரண்டு விஷயங்கள் ஒன்று அந்தக்கட்டுரை ஒரு இலக்கியவாதியால் எந்த தமிழை சொல்லி தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட ஓர் இயக்கம் தமிழ் துறைக்கு  ஒன்றுமே செய்யவில்லை என்கிற வெறுப்பும் கசப்பும் எழாது அந்த இயக்கத்தை நிராகரித்து கடந்து செல்கிறார் . அதில் கூர்கொள்கையில் அதை ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அதன் காரணத்தையும் விளைவையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் என்கிறார் . நான் அவரது  இரண்டாவது சொற்களை  எடுத்துக்கொள்கிறேன் . என்ன நடப்பினும் அது அகண்ட வரலாற்றின் ஒரு அத்தியாயம்  மட்டுமே . அது தனிப்பட்ட எவருடைய  வாழ்விலும் ஒரு பக்கமல்ல . நான் பலமுறை இங்கு வந்து நின்று திகைத்திருக்கின்றேன் . நம்மை சுற்றி நிகழ்வன எல்லாம் ஒருவித தெறிக்கின்ற அவசரத்தில் இயங்கி சிரித்து குழைந்து இரந்து அவர்களுக்கான பலனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கழன்று கொள்கிறார்கள்.பிறிதொரு சந்தர்ப்பதில் அது மாதிரி எதிர்பார்ப்பில்  மீளவும் வந்து நிற்க தயங்குவதில்லை. 

சமபுத்தியில் அதை அணுகும்போது நாம் உதாசீனப்படுவதும் , அமைப்பிற்கு எதிரானவர்கள் அதில் பலனடைந்து செல்லும்போது ஏறக்குறைய இந்த மனநிலையில் இருந்து , அதை கடந்தும்  சென்றிருக்கிறேன் . அப்போது எனக்கு அது ஒரு மனசாமாதானம் மட்டுமே . ஆனால் அதில் ஒரு ஆக்ரஹம் தங்கி நிற்கும் அதுவே நம்மை எது நிகழினும் திருப்பி நோக்க வைப்பதில்லை  . அது உலகியல் இயல்பு . ஆனால் அது ஏன் என்றோ காரணத்தையக் அதன் விளைவுகளை அனுமானிக்க  அதை ஒரு போதும் திரும்ப நோக்குவதில்லை . அது  கட்டிவைத்ததைபிரித்து பார்ப்பது பெரும்பாலும் அவற்றால் விலக்கவே முடியாத ஒவ்வாமை தொற்றிக்கொள்ளலாம்  . அனால் அதை இங்கிருந்து பார்க்கையில் அதை செயத்தவறி விட்டோமோ என் நினைக்கவில்லை காரணம் அது ஒரு போக்கு. அதை விட்டு விலகுவது நமது நிகர்நிலை பேணுவதற்கு , ஆனால் என்ன காரணத்திற்காக அதை நிராகரித்தேனோ அதுவே சரி என்று இன்றுவரை நிரூபணமாகி இருக்கிறது .

நிழ்காலத்தில் வாழ இடமல்லாதபோது கடந்தகாலத்தில் வாழ்வது என்பது போலாகுமா இந்தப் பதிவுகள். அதை நான் என்னிடம் பலமுறை என்னிடம்  கேட்டுக்கொண்டு வைத்திருக்கிறேன் . பொருளியல் கடமைகளில் முப்பது ஆண்டுகளில் செய்தவை போதுமென்றாகிப்போனதும் ,  நிர்வாகமென்பது ஒருவித மனநிலையில் இயங்குவது . அதற்கு   காரணங்களோ சூழ்நிலைகளோ காரணிகளாவதில்லை , பாவபுண்ணியமோ பட்சதாபமோ அங்கு எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை .இவற்றை சூழ்ந்த ஒரு நிலையே நிர்வாகத்திற்கு உகந்தது . நான் அதிலிருந்து வெகுதூரம் விலகிவந்திருக்கிறேன் என்பது புரிந்தபோது நான் அந்தமாதிரின நிர்வாகத்திற்கு தகுதியானவனாக உணரவில்லை . ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டேன் . ஆனால் சம்ரதாய ரீதியில் ஒரு கனவு அதற்கென   ஒரு இயக்கம் துவங்கினேன் . இப்போது இலக்கியம் என்பதை முதலிலிருந்து புரிந்துகொள்ளும் வாய்ப்பை அடைந்தபோது , அந்த வாசிப்பு என் அனுபவங்களை தொகுக்க ஏதாவது எழுதவேண்டும் என்கிற மனநிலையை கொடுத்தது . புதுவை கூடுகை துவங்கிய பிறகு , இலக்கிய வாசிப்பு அனுபவங்கள் ஒரு வடிகாலாக இருந்தது . இருப்பினும் வாசிப்ப்னுபவம் கொந்தளிக்கும் எண்ணங்களை நெகிழ்வைடைய செய்யும் போது எழுத்துவதனூடாக என்ன முன்னிலும் சிறப்பாக தொகுக்க இயலும் என்பதாலேயே எனது பதிவுகள் ஏழடிக்கப்படுகிறது .
வல்சராஜை அவரது சட்டமன்ற உறுப்பினர் மாளிகை அறையில் சந்தித்தேன் , என்னை விட வயதில் பத்து  வயது மூத்தவர் என நினைக்கிறேன் . சிலரின் உடல் வாகு அவைகளின் வயதை எவருக்கும் கணிக்க கொடுக்காது . வல்சராஜ் அரசியலில் வேறொரு தளத்தில் இயங்குபவர் , அதை முழுநேரமாக ஆற்றுபவர் . சிக்கலான கேரளா அரசியல் பண்பாட்டுபின்புலத்திலிருந்து வருவதால் , உள்ளூர் நடைமுறை அரசியலிலிருந்து முற்றாக வேறுபட்டவர் . பொதுவாக தமிழக அரசியலை புதுவையில் உள்ளவர்கள் சற்று ஏளனமாகவே அணுகும் போக்கு காணப்படும். காரணம் கடந்த ஐம்பது ஆணடுகால பெரும் ஆளுமைகளை பார்த்த பிறகு தற்போது உள்ள அங்குள்ள தலைமையின் போக்கும் அரசியலும் யாருக்கும் தனி இடைத்ததை கொடுப்பதில்லை இருப்பினும் அதன் சாயல் இங்கும் திராவிட கட்சிகளால் முன்னெடுக்கப்படட்டு , அதன் கலாச்சாரம் இங்கும் பரவியதால் அதே போன்ற ஒரு எள்ளல் வால்ராஜிடம் நான் பார்த்திருக்கிறேன்

மிகவும் பக்குவமான அரசியல்வாதி , பிற உள்ளூர் அரசியல் கட்சிகளின் கரத்திற்கு வெளியே அவரது அரசியல் இயங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு யாருடைய தாட்சண்யமும் தேவையில்லாது போனது . அதுவே அவரை எதற்கும் கட்டுப்படாத போக்குள்ளவராக உருவாக்கி வைத்திருந்தது , தில்லியில் தனக்கான லாபியும் , கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல பெரிய தலைவர்களின் தொடர்பும் அவரின் நிஜமான அரசியல் பலத்தை பிறிதெவரும் அறியாது செய்திருந்தது . கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் ஆதரவாளர் என்பதால் புதுவை காங்கிரஸ் அரசியலில் அவருக்கு மிக மறைவான ஆளுமையுடன் கூடிய பாதையை ஏற்படுத்தி தந்திருந்தது . உடல் மொழியில் மாநில அரசியலுக்கு கட்டுப்பட்டவராக தெரிந்தாலும் வல்சராஜ் மனதளவில் ஒரு தனித்தலைமையாக இருந்தார் . இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒரு பெரிய அடையாளம் ஆனால் அதை ஒருகாலமும் புதுவையில் அவர் வெளிப்படுத்தியதில்லை அவர் களத்தில் அதனால் என்ன பயனடைந்தனர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் 


அரசியல் லாபங்களை வெற்று  அலம்பலாக அலராக வெளிப்படுத்தும் அரதியல்வாதிகளுக்கு மத்தியில் . வலசராஜ் யாருடைய கவனத்தையும் கவராத  அரசியல்வாதியாக தனது பலத்தை செல்வாக்கை குவிமையமாக  நிழலாகவே தன்  வைத்திருப்பவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்